This entry is part 1 of 22 in the series 27 செப்டம்பர் 2015

நூலிழை

சத்யானந்தன்

 

நான் எங்கேயாவது

நினைத்த​ போதே

கிளம்பி விடுவேன்

என்பது

அம்மாவுக்குப் பழக்கமானது

 

உணவு பரிமாறும் போது

அம்மா சொன்னது

பயணத்தின் போது

முழுவடிவாகி பக்கத்தில்

அமர்கின்றன​

 

எந்தத் திசையில் பயணித்தாலும்

அது இறந்த​ காலத்தை விட்டு

மேலும் விலகவே செய்விக்கிறது

 

ஆனால்

அம்மாவுக்கு இறந்த​ காலத்தில்

இருந்து புது பட்டு நூலிழையை

உருவுவது

எளிதாய் சாத்தியமாகிறது

 

புதிய​ ஆடையை நெய்ய​

இயலாதென்றாலும்

அம்மா அதை

ஆர்வமாகவே செய்கிறாள்

 

நீ அவளைத்

திருமணம் செய்யாததற்காக​

வருந்தினாயா அப்பா?

என் மகளின் மின்னஞ்சலில்

அதே லாகவத்துடன் உருவிய​

மற்றொரு

நூலிழை

Series Navigationதிரும்பிப்பார்க்கின்றேன் – இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *