ஈரத் தீக்குச்சிகள்

 

சிறந்த சாதனையாம்

சீரிய தலைமையாம்

எடுசேவ் விருதப்பா எனக்கு

இது மகனின் பெருமை

 

நன்னடத்தையில்

நான்தான் முதலாம்

எடுசேவ் விருது

எனக்கும் தானப்பாப்பா

இது மகளின் பெருமை

 

பெற்ற பெருமையை

அப்பாவிடம் பகிர்வது

பிள்ளைக்குப் பெருமைதானே

 

வீட்டுப் பிரச்சினைகளா?

அம்மாவுக்கும் அப்பாதானே

 

என்னங்க…

நாலு அடுப்பிலே

மூணு தூங்குது

ஒன்னுதான் எரியுது

தண்ணீர்க் குழாய் கசியுது

அடுத்த வாரம்

மாமாவும் அத்தையும்

வாராங்க…

 

குடும்பத் தலைவனுக்கோ

தலை போகும் வேலை

ஓரு அரசியல் தலைவரின்

மரணத்தில் மர்மமாம்

வாட்ஸ்அப்பை, தினசரியை

ஃபேஸ் புக்கை

குடைந்து கொண்டே

அந்தக் குடும்பத் தலைவன்

 

எரியும் விளக்குகள்

ஈரத் தீக்குச்சிகள்

 

அமீதாம்மாள்

Series Navigationஈழக்கவிஞர் கருணாகரனின் கவிதைகளில் நிலம் சார்ந்த பார்வை…..அன்பு ஜெயாவின் திருநாவுக்கரசர் போற்றிய திருவதிகை – நூல் அறிமுகம்