author

பஞ்சதந்திரம் தொடர் 8 – ஆட்டுச் சண்டையும் குள்ள நரியும்

This entry is part 31 of 33 in the series 11 செப்டம்பர் 2011

ஆட்டுச் சண்டையும் குள்ள நரியும்   சிஷ்யனின் பல குணங்களைக் கண்டு நிம்மதியிடைந்திருந்த தேவசர்மா திடமனதோடு உட்கார்ந்தான். அந்த சமயத்தில் எதிரே ஒரு செம்மறியாட்டு மந்தையைக் கண்டான். மந்தையின் இடையே இரண்டு ஆடுகள் சண்டையிட்டுக் கொண்டிருந்ததையும் கண்டான். ஆடுகளிரண்டும் ஆங்காரத்துடன் விலகிப் பின் வாங்குவதும், மீண்டும் ஓடிவந்து அகன்ற நெற்றி மண்டைகளோடு ஒன்றுக்கொன்று முட்டிக்கொள்வதுமாயிருந்தன. மண்டையிலிருந்து ரத்தம் பெருக்கெடுத்தோடியது. பேராசை பிடித்த குள்ளநரியொன்று இந்த சண்டையைப் பார்த்தது. மாமிசம் தின்ன விரும்பிய நரி அவற்றிற்கிடையே புகுந்து ரத்தத்தைப் […]

பஞ்சதந்திரம் தொடர் 7 – தேவசர்மாவும் ஆஷாடபூதியும்

This entry is part 53 of 54 in the series 4 செப்டம்பர் 2011

தேவசர்மாவும் ஆஷாடபூதியும்   ஒரு காட்டில் தனியே ஓரிடத்தில் மடாலயம் ஒன்று இருந்தது. அதில் தேவ சர்மா என்னும் சந்நியாசி யொருவன் இருந்தான். அவன் பல யக்ஞங்கன் நடத்தியதற்குப் பிரதியாக பக்தர்கள் பலர் அவனுக்குப் பல நேர்த்தியான ஆடைகள் அளித்திருந்தனர்.   அவற்றை விற்று அவன் நாளடைவில் பெருஞ்செல்வம் திரட்டினான். பணம் சேரவே, அவன் யாரையும் நம்பவில்லை. எப்பொழுது பார்த்தாலும் பணப்பையைத் தனது அக்குளில் வைத்துக் கொண்டபடியே திரிந்தான். இரவும் பகலும் அது அவனைவிட்டு நீங்கவே நீங்காது. […]

பஞ்சதந்திரம் தொடர் 6 – தந்திலன் என்ற வியாபாரி

This entry is part 42 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

தந்திலன் என்ற வியாபாரி   மண்ணுலகில் இருக்கும் வர்த்தமானம் என்ற நகரத்தில் தந்திலன் என்ற வியாபாரி ஒருவன் வசித்து வந்தான் அவனே எல்லா ஊர்களுக்கும் அதிகாரி. நகர அலுவல்களையும், ராஜ்ய காரியங்களையும் அவன் பார்த்து வந்த காலத்தில் எல்லா மக்களும் திருப்தியோடிருந்தனர். அதிகமாகச் சொல்வானேன்? அவனைப் போல் கெட்டிக்காரனை யாரும் கேட்டதுமில்லை, பார்த்ததுமில்லை. விவேகம் நிறைந்த ஒரு பழமொழி கூறுவதுபோல்:   அரசனுக்கு நன்மை செய்பவன் மக்களின் வெறுப்பைப் பெறுகிறான்; மக்களுக்கு நன்மை செய்பவனை அரசன் கைவிடுகிறான். […]

பஞ்சதந்திரம் தொடர் 5 – நரியும் பேரிகையும்

This entry is part 45 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

நரியும் பேரிகையும்   ஒரு வட்டாரத்தில் ஒரு நரி இருந்தது. அது பசியால் வாடி தொண்டை வறண்டு போய் இரை தேடியபடி காட்டில் சுற்றித்திரிந்தது. காட்டின் மத்தியில் அரசனின் போர்க்களத்தைப் பார்த்தது. அங்கே நரி ஒரு நிமிஷம் நிற்பதற்குள் பலத்த சத்தம் ஒன்று கேட்டது. அதைக் கேட்டதும் நரிக்கு மனக்கலக்கமும் கவலையும் உண்டாயிற்று. ”ஐயோ, ஆபத்து வந்து விட்டதே! இனி நான் செத்த மாதிரிதான். யார் இப்படிச் சத்தமிடுகிறார்கள்? என்ன மிருகமாயிருக்கக் கூடும்?” என்றது யோசித்தது. இங்குமங்கும் […]

பஞ்சதந்திரம் தொடர் 4 – ஆப்பைப் பிடுங்கிய குரங்கு 2

This entry is part 41 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

தமனகன் சொல்லிற்று: காலத்தில் பெய்தமழையால் ஒரு விதையிலிருந்து மற்ற விதைகள் முளைப்பதுபோல் வார்த்தைக்குக் கிடைக்கும் பதிலிலிருந்து மற்ற பேச்சுக்களும் முளைக்கின்றன. நேர்மையுள்ள அறிவாளி அபாயத்தை யறிந்து அபாயத்தையும், உபாயத்தை அறிந்து காரியசித்திக்கு வழியையும் வெளிப்படையாகக் காட்டுகிறான். சபையில் நல்லோரால் புகழப்படுகிற குணவான் அந்தக் குணத்தை விருத்தி செய்து காப்பாற்ற வேண்டும். பெருவழக்காய்ப் பேசப்படும் சொற்களை இன்னும் கேள்: அரசன் வீழ்ச்சியை விரும்பாதவன் அரசன் உத்தரவை எதிர்பாராமலே பேசட்டும். அதுவே நல்லவனுக்குத் தர்மம்; மற்றறவையெல்லாம் அதர்மமாகும். இதைக்கேட்ட கரடகன், […]

பஞ்சதந்திரம் தொடர் – ஆப்பைப் பிடுங்கிய குரங்கு

This entry is part 38 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

ஆப்பைப் பிடுங்கிய குரங்கு ஒரு பிரதேசத்திலே நகரம் ஒன்று இருந்தது. அதன் அருகே ஒரு தோப்பில் யாரோ ஒரு வியாபாரி கோவில் ஒன்று கட்டிக்கொண்டிருந்தான். அங்கு வேலை செய்யும் ஆட்கள் மேஸ்திரி எல்லோரும் உச்சி வேளையில் சாப்பிடுவதற்காகத் தினந் தோறும் நகரத்துக்குச் செல்வது வழக்கம். ஒருநாள் அவர்கள் இல்லாத நேரத்தில் ஒரு குரங்குக் கூட்டம் பாதி கட்டப்பட்டிருந்த அந்தக் கோவிலை அடைந்தது. அங்கு தச்சன் பாதி பிளந்து போட்டிருந்த ஒரு பெரிய கட்டை கிடந்தது. அதன் உச்சியிலே […]

பஞ்சதந்திரம் தொடர் – நட்பு அறுத்தல்

This entry is part 12 of 47 in the series 31 ஜூலை 2011

நட்பு அறுத்தல் இப்பொழுது நட்பு அறுத்தல் என்கிற முதல் தந்திரம் ஆரம்பமாகிறது. அதன் முதல் செய்யுள் பின்வருமாறு: காட்டில் சிங்கத்துக்கும் எருதுக்குமிடையே சிறப்பாக வளர்ந்து வந்த சிநேகத்தை, பேராசையும் போக்கிரித் தனமுமுள்ள ஒரு நரி நாசம் செய்தது. அது எப்படி என்று பார்ப்போம்: தெற்குப் பிரதேசத்தில், இந்திரலோகத்துக்கு ஈடாக மஹிளாரூப்யம் என்ற நகரம் ஒன்று உண்டு. அது சகல சுப லட்சணங்களும் பெற்றிருந்தது: பூதேவியின் கிரீடத்திலிருக்கும் சூடாமணி போல் சிறப்புற்றிருந்தது; கைலாசத்தில் முடி போன்ற ரூபத்துடன் இருந்தது. […]