author

அலைகள்

This entry is part 1 of 24 in the series 31 ஆகஸ்ட் 2014

கடலூர் சுப்புராயலு ரெட்டியார் மண்டபத்தில் மாநாடு. தமிழ் மாநில மாநாடு அது.தொலைபேசி ஊழியர்களின் சங்கமிப்பு.சிவப்புக்கொடியைக் கட்டிக்கொண்ட வேன்களையும் தனிப்பேருந்துகளையும் மண்டப வாயிலில் நிறுத்தி இருந்தார்கள்.தாம் எங்கிருந்து கடலூர் வந்தவை என்கிற ஊர் விலாசம் அந்த அந்த வண்டிகளில் நீண்ட பேனர்களில் கொட்டை எழுத்துக்களில் எழுதித்தெரிந்தன. அவன் மாநாட்டிற்கு திருமுதுகுன்றத்திலிருந்து வந்தான். திருமுதுகுன்றம் கடலூர் மாவட்டத்து ஒரு தாலுக்காவின் தலை நகரம்.கடலூர் மாவட்டத்துத்தோழர்கள். ஆயிரம் பேருக்கு மேல் இருக்கலாம். மொத்தமாகத் தமிழகத்துத்தோழர்கள் எல்லோருமாக ஐயாயிரம் பேருக்குக் கடலூரில் கூடியிருந்தார்கள். […]

சின்ன சமாச்சாரம்

This entry is part 4 of 30 in the series 24 ஆகஸ்ட் 2014

ஆபீசுக்குள் நுழையும் நேரம் பார்த்து அவனை இந்த இடது கால் செருப்பு இப்படியா பழி வாங்கும். அதைக் காலணி என்று மரியாதையாய் அழைத்தால் மட்டும் என்ன எப்பவும் அது அப்படித்தான். அவன் இடது கால் கட்டை விரலுக்கு என்று செருப்பில் விடப்பட்டிருந்த அந்தத் தோல் வளையம்தான் படாரெனப் பிய்த்துகொண்டது. அவன் ஒருபக்கம் காலை வைத்தால் அந்தக் கால் ‘அட போப்பா என் வேலை எனக்கு உன் வேலை உனக்கு’ என்று சொல்லி இன்னொரு பக்கம் அவனை இழுத்துக்கொண்டு […]

நிழல்

This entry is part 1 of 26 in the series 17 ஆகஸ்ட் 2014

அவன் நண்பன்தான் அவ்னுக்குச்சொன்னான்.ஆக அவன் அருகில் உள்ள நெய்வேலி நகரம் செல்லவேண்டும். காவலர்கள் ஒரு நூறு பேருக்கு மத்தியில் ‘கிரிமினாலாஜி’ பற்றி பாடம் எடுக்க வேண்டும். இப்படிச்சொல்லி அவனை நெய்வேலிக்குப்போகச்சொன்ன அந்த நண்பனுக்கு சென்னையில் ஒரு நண்பன். அந்தச் சென்னை நண்பனுக்குக் காவல் துறையில் ஆகப்பெரிய பதவி. தமிழ் இலக்கியத்திலும் மிகுந்த ஈடுபாடு. அங்கிருந்து பிறந்து வந்திருக்கிறது இந்தக் கட்டளை. ‘என்ன சொல்கிறாயப்பா நீ நான் நெய்வேலிக்குப்போய் கிரிமினாலஜி பாடம் எடுப்பதா அதுவும் காவல் துறையில் பணி […]

வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு புகையிலை பிறந்தகதை(காசி இனத்து பழங்கதை)

This entry is part 7 of 23 in the series 10 ஆகஸ்ட் 2014

கேட்டு சொன்னவர்: கின்பாம் சிங்க்னாங்க்கின்ரிஹோ தமிழில்:எஸ்ஸார்சி இது நேர்மையான நட்பின் கதை. காசி பழங்குடி இனத்துச் சனங்களின் கதை.நட்புக்கு ஒரு எடுத்துக்காட்டென விளங்கிய இரு அன்பு உள்ளங்களின் வெளிப்பாடு.ஒருவரை ஒருவர் மனம் புண்படுத்த ஒப்பாத மனிதர்களின் வாழ்க்கைக்கதை. ஏழை பணக்காரன் என மக்கள் வித்தியாசம் பாராட்டாத காலத்து விஷயம் இது. காசி இனமக்கள் வாழ்ந்த அந்த ஒரு கிராமத்தின் பெயர் ரங்கிர்விட். அங்கே உநிக், உசிங்க் என இருவர்.உசிங்க் மிகவும் வறியவன். அந்த வறியவனின் மனைவி பெயர் […]

மும்பைக்கு ஓட்டம்

This entry is part 1 of 25 in the series 3 ஆகஸ்ட் 2014

ஆங்கில மூலம் -சலில் சதுர் வேதி -தமிழில் -எஸ்ஸார்சி ராஜு பையன் தான் அந்த மாநகரம் மும்பையுக்கு ஓடிவிடலாம் எனத்திட்டம் போட்டான்.மும்பை எங்கிருக்கிறது அது எத்தனை தூரம் என்பதெல்லாம் அவன் அறிந்திருக்கவில்லை.அவன் தெரிந்து கொண்டிருப்பது எல்லாம் இதுதான்.ஒருவன் தலை எழுத்து மாற்றப்பட வேண்டுமென்றால் அவன் மும்பையிக்குப்போய்விடவேண்டும் என்பது மட்டுமே. ஜைபூர் வழியாகத்தான் மும்பையிக்குப் போகவேண்டும் என்பது தெரியும். அவன் நண்பன் அவனிடம் சொன்னதுதானே. அவன் சகோதரிகள் நான்கு வயது குடியாவும் ஒன்பது வயது கோகியும் அவனுடன் மும்பையிக்கு […]

நாய்ப்பிழைப்பு

This entry is part 1 of 28 in the series 27 ஜூலை 2014

காலையில் கதவைத்திறந்த அவனுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. வாயிலில் ஓரமாக நின்று மொட்டைமாடிக்கு இட்டுச்செல்லும் அந்த மாடிப்படிகளுக்குக் கீழாக நாய்க்குட்டிகளின் முனகல் ஒலி . இதோ இக்கணம் .பிறந்த அந்த நாய்க் குட்டிகள் எழுப்பும் ‘ ங்கொய் ங்கொய்’ சப்தம். அவன் மாடிப்படிக்குகீழாக சென்று பார்த்தான். இது செய்து தான் ஆகவேண்டும் என்றாலும் நேற்று மாலைதான் அதனைச் செய்யவும் முடிந்தது. அவன் அந்த மாடிப்படிகளின் கீழ் எல்லாம் துப்புறக் கூட்டிச் சுத்தம் செய்த விஷயம்தான் அது. ஒரு […]

வீடு

This entry is part 1 of 26 in the series 1 ஜூன் 2014

-எஸ்ஸார்சி தம்பி எங்கே? என்றேன் அம்மாவிடம். என் அம்மாவின் முகம் வாடி இருந்தது. தேம்பி அழுது இருப்பாளோ என்னவோ. இருக்கலாம் .ஏதோ வீட்டில் நடந்துவிட்டிருக்க வேண்டும். உள்ளூர் நகராட்சித்தொடக்கப் பள்ளியில்தான் நான்காவது படிக்கிறான் என் தம்பி.அவன் இப்போது எங்கே சென்றிருப்பான். அவனைத்தான் வீட்டில் காணவில்லை. கேள்விக்குப்பதில் ஏதும் எனக்குச்சொல்லாத அம்மா எதிரே இருக்கும் மேசையை மட்டுமே காட்டினாள். அந்த மேசையின் மீது அப்படி என்ன இருக்கிறது. நான் எட்டிப்பார்தேன். தம்பியின் திருத்தப்பட்ட தமிழ்த் தேர்வுத்தாள் ஒன்று கிடந்தது. […]

அந்த நாளும் ஒரு நாளே.

This entry is part 1 of 22 in the series 18 மே 2014

-எஸ்ஸார்சி திரைகடல் ஓடியும் திரவியம்தேடு என்பது சா¢. அப்படி திரவியம் தேடுவதில் எது அளவுகோல் தேடலுக்கு எல்லை என்று ஏதும் உண்டா. பொருளில்லாதவர்க்கு பரந்து வி¡¢ந்து கிடக்கும் இந்த உலகம் இல்லை. அருள் இல்லாதவர்க்கோ அவ்வுலகம் இல்லை. இந்த உலக லடசணம் எல்லாம் நமக்கு க்கொஞ்சம் கொஞ்சம் அத்துப்படி. மற்றபடி அருள் அவ்வுலகம் பற்றி எல்லாம் தொ¢யுமா என்றால் தொ¢யாது அந்தப்பொய்யாமொழியார் திருவள்ளுவர் எப்பாடுபட்டாரோ தொ¢ந்து கொண்டு நமக்குச்சொன்ன அந்த சமாச்சாரம் மட்டும்தான், இவைகள் எல்லாம் இன்று […]

ஆகவே     

This entry is part 1 of 25 in the series 27 ஏப்ரல் 2014

         -எஸ்ஸார்சி மார்க்சீய தத்துவப்பயிலரங்கு. தேசிய அளவிலே நிகழ்ந்தது. வகுப்பு எடுப்பது என்று பொறுப்பானவர்கள் முடிவு செய்துவிட்டால் பிறகு அது முடிவுதானே. அந்தப் புனித நகராம் வாரனாசியில் தான் தோழர்கள் கூடியிருந்தார்கள்.ஒரு நூறுபேருக்கு இருக்கலாம். எல்லாரும் எப்படியோ ஒரு விதத்தில் இயக்கத்துக்கு தொடர்புடையவர்கள். நீங்கள் நினைக்கும் அந்த அதே இயக்கம்தான். என்னை ப்பொருளாதாரம் பற்றிய விரிவுரைக்கு மட்டும் அழைத்திருந்தார்கள்.ஏழு நாட்கள் தொடர்ந்து வகுப்பு காலை மாலை என இரண்டு பகுதிகள்.ஒரு நாள் காலை முழுவதும் பொருளாதாரம் பற்றிப்பேசினேன்.பொருளில்லாதவர்க்கு இவ்வுலகமில்லை. யாவருக்கும் அனுபமாகும் பெரு விஷயம். பொருளாதாரப் பிதாமகன் ஆடம்சுமித் தொடங்கி […]

வீடு திரும்புதல்

This entry is part 1 of 25 in the series 20 ஏப்ரல் 2014

 ரவிந்திர நாத் தாகூர் தமிழில்- எஸ்ஸார்சி இந்த கிராமத்து விடலைகளின் மத்தியில் பதிக் சக்ரவர்த்தி ஒரு தலைவன்.அவனுக்கு ஒரு யோசனை.கிறுக்கு யோசனைதான்.இதோ இந்த ஆற்றங்கரை மண்திட்டு மீது கிடக்கிறதே ஒரு பெரிய மரம் அது ஒரு படகின் நடு த்தூணுக்கு எனத்தான் வைத்திருக்கிறார்கள் இதனை இந்த இடத்திலிருந்து உருட்டி உருட்டி விளையாடினால் என்ன.இந்த மரத்துக்கு உரிமைக்காரன் சண்டைக்கு வருவான். வரட்டுமே எல்லோருக்கும் அது சிரிப்பாயும் இருக்கும். அவனின் சக தோழர்கள் எல்லோரும் சரி என்றார்கள். மரத்தை உருட்டிவிட […]