author

முடிவை நோக்கி…

This entry is part 15 of 32 in the series 24 ஜூலை 2011

முடிவை நோக்கி… வாழ்க்கை செல்கிறது! வாழ்வை விரும்பினாலென்ன… விரும்பாமல் சலித்தாலென்ன முடிவை நோக்கி ஆயுள் செல்கிறது…. ஆசைகளை அடைந்த போதும் நிராசைப்பட்டு சடைந்த போதும் எமது முடிவுப் புள்ளி பிறந்ததில் இருந்து எமை நோக்கி வந்து கொண்டேயிருக்கிறது….. இலட்சியம் – வெளுத்துப் பிரகாசிக்கலாம்… கசந்து காய்ந்து போகலாம்… “வெற்றி” சுவை கூறலாம்.. மறுத்து தொலைவாகலாம். பூமி புதிர் போடலாம்.. காற்று கவி பாடலாம்.. சோகம் வதை பண்ணலாம்.. இன்பம் கதை சொல்லலாம்.. நாம் கடி மலரில் துயிலலாம்.. […]

அன்னையே…!

This entry is part 21 of 34 in the series 17 ஜூலை 2011

உயரமான ஒரு சொல்லை எழுதினேன் அது – “சிகரமா”னது… நீளமான சொல்லை வரைந்தேன் – உடனே “நதி”யானது… வெப்பமான சொல்லொன்று எழுத “சூரியனா”ய் உதித்தது… ஈரமான சொல்லொன்று எழுத “மழை” பொழிந்தது… அன்பாக ஒரு சொல் எழுத “நீ”யானாய்… நீ உடன் வந்தாய் – இனியும் நான் யாதெழுத…? என் முன் நீ அன்பொழுக…! இனி நீயே கதையெழுது… வாழ்க்கை நதியோட….!

விழிப்பு

This entry is part 36 of 38 in the series 10 ஜூலை 2011

சந்தங்கள் மாறித் துடிக்கும் இருதயம் தினமும் புதிதாய் இங்கே – ஆயிரம் காதை சொல்கிறது பௌதிகம் தாண்டிய திசைகளில்… வெயிலோ பட்டெரிக்கும் வெந்தீ சுட்டு எரிக்கும் வார்த்தை பட்டு உடையும் இதயம் படாத பாடு படும்… யாதும் தொடாமலே எண்ணங்கள் இடமாறலாமா…? நிலவு கந்தளானால் அது உன் பிறை நுதல் என்பேன்., இருள் கந்தளானால் அது உன் விழி வீசும் சுடர் என்பேன்., கனவே கந்தளானால் அதைத் தான் யாது என்க..?, பூவுலகில் துயில் கலைந்தது என்கவா..??! […]

இன்னும் புத்தர்சிலையாய்…

This entry is part 1 of 51 in the series 3 ஜூலை 2011

இதயத்தில் தாங்கினேன் தோழியே உனை.. இன்னும் தான் பாடம் படிக்கிறேன் நான்… உன் மனம் புண்பட்டதோ – கண்ணீரைச் சுமக்கின்றேன் தினமுந் தான் நான்…! உனக்குள்ளே வந்துவிட கருவாகச் சுருங்கினேன்… என் சுவாசத்தில் கருகினேன் – காற்றிலே சாம்பலாய் உனைத்தேடி பறக்கிறேன்… கற்பாறை போலவா என் மனம்..?, நீரலையாய் வந்து அறைந்தாயே… உனக்குள் நான் உறங்குகிறேன் இன்னும் புத்தர் சிலையாய்… உன் சுவாசமாவது தாலாட்டும்…!! ஜே.ஜுனைட் Jjunaid