author

லங்காட் நதிக்கரையில்…

This entry is part 10 of 28 in the series 10 மார்ச் 2013

சுப்ரபாரதிமணியன் திருப்பூருக்கு வரும் பல இலக்கிய நண்பர்கள் நொய்யல் நதியைப் பார்க்க ஆசைப்படுவதுண்டு. எனது படைப்புகளில் நொய்யலின் சீரழிவை முன் வைத்து எழுதப்பட்டிருப்பதை காட்சி ரூபமாகப் பார்க்க விரும்புவர். சிறுத்துப்போய் சாயக் கழிவுகளும், வீட்டுக் கழிவுகளும் ஓடும் ஜம்மனை பாலம், முனிசிபல் வீதி என்று பிரதான சாலைகளைக் காட்டுவேன். மறைந்து போன நதி பற்றி இரங்கலாய் சில வார்த்தைகள் சொல்வார்கள். மலேசியாவில் லங்காட் நதியைப் பார்க்கச் செல்ல வேண்டும் என்ற ஆசை மலேசிய எழுத்தாளர் ரங்கசாமியின் லங்காட் […]

அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கும் தமயந்தியின் குரல்

This entry is part 15 of 32 in the series 13 ஜனவரி 2013

பெரும்பாலும் வெகுஜனஇதழ்களிலும், கொஞ்சம் இலக்கிய இதழ்களிலும் படித்த தமயந்தியின் சிறுகதைகள் அவரின் பிறப்பு, ஜாதி சார்ந்த அடையாளங்களைக் காட்டியதில்லை. அவரின் நாவல்” நிழலிரவு” படிக்க ஆரம்பித்தவுடன் கிறிஸ்துவ சமூகம் சார்ந்த அவரின் அனுபவங்கள் அவரின் பெயர், கிறிஸ்துவ சமூகம் பற்றிய எண்ணங்கள் அவரின் இன்னொரு முகமாய் வெளிப்படுத்தியது. தமிழ்ச்சூழலில் கிறிஸ்துவ இலக்கியம் பற்றிய யோசிப்பில் எழுத்தாளர் பட்டியல் விடுபட்டுப்போகிறது. சிஎல்எஸ், பூக்கூடை எண்பதுகளில் நடத்திய இலக்கியம் சார்ந்த கருத்தரங்குகள் ஞாபகம் வந்த்து.நண்பர்வட்டம் பத்திரிக்கை சரோஜினி பாக்கியமுத்து மறைந்து […]

நெத்திலி மீன்களும் சுறாக்களும்

This entry is part 9 of 27 in the series 23 டிசம்பர் 2012

படைப்பாளி படைப்புச்  செயல்பாடுகளோடுமட்டுமின்றி  தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்வது, குழு அரசியலை முன் வைப்பது, தன் படைப்புக்ளுக்கான மார்க்கெட்டை  நிறுவுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது,  அதிர்ச்சி மதிப்பீடுகளின் மூலம் தன் படைப்புகளுக்கான நிலையை முன் நிறுத்துவது என்று குறுகி போய்விட்டான்.  ஆனால் படைப்பாளி படைப்புச்  செயல்பாடுகளோடுமட்டுமின்றி  சக எழுத்தாளர்களின் படைப்புகளை ரசிப்பதை எடுத்துரைப்பது,  தன்னை முன்னிலைப் படுத்திக் கொண்டு அவர்களின்  படைப்புச் சூழலை முன் வைப்பது, தான் சார்ந்த  அரசியலை முன் வைப்பது, தன் படைப்புகளுக்கான சூழல்  முயற்சிகளை […]

இணைய தளங்கள் கழிப்பறையா, சுதந்திர உலகமா

This entry is part 27 of 31 in the series 16 டிசம்பர் 2012

( திருப்பூரில் “ தமிழ்ச்செடி” என்ற இணைய தள பதிவாளர்களின் கூட்டமைப்பு மாதந்தோறும் இணையதளம் சார்ந்த பகிர்விற்காக கூட்டம் நடத்துகிறது. மாதம் ஒரு இணையதள பதிவாளரை தேர்ந்தெடுத்து பரிசும் வழங்குகிறது. இம்மாதம் பரிசு பெற்றவர். மதுரை மணிவண்ணன். அவ்விழாவில் சுப்ரபாரதிமணீயன் உரையின் ஒரு பகுதி இது. செண்பகம் மக்கள் சந்தையில் நடைபெற்ற டிசம்பர் மாதக்கூட்டதிற்கு மக்கள் சந்தை.காம் நிறுவனர் சீனிவாசன் தலைமை தாங்கினார். இணைய தள பதிவாளர்கள் ஜோதியர் இல்லம் ஜோதிஜி, நிகழ்காலத்தில் சிவா, உலகசினிமா ரசிகன் […]

தமிழ் மகனின் படைப்புலகம் : ” ஆண்பால் பெண்பால் “ நாவலை முன் வைத்து….

This entry is part 3 of 31 in the series 2 டிசம்பர் 2012

பொதுவாக இந்திய  வெகுஜன இதழ்களில் குடும்பம், திருமணம், மணமுறிவு, மன முறிவு, பிரிவு, கூடுதல் சம்பந்தமான லட்சக்கணக்கான தொடர்கதைகள் இது வரை வெளிவந்திருக்கும்.பெரும்பாலும் இந்துவா சிந்தனைகள், சடங்குகளின் மேன்மை, இந்தியர்களின் குடும்ப்ப் பெருமை பற்றி சிலாகிப்பவை . இது தமிழிலும்  சாத்தியமாகியுள்ளது.       தமிழ் மகனின்  “ ஆண்பால் பெண்பால்” நாவலில் மணமுறிவு சார்ந்த நுணுக்கமான உளவியல் சார்ந்த விசயங்கள் ஆக்கிரமித்திருருப்பதைக் குறிப்பிடலாம். பலவீனமான குடும்ப அமைப்புகளின் அடையாளம் இந்த மண முறிவு. மேற்கத்திய நாட்டுக்குடுமபங்கள் இந்த பலவீன்ங்களைக்கொண்டவை. […]

மலேசியாவில் தொலைந்த மச்சான்

This entry is part 29 of 42 in the series 25 நவம்பர் 2012

  சிறுகதை: சுப்ரபாரதிமணியன்   மலேசியா பணத்திற்கு என்ன பெயர் என்று அவனுக்கு ஞாபகம் வரவேயில்லை.டாலர், பவுண்ட் என்ற வார்த்தைகளே ஞாபகத்தில் திரும்ப வந்து கொண்டிருந்தன. அவனின் பொது அறிவு அவ்வளவு கூர்மையானதல்ல.யாரிடம் கேட்க,எதற்கு என்று அலுப்பில் இருந்தான். மலேசியா விமான நிலையத்தில் போய் மாற்றிக் கொள்ளலாம் என்றிருந்தான்.  விமானத்தில் வந்து உட்கார்ந்தாயிற்று. ‘’ அதுலே குடிக்கத் தண்ணி கூட குடுக்க மாட்டானே  ‘’ ‘’ இண்டர்னேசனல் பிளைட் . நாலு மணி நேரப்பயணம் .சாப்பாடு நிச்சயம் […]

அலையின் திசையில் மாற்றம் தேடி..-வாஸந்தியின் “ மீட்சி” சிறுகதைத்தொகுப்பை முன் வைத்து….

This entry is part 15 of 33 in the series 11 நவம்பர் 2012

  ஒரு சமூகத்தின் வளர்ச்சியோ மேம்பாடோ அந்த சமூகத்தில் பெண்கள் நிலையை  முன் வைத்தே கணக்கிடப்படுகிறது.  வாஸந்தி அவர்களின் படைப்புகள் இந்திய சமூகத்தின் ஒரு பகுதி சமூகப் பெண்கள் பற்றியோ, பெரும்பான்மைப் பெண்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இருப்பவர்களையோ முன் நிறுத்துபவை. அவரின் கடைசியாக  வெளிவந்த சிறுகதைத் தொகுப்பு சர்வதேச அரசியலை முன் வைத்து அல்லது உலகின் பல்வேறு நாடுகளின் பிரசிசினைகளை முன் வைத்து ஒரு பத்திரிக்கையாளனின் பார்வை  அல்லது ஊடாடிய அரசியல் அனுபவப் பார்வை என்ற அளவிலும், […]

இலக்கியப்பயணம்: —கனவு இலக்கிய இதழுக்கு வெள்ளிவிழா —- கனவு 25

This entry is part 2 of 34 in the series 28அக்டோபர் 2012

செகந்திராபாத் நகரத்தைப் பற்றி வேலை நிமித்தமாய் அங்கு செல்வதற்கு முன் அசோகமித்திரனின் எழுத்துக்கள் மூலமே அறிந்திருந்தேன்.அவரின் ஏராளமான சிறுகதைகள், 18வது அட்சக் கோடு நாவல்,மாபூமி போன்ற திரைப்படங்கள்,தெலுங்கானா போராட்டக் கதைகள் ஆகியவையே செகந்திராபாத் பற்றின விபரங்களை மனதில் விதைத்திருந்தன. வெளிமாநில தமிழ்ச்சஙகளின் செயல்பாடுகளை ஓரளவு இலக்கிய இதழ்களின் செய்திகள் மூலம் அறிந்திருந்தேன். அதற்கு முன் நாலைந்து ஆண்டுகளாக எனது சிறுகதைகள், கவிதைகள் கணையாழி, தீபம், தாமரை இலக்கிய இதழ்களில் வெளிவந்திருந்தன. தமிழ் புத்தகக்கடைகள், தமிழ் அமைப்புகள் , […]

திரைப்படம்: ஹாலிவுட்டின் கதைச்சுரங்கம்

This entry is part 2 of 21 in the series 21 அக்டோபர் 2012

    கடந்த ஆண்டுகளில்  வெளியான அமெரிக்கப்படங்களில் குறிப்பிட்த்தக்கதாய் சம்வேர், பிரிசியஸ் ஆகியவற்றைச் சொல்லலாம். சம்வேர் வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவின் சிறந்த படத்திற்கான பரிசைப் பெற்றது. ஹாலிவுட்டின் திரைப்பட நடிகரான ஜானி  வழக்கமான திரைப்பட நட்சத்திரத்தின் புகழையும் ஆடம்பர வாழ்க்கையையும் கொண்டவன். மனைவியுடன் ஏற்பட்ட சிக்கல்களால் பெரிய விடுதி ஒன்றில் இருந்து வருபவன். அவனின் மனைவி 11 வயது மகளை அவனிடம் ஒப்படைக்கிறான். அவன் போகுமிடங்களுக்கு கூட்டிச் செல்கிறாள்.  நட்சத்திரத்தின் மகள் என்ற அந்தஸ்து அவளுக்கு மிதப்பைத் […]

திரைப்படம்: ஹாங்காங்கின் இரவுகள்

This entry is part 13 of 23 in the series 7 அக்டோபர் 2012

        ஆண்கள்  மீதான பெண்கள் வன்முறை நகைச்சுவைக்கான் விசயமாகவும், பட்டிமன்ற  கிசுகிசுவிற்காகவும் பயன்படுகிற விசயமாகிவிட்டது. அவ்வகையான் விடயங்களும் , வழக்குகளும் சமீபத்தில் அதிகரித்து வருகின்றன. குடும்ப வன்முறையில் 90 சதம் இந்தியப் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். பாக்கிஸ்தான் போன்ற நாடுகளிலும், முஸ்லீம் நாடுகளிலும் இந்தியாவிற்கு ஒத்த புள்ளி விவரங்கள் உள்ளன. முஸ்லீம்நாடுகளில் ஆண்களின் பாலியல் இச்சைக்கு உடன்படாத குடும்ப்ப் பெண்கள் மீதான குடும்ப வன்முறை உச்சத்தில் இருக்கிறது. பாலியல் வேட்கையை நியாயப்படுத்துகின்றன அவை. இன்னும் சந்தேகத்தன்மையும், ஒத்துவராத குணமும் […]