உஷாதீபன்

மனதை வருடும் பெருமாள் முருகனின் “எருமைச் சீமாட்டி” (ஆனந்தவிகடன் சிறுகதை)

This entry is part 8 of 23 in the series 16 ஜூன் 2013

(ஒரு வாசிப்பனுபவம்)     வாசிப்புப் பழக்கமுள்ளவர்கள் புதிது புதிதாகத் தேடித் தேடிப் படித்துக் கொண்டேயிருப்பார்கள். வெவ்வேறு எழுத்தாளர்களின் படைப்புக்கள் எப்படியிருக்கின்றன என்று உற்றுக் கவனித்துப் படிப்பார்கள். உண்மையிலேயே எழுத்தை இவர்கள் ஆள்கிறார்களா அல்லது வெறுமே  வரி கடந்து செல்லும் எழுத்தா என்று நோட்டமிடுவார்கள். எழுத்தை நேசிப்பவர்களுக்கு கதைகள் மட்டுமே என்றோ, நாவல்கள் மட்டுமே என்றோ, கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள், ஆய்வுக் கட்டுரைகள் என்றோ பிரித்துத் தனித்து நின்று ஒன்றிலேயே பயணித்தால் கதையாகாது. எல்லாவற்றையும்தான் படித்தாக வேண்டும். அனைத்தையும்தான் […]

“இவரைத் தெரிந்து கொள்ளுங்கள்” – திரு கர்ணன்

This entry is part 2 of 24 in the series 9 ஜூன் 2013

முதலில் இம்மாதிரி ஒரு தலைப்பில் ஆரம்பிப்பதே தவறு என்றுதான் தோன்றுகிறது. தலைப்பை வைத்தே அவரை யாருக்கும் தெரியாது என்பதை நாமே உறுதிப் படுத்துவதாக ஆகி விடுகிறது என்பதுதான் உண்மை. ஆனாலும் கூட இம்மாதிரி விஷயத்திற்கெல்லாம் இப்படித் தலைப்பிட்டுத்தான் சொல்லித் தொலைக்க வேண்டியிருக்கிறது. காரணம் நம் தமிழ்நாட்டின் நிலைமை அப்படி. அதாவது தமிழ்நாட்டிலுள்ள பல எழுத்தாளர்களின் நிலைமை என்று சொல்ல வந்தேன். கேரளா போன்ற மாநிலங்களில் ஒருவர் ஒரு புத்தகம் வெளியிட்டிருந்தால் கூட அவரை ஊரறிய மேடை ஏற்றி […]

புத்தக அறிமுகம் – முல்லைப் பெரியாறு அணை – வரலாறும் தீர்வும்

This entry is part 10 of 40 in the series 26 மே 2013

முல்லைப் பெரியாறு அணை – வரலாறும் தீர்வும் என்றொரு புத்தகம் வந்திருக்கிறது. வேளாண் பொறியியல் துறையில் 32 ஆண்டுகள் பணியாற்றி கண்காணிப்புப் பொறியாளராக 2004 ல் பணி நிறைவு பெற்ற இவர் மதுரை தானம் அறக்கட்டளையின் நீர்வளப் பிரிவில் திட்ட ஆலோசனைகளை வழங்கி வருகிறார். அண்ணா பல்கலைக் கழகத்தின் நீர்வள மையத்தில் நான்காண்டு காலம் திட்டப் பொறியாளராகப் பணியாற்றியபோதும், பெரியாறு வைகை பாசன மேம்பாடு திட்டப் பணிகளின் செயலாக்கத்தில் விவசாயிகளை ஒருங்கிணைத்தபோதும், பெரியாறு அணை பற்றிய பல […]

இமையம் அவர்களின் பேராசை என்கிற சிறுகதை

This entry is part 12 of 33 in the series 19 மே 2013

    படைப்பாளிக்கு ஆழ்ந்த ரசனை மிக முக்கியம். ஆழ்ந்த ரசனை என்பது மற்ற சாதாரணர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதும், அவர்களால் எண்ணிப் பார்க்க முடியாததாயும் இருத்தல் வேண்டும். அப்படியானால்தான் அந்த ரசனை எழுத்தாக, படைப்பாக வெளிப்படும்போது தனித்துவமாக மிளிர்ந்து நிற்கும். இந்தச் சமுதாயத்தின் அவலங்களை ஆழமாக உள்வாங்கி, மனதுக்குள்ளேயே பொருமி, அழுது, தாள முடியாத வேதனையோடு அவற்றை வெளிப்படுத்தும்போது, அது சத்தியமான படைப்பாகத் தானே முன்வந்து நிற்கும்.     அப்படிப்பட்டதொரு அருமையான படைப்புதான் மே 2013 உயிர்மை இதழில் […]

என். ஸ்ரீராமின் “அத்திமரச் சாலை” (நாவல் வாசிப்பனுபவம்)

This entry is part 21 of 28 in the series 5 மே 2013

    சமீப நாட்களில் நான் தேடிப் படிக்கும் நாவல்கள் எல்லாம் மனதிற்குள் விசுவலைஸ் ஆகி திரைப்படங்களாகவே எனக்குள் விரிந்து கொண்டிருக்கிறது. க.நா.சு.வின் “அவரவர் பாடு“ நாவல் படித்தபோதும் இதே உணர்வுதான் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று என்.ஸ்ரீராமின் “அத்திமரச் சாலை” படித்து முடித்தபோதும் மனதிற்குள் படம்தான் ஓடியது.       நாவலைப் படித்து முடித்துக் கண்களை மூடிக்கொண்டு ஒரு சுழற்சியில் மொத்த நாவலையும் படிப்படியாய், அடுத்தடுத்த காட்சிகளாய் நினைத்துப்  பார்த்தபோது, முதலில் மனதிற்குள் படர்ந்தது அட்டைப் படத்துடன் […]

க.நா.சு.வின் ”அவரவர்பாடு” நாவல் வாசிப்பனுபவம்

This entry is part 6 of 29 in the series 28 ஏப்ரல் 2013

சிதம்பரத்தில் என் தகப்பனார் கண்முன் நடந்த ஒரு சம்பவத்தை வைத்து அதற்கு கண், காது, மூக்கு, கால், மனம், காலம் என்று எல்லாம் சேர்த்து “அவரவர் பாடு” என்கிற இந்நாவலை எழுதினேன். இன்னும் பல மர்ம நாவல்கள் எழுதிப் பார்க்க ஆசை உண்டு என்கிறார் க.நா.சு. க.நா.சு. நூற்றாண்டு சிறப்பு வெளியீடாக நற்றிணை பதிப்பகம் மூலம் கொண்டுவரப்பட்டுள்ள நாவல் இது. இன்னும் பல மர்ம நாவல்கள் எழுதிப் பார்க்க ஆசை என்று சொல்கிறார். எழுதிப் பார்க்கிறேன். அது […]

“தோற்றப் பிழை” (சிறுகதைத் தொகுதி) ( ”படைப்பிலக்கியத்தின் கச்சிதமான காட்சிப் பதிவுகள்” )

This entry is part 22 of 26 in the series 17 மார்ச் 2013

எழுத்தாளர் தி.தா.நாராயணன் அவர்களைத் தமிழ் எழுத்துலகு அறியும். சிறந்த சிறுகதைகளைத் தொடர்ந்து தந்து கொண்டிருப்பவர் அவர். எந்தப் பரிசுத் திட்டம் அறிவித்திருந்தாலும், அதற்கு இவர் தன் கதையை அனுப்பியிருந்தார் என்றால், நிச்சயம் ஒரு பரிசு அவருக்கு உண்டு. இப்படிப் பல முதற் பரிசுகளைத் தன் கதைகளுக்காகப் பெற்றவர். மனித நேயம் மிக்க கதைகள், சமுதாயப் பிரச்னைகளை எடுத்துக் கொண்டு, அவற்றை அலசி ஆராய்ந்து, நியாயமாக, உருக்கமாகத் தன் படைப்பின் வழி வைக்கும் திறன் கொண்டவர். எந்தவொரு கதையும் ஒதுக்கப்படத்தக்கதாக, […]

தி.தா.நாராயணன் “தோற்றப்பிழை “

எழுத்தாளர் தி.தா.நாராயணன் அவர்களைத் தமிழ் எழுத்துலகு அறியும். சிறந்த சிறுகதைகளைத் தொடர்ந்து தந்து கொண்டிருப்பவர் அவர். எந்தப் பரிசுத் திட்டம் அறிவித்திருந்தாலும், அதற்கு இவர் தன் கதையை அனுப்பியிருந்தார் என்றால், நிச்சயம் ஒரு பரிசு அவருக்கு உண்டு. இப்படிப் பல முதற் பரிசுகளைத் தன் கதைகளுக்காகப் பெற்றவர் அவர். மனித நேயம் மிக்க கதைகள், சமுதாயப் பிரச்னைகளை எடுத்துக் கொண்டு, அவற்றை அலசி ஆராய்ந்து, உருக்கமாகத் தன் படைப்பின் வழி வைக்கும் திறன் கொண்டவர். எந்தவொரு கதையும் ஒதுக்கப்படத்தக்கதாக […]

சுரேஷ்குமார இந்திரஜித் ”நானும் ஒருவன்” (புதிய சிறுகதைத் தொகுப்பு) ஒரு வாசிப்பனுபவம்

This entry is part 30 of 32 in the series 13 ஜனவரி 2013

    சிறுகதைத் தொகுதிகள் எவ்வளவோ வந்தாயிற்று. படித்தாயிற்று. தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கின்றன. வரத்தான் செய்யும். படித்துக் கொண்டுதான் இருக்கிறோம். வாசிப்பை உழைப்பாய்க் கருதிப் பழக்கப்பட்டதனால் வந்த வினை இது. அப்படியிருப்பதனால்தான் இன்னொரு வசதியும். கொஞ்சம் படிக்க ஆரம்பிக்கும்போதே இது இப்படித்தான், இவ்வளவுதான் என்று புரிந்துகொள்வதும், ஒதுக்கி விடுவதும், குறிப்பிட்ட சிலதாய்ப் படிப்பதும்.     இன்னொன்று, பலவற்றிலும் இருக்கும் ஒரு ஒற்றுமை. ஒரு தொகுதியின் மொத்தக் கதைகளில் நான்கு அல்லது ஐந்து மட்டுமே சிறந்த கதைகளாய்த் தென்படுவது. […]

“சபாஷ், பூக்குட்டி…!”

This entry is part 23 of 31 in the series 4 நவம்பர் 2012

      கதை சொல்லு…கதை சொல்லு…என்று அரித்தெடுத்த பேத்தி அஸ்வினியையே வைத்த கண் வாங்காமல் பார்த்தார் ராமகிருஷ்ணன்.     அன்று ஞாயிற்றுக் கிழமை. அவரைப் பொறுத்தவரை அன்று மட்டும்தான் பேத்தியோடு பேச முடியும், விளையாட முடியும். சனிக்கிழமை விடுமுறை நாளில் கூட ஆபீஸ் சென்று விடுவார் அவர். அதென்னவோ அப்படிப் போனால்தான் மனதுக்கு நிம்மதியாக இருக்கிறது அவருக்கு.     வாரா வாரம் ஏதேனும் கதைகளைத் தயார் செய்து விடுவார்தான். அல்லது நூலகத்திலிருந்து எடுத்து வரும் புத்தகத்திலிருந்து ஒன்றிரண்டு […]