உஷாதீபன்

சிவாஜி ஒரு சகாப்தம்

This entry is part 9 of 37 in the series 2 செப்டம்பர் 2012

நீங்கள் இன்னும் ஏற்காத எந்தப் பாத்திரத்தில் நடிக்க விரும்புகிறீர்கள் என்று ஒரு முறை நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்களிடம் கேட்டபோது அவர் தந்தை பெரியார் என்று சொன்னார். வேறு எத்தனையோ பாத்திரங்கள் இருக்கின்றனதான். அவருக்குப் பிடித்ததை அவர் சொல்லியிருக்கிறார் அவ்வளவே. பிற எத்தனையோ கதாபாத்திரங்களையெல்லாம் இவரை வைத்துக் கற்பனை செய்து அலங்கரித்துப் பார்க்கலாம்தான். திறமையான இயக்குநராயிருந்தால் அவரின் முழுமையான ரசனைத் திறனுக்கு உகந்த, அதற்கும் மேலுமான வடிவத்தை வழங்கத் தகுதியான ஒரு கலைஞர்தான் நடிகர்திலகம் அவர்கள். மிகச் சரியாகச் […]

“ல”என்றால் லட்டு என்றுதான் பொருள்…

This entry is part 9 of 32 in the series 1 ஜூலை 2012

    வேலுச்சாமிக்கு கை நீட்டாமல் முடியாது. கை ஒடிந்து போனதுபோல் உணருவான். சாயங்காலம் வீட்டுக்கு வரும்போது பை நிறைந்திருக்க வேண்டும். அல்லாத நாள் வெறும் நாள். வருஷத்தின் முன்னூற்றி அறுபத்தைந்து நாளும் ஆபீஸ் இருந்தாலும் சரி. அவன் போகத் தயார். ஆனால் பை நிறைய வேண்டும், அவ்வளவே. கையை விட்டால் கத்தையாய் எடுக்க வேண்டும்.     வீட்டுக்குப் போய்த்தான் பிரிப்பான். ஐந்து, பத்து, இருபது, ஐம்பது, நூறு என்று. அதுவரை வாங்கி வாங்கிச் செருகுவதுதான் ஜோலி. மேலாகக் […]

“செய்வினை, செயப்பாட்டு வினை“

This entry is part 32 of 43 in the series 24 ஜூன் 2012

       கூடியிருந்த கூட்டத்திற்கு நடுவே கால் வைக்க மட்டும் இடத்தைத் தேர்ந்து கொண்டு கையில் மாலையோடு நகர்ந்து, நெருங்கி, நான் அதை அவர் கழுத்தில் போட்டபோது என் இதயமே வெடித்து விடும் போலானது. பெருகியிருக்கும் அந்த நெரிசலில் தெரிந்த, தெரியாத எல்லா சோக முகங்களையும் கடந்து, மறந்து, கதறி அழ ஆரம்பித்தேன். அவர் மடியில் விழுந்த வேகத்தில் உடம்பு சாய்வதைக் கண்டு யாரோ வந்து தாங்கிப் பிடித்து நிமிர்த்தி நாற்காலியோடு இணைந்த கட்டுக்களை இறுக்கினார்கள்.     அப்போதும் […]

“பேசாதவன்”

This entry is part 36 of 40 in the series 6 மே 2012

அன்று அம்மாவை எப்படியும் பார்த்து விடுவது என்று மனதில் உறுதியெடுத்துக் கொண்டான் கணேசன். இப்படித்தான் ஒவ்வொரு வாரமும் நினைத்துக் கொள்கிறான். ஆனால் போக முடியவில்லை. ஏதாவது வேலைகள் இருந்து கொண்டே இருக்கிறது. வேலைகளோடு வேலையாய், அதையும் ஒரு வேலையாய்க் கருதித்தானே சென்றாக வேண்டும். அப்படி ஒரு வேலையாய் நினைத்துச் செய்வதானால,; போக, பார்க்க என்று வருவதுதானே அது. அதில் விருப்பமில்லை இவனுக்கு. போனால் அம்மா கூட ஒரு நாள் முழுக்க இருந்தாக வேண்டும். இருக்க வேண்டும். அப்பொழுதுதான் […]

“என்ன சொல்லி என்ன செய்ய…!”

This entry is part 34 of 40 in the series 6 மே 2012

மக்களின் அன்றாட வாழ்வில் முக்கிய இடம் பெறுவது உணவு. இந்த சோற்றுக்காகத்தான் இத்தனை பாடு என்று எத்தனையோ ஏழை எளிய ஜனம் அனுதினமும் போராடிக் கொண்டிருக்கிறது. “ஒரு சாண் வயித்த நெப்புறதுக்கு என்ன பாடு படவேண்டியிருக்கு?” என்று புலம்புவதைக் கேட்டிருக்கிறோம். வெறும் சோறும் பச்சை மிளகாயும், வெறும் சோறும் வெங்காயமும் என்றும் நீரில் கலந்த, நீரில் கரைத்த சோறு என்றும் குடிபடைகள் பிழிந்து பிழிந்து உண்டு ஜீவிதம் கழிப்பதை உணர்ந்துதான் இருக்கிறோம். இதற்கு ஒரு படி மேலே […]

“ பி சி று…”

This entry is part 33 of 44 in the series 15 ஏப்ரல் 2012

      தினமும் அந்த வீட்டைக் கடந்துதான் போய்க் கொண்டிருக்கிறேன். அதுதான் சுருக்கு வழி. கடந்து செல்லும் அந்த ஒரு கணத்தில் என் பார்வை அங்கே திரும்பாமல் இருந்ததில்லை. காலையில் தண்ணீர் வந்ததற்கு அடையாளமாய் அங்கே சுற்றிலும் ஈரமாக இருக்கும். ப்ளாஸ்டிக் குடங்களில் தண்ணீர் பிடித்து வைக்கப்பட்டு வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும். தண்ணீர் வராத நாட்களிலும் வெற்றுக் குடங்கள் அதே வரிசையில்தான் இருக்கும். கடந்து போய்க் கொண்டேயிருப்பார்கள்.     பொழுது விடிந்தால் எங்கள் பகுதியில் பலரும் சைக்கிளில் குடங்களைக் […]

“சூ ழ ல்”

This entry is part 28 of 41 in the series 8 ஏப்ரல் 2012

சுறுசுறுப்பாக வேலை ஓடியது ராகவாச்சாரிக்கு.. சுற்றிலும் படர்ந்த அமைதி. வாசலில் அடர்ந்து பரந்து விரிந்திரிக்கும் மரத்தின் குளிர்ச்சியான நிழல். தலைக்கு மேலே சரசரவென ஓடிக் கொண்டிருக்கும் மின் விசிறி. அதன் சத்தம் மட்டும் துல்லியமாய் காதுகளில். கதவைச் சாத்திடு…யாருக்கும் நான் இருக்கிறதைச் சொல்ல வேண்டாம்…என்று விட்டு, தனது டூ வீலரையும் உள்ளே தூக்கி நிறுத்தியிருந்தார். விடுமுறை நாளில் வேலைக்கு வருவது நிலுவை வேலைகளை முடிக்க. அன்றும் யாரேனும் தேடி வந்து விட்டால் வேலை கெட்டுப் போகும். அதோடு […]

”பின் புத்தி”

This entry is part 38 of 40 in the series 1 ஏப்ரல் 2012

ஆனாலும் ஒரு ஐம்பது ரூபாயை நான் அவன் கையில் வலியத் திணித்து விட்டுத்தான் வந்தேன். அப்பொழுதுதானே என் மனதுக்கு சமாதானம் ஆகும். அந்தக் கண்ணுக்குத் தெரியாத சாட்சிக்கு யார் பதில் சொல்வது? நான்தானே சொல்லியாக வேண்டும். இல்லையென்றால் பொழுது பொழுதாய் அறுத்துக் கொண்டிருக்குமே? ஏற்கனவே என்னைப் பாடாய்ப் படுத்தியது போதாதா? அதற்காக இப்படியா வருவார்கள் என்று கேட்குமே? காசு மிச்சம்னுட்டு வந்திட்ட! அதானே? சரியான ஆள்டா நீ? அன்னைக்கு உங்கப்பா நாள் பூராவும் நெருப்புல கிடந்து, அடுப்பு […]

”கீரை வாங்கலியோ…கீராய்…!”

This entry is part 36 of 42 in the series 25 மார்ச் 2012

நீங்களே சொல்லிடுங்கோ… என்றாள் சாந்தி. சொல்லிவிட்டு வாசலுக்கு மறைவாக அந்த நாற்காலியை உள் பக்கமாய் இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தாள். அவருக்கு ரெகுலர் கஸ்டமர் நீ….இப்போ தீடீர்னு என்னை சொல்லச் சொன்னா எப்டி? நீயே சொல்லிடு….அதுதான் சரி…. – நாதன் அவன் அறைக்குள் புகுந்து கொண்டான். சும்மாச் சொல்லுங்க ஒரு நாளைக்கு…பரவாயில்லே… உறாங்…அதெப்படீ? நா அவர்ட்ட இதுநாள் வரை பேசினது கூட இல்லை…முத முதல்ல போய் அவர்ட்ட இதைச் சொல்லச் சொல்றியா? என்னால முடியாது… தெரு ஆரம்பத்தில் […]

“நிலைத்தல்“

This entry is part 20 of 36 in the series 18 மார்ச் 2012

“மௌனம் சம்மதத்திற்கு அறிகுறிங்கிற பழமொழி. எல்லாருக்கும் பொருந்துமாங்கிறதை யோசிக்க வேண்டிர்க்கு… – இப்படிச் சொல்லிவிட்டு சந்திரன் அவளையே உற்றுப் பார்த்தான். அதைச் சொல்லி நீ தப்பிக்க முடியாது என்பதை அவள் உணர வேண்டும். அதுதான் அவனின் இப்போதைய தேவை. மாதுரி தலை குனிந்திருந்தாள். அவனை நிமிர்ந்து நோக்குவதா வேண்டாமா என்றிருந்தது. தான் மௌனமாய் இருந்தது உண்மைதான். அந்த மௌனத்தை இப்படி அர்த்தப்படுத்துவான் என்று அவள் எதிர்பார்க்கவேயில்லை. மௌனம்ங்கிறது இரட்டை மன நிலையோட சாட்சி. மனசு ஒரு விஷயத்தை […]