Articles Posted by the Author:

 • தக்கயாகப் பரணி தொடர்ச்சி

  தக்கயாகப் பரணி தொடர்ச்சி

                                             மதிதுரந்து வரவொழிந்த மதம் நினைந்து சதமகன் பதிதுரந்து படைஅயின்று சிறிதவிந்த பசியவே.          [131] [மதி=சந்திரன்; சதமகன்=இந்திரன்; பதி=இந்திரலோகம்; அயின்று=உண்டு; அவிந்த-அடங்கின] இந்திரன் சந்திரனை விரட்டுகிறான். அதனால் சந்திரன் வெளிவராமல் பாதுகாப்பாய் ஒளிந்து கொள்கிறான். இதைக் கண்ட பேய்கள். இந்திரலோகம் சென்று இந்திரனுடன் போர் செய்து அவனை விரட்டுகின்றன. அப்போரில் இறந்த தேவர்களின் உடல்களைத் தின்று சில பேய்கள் தம் பசி ஆறினவாம். =====================================================================================                                   கருநிறம் கொடுஉருவு கொம்பு வெருவும் உம்பர் கழிவிடும் […]


 • ப.ப.பா

  ப.ப.பா

                                                                        தாத்தாவின் பெயரைத்தான் பேரனுக்கு வைக்கவேண்டும் என்று எந்த இ.பி.கோ சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்று இப்பொழுது சேனாவரையன் என்று பெயர் வைத்துக் கொண்டிருக்கும் அவன் நினைத்தான். அப்படி ஏதாவது சட்டம் இருந்தால் அது நிறைவேறக் காரணமாயிருந்தவருக்கு அதே இ.பி.கோ சட்டத்தின் அடிப்படையில் அதிக பட்சத் தண்டனை விதிக்கப்படவேண்டும் என்பதில் அவன் அதிக ஆர்வமாக இருந்தான்.       ஏனெனில் அவன் தாத்தாவின் பெயர் செங்கல்வராயன். அவன் அப்பா பிடிவாதமாக அந்தப் பெயரை வைத்து விட்டார். பிறந்து […]


 • தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

  தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

              வலைய வாளார மீதுதுயில விடாததான் மான                   மதியமூர் சடாமோலி மகணர் தாமும் மீதோடி             அலையும் மேகலா பாரகடி தடாகமா நாக                   அமளி ஏறினாராக அழகு கூர நேர்வாளே.              [111] [வாளரா=பாம்பு; மதியம்=பிறைநிலவு; சடாமோலி=சடமுடி; மேலை=இடையணி; அமளி=படுக்கை]       வளைந்து சுருண்டிருக்கும் அரவுப் படுக்கையில் அரிதுயில் கொண்டிருக்கும் திருமாலின் வைஷ்ணவியாகவும், பிறைச்சந்திரனைச் சூடிய சடாமுடி உடைய சிவபெருமானின் இடை மடியில் இனிதாக உறங்கும்  திகழ்கிறார் காளிதேவி. =====================================================================================                                          போர்பன தீம்புகையோ புராதனர் […]


 • தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

  தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                இருபக்கத்து ஒருபக்கத்து எறி வச்சிரத்தினரே             ஒருபக்கத்து ஒளிவட்டத்து ஒருபொன் தட்டினரே.          [101] [இரு பக்கத்து=இரு கைகளில்; தட்டு=கேடயம்] சிலர் தம் இரண்டு கைகளிலும் ஒரு கையில் எறியத்தக்க வச்சிராயுதத்தை ஏந்தியிருப்பார்கள். வேறு சிலர் தம் கைகளில் பொன்னாலான கேடகம் ஏந்தி இருப்பார்கள்.   ===============================================================================              தழைவர்க்கக் கருவெப்புத் தடி சக்ரத்தினரே             கழைமுத்துப் பொதிகக்கக் கிழிகட் கட்சியினரே.           [102] [கரு=கருக;வெப்பு=வெப்பம்; தடி=தடுக்க; கழி=மூங்கில்; பொதிகக்க=முத்துகள் உதிர]       அது பாலை நிலம். அங்கே வெப்பத்தினால் […]


 • தன்னையே கொல்லும்

  தன்னையே கொல்லும்

                                                                                 ”வேணாம் கோபு; நான் சொல்றதைக் கேளு” என்றான் சந்திரன். ”நீ சும்மா இரு சந்திரா” நேத்து ராத்திரி பூரா என் பொண்ணு தூங்கவே இல்லை தெரியுமா? என்றான் பதிலுக்குக் கோபு. ”ஆமாம் அவ தப்புதான செஞ்சா?” “என்னா பெரிய தப்பு?, வீட்டுக் கணக்கைப் போடல; அதான” “ஆமாம் அது தப்பில்லையா? புள்ளங்க வீட்ல போட்டுக்கிட்டு வரணும்தான டீச்சர் தராங்க; அதைப் போடாம வந்தா குத்தந்தான” “அதுக்காக பெஞ்சு மேல ஏறி நிக்கச் சொல்றதா? “சரி; […]


 • தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

  தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                                                                தலைஅரிந்து விடுவார் உயிர்விடார் தலைமுன்,                   விலைஅரும் தமதுமெய் எரியில் நின்றெறிவரே.      [91] [அரிந்து=வெட்டி; விலைஅரும்=விலை மதிப்பற்ற; மெய்=உடம்பு]       இப்பாடல் சக்தி வழிபாட்டினரைப் பற்றிக் கூறுகின்றது. அவர்கள் தத்தம் தலைகளைத் தாங்களே அரிந்து கொண்டு, ஆனால் தம் உயிரை விட்டு விடாது, அத்தலைமுன் தங்கள் உடலின் மூலாக்கினியை மேலெழச் செய்து, யோகாக்கினியான விளக்கை ஏற்றுவர். =====================================================================================                   அகவனசம் முகவனசம் அவைமலர அரிவார்                   நகவனச மலர்குவிய வலம்வருவர் தாமே.            [92] […]


 • தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

  தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                         ஓலக் கடல்நெருப்பில் உலகேழும் உருகும்                   காலக் கடையினும் கொடிய கட்கடைகளே.             [81 [ஓலம்=ஒலி முழக்கம்; நெருப்பு=ஊழித் தீ; காலக்கடை=இறுதிநாளில்; கட்கடி=கடைக்கண்; ஏழு உலகங்கள்=பூலோகம், புவலோகம், சுவலோகம், மகாலோகம், சனலோகம், தவலோகம், சத்தியலோகம்]     அலைகள் பெரு முழக்கமிடும் கடலில் தோன்றிய ஊழித்தீயை விடக் கொடியனவாம் அத் தேவமாதர்களின் கடைக்கண் பார்வை; ====================================================================================                    புங்கப் படைவிழிக் கடையிலன்று இவர்புரூஉப்                   பங்கத்து அகிலமும் படுகொலைப் படுவதே. [புங்கம்=அம்பு; விழிக்கடை=கடைக்கண் பார்வை; புரூஉ=புருவம்; பங்கம்=துன்பம்; அகிலம்=ஆடவர் […]


 • தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

  தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                                                          பூஐந்தாலும் புகுதற்கரும் பொலம்                   காஐந்தால் ஐந்து சோலை கவினவே.                  [71] [அரும்=அரிதான; பொலம்=பொன்; கா=சோலை]       காமனின் மலர் அம்புகள் ஐந்தும் பூ ஐந்து எனக் குறிப்பிடப்படுகின்றன. அவை: தாமரை, சோகு, முல்லை, மா, நீலோற்பலம். கா ஐந்து என்பது ஐந்து வகை மரங்கள் நிறைந்துள்ள சோலைகளைக் காட்டுகிறது. ஐவகை மரங்களாவன: கற்பகம், பாரிசாதம், சந்தனம், அரிசந்தனம்,மந்தாரம்.       ஐந்து வகை மலர்களான அம்புகளைக் கொண்ட மன்மதனும் உள்ளே நுழைய முடியாத […]


 • தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

  தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                                                                        ஈடுபடும் இறைமகள் பொறாமைகொல்                               இதுபொறாமை கொல்! இறைவர் தம்                         காடுபடு சடை ஊடும் உருவு                               கரந்து வருவது கங்கையே.               [61] [ஈடு=ஒப்பு; இறைமகள்=பார்வதி; பொறாமை=எரிச்சல்; பொறாமை=தாங்க முடியாமை; காடுபடு=காடுபோன்ற; ஊடு=உள்ளே; உருவு கரந்து=ஒளிந்துகொண்டு; கங்கை=நதிப்பெண்]       பார்வதியின் மீது கொண்ட பொறாமையால் எரிச்சலடைந்து கங்கையானவள் சிவபெருமானின் காடு போன்ற சடையில் ஒளிந்து வாழ்வதாகச் சொல்கிறார்காள். இல்லை. அது காரணம் இல்லை. கங்கை இப்பாலையின் வெப்பத்துக்கு அஞ்சித்தான் சிவனின் தலையில் […]


 • தக்க யாகப் பரணி [தொடர்ச்சி]

  தக்க யாகப் பரணி [தொடர்ச்சி]

                                                                             சிரம் தெரிந்தன அறிந்தறிந்து குலை                         செய்து பைரவர்கள் செந்நிலம்                   பரந்தெரிந்து பொடிசெய்ய மற்றவை                         பரிக்க வந்தவர் சிரிப்பரே.                 [51] [சிரம்=தலை; அறிந்து=வெட்டி;  குலை=கூட்டம்; பைரவர்கள்=வாம மதத்தினர்; பரிக்க=நீக்க]       இப்பாடலில் வாம மதத்தினரின் வழிபாட்டு முறை சொல்லப்படுகிறது. அவர்கள் சக்தியை வழிபடுபவர்கள். தலைகளை வெட்டி வந்து அவற்றைப் பூக்களாகக் கருதி வனதுர்க்கைக்கு இடுவர். மறுநாள் அவற்றை அப்புறப்படுத்த வருவர். அப்போது அவை சிவந்த நெருப்பு எரியும் பாலையின் வெப்பத்தில் […]