அதுவே போதும்

This entry is part 5 of 6 in the series 14 ஏப்ரல் 2024

வளவ. துரையன் என் தோழனே!நான் உன்னைவானத்தை வில்லாகவளைக்கச் சொல்லவில்லை.மணலை மெல்லியதொருகயிறாகத் திரிக்கச்கூறவில்லை.என் கடைக்கண்ணிற்குமாமலையும் கடுகென்றாயேஅந்த மாமலையைத்தோளில் தூக்கிச்சுமக்குமாறு நான்வற்புறுத்தவில்லை.நான்தானாக அழும்போதுஆறுதலாய்ச் சாயஉன் தோளில்கொஞ்சம் இடம் கொடு.உன் ஒற்றைவிரலால்என்கண்ணீரைத் துளியைத்துடைத்துவிடு.அதுவே போதும்

தமிழ் ஒலிபரப்பில் பொற்காலப் பதிவு

This entry is part 2 of 4 in the series 31 மார்ச் 2024

குரு அரவிந்தன் சென்ற சனிக்கிழமை மார்ச் மாதம் 23 ஆம் திகதி 2024 அன்று சொற்கோ வி. என். மதிஅழகன் அவர்களின் ‘தமிழ் ஒலிபரப்பில் பொற்காலப் பதிவு’ என்ற நூல் ஸ்காபரோ சிவிக் சென்ரரில் அறிமுகம் செய்து வைக்கப்பெற்றது. இந்த நிகழ்வுக்கு கனடா தமிழ் எழுத்தாளர் இணையத் தலைவர் அகணி சுரேஸ் அவர்கள் தலைமை தாங்கினார். சுமார் 2:00 மணியளவில் இந்த நிகழ்வு ஆரம்பமானபோது, திரு. சோம சச்சிதானந்தன் தமிழ்த்தாய் வாழ்தும், செல்வி கிஸோரி ராஜ்குமார் கனடாப் […]

கவிஞர் வி. கந்தவனம் எம்மைவிட்டுப் பிரிந்தது எமக்குப் பேரிழப்பாகும்

This entry is part 2 of 4 in the series 17 மார்ச் 2024

கவிஞர் வி. கந்தவனம் எம்மைவிட்டுப் பிரிந்தது எமக்குப் பேரிழப்பாகும். குரு அரவிந்தன். கவிஞர் வி. கந்தவனம் அவர்கள் எம்மைவிட்டுப் பிரிந்தது எமக்கு, குறிப்பாகக் கனடிய மக்களுக்குப் பேரிழப்பாகும். காங்கேசந்துறையில் நடக்கும் இலக்கிய விழாக்களில், மாணவப்பருவத்தில் குறிப்பாகப் பட்டிமன்றம், கவியரங்கம் போன்றவற்றில் கவிஞரைச் சந்தித்திருக்கின்றேன். ஆனால் இங்கே கனடாவில் அதிபர் பொ. கனகசபாபதி வீட்டில்தான் இவரை முதலில் சந்தித்தேன். உதயன் சிறுகதைப் போட்டியில் தங்கப்பதக்கம் கிடைத்தபோது என்னை அழைத்து வாழ்த்தியிருந்தார். அதன்பின் எழுத்தாளர் இணையத்தின் செயலாளராக எனக்கு ஒரு […]

புதுமைப்பித்தன் நினைவு விருதுகள் – 2022

This entry is part 2 of 6 in the series 14 ஜனவரி 2024

புதுமைப்பித்தன் நினைவு விருதுகள் – 2022 விளக்கு இலக்கிய அமைப்பு (அமெரிக்கா) புதுமைப்பித்தன் நினைவு விருதுகள் – 2022 விருது பெறுபவர்கள் : 1. பொ.வேல்சாமி – புனைவற்ற படைப்புகள் 2. சு.தமிழ்ச்செல்வி – புனைவிலக்கியம் வரவேற்பு : வாஷிங்டன் சிவா விளக்கு அறிக்கை, விருது வழங்குதல் : மு.சுந்தரமூர்த்தி விளக்கு அமைப்புச் செயலர் சு.தமிழ்செல்வி படைப்புகள் பற்றி அசதா இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் இரா.காமராசு பொ.வேல்சாமி பங்களிப்புகள் பற்றி காளிங்கன் கடற்கரய் மத்தவிலாச அங்கதம் யுகபாரதி ஏற்புரை […]

சென்னை புத்தகக் கண்காட்சி – 2024

This entry is part 1 of 6 in the series 14 ஜனவரி 2024

குரு அரவிந்தன். 47-வது சென்னை புத்தகக் கண்காட்சி நந்தனம் வை.எம்.சி.ஏ மைதானத்தில் ஜனவரி 3 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு ஆரம்பமானது. இந்தக் கண்காட்சியை தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆரம்பித்து வைத்திருந்தார். விரும்பிய நூல்களை ஒரே இடத்தில் பெற்றுக் கொள்ளக்கூடிய வசதியை இந்தக் கண்காட்சி ஏற்படுத்தி இருந்தது. கண்காட்சி ஆரம்பமானபோது அகணி வெளியீட்டகத்தினர் கனடா எழுத்தாளர் குரு அரவிந்தனின் நூல்களையும் அரங்கு எண் 604, 605 பகுதியில் காட்சிப்படுத்தியிருந்தனர். இலக்கிய ஆர்வலர்கள் பலர் […]