இதுவேறு நந்தன் கதா..

This entry is part 14 of 41 in the series 10 ஜூன் 2012

தி பாய் இன் ட ஸ்டிரிப் பைஜாமாஸ் (The boy in the striped pyjamas))) திரைப்படம் தொலைக்காட்சியில் பார்த்த போது அந்த புருனோவாக நடித்தப் பையனின் முகமும் அந்த யூதர் பையனின் முகமும் இப்போதும் மனசில் நிற்கிறது. அந்தக் கதையை அத்துடன் விட்டுவிட முடியவில்லை. கல்லூரியில் வரலாற்றுப் பிரிவில் அறிந்த பாடத்திட்டங்களில் இடம் பெறாத எத்தனையோவரலாற்று நிகழ்வுகளை அறிந்துக் கொள்ளும் ஒரு தேடலில் ஹோலோகொஸ்ட் என்ற சொல்லை அந்தச் சொல்லுக்குள் ஒளிந்திருக்கும் பயங்கரமான அதிர்ச்சி தரும் […]

நினைவுகளின் சுவட்டில் – 88

This entry is part 12 of 41 in the series 10 ஜூன் 2012

வங்காளிகளுக்கு மிகவும் பிடித்தது ஹில்ஸா மாச் அது புர்லாவில் கிடைப்பதில்லை. அதை யாராவது கல்கத்தாவிலிருந்து வந்தால் வாங்கி வருவார்கள். அப்படி அபூர்வமாக வருவதை புர்லாவிலிருக்கும் மற்ற வங்காளிகளுடன் யாரும் பகிர்ந்து கொள்வார்களா என்ன? மிருணால் சொன்னான்,.’ என் தங்கை வரவிருக்கிறாள். அப்போது அவளிடம் கட்டாயம் ஹில்ஸா மாச் வாங்கிக் கொடுத்து விடுவார்கள். அப்போ உன்னைக் கூப்பிடுவேன். கட்டாயம் வரணும்,” என்று சொல்லியிருக்கிறான். முதலில் நான் மீன் சாப்பிட ஆரம்பித்து, பின் எல்லா மீன் வகைகளையும் ருசித்து அவற்றின் […]

தங்கம்10 தொழில்நுட்பத்தில் தங்கம்

This entry is part 11 of 41 in the series 10 ஜூன் 2012

இந்தியாவில் மக்கள் தொகை அதிகமாக அதிகமாக, தற்கால சந்ததியினர் வலுவிழந்து கொண்டே போகின்றனர் என்று தான் சொல்ல வேண்டும். டஜன் கணக்கில் பிள்ளை பெற்றவர்கள் பலமுடன் இருக்க, முதல் குழந்தைக்கே பற்பல சிகிச்சைகள் செய்யும் நிலைக்கு பெண்கள் தள்ளப்பட்டு விட்டனர். கருத்சிதைவும் சர்வ சாதாரணமாகி விட்டது. அதனால் ஒரு குழந்தை அல்லது அதிக பட்சம் இரு குழந்தைகள் மட்டுமே போதும் என்ற மனோநிலை வந்துவிட்டது. ஒரு குழந்தை என்றால், அது குடும்பத்தினரைப் பிற்காலத்தில் பாதுகாக்கும் ஆண் பிள்ளையாக […]

சூபிஞானி பீர்முகமது அப்பா –விளிம்புநிலை மக்களுக்கான மீட்சி

This entry is part 7 of 41 in the series 10 ஜூன் 2012

பீர்முகமது அப்பாவின் படைப்புலகம் யதார்த்தமும் கனவும் ஒருங்கே உருப்பெற்ற தரிசனமாகும். யதார்த்தம், வாழ்வின் இருப்புகுறித்த நிகழ்வுகளின் தொகுப்பாகவும், கனவுலகம் விரும்புகிற நேசிக்கிற வாழ்க்கையைப் பற்றிய படிமமாகவும், அமையப் பெற்றுள்ளது. கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் இம்மூன்றும் ஒன்றில் ஒன்று கலந்து காட்சி சித்திரங்களாக உரு மாறி இடம் பெயர்கின்றன. பீரப்பாவின் மொழியில் வாழ்வின் இருப்பு திருப்திகரமானதாக இல்லை. துன்பதுயரங்களின் புதர்க்காடாக கிடக்கிறது. இருள் நிறைந்த துக்கத்தின் சாயல்களை அதில் நிறையக் காணலாம். இத்தகைய பிம்பங்களிலிருந்து விடுபடவேண்டி இறையிடம் வேண்டுகிற […]

கேரளாவில் சிபிஎம் தனது மரணச்செய்தியை எழுதிகொண்டிருக்கிறதா?

This entry is part 28 of 28 in the series 3 ஜூன் 2012

டிவிஆர் ஷெனாய் ஒரு அரசனக்கு தனது செல்ல பிராணியாக இருந்த குரங்கு மீது மிகவும் பிரியம். அந்த செல்ல குரங்கை தனக்கு மெய்க்காப்பாளனாக நியமித்தான். ஒரு நாள் அரசன் தூங்கிகொண்டிருக்கும்போது ஒரு ஈ அரசனை சுற்றி பறந்துகொண்டிருந்தது. குரங்கால் அந்த ஈயை அடித்து விரட்ட முடியவில்லை. ஆகவே அந்த குரங்கு அருகிலிருந்த வாளை எடுத்து பளேர் பளேரென்று ஈயை அடித்து துரத்தியது. ஈ தப்பிவிட்டது. தூங்கும் அரசன் தப்பவில்லை. விஷ்ணுசர்மன் ந்ரிபசேவகவானரா- கதையை இவ்வாறு முடிக்கிறார். “நீண்டநாள் […]

துருக்கி பயணம்-4

This entry is part 26 of 28 in the series 3 ஜூன் 2012

அண்ட்டால்யா – கொன்யா – கப்படோஸ் மார்ச்-29 நேற்றே கப்படோஸ¤க்குக் வந்திருந்தபோதும், இன்றுதான் கப்படோஸை உண்மையாக தரிசித்தோம். பயணத்தில் கப்படோஸில் கழித்த இரண்டு நாட்களும் உன்னதமானவை. ஒவ்வொரு தருணமும் பல்வேறு காட்சிகளை ஓயாமல் அடுகடுக்காய் அறிமுகப்படுத்திற்று எனலாம். இவற்றை ஏற்கனவே இன்னொரு நாட்டில் வேறொரு பிரதேசத்தில் கண்டிருக்கிறேனென ஒப்புமைபடுத்தவியலாத காட்சிகள். கப்படோஸ் பிரதேசத்திலிருந்த மூன்று நாட்களும் உக்ருப் (Ugrup) என்ற நகருக்கருகே தங்கினோம். காலையில் எங்களுடன் நட்பு பாராட்டிய டாக்டர் தம்பதியருள் பெண்மணிக்கு உடல்நலம் சரியில்லை. மருத்துவ […]

கேரளாவின் வன்முறை அரசியல்

This entry is part 25 of 28 in the series 3 ஜூன் 2012

ஜே கோபிகிருஷ்ணன் கேரளாவில் பிறந்து கேரளாவிலேயே கடந்த 37வருடங்களாக வாழ்ந்து வரும் எனக்கு, கேரளாவை யாரேனும் “கடவுளின் சொந்த நாடு” என்று சொன்னால், சிரிக்கத்தான் தோன்றுகிறது. இப்பத்த்தான் விளம்பர வார்த்தைகள் நம் மனதுக்குள் ஊடுருவி, ஆக்கிரமித்து, ஆள ஆரம்பித்துவிடுகின்றன.  இந்த விளம்பர வாசகம், கேரளா சுற்றுலாத்துறையின் விளம்பர வாசகமாக 15 வருடங்களுக்கு முன்னால் உபயோகப்படுத்தப்பட்டது. இதனை உருவாக்கியவர் கேரளா கேடரைச் சேர்ந்த உத்தரபிரதேச ஐஏஎஸ் ஆபீஸர். அவரது பெயர் அமிதாப்காந்த். மலையாளிகளான நாங்கள், எங்களுக்கு கொடுக்கும் ஒவ்வொரு […]

சுற்றுச்சூழல் மாறுதல்களால் அழிந்த சிந்து சமவெளி நாகரிகம்

This entry is part 21 of 28 in the series 3 ஜூன் 2012

சுற்றுச்சூழலால் அழிந்த சிந்து சமவெளி நாகரிகம் An Ancient Civilization, Upended by Climate Change By RACHEL NUWER ரேச்சல் நுவெர்   இந்து சமவெளி நாகரிகம்(indus civilization) என்றும் சிந்து சமவெளி நாகரிகம் என்றும் அழைக்கப்பட்ட இடத்தில் இன்றும் நிலவியலாய்வாளர்களும், அகழாராய்வாளர்களும் ஆராய்ந்து வருகிறார்கள். வேதங்கள் என்னும் புராதன புத்தகங்கள் இங்கேயே 3000 வருடங்களுக்கு முன்னர் இயற்றப்பட்டதாக கூறினர். இந்த வேதங்கள்  சரஸ்வதி என்னும் மாபெரும் நதி இங்கே பாய்ந்து சென்றதாக கூறுகின்றன. இந்த […]

இஸ்மத் சுக்தாய் – ஒரு சுயசரிதை

This entry is part 20 of 28 in the series 3 ஜூன் 2012

உருது மூலம்- இஸ்மத் சுக்தாய் ஆங்கிலம் வழி தமிழில்-ராகவன் தம்பி     காட்சிரூபமான வகையில் என்னுடைய நினைவின்  சுவடுகளைப்  பின்னோக்கித் தேடிப் பயணிக்க வேண்டும்.  – எனக்கு எதிரே சிகப்பு நிறத்தில்  கண்ணாடிகள் சுழன்று கொண்டிருக்கும்  ஒரு வட்டமான அறை.  அந்தக் கண்ணாடி அறையில்  என் கைகளைத் தட்டி நான்  களித்து விளையாடுவதை என் மனக்கண்களால்  காண்கிறேன்.   அந்தக் கண்ணாடி அறையானது நான் சில மாதங்கள் வாசம் செய்த என் அம்மாவின் கருவறை.  இன்று […]

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் 15

This entry is part 8 of 28 in the series 3 ஜூன் 2012

நன்றாற்ற னுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை.   இந்திய நாட்டில் சுதந்திரப் போராட்ட காலத்திலேயே பெண் விடுதலை பற்றிய சிந்தனையும் தோன்றி, முயற்சியையும் தொடங்கிவிட்டனர். இந்த மண்ணில் பெண் சமுதாயம் ஏறிவந்த முன்னேற்றப் படிகளைக் காணலாம். முதலில் பெண்களுக்கு அடையாளம் பெற்றுத்தர வேண்டுமென நினைத்தனர். அன்னிபெசன்ட் அம்மையாரால். அகில இந்திய மாதர்சங்கம் தோன்றியது அதன்மூலம் ஓட்டுரிமை பெற்றுத் தந்தனர்.. இதனை யாரும் மறத்தல் கூடாது 100 ஆண்டுகளுக்கு முன்னரே விழிப்புணர்வு முயற்சியை மேற்கோண்ட வைகளை […]