தீபாவளியும் கந்தசாமியும்

This entry is part 34 of 44 in the series 15 ஏப்ரல் 2012

பிரியங்கா முரளி   என்னங்க அத்தை! பலகாரம் எல்லாம் ஆச்சா ?இல்ல இன்னைக்கும் இந்த வாலுங்க டிவி முன்னாடி தான் தவம் கிடக்குதுங்களா ?” ஆர்ப்பாட்டமாக கேட்டபடி உள்ளே நுழைந்தான் சக்திவேல் ! திருப்பூரில் அந்த வட்டாரத்தின் கேபிள் டிவி  ஆப்பரேட்டர் ! வயது 23 , திருப்பூரில் சிறிய சாயப்பட்டறை வைத்து இருக்கும் கந்தசாமியின் மனைவி புனிதாவின் ஒன்று விட்ட அண்ணன் மகன் ! புனிதாவின் பெண்ணை அதாவது பாரதியை அவனுக்கு கொடுப்பதாக சிறு வயதிலேயே […]

“ பி சி று…”

This entry is part 33 of 44 in the series 15 ஏப்ரல் 2012

      தினமும் அந்த வீட்டைக் கடந்துதான் போய்க் கொண்டிருக்கிறேன். அதுதான் சுருக்கு வழி. கடந்து செல்லும் அந்த ஒரு கணத்தில் என் பார்வை அங்கே திரும்பாமல் இருந்ததில்லை. காலையில் தண்ணீர் வந்ததற்கு அடையாளமாய் அங்கே சுற்றிலும் ஈரமாக இருக்கும். ப்ளாஸ்டிக் குடங்களில் தண்ணீர் பிடித்து வைக்கப்பட்டு வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும். தண்ணீர் வராத நாட்களிலும் வெற்றுக் குடங்கள் அதே வரிசையில்தான் இருக்கும். கடந்து போய்க் கொண்டேயிருப்பார்கள்.     பொழுது விடிந்தால் எங்கள் பகுதியில் பலரும் சைக்கிளில் குடங்களைக் […]

விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தைந்து

This entry is part 30 of 44 in the series 15 ஏப்ரல் 2012

  1927 மார்ச் 2  அக்ஷய  மாசி 18 புதன்   மதராஸ். மதராஸ். மதராஸ்.   குழாய் மூலம் வெகு தொலைவில் பார்த்துக் கொண்டிருந்த மாலுமிகளில் ஒருத்தன் சொன்னான். கூட நின்ற கூட்டாளிகள் நாலைந்து பேர் உரக்கக் கைதட்டினார்கள். அந்தக் கைதட்டல் கீழே எஞ்சின் ரூமுக்குக் கடக்க, அங்கே இருந்து அவசரமாக வெளியே வந்து இன்னும் நாலு கப்பலோட்டிகள் ஓ என்று ஹூங்காரம் செய்து வானத்தைப் பார்த்து ரெண்டு கையையும் பரக்க நீட்டிக் கும்பிட்டார்கள். குசினியில் […]

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 19

This entry is part 22 of 44 in the series 15 ஏப்ரல் 2012

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம்            (மூன்றாம் அங்கம்)                     அங்கம் -3 பாகம் – 19 ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா நீ உணர்ச்சியை அடக்கி ஆள வேண்டும் ஒரு மனிதனாய் !  பீரங்கித் தொழிற்சாலை அதிபதிக்கு வைர நெஞ்சம் தேவை !  இரக்க குணம், அன்பு நேயம் இவையெல்லாம் வெடி மருந்துச் சாலை முன் பொடியாகி […]

மலைபேச்சு- செஞ்சி சொல்லும் கதை-21

This entry is part 21 of 44 in the series 15 ஏப்ரல் 2012

பாதரே பிமெண்ட்டா! எனது பேச்சின் முக்கியமான பகுதிக்கு வந்திருக்கிறேன். நான் காத்திருந்ததற்கு பலன் கிடைத்திருக்கிறது. கன்னிப்பெண்ணின் பிள்ளையை கடவுளாக ஏற்றுக்கொண்ட உங்களையன்றி வேறுயார் என்னையும் என்பிள்ளையையும் புரிந்துகொள்வார்கள் சொல்லுங்கள். நீங்கள் மட்டுமே சிசு வயிற்றுக்குள் வந்தவிதத்தைப்பற்றி கேள்விகேட்கமாட்டீர். அது தெய்வ குற்றமென்று நீங்கள் அறியமாட்டீரா என்ன? 23. எனது குரலை இனம்கண்டு புருஷ குரலா ஸ்த்ரீயின் குரலா என்று தீர்மானித்திருப்பீர்கள். பெண்சொல்லும் கதைக்கு பெண்ணைபோலவே வனப்பும் வசீகரமுமுண்டு. மாமாவைக் காட்டிலும் அத்தையோ; தாத்தாவைக்காட்டிலும் பாட்டியோ கதை சொல்லும்போதுதான் […]

பஞ்சதந்திரம் தொடர் 39 – நரியும் காளையும்

This entry is part 19 of 44 in the series 15 ஏப்ரல் 2012

ஏதோ ஒரு ஊரில் பிரலம்பவிருஷணன் என்றொரு காளை இருந்தது. அது மதம் பிடித்துப்போய் தன் மந்தையை விட்டுவிட்டுக் காட்டுக்குப் போய் விட்டது. காட்டில் ஆற்றங்கரையைக் கொம்புகளால் முட்டிக் கிளறிக் கொண்டும், இஷ்டம்போல் மரகதம் போன்ற புல்லை மேய்ந்து கொண்டும் அது திரிந்து வந்தது. அந்தக் காட்டில் பிரலோபிகன் என்றொரு நரி இருந்தது. அது தன் மனைவியோடு ஒருநாள் நதிக்கரையில் இன்பமாய் உட்கார்ந்திருந்தது. அந்த நேரத்தில் காளை நீர் குடிப்பதற்காக அந்த மணற்பரப்பிற்கு வந்து சேர்ந்தது. காளையின் இரண்டு […]

‘பிரளயகாலம்’

This entry is part 17 of 44 in the series 15 ஏப்ரல் 2012

”பீப்…பீப்…பீப்….”.—என் காதருகில் கர்ணகடூரமாய் போன் சத்தம்.,என் தூக்கத்தைக் கலைத்தது.. “சனியனே! உன் வாயை மூடித் தொலை.” மூடிக் கொண்டது. என் குரலுக்குக் கட்டுப்படும். வாய்ஸ் ரெகக்னேஷன் சிப்—ன் ஜாலம்.. கணினியில் எக்ஸ்பர்ட் சிஸ்டமும், நாலெட்ஜ் இன்ஜினியரிங்கும், நுழைந்ததிலிருந்து ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜன்ஸ் துறை வெகுவாகத் தேர்ச்சி பெற்று விட்டது.நேனோ டெக்னாலஜியும் கை கொடுக்க, இன்று அதன் வளர்ச்சியை கணிக்க முடியாது. இப்போதெல்லாம் மனிதர்கள் அதிகம் யோசிப்பதில்லை. அதற்கு அவசியமும் இல்லை. இன்று நமக்காக அவைகள் யோசிக்கின்றன.. ஸோ யோசிக்காமல் […]

சட்டென தாழும் வலி

This entry is part 15 of 44 in the series 15 ஏப்ரல் 2012

-ஆதிமூலகிருஷ்ணன் இரவு பதினொரு மணி. அவசரகோலமாக சில உடைகளையும், இரண்டு புத்தகங்களையும், செல்போன் சார்ஜரையும் கையில் கிடைத்த ஒரு பையில் போட்டு எடுத்துக்கொண்டேன். இந்த மனநிலையிலும் புத்தகங்களை ஏன் எடுத்துவைத்துக் கொள்கிறேன் என்று புரியவில்லை. மஞ்சு எதையும் கவனிக்காமல் மூலையில் அமர்ந்து அழுதுகொண்டிருந்தாள். கதவை அறைந்து சார்த்திவிட்டு படிக்கட்டுகளில் இரண்டிரண்டாக தாவி இறங்கி கீழே வந்தேன். இந்த நேரத்தில் எங்கே போவது? வண்டியை எடுத்துக்கொள்ளவா? வேண்டாமா? பைக்கை வெளியே எடுத்து கேட்டை சார்த்திவிட்டு அந்த இரவு நேர […]

வரங்கள்

This entry is part 14 of 44 in the series 15 ஏப்ரல் 2012

வாணிஜெயம், பாகான் செராய். அவன் வீட்டிற்குள் நுழைந்த போது கூடத்து நாற்காலியில் அமர்ந்திருந்த அந்த உருவம் இவனைக் கண்டு ஒருக்கழித்து அமர்ந்ததைக் கவனித்தான்.அவன் குளித்து ஆடை உடுத்தித் திரும்பிய போது அந்த உருவம் மெதுவாக எழுந்துக்கொண்டது. தொலைக்காட்சி அலைவரிசை மாற்றப்பட்டிருந்தது.இது தினசரி நடக்கும் நிகழ்ச்சி தான்.வழக்கம் போல் அந்த உருவத்தைக் கண்டதும் தனது உதட்டில் எழும் இகழ்ச்சிப் புன்னகையும் வெறுப்பு கலந்தப் பார்வையும் தோன்றாதது அவனுக்கு சிறு ஆச்சரியத்தைத் தந்தது. செண்பகம் தேனீர் கொண்டு வந்து வைத்தாள். […]

ஈக்கள் மொய்க்கும்

This entry is part 12 of 44 in the series 15 ஏப்ரல் 2012

”தூங்கிட்டு இருக்கான்னுல நெனச்சேன்; அட ஆளே செத்துட்டான்னா?” அவனுக்குத் துணுக்குறும். பேருந்தைப் பிடிக்கும் அவசரத்தில் வேகமாய் நடந்து போகும் போது அவன் கால்கள் தடுக்கி விட்டது நினவுக்கு வரும். ‘பொணம் தடுக்கிச்சா” ;சிந்தையில் கலவரம் கூடும். கோயம்பேடு பேருந்து நிலையம் சென்னை நகரையே மலைப்பாம்பாய் உள் விழுங்கிக் கொண்டு மூச்சிரைப்பது போல கூட்டம் பிதுங்கிக் கொண்டிருக்கும். வித விதமாய் எத்தனை எத்தனை மனிதர்களையோ மாறி மாறி வரைந்து கொண்டிருக்கும் மாபெரும் உயிர்த் திரைச்சீலை போல பேருந்து நிலையம் […]