அந்த இடைவெளி…

This entry is part 38 of 44 in the series 30 அக்டோபர் 2011

இரைதேடச் செல்லும் பறவை இரையாகிப்போகிறது எங்கோ.. இறைதேடிச் செல்பவன் இறையாகிவிடுகிறான் இறந்து.. தொடங்கிடும் பயணமெல்லாம் தொடுவதில்லை இலக்கை.. தெடக்கத்திற்கும் முடிவுக்குமுள்ள இடைவெளிதான் இயற்கையோ- இறையோ…! -செண்பக ஜெகதீசன்…

கைப்பேசி பேசினால்

This entry is part 35 of 44 in the series 30 அக்டோபர் 2011

”கவியன்பன்” கலாம் நான் செய்த புரட்சிகள்: தத்திச் சென்ற தந்தியை வென்றேன் குறுஞ்செய்தியால் குவலயம் ஆள்கின்றேன் ஆறாம் விரலாய் ஆட்கொண்டே ஆட்டுவிக்கின்றேன் கைக்குள் அடக்கமாய் ஹைக்கூ கவிதையாய் “நச்”சென்று பேச வைத்தேன் ஏபிசிடி தெரியாமலே ஏடேதும் படிக்காமலே மிஸ்டு கால் மெஸேஜ் எல்லாம் புரிய வைத்தேன் ஆடம்பரமாய் ஆரம்பமானேன் தேவைக்குரியோனாய்த் தேர்ந்தெடுக்கப்பட்டேன் உயர்ந்த விலையில் உடலாம் எனக்கு குறைந்த விலையில் உயிராம் “சிம்” அதற்கு பல்லுப் போனால் சொல்லுப் போச்சு சில்லு(சிம்)ப் போனால் செல்லுப் போச்சு கையில் […]

பறவைகளின் தீபாவளி

This entry is part 34 of 44 in the series 30 அக்டோபர் 2011

குமரி எஸ். நீலகண்டன் தீபாவளிக் கோலாகலத்தில் புகை மூட்டமாய் வானம்… ஏவியவர்களின் உற்சாகங்கள் வானத்தில் ஒளிப் பொதிகளாய் வானத்தில் சிதறின… நிலத்திலிருந்து உருவான மின்னலும் இடியும் மேகத்தில் போய் விழுந்தன… நகரத்தின் ஒற்றை மரங்களில் கூடு கட்டியப் பறவைகள் பூகம்பமென்று கூட்டினை விட்டு பறந்த போது புகை மூட்டத்தில் சிக்கிய விமானமாய் நிற்பதற்கு வீடுகள் இடங்கள் தேடி நில்லாமல் மிதந்தன மேகத்தில்…. இரைகளின்றி அமாவாசை விரதமிருந்தன பறவைகள். தீபாவளியை பறவைகள் எப்படிக் கொண்டாடுகின்றன என்று ஒரு பறவையிடம் […]

கூடங்குளம்

This entry is part 31 of 44 in the series 30 அக்டோபர் 2011

வெளி நாட்டான் சமாச்சாரம் அநாச்சார‌ம் என்று உள் நாட்டு மாட்டு வண்டியையும் வில் அம்பு ஈட்டியையும் ந‌ம்பிக்கிட‌ந்தோம். மின்சார‌ம் என்றால் பேய் பிசாசு என்று ஓடி ஒளிந்து கிட‌ந்தோம். த‌ண்ணீரை குட‌ம் குட‌மாய் கொட்டி குட‌முழுக்கு செய்து புரியாத‌ இரைச்ச‌ல்க‌ளில் புல்ல‌ரித்துக்கிட‌ந்தோம். அதே த‌ண்ணீரில் புட்டு அவித்து தின்னும்போது கூட‌ ந‌ம‌க்குதெரிய‌வில்லை ஆயிர‌ம் ஆயிர‌ம் ட‌ன்க‌ளை இழுத்துச்செல்லும் நீராவிக்குதிரை அதில் இருக்கிறது என்று. அத‌ற்கும் ஒரு ஜேம்ஸ்வாட் தான் ந‌ம‌க்குத்தேவை. க‌ல்லுக்க‌ட‌வுளுக்கு கால‌ம் கால‌மாய் பொங்க‌ல் புளியோத‌ரை […]

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) திருமணப் பாதையில் ! (கவிதை – 50 பாகம் -2)

This entry is part 30 of 44 in the series 30 அக்டோபர் 2011

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “முதியோர் போதனையை நீ தேடிக் கேள். அவரது கண்கள் பல்லாண்டுகளின் முகத்தைக் கூர்ந்து நோக்கி வந்தவை. அவரது செவிகள் வாழ்க்கையின் குரல்களைக் கேட்டிருப்பவை. அவரது அறிவுரைகளை நீ வெறுத்தாலும் அவற்றுக்கு உன் கவனத்தைச் செலுத்து.” கலில் கிப்ரான் (ஞானியின் பொன்மொழிகள்) +++++++++++ திருமணப் பாதையில் ! காதலியின் முதல் ஓரப் பார்வை கடல் மீது நடக்கும் ஆன்ம உணர்ச்சி. வானுலகையும் பூவுலகையும் உதய […]

அவர்களில் நான்

This entry is part 29 of 44 in the series 30 அக்டோபர் 2011

சண்டை நாட்களில் எதிரியும் காதல் நாட்களில் சகியும் தியாக நாட்களில் தாயும் ( கல்யாணத்திற்கு முன்) கேளிக்கை நிறைந்தவற்றில் நண்பர்களும் என அந்தந்த நாட்களில் நிறைந்தவர்களை நாட்குறிப்புகள் நிரப்பியிருந்தன. நான் நிரம்பிய நாட்கள் வெறும் வெற்றுத்தாள்தானோ என அயர்ந்தபோது அடுத்தவர் அடர்ந்தவற்றில் நீதான் கரைந்திருக்கிறாய் எனப் படபடக்குது டைரியின் பக்கங்கள் _ ரமணி

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மீட்டெழுச்சி நாள் (The Resurrection Day)) (கவிதை -51 பாகம் -4)

This entry is part 27 of 44 in the series 30 அக்டோபர் 2011

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா மரணம் வந்திடும் பொழுது விடிவது போல் ! புன்முறுவ லுடன் நீ எழுந்த ருள்வாய் உனது துயராய்க் கருதி ! கனவு இதுவாய் இருக்க வேறு காரணம் உள்ளது ! கடுமை யாக உணர முடியாத கொடுமை ! உலக மாயத்தில் நடப்பது இவை ! மறையாது கடப்பவை மரணம் நடமிடும் போது ! நிரந்தர மானது விபரமாய் விளக்கப் பட வேண்டியது […]

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மீட்டெழுச்சி நாள் (The Resurrection Day)) (கவிதை -51 பாகம் -3)

This entry is part 26 of 44 in the series 30 அக்டோபர் 2011

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா மீட்டெழுச்சி நாளில் உனது மேனி உனக் கெதிராய்ச் சாட்சி சொல்லும் ! “களவாடி னேன்”, என்று உனது கரங்கள் கூறும் ! “இழிவு செய்தேன்” என்று உன்வாய் இதழ்கள் உரைக்கும் ! “போகக் கூடா இடமெல்லாம் போனேன்” என்று உனது கால்கள் சொல்லும் ! “நானும்தான்” என்று உனது பாலுறவுக் குறியும் சொல்லும் ! பிரார்த்தனை வழிபாட்டு வரிகள் உனக்கு வஞ்சக மொழியாய்த் […]

துளித்துளி

This entry is part 24 of 44 in the series 30 அக்டோபர் 2011

சிலந்தி வலையில் சிதறித்தெளித்த மழைத்துளி சிறைப்பட்டுக்கிடந்த சிலந்தியின் கால்களையும் நனைத்திருந்தது ஈரம். குடித்துவிட்டுக்கீழே வைத்த உள்ளிருப்பவை வெளித்தெரியும் கண்ணாடிக்குவளையில் அடியிலிருந்து மேலே வந்த மீதமுள்ள நீர் சிறு பாசிமணிகள் போல் அதன் சுவரில் ஒட்டிக்கொண்டிருந்தது கண்ணாடிக்குள்ளும் ஈரம். அடித்துப்பெய்த மழையின் சாரல்கள் என் ஜன்னல் கம்பிகளிலும் தொக்கி நின்று கொண்டிருக்கின்றன. இரும்புக்கம்பிகளிலும் ஈரம். – சின்னப்பயல் (chinnappayal@gmail.com)

நிர்மால்ய‌ம்

This entry is part 22 of 44 in the series 30 அக்டோபர் 2011

அந்த நேற்றைய ப‌வ‌ள‌ம‌ல்லிப்பூக்க‌ள் வீட்டு வாசல் த‌ரையில் சிவ‌ப்புக்கால்க‌ள் கொண்டு ந‌ட்ச‌த்திர‌க்கூட்ட‌ங்க‌ளாய் ப‌டுத்துக்கிட‌க்கின்ற‌ன‌. எந்த‌ குருவாயூர‌ப்ப‌னையாவ‌து நேற்று பூராவும் அப்பிக்கிட‌ந்த‌ பின் க‌ளைத்துக் கால் நீட்டிக்கிட‌க்கின்ற‌ன‌. வீட்டுக்குள்ளிருந்து அந்த‌ ப‌வ‌ள‌ம‌ல்லி ம‌ர‌ம் த‌ன் கிளையை கார்ப்ப‌ரேஷ‌னுக்கு அறிவிக்காம‌ல் விதி மீறி வெளியே நீட்டியிருந்த‌து. அது விரித்த‌ பாய் அங்கு “வாச‌ங்க‌ளின்”பிர‌வாக‌ம். அந்த‌ ப‌வ‌ள‌ப் பூ ம‌ழை பெய்த‌ அந்த‌ வாச‌லுக்கு இணையாய் எத்த‌னை வைகுண்டங்கள் வாச‌ம் செய்தாலும் பெருமாளே வேண்டாம் என்று இங்கே வ‌ந்து ப‌ள்ளி கொண்டுவிட்டார். […]