தகுதி 2

This entry is part 4 of 5 in the series 26 நவம்பர் 2023

ஆர் வத்ஸலா மல்லாந்து படுத்து கருநீல வானின் வைரங்களை விடிய விடிய எண்ண ஆசைப்படும் வரை ஒவ்வொரு பூனையின் ஒவ்வொரு முகபாவமும் வெவ்வேறாகத்‌ தோன்றும்  வரை முன்பின் தெரியாத கைக்குழந்தை என்னை பார்த்து களுக்கென சிரிக்கும் வரை மரத்தில் இருந்து உதிர்ந்த மலரின்  அழகை காணத் தெரிந்த வரை  ஜன்னல் வழியே பறவைகளையும் பறக்கும் விமானத்தையும் கண்டு அதிசயக்கும் வரை இருக்கிறது தகுதி எனக்கு வாழ

தகுதி 1

This entry is part 3 of 5 in the series 26 நவம்பர் 2023

ஆர் வத்ஸலா வேண்டியவர்களுக்கு கணினியில் மின்னஞ்சல் செய்து கொண்டு அறித்திறன் பேசியில் மற்றதை  தன்னை புகைப்படங்கள் வீடியோ‌க்கள் எடுத்துக் கொண்டு  புலனக் குழுக்களில் உள்ளூர் வெளியூர் உறவுகளுடன் நண்பர்களுடன் குறுஞ்செய்திகளில் (முகம் பார்க்காமலும்  பார்த்தும்) புலன அழைப்புகளில் நட்பும் விரோதமும் பாராட்டிக் கொண்டு  தேவைப்படும் பொழுது காதில்  குட்டிக் கருவிகள் அணிந்து  மற்றவரை தொந்தரவு செய்யாமல்  இணைத்திரை ரசித்துக் கொண்டு புது செயலி வரும் போதும்  தெரிந்த செயலி புது அவதாரத்தில் தெரியாமல் போகும் போதும்  பேரக் […]

எங்கள் தீபாவளி

This entry is part 17 of 17 in the series 12 பெப்ருவரி 2023

ஆர் வத்ஸலா எனது‌ உடலின் வயதும்  காலி வயிற்றில் அதன் இனிப்பும் எண்பதும் இரு நூறும் என்பதாலும் பிள்ளைகள் பெரியவர்களாகி என்னைப் போலல்லாமல் பேரறிவுடன் இப்போதிருந்தே ‘டயட்’டில் என்பதாலும் பேத்தி ‘ஸ்விக்கி’ சரணம் என்பதாலும் பல ஆகாரங்கள் எங்கள் வீட்டில் ‘ஆதார்’ தொலைத்தன  சுற்றுப்புற சூழல் மாசைக்‌ கருதி பட்டாசு‌க்கு வீட்டில் தடை  ‘கொலாஸ்ட்ரால்’ அச்சத்தில் காசி செல்லாமலேயே வடையை‌  விட்டோம் தலைவலிக்கு பயந்து எண்ணெக்குளி  ‘ஷாம்பு’ குளியாகி ‘கீசர்’ குழாயில் கங்கை கண்டோம் மற்றவர்  புது […]

ருசி 2

This entry is part 2 of 8 in the series 5 நவம்பர் 2023

ஆர் வத்ஸலா சிறு வயதில் மும்பை திரையங்கில் அப்பா அம்மாவுடன் 10 மணி காட்சியில் ‘ஜெமினி’யின் ‘ஏ.வி.எம்.’ மின் தமிழ் படம் பார்க்கையில் இடைவேளையில் வெவ்வேறு அழகான நிறங்களில் கண்ணாடி தம்ளர்களில் விற்கப்பட்ட திரவங்களின்  (கற்பித்துக் கொண்ட) ருசி நாற்பது வயதில் முதன்முதலாக வீட்டில் கலர் படம் பார்க்கையில் நானே செய்த மாம்பழ மில்க் ஷேக்கில் காணவேயில்லை தெருவோர சாக்கடைக்கு மிக அருகில்‌ இயங்கும் தள்ளுவண்டி ‘பவனை’ தாண்டிப் போகையில் மூக்கைத் துளைக்கும் வாசனையுடைய வெங்காய பஜ்ஜி […]

ருசி 1

This entry is part 1 of 8 in the series 5 நவம்பர் 2023

ஆர் வத்ஸலா அம்மா போன பின் நான் எப்படி காபி கலந்தாலும் ‘ஒங்கம்மா போட்றா மாதிரி இல்லெ’ என்பார் என்‌ அப்பா சாகும் வரை  மாய்ந்து போனாள் அம்மா‌ அப்பாவின் அம்மா போடும் காபி போல் அவளுக்குப்‌ போடத் தெரியவில்லை என்று அப்பா தினமும் சொல்வதை சொல்லிச் சொல்லி

வெயிலில் வெளியே

This entry is part 5 of 5 in the series 29 அக்டோபர் 2023

ஆர் வத்ஸலா  வேகும் வெயில் முட்டை அவிக்கவும் அப்பளம் சுடவும் அதை தாராளமாக உபயோகிக்கலாம்  தோன்றுகிறது நல்ல வேளையாக  கணவர்  மகன் மருமகள் மூவரும் வீட்டிலிருந்தே பணிபுரிபவர்கள் வீட்டுக் கடனடைந்தவுடன் நான் விருப்ப ஓய்வு எடுத்தாகி விட்டது பேரக் குழந்தைகளை “வீடியோ கேம்”உடன் ஒரு அறையில் அமுக்கி விட்டேன் சமையல் வாயு தீர்ந்தவுடன் இன்னொன்றுக்கு பதிவு செய்துவிட்டேன் கடன்காரன் இன்னமும் வரவில்லை நேற்று மாலையில் நடைப்பயிற்சி செய்கையில்  தெருக்களில் குப்பை கண்டேன் புகைப்படத்துடன் மாநகராட்சிக்கு  புகார் செய்தேன் […]

மறுபடியும் நான்

This entry is part 1 of 5 in the series 8 அக்டோபர் 2023

ஆர் வத்ஸலா முழுமையாக நைந்துப் போன துணியை  விடாமல் இழுத்துப் பிடிக்கும்  தையல் நூல்  கடைசியில்  சோர்ந்து போய் தன்னை மட்டுமாவது  காப்பாற்றிக் கொள்ள விழைவது போல  நான்  என் பாசம் நிறைந்த  ஒரு பக்கத் தொடர்பை  கண்டித்துத்  துண்டித்துக் கொண்டு விட்டேன்  வலி தெரியவில்லை     பாச  நரம்புகள்  முன்பே  நைந்துப் போய்விட்டதால் வெகுகாலம் கழித்து ரசிக்கிறேன்  இப்போது உனை நினையாமல்  நிலத்தின் நீலப் பூக்களை   கடலின் அலைகளை நீல வானின்  நட்சத்திரங்களை

அடுத்த முறை

This entry is part 2 of 5 in the series 8 அக்டோபர் 2023

ஆர் வத்ஸலா அடுத்த முறை  யாரிடமாவது  அன்பு செலுத்தினால் வெளிக்காட்டாதே இப்படி அதை அடுத்தமுறை காண்பிக்காதே கண்களில்  இத்தனை கரிசனத்தை யாரிடமும்  அடுத்தமுறை  வெளிப்படுத்தாதே  இவ்வளவு அழகான  சொற்களில் உன் மதிப்பை யாரிடமும் அடுத்த முறை  பிரதிபலிக்காதே உன் கண்களில்  யார் வலியையும் இவ்வாறு அடுத்த முறை  உன் சொந்த ஊரின் பெயரை சொல்லாதே உனதன்பு நிரந்தரம் என நம்புபவரிடம் நீ விலகிய பின் தைத்து நிற்கக் கூடும் முட்களாக இவற்றின் நினைவுகள் அவர் மனதாழத்தில்  நாள்காட்டியில்  […]

விநாயகர்

This entry is part 5 of 8 in the series 24 செப்டம்பர் 2023

ஆர். வத்ஸலா பல விநாயகர்கள் உண்டுபூஜையறையில்பர்மாவிலிருந்து அகதியாக நடந்து வருகையில்ஒரு சிகை மழித்த பாட்டி தூக்கி வந்த பளிங்கு விநாயகர்நிற்க வைத்தால் லொட்டென்று விழும் நவதானிய விநாயகர்கற்பனை வளத்தால் மட்டுமே அது விநாயகர்என்று ஒப்புக் கொள்ளக் கூடிய மொண்ணை உருவம் கொண்டநாள் நட்சத்திரம் பார்த்துவெட்டிய எருக்கம் வேரில்செதுக்கப் பட்டஅரிய பொக்கிஷவிநாயகர்மரப் பொடியில் அருமையாக செதுக்கப்பட்டவிநாயகர்திருமணமானதும்அம்மா ‌பிடித்தமுதல் விநாயகர்ஒரு மாதிரி இருந்ததால்எங்கள் வீட்டில் களி மண் விநாயகர்கிடையாதுமற்றபடி விநாயகர்கள்எல்லோரும்எங்களுடன்நிரந்தரமாக

நங்கூரம் 2

This entry is part 2 of 8 in the series 24 செப்டம்பர் 2023

ஆர் வத்ஸலாஒரு சாண் துணை தான்அமையும்உனது நங்கூரமாகஎனபூர்வ ஜென்மங்களில்சலவை செய்யப்பட்ட மூளையுடனேயே பிறந்தேன்பணி, அண்ணனுக்குப் பிறகுகவனித்தார் சற்றுஎன்னைதந்தைஅளவாய்பாசம் செலுத்தினர்சகோதரர்கள்‌தங்களுக்கு மணமாகும் வரைகொண்டவனும்கூரையும்தூற்றினர் கைகோர்த்துஆண் பெண் நட்பிலக்கணமறியாமடையரைபுறந்தள்ளிதோழியர் உதவியுடன்உற்பத்தி செய்து நானேபாய்ச்சிக் கொண்டேன்எனது நங்கூரத்தை