அண்ணாத்தே ஹாசாரேயும், கேசரி வாலும்

author
5
0 minutes, 0 seconds Read
This entry is part 17 of 32 in the series 15 டிசம்பர் 2013

புனைப்பெயரில்.

ஹோட்டல் தொழில் என்றவுடன் தமிழர்களுக்கு யார் ஞாபகம் வரும்..? சரவணபவன் அண்ணாச்சி தான்.
அவர் எங்கு போய் படித்தார்..? சுவிஸ்ஸிலா கேட்டரிங் படித்தார்…
ஓட்டை சைக்கிள்… தோற்ற முதல் ஹோட்டல் முயற்சி..
ஆனால், அடியில் சுரக்கும் அந்த இலட்சிய வெறி… மீண்டும் அவரை ஹோட்டல் தொழிலுக்கு இழுத்தது….

இயக்குனர் பாலா எந்த பிலிம்மு இண்ஸ்டிடியூட்டில் படித்தார்..? அமெரிக்கன் பிலிம் அக்காடம்மியிலா..? இல்லை லண்டன் பிலிம் ஸ்கூலிலோ, புனோ பிலிம் அல்லது சென்னை பிலிம் இன்ஸ்டிடியூட்டிலா..?
( தமிழில் சினிமா தலைப்பு வைத்தால் காசு கொடுத்த கருணாநிதி கூட, சென்னை பிலிம் இன்ஸ்டிடியூட்டை தமிழில் தான் சொல்ல வேண்டும் என்று சொல்லவேயில்லையே… )

ஜெயமோகனும் எஸ் ரா பாலகுமாரன் இவர்கள் எல்லாம் எங்கு இலக்கிய விற்பன்ன முறைகள் படித்தார்கள்…?
இல்லை ஹாரிபாட்டர் எழுத்தாளர் எந்த இலக்கிய பட்டறையில் படித்தார்கள்…
கௌடில்யர் என்ன ஹார்வேர்டிலா படித்தார்..
ஆனால், இந்த அரசியலில் மட்டும் புதிதாய் ஒரு கான்செப்ட் சொல்லப்படுகிறது…
படித்தவர்கள், அதுவும் வெளிநாட்டில் வேலை பார்த்தவர்கள் அல்லது வேலைக்கு குட்பை சொல்லி இங்கேயே குப்பை கொட்டுபவர்கள் அரசியலில் வெளக்குமாற்றை எடுத்துக் கொண்டு பேய் ஓட்டுபவன் போல் நாட்டின் லஞ்ச ஊழலை ஓட்ட வேண்டும் , அதுவும் அவர்களால் மட்டுமே முடியும் என்ற மன நிலை…
அன்னா ஹசாரே , லோக் பால் பில்லுக்கு உண்ணாவிரதம் இருந்தார்… பல வகையில் அரசியலாளர்கள் தொந்தரவில் அவர் பல அவதார நிலைப்பாட்டை எடுத்தார்.
அவருடன் இருந்த அ.கே யிற்கு , அரசியலில் நுழைந்து ஆட்சி அதிகாரம் கிடைத்தால் மட்டுமே நமது எண்ணம் நிறைவேறும் என்று ஆம் ஆத்மி என்ற இந்திராவின் கோஷத்தையே தனது கட்சிப் பெயராக கொண்டு களத்தில் குதித்தார்.
நல்ல உணவு, நல்ல உடை , நல்ல வேலை.. என்ற மேட்டுக்குடி மனிதர்கள், கிளர்ந்தார்கள், :ஹேய் , லெட் அஸ் யூஸ் சோஷியல் மீடியா அண்ட் புரூவ் இட்ஸ் பவர் என்றார்கள். பாவம் புவரா இருக்கிற கும்பலின் கூட்டமும் தலையாட்டி கொஞ்சம் கேட்டது.
வெப் சைட் ஓப்பன் பண்ணி, கலெக்ஷ்ன்.
வேலை டிப்ரஷன் தாங்கதவர், எழுதித் தள்ளினார்கள். லெட் மி டொனேட்… தட் ராஜா அண்ட் சோனியா கெங்க் இஸ் லூட்டிங் த கண்ட்ரி..
தட் பி ஜே பி ஹேஸ் அன் அரகண்ட் மோடி…
என்று லட்சிய புருஷனான அ.கேஜ்ரிவாலுக்கு அள்ளித் தந்தார்கள்.
ரிசல்ட், யாருக்கும் மெஜாரிட்டி இல்லை என்ற நிலை.
பி ஜே பி ஒதுங்கியது
காங் அன் கண்டிஷனல் சப்போர்ட் என்றது..
ஆனால், அ.கே…? புல் பவர் இருந்தல் ஆட்சி அமைப்பாராம் இல்லாவிட்டால் மறுபடியும் தேர்தலாம். சரி மறுபடியும் புல் கிடைக்காமல் ஹாப் கிடைத்தால்..? அடிக்க மாட்டாரா..? நோ நோ ஆட்சி அமைக்க மாட்டாரா..?
ஏம்பா, அ.கே…
படிச்சவன் தான் அதுவும் ஐ ஐ டியன் தான் தீர்வு என்றால்,
முன்பு கோவா முதல்வராக இருந்த மனோகரும் ஐ ஐ டி தானே.. அவரும் மெக்கானிகல் இன்சினியர் தானே….
என்னாச்சு..
சரி, நேரு லண்டன்ல் தானே படிச்சார்…
என்ன செய்தார்..? டீசண்டா டிரஸ் பண்ணி, ஸ்பூன் ஃபோர்க் கொண்டு தானே சாப்பிட்டார்.
ஆனா, அவரால் குறட்டை ஒலிக்காக உதைக்கப்பட்ட அந்த கறுப்புக் காட்டான், கையில் குழப்பி சோத்தை தின்ற காமராஜரின் யதார்த்த ஆட்சி முறைக்கு அருகில் கூட நேருவின் பஞ்ச சீல கொள்கை கும்பலால் நாட்டுக்கு நல்லது செய்ய முடியவில்லையே…
பசங்களல ஸ்கூலுக்கு வாங்கடா இல்லாட்டி அடின்னு சொல்லாமே, அவனுக்கு மதிய உணவு போடு என்று இதயம் தொடும் திட்டம் தானே தேவை..
அது புரிந்த அந்த காட்டான் நல் ஆட்சி தரவில்லையா..?
நேரு முதல் ப.சி கபில் சிபில் வரை வக்கீல்கள் அரசியல்வாதிகளாகி ஆட்சி பொறுப்பாளர்கள் ஆனதால் தானே நாடு கெட்டது…
சரி, இந்த அ.கே, கிங் பிஸரில் பறக்கும் போது அது சாராயத்தில் ஓடும் ஒரு கம்பெனி என்று தெரியாதா..? போராடலாமே..
டில்லியில் வீதியெங்கும் பிளாட்பாரத்தில் காரை நிறுத்தி நடை பாதையை திருடும் கூட்டம் தானே ஓட்டு போடு என்று இவர் கூடவே வந்தது… அது பற்றி கேட்கலாமே..
அதெல்லாம் விடுங்கள்…
ஏதோ அரசியல்வாதிகள் தான் ஊழலின் ஊற்றுக்கண் என்பது மாதிரி குதிக்கும், அ.கே கூட்டத்திற்கு ஒரு கேள்வி,
1.உங்களில் எத்துனை பேர் நிலம் வாங்கும் போது, முழுதாய் வெள்ளையில் கொடுத்தவர்கள்..?
2. உங்களில் எத்தனை பேர் என்.ஆர்.ஐ யாக இருந்தால், விவசாய மற்றும் பண்ணை நிலங்கள் என் ஆர் ஐ க்கள் வாங்கக்கூடாது என்பதை கடைபிடித்து அப்படியான நிலம் வாங்காதவர்கள்..?
3. உங்களில் எத்துனை பேர் காசு கொடுத்து உங்கள் புள்ளைகளுக்கு பிரைவேட் கல்லூரிகளில் சேர்ந்த்து டாக்டராக , இஞ்சினியராக ஆக்காமல் இருப்பபவர்கள்…?
4. உங்களில் எத்துனை பேர், வேலை நிமித்தம் பயோ டேட்டா கூதல்ஸ் பண்ணா மாட்டோம் என்ற நிலைபாடு கொண்டவர்கள்..
5. பொய் கணக்கெழுதி கம்பெனியில் கிளைம் பண்ணுபவர்கள் இன்று கோஷம் போடுகிறார்கள்..
இப்படி ஒரு கும்பல் பெருவாரியாக கொண்டு இவர் ஆட்சி அமைப்பாராம்.
அதற்கு முழு மெஜாரிட்டி கிடைத்தால் மட்டுமே தான் பொறுபேற்பாராம்..
இல்லாவிட்டால், மீண்டும் வெப்சைட் ஓப்பனிங்க்…. கலெக்ஷன் ஸ்டார்டிங்க்… எலெக்ஷன் மீட்டிங் என்ற திட்டமாம்.
என்னடா இழவு..
அன்னா ஹசாரேயின் நிலைப்பாடே சரி… மக்கள் இயக்கமாக ஒரு அழுத்தம் கொடுக்கும் இயக்கம் என்பது இந்த நாட்டின் தேவை.
அரசியல் மாற்றம் என்பது, வெறும் ஊழலற்ற ஆட்சி மட்டுமானது அல்ல..
பொய் பித்தலாட்டம் என்பது கார்பரேட்டுகளிடம் இருந்து அரசியல்வாதிகளை பிடித்தாட்டும் நோய்
அதற்கு தீர்வு கார்பரேட்டுகளுக்கு கொடுக்கப்பட வேண்டிய அழுத்தம், முதல் தேவை.
அ.கே, இன்கம்டாக்ஸ்ஸில் வேலை பார்த்தவர் தானே.
ஆர் டி ஐ இப்போ ஸ்ட்ராங்க்..
அப்புறம் என்ன அ.கே யிடம் ராங்க்..?
ஆர் டி ஐ மக்கள் இயக்கமாக ஆக்கி , டாக்ஸ் இவேஷனை முதலில் தடுக்கலாமே..
அப்ப என்னாகும், ஏமாற்ற முடியா சூழலில் காசு சம்பாதிக்கும் நிலையில் கட்டப்படும் தனது டாக்ஸ் செலவாகும் முறை பற்றி கேள்வி கேட்பான் அவன் அவள்…
இது சாத்தியமா..? நடந்ததே…
சென்னையில் , எஸிகேஷனல் செஸ் என்று கட்டப்படும் பணங்கள், எமோஷனல் மேட்டர்களான இலவசங்களுக்கு அள்ளி வழங்கப்படுவது ஆர் டி ஐ மூலமாக கண்டுபிடிக்கப்பட்டு கடிவாளாம் போடப்பட்ட போதும் மாநகராட்சி பள்ளி எல்லாம் இன்று ஸ்மார்ட் ஸ்கூல் ஆகவில்லையா..?
இல்லாவிடில், பொய் சொல்லி அமெரிக்கா போன கூட்டம் வாரக் கடைசியில் போடும் பத்து டாலர் பிச்சையில் தானே, ஒரு கார்ப்பரேஷன் பள்ளிக்கு பெஞ்சுகள் வந்தது..
சுப்ரமணியன் ராஜூ என்று நினைக்கிறேன் , ஒரு கவிதை எழுதினார்,
வெளக்கமாற்றால்
குனிந்து
வீடு கூட்டினாள் வேலைக்காரி,
வீடு சுத்தமாச்சு
மனம் குப்பையாச்சு…
என்று.
வேலைக்காரிக்கு கவிதை எழுதும் கழுதைத்தனம் தெரிந்திருந்தால், எசப்பாட்டு எழுதியிருப்பாள்-
நிமிர்ந்து பார்த்தேன்,
எஜமானர் கண்கள்
என் இடைக்கு மேலும் கீழும் ஆடிக் கொண்டு…
இரண்டு போட்டேன் அவனை –
வெளக்கமாறால்..
சுத்தமானது வீடு மட்டுமல்ல..
வீட்டுக்காரன் மனதும்.
அது போல் தான், வெளக்கமாற்றல் சுத்தம் செய்யுங்கள் என்றால், இன்னும் மூனூ சீட்டு போட்டுக் கொடுத்தால் தான் முடியுமாம், அ.கே யால்.
அதே வெளக்காமாற்றால் இரண்டு முதுகில் போட்டு ஆட்சியை ஆரம்பிக்க சொல்ல வேண்டும்.
இவரது நல்ல திட்டங்களுக்கு ஆதரவு தராமல் காங் அண்ட் பிஜேபி முரண்டு பிடித்தால், பின் மறுதேர்தலுக்கு கூவலாம்…
அத விட்டு… பொறுப்பக் கொடுத்தா, ஏற்க மாட்டேன் என்ற பருப்பு பேச்சு..
அ.ஹசாரே , பிஜிபி சப்போர்ட்டராம்…
அதில் என்ன தப்புய்யா..?
இந்த தேர்தலில் , ஏற்கனவே குஜராத்தில் சாதித்த மோடி வரட்டுமே..
எல்லையோர பாதுகாப்பு..
வந்தேறிகளின் வாலறுப்பு…
1000 வருடமாக தடுக்க ஆள் இல்லாமல் வேலி தாண்டிய வெள்ளாடுகளை, கைமா பண்ணக் கூடிய நெஞ்சுரம் வேறென்ன வேண்டும்.
எல்லோரும் பாரபட்டமின்றி வெள்ளாடு விருதுண்ண ,அவரிடம் வேண்டுமானால், ஹலால் முறையில் பாயாவை தயார் சொல்லி ஆயா கடை ஆப்பமுடன் ஏறக் கட்டலாம்.
டாடா சொல்றான்.. இன்போஷிஸ் நாறாயணமூர்த்தி சொல்றான் – மோடி ஓகேன்னு.
பின் லாடன் கும்பல் வந்து ஓகே சொன்னா தான் ஓட்டுப் போடனும் என்றால், அப்புறம் இந்தியாவின் கதி டிவின் டவர் தான்.
பார்த்தாலே, அனுமன் மாதிரி இருக்கானுய்யா மோடி..
அசோகவனத்தில் அல்லாடும் சீதை மாதிரி நொந்து கிடக்கும் பாரத் தாயை மீட்டெடுக்க அனுமன் தேவை.
அ.கே யை பொறுத்தவரை, மின்சார விலை குறைபேன், 150 லிட்டர் ஃபிரி வாட்டர் இரண்டும் கொடுக்கலாமே – தற்போது ஆட்சி அமைத்து.
தொந்தரவு செய்தால் அவர் என்ன மக்களே பி ஜெ பியையும் காங்யும் விரட்டி அடிப்பார்கள்.
அத விட்டு சும்மா பவர் பாயிண்ட் பிரசண்ட்டேஷன் போட்டு கழுத்தறுத்து ஃப்பே தின்னும் கும்பல் கணக்கா பேசிக்கின்னே இருக்காரு.
ஊழலை தடுக்க எவ்வளாவோ இருக்கு…
அது நம்மில் இருந்து ஆரம்பிக்கப் பட வேண்டியது.
நிதின் கட்காரி மாதிரி ஆட்களை விரட்டி அடிக்க முடிந்த மாதிரி, கட்சிகளில் ஆட்களை விரட்டி அடிக்க விளக்கமாறு உபயோகிக்கலாமே..
2ஜி யை ஒரு தனி மனிதனாக சு.சா , ராஜாவை விரட்டி அடிக்கவில்லையா..? கனிமொழிக்க இந்தி கற்றதின் அருமையை உணர்த்தவில்லையா… அவரும் சிறைசாலை என் சிந்தனைக் கூடம் என்று களம் காணவில்லையா…?
அ.கே, எண்ணம் நோக்கம் சரியானதாக இருக்கிறது.
ஆனால், அரகன்ஸ் அதிகம் தெரிகிறது. அது ஆபத்து.
பொறுப்பேறு முதலில் ஏதாவது செய்யுங்கள்.. இல்லாவிட்டால், ஸ்டார் அப், பர்ஸ்ட் அவுட் ஆகி விடும்.
துடைப்பம் முக்கியமானது தான்… அழுக்கை துடைக்க உதவும் வெளக்கமாறு ,
அரியணை ஏற வெண்சாமரம் ஆகலாம்… அது தாண்டி,
அது சாமான்யனின் துயர் துடைக்கும் ஆயுதம் என்ற நிலையை அ.கே மாற்றி விடக் கூடாது.
ஆனால், அடி வயிற்றில் அரசியல்வாதிகளுக்கும் இனிமா கொடுத்தது மக்களே.
அதை அ.கே புரிந்து பொறுப்பேற்று ஒரு மாதிரி ஆட்சி நடத்தினால், அவரைக்கே சப்பார்ட் செய்து எதிர்த்தால் மோடியை கூட மக்கள் மோதி விரட்டியடிப்பார்கள்.
அதுவரை , இந்த தேசத்தில் வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் மோடியின் வெற்றிக்கு எந்தவித பங்கமும் வராமல் இருக்க வேண்டியது அவசியம்.
மோடியின் குஜராத்தை விட, அ.கே யின் டில்லி ஆட்சி சிறந்தது என்று நிரூபியுங்கள். அதுவை இந்தியத் தலைமைக்கு மோடியே தீர்வு.
கடைசியில் ஒரு கதை ஞாபகம் வருகிறது –
ஒருவன் செத்து பரலோகம் போனானாம். நல்லது கெட்டது 50:50 பண்ணியவன் –
சரிப்பா, போய் நரகம், சொர்க்கம் இரண்டையும் பீப் ஹோலில் பார்த்து நீயே ஒன்றை தேர்ந்தெடு என்று சித்ரகுப்தன் சொல்ல..
போய் பார்த்தால், நரகம் என்ற போர்ட் இருந்த பீப் ஹோலில், எல்லா கெட்ட அயிட்டமும், பெண்கள், மது, நல்ல இண்டர்நேஷனல் பஃபே, மானாட மயிலாட என்று குத்துப்பாட்டு ( அங்கேயும் கலைஞர் முதல் வரிசையில் பார்த்துக் கொண்டு ) என்று ஒரே திருவிழா மயம்..
அப்படியே அடுத்த பீப் ஹோலில், சொர்க்கத்தை பார்த்தால், எல்லோரும் கம்ப்யூட்டரில் உழைத்துக் கொண்டு, ஒருவருக்கொருவர் திட்டி அடித்துக் கொண்டு, எண்ணெய் கொப்பரையில் எவனையோ போட்டு வறுத்து கொண்டு, வெகு சாதாரண அலுமினிய தட்டில் ஊசிப் போன சோறு என ஒரே வேதனை.
தாங்க் யூ சி.குப்தா, என்று நரகத்தை கொடு என்று செலக்ட் பண்ணியவுடன்,
என்ட்ரி போட்டு, சி.குப்தன் இவனை அடுத்த ஒருவனிடம் ஹேண்ட் ஓவர் பண்ணி ,
அவனுடன் போனால், “சொர்க்கத்தில் “ என்று பீப் ஹோல் வழியாக காண்பிக்கப்பட்ட விஷயங்கள் இருந்த ஏரியாவில் தள்ளப்பட்டு மூடப்பட்டானாம்.
டம் டம் என்று தட்டி, ஏய் சித்ர குப்தா என்ன இது… மாத்தி போட்டுட்டானுக என கேட்க,
யோவ் சும்மா கிட, சி.கு பிளாங்ஸ் டூ மார்கெட்டிங்க டிபார்ட்மெண்ட்… பொய்ய சொல்லி நரகத்த சொர்க்கமுன்னு உன்ன முடிவு எடுக்க வெச்சுட்டானுக… கம்முனு கிட உங் கதை அம்புட்டுத் தான்.. என்றானாம் அங்கிருந்தவன்…
அரவிந்த கேஜ்ரிவால் , டில்லியை ஆண்டால் தான் நமக்கு அவர் சொன்னது மார்கெட்டிங்க் மட்டுமா இல்லையா என்று தெரியும்…
நோன் டெவில் இஸ் பெட்டர் தேன் அன் நோன் ஏஞ்சல் என்பார்கள்.
அ.கே என்ற இரட்சகன், டெல்லியில் பொறுப்பேற்று ஒரு ஐந்து வருடம் ஆண்டு நாம் அவரின் இம்ளிமெண்டேஷன் கெப்பாசிட்டியை தீர்மானிக்கும் வரை,
டெவில் என்று சிலர் சொன்னாலும்,
வாக்களிப்போம், மோடி பிரதமராக வரும் சூழலிற்கு.

Series Navigationஇலக்கியச்சோலை- வளவ. துரையன் எழுதிய ”சின்னசாமியின் கதை” நாவல் வெளியீட்டு நிகழ்ச்சி
author

Similar Posts

5 Comments

  1. Avatar
    paandiyan says:

    வில்லவன் கோதை கட்டுரையை படிக்காமல் ஒரு ரூபாயிக்கு சன்டை போட்டது போதும்.(என் கட்டுரை படித்து பேசுங்கப்பா என்று அவர் சொன்ன போது கூட , மனம் இலகாமல், சினிமா என்று எல்லாம் பேசி..)

    எலக்கியம் சோறு போடாது ராஜா. இங்க வாங்கப்பா . நாட்டை பற்றி உருப்படியாக பேசலாம்.

  2. Avatar
    ஷாலி says:

    புனைப்பெயரில்.
    //ஹோட்டல் தொழில் என்றவுடன் தமிழர்களுக்கு யார் ஞாபகம் வரும்..? சரவணபவன் அண்ணாச்சி தான்.//

    இதுவும் ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிது! மாற்றான் மனைவி ஜீவஜோதியை மூன்றாம் தாரமாய் மணக்க தடையை இருந்த கணவன் பிரின்ஸ் சாந்தக்குமாரை கொடைக்கானலில் கொலைசெய்து ஆயுள் தண்டனை பெற்று ஜெயிலுக்குப் போனது…….ஹி…ஹி..ஹி.

  3. Avatar
    புனைப்பெயரில் says:

    உண்மை தான், அங்கு தான் ஜோசியம் படுத்தியது. இவர் மட்டுமல்ல ஜோஷியன் பேச்சைக் கேட்டு என் டி ஆர், ஒரு பூவின் பெயர் கொண்ட 60கள் நடிகையின் மகளுடன் அர்த்த ஜாம திருமணம் புரிந்தார். ஆனால், அண்ணாச்சி, என் டி ஆர் இருவர் வாழ்விலும் அதற்கப்புரம் அழிவு தான் வந்தது. வயதான காலத்தில் வரும் ஆன்மீக பற்று அழிவுக்குத் தான் வழி வகுக்கும்.

  4. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    \ அ.கே யை பொறுத்தவரை, மின்சார விலை குறைபேன், 150 லிட்டர் ஃபிரி வாட்டர் இரண்டும் கொடுக்கலாமே – தற்போது ஆட்சி அமைத்து. \

    இதுக்கெல்லாம் துட்டு எங்கிருந்து கிடைக்குமாம் இவருக்கு? அதைப் பற்றி மக்களிடம் இவர் மூச்சாவது விட்டதுண்டு?

    \ அ.கே, எண்ணம் நோக்கம் சரியானதாக இருக்கிறது.
    ஆனால், அரகன்ஸ் அதிகம் தெரிகிறது. அது ஆபத்து. \

    Proper Assessment. காலம் தான் பதில் சொல்லும். இவர் இன்னொரு மம்தா பேனர்ஜியா? தெருவில் நின்று கூச்சல் மட்டிலும் போட முடியுமா இவரால்? அல்லது ராஜ்ய நிர்வாகம் செய்யும் திறமையும் உண்டா என்று?

    \ வயதான காலத்தில் வரும் ஆன்மீக பற்று அழிவுக்குத் தான் வழி வகுக்கும். \

    Bad generalisation. சாலப்பிரம்பு பற்றிப் படித்துப் பார்க்கவும். மனதுருகி ஒரு க்ஷண நேரமானாலும் இறைவனை நினைக்க முடிந்தால் நல்லது தான்.

    ஆன்மீகம் என்ற பெயரில் அடாவடி, டாம்பீகம் — இவை வயது இருக்கும்போது வந்தால் என்ன வயதான காலத்தில் வந்தால் என்ன — போகாத ஊருக்கு வழி காண்பிப்பவை — யாருக்கும் ப்ரயோஜனம் தாராது. எப்போதும் ப்ரயோஜனம் தாராது.

    ம்………ஸ்ரீமான் புனைப்பெயரில் ……….. கருத்துக்களில் நல்ல பேலன்ஸ் இருக்கிறது. நிறைய எழுதவும்.

Leave a Reply to paandiyan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *