ஜல்லிக்கட்டின் சோக வரலாறு

author
0 minutes, 0 seconds Read
This entry is part 15 of 33 in the series 4 ஜனவரி 2015

வைகை அனிஷ்
தமிழகத்தில் வீரம் செறிந்த விளையாட்டுக்களில் ஒன்று காளைகளை அடக்குவது. தற்பொழுது அந்த விளையாட்டிற்கு தடை இருந்தாலும் ஜல்லிக்கட்டிற்கு பின்னால் ஒரு சோக வரலாறும் உள்ளது.
மனித குலத்தின் முதல் சொத்தே ஆடுகளும் மாடுகளும்தான். அதே போல மனித இனத்தின் அவைச உணவு வகைகளில் முதன்மையானது பால், ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சிதான் அதன் பின்னர் புத்தமதம் தழைத்தோங்கிய பின்னர் மாடுகள் கூட்டம் கூட்டமாக வெட்டப்படுவது தடுக்கப்பட்டது. மாட்டிலிருந்து கிடைக்கும் பால், தயிர், பாலாடைக்கட்டி, வெண்ணெய், நெய், மோர் போன்றவை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அனைத்து நிலங்களிலும் இனம், மொழி சார்ந்த மனிதர்களும் அனுபவித்து வந்திருக்கிறார்கள்.
மாடு என்ற தமிழ்ச்சொல்லிற்கு செல்வம் என்ற பெயரும் உண்டு. நமது செல்வ ஆதாரத்தில் மாடுகளுக்கு ஒரு பெரும் பங்கு இருந்திருக்கின்றது.
கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை மாட்டுச்சந்தை என்பது மக்களின் வாழ்வில் ஒரு முக்கிய இடத்தை பெற்றுள்ளது. மாட்டுச்சந்தை வார சந்தைகளாக நடப்பது ஒரு வகை. இவ்வகையான சந்தைகள் சுற்றிலும் கிராமங்களை கொண்ட அதிகம் கொண்ட சிறுநகரத்தின் மையமாக நடைபெறும். வாரந்தோறும், வாரத்தின் ஒரு குறிப்பிட்ட கிழமையில் இச்சந்தை கூடும். சுத்துப்பட்டி கிராமங்களில் உள்ளவர்கள் தேவைக்கு ஏற்றவாறு உழவு மாடுகளையும் கறவை மாடுகளையும் வாங்கவும், விற்கவும் இந்தச் சந்தைகள் பயன்பட்டன. இந்த சந்தைகளில் மாடுகளைத்தவிர, ஆடு, கோழி போன்றவையும் விற்பனை செய்யப்பட்டது. மேலும் மாடுகளுக்கு தேவையான கழுத்துக்கயிறு, மூக்கனாங்கயிறு, மணி, சாட்டக்கம்பு, தார்க்கம்பு, குஞ்சம், கூட்டுவண்டிகளுக்குரிய அலகு சாதனப்பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்களும் விற்பனைக்கு வரும். இந்தச் சந்தைகளை தவிர மாட்டுத்தாவணி என்றதொரு வகையிலும் மாடுகள் விற்பதும் வாங்குவதும் நடைபெறுவதும் உண்டு.
மாட்டுத் தாவணியில் வாரச்சந்தைகளை விட அளவில் பெரியது மட்டுமல்ல பத்துநாள்கள் இருபது நாள்கள் என்று தொடர்ச்சியாகவும் நடக்கக்கூடியவை. இந்த மாட்டுத்தாவணியில் விற்பனையும் லட்சக்கணக்கில் நடைபெறும். மாட்டுத்தாவணி நடைபெற்ற ஊர்களில் திண்டுக்கல், மதுரை, பொள்ளாச்சி, திருநெல்வேலி போன்ற ஊர்களும் அடங்கும். மதுரை நகரின் மிகப்பெரிய மாட்டுத்தாவணி தற்பொழுது பேரூந்து நிலையமாக மாற்றப்பட்டுவிட்டது. பொதுவாக இந்த ஊர்களில் கோயில் திருவிழாக்கள் நடைபெறும் நாட்களிலேயே மாட்டுத்தாவணி நடைபெறும். இந்த வகை மாட்டுத்தாவணி நடைபெறும் நாள்களை தேர்ந்தெடுக்கையில் பாசன பருவம் தொடங்குகிற காலங்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
தற்பொழுது மாட்டுத்தாவணி நடைபெறுவது அரிதாகி விட்டது. இதற்கு காரணம் இயந்திரமயமாக்கல் ஆகும். உழவுப்பணி முதல் கதிர் அறுக்கும் வரை அனைத்து பணிகளுக்கும் டிராக்டர் போன்ற இயந்திரங்கள் வந்துவிட்டது. ஒரு சர்வேயின் படி கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர் 740 லட்சம் காளைமாடுகள், நமது விவசாயத்திற்கு தோள் கொடுத்தன. 8,200 லட்சம் பசுக்களின் சாணமும் கோமியமும் உரமாகின. இன்று அவை அனைத்தும் மாமிசத்திற்காக அறுக்கப்படுகிறது. பெங்களுரில் உள்ள கார்டுமேன் நிறுவனம் ஒரு சர்வே நடத்தி சேகரித்தபடி இந்திய காளைகளின் சக்தி தினமும் ஆறுமணிநேர வேலை என்ற அடிப்படையில் 30,000 மெகா கெர்ட்ஸ் ஆற்றலை அளிக்கிறது. உழவிற்கு பால் வற்றிய பசு எருமை மாடுகளை ஈடுபடுத்துவதன் மூலம் சுமார் 16,000 மில்லியன் ய+னிட் மின் சக்தி மிச்சமாகின்றன. பாரமிழுக்கும் மாடுகள் சந்தைக்குச் செல்ல, குடும்ப உறுப்பினர்களை அழைத்துச்செல்ல தோட்டத்திற்கு செல்ல என அனைத்து அடிப்படை தேவைகளையும் ப+ர்த்தி செய்வதால் சுமார் 4000 மில்லியன் ய+னிட் மின் சக்தி மிச்சமாகிறது. இந்த அளவு மின்சக்தியை பெற 40,000 கோடி ரூபாய் மதிப்புள்ள டீசலுக்கான கச்சா எண்ணெயை நாம் வாங்கவேண்டும். இந்த நடமாடும் சக்தி ஜீவன்களின் பயன்பாடு முற்றிலுமாக அழிக்கப்பட்டு ப+ஜ்ஜிய நிலைக்கு வருமானால் நம் பொருளாதாரம் திவாலாகும் நிலைமை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கிறார் அமர்த்தியா சென்.
நாட்டின் மொத்த உற்பத்தியில் 35 சதவீதம் விவசாயத்திலிருந்தே பெறப்படுகிறது. கால்நடை வளர்ப்பு, தீவன மேலாண்மை, இயற்கை உர தயாரிப்பு போன்றவற்றில் அக்கறையும் பங்களிப்பும் தரவேண்டும்.
அழிந்து வரும் காங்கேயம் காளைகள்
கொரங்காடு என்ற மேய்ச்சல் நிலங்கள் கொங்கு மண்டலத்தில்(கோயமுத்தூர், ஈரோடு மாவட்டம்) பிரபலமானது. செம்மண் அல்லது சரளை மண் வகை மண் மற்றும் மழை அளவு அதிகம் இல்லாத பகுதிளை கொரங்காடு என்று அழைக்கப்படுகிறது. இவ்வகை காடுகளில் கொலுகட்டை என்ற ஒரு வகையான மேய்ச்சல் புல் ரகம் வளரும். இது வறட்சியை மிகவும் தாங்கி வளரக்கூடிய புல்வகையாகும். கடுமையான வறட்சியிலும் இந்த புல் வளரும். இவை தவிர ஒரு ஹெக்டேரில் முள்வேலி, வெல்வேல் ஆன மரங்களை நட்டு வைத்து வேலியாக அமைத்து வைப்பார்கள். இந்த வகை கொரங்காடு பகுதிகளில் தான் புகழ்பெற்ற காங்கேயம் காளைகள் வளர்க்கப்படுகிறது. காங்கேயம் காளைகள் விலை ரூபாய் 50,000 ஆயிரம் முதல் ரூபாய் 90,000 வரையிலும், காங்கேயம் காளைகள் ரூபாய் 20,000 முதல் ரூபாய் 40,000 வரையிலும் விற்பனை ஆகின்றது. கடந்த சில வருடங்களாக போதிய மழையின்மையால் காங்கேயம் மரங்கள் விற்பனை செய்யப்பட்டன. மழையின்மை காரணமாக புல்களும் இல்லை. காங்கேயம் கால்நடைகளும் இல்லை. தற்பொழுது பெய்த மழை காரணமாக கொரங்காடு மேய்ச்சல் நிலங்கள் உள்ளது. ஆனால் காங்கேயம் காளைகள் தற்பொழுது இல்லை. காங்கேய காளைகளைகள் எண்ணிக்கை குறைந்ததாலும், விளைநிலங்கள் அனைத்தும் விளைநிலங்களாக மாற்றப்பட்ட பின்பு இப்பகுதியில் உள்ளவர்கள் தொழில்நகரங்களை நாடிச்சென்றுவிட்டனர். அரசு முயற்சிசெய்தால் காங்கேயம் காளைகளை அழிவிலிருந்து காப்பாற்றலாம்.
ஜல்லிக்கட்டின் சோக வரலாறு
பாண்டி நாட்டிற்குற்பட்ட மதுரை மாவட்டத்தில் செக்கானூரணி அருகாமையில் சொரிக்கநாயக்கன்பட்டி. இப்பகுதியில் நாயக்கர் சமூகத்தைச்சேர்ந்தர்கள் அதிகம் வாழ்ந்து வந்தனர். தற்பொழுது அச்சமூகத்தைச்சேர்ந்தவர்கள் புலம் பெயர்துள்ளனர். அதனால் சொரிக்காம்பட்டி என மாறியது. செக்காணுரணியிலிருந்து திருமங்கலம் செல்லும் வழியில் அமைந்துள்ளது. இந்த சொரிக்காம்பட்டி.
கடந்த் 250 ஆண்டுகளுக்கு முன்பு சொரிக்காம்பட்டி கிராமத்தில் கருத்தமாயன்; என்ற பெரிய செல்வந்தர் வாழ்ந்து வந்தார். அவருக்கு ஏராளமான நிலபுலன்கள் இருந்தது. அவருக்கு நான்கு ஆண் பிள்ளைகள், அதில் கடைசி மகன் அழகாத் தேவன். அவன் கட்டழகனாகவும் ஜல்லிக்கட்டு போன்ற வீரவிளையாட்டுகளில் மிகவும் கெட்டிக்காரனாகவும் இருந்து வந்தான். பணக்கார குடும்பத்தில் பிறந்திருந்ததனாலும், கடைசிப் பிள்ளையாக இருந்ததினாலும் பொறுப்பற்றவனாக விளையாட்டுத் தனமாக சுற்றிக்கொண்டிருந்தான். அவன் தனது நண்பன் தோட்டி மாயாண்டியுடன் சேர்ந்து ஊர் ஊராகச் சென்று மாடு பிடிப்பதிலும், சேவல்; சண்டை போடுவதிலுமே தனது பெரும் பங்கு நேரத்தைக் கழித்து வந்தான். தனது கடைசிப்பிள்ளை இப்படி பொறுப்பற்றவனாகச் சுற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்து வருத்தமடைந்த கருத்தமாயன்; அவனுக்கு ஒரு திருமணம் செய்துவிட்டால் திருந்திவிடுவான் என நினைத்து அவனுக்கு பெண் பார்க்க விரும்பினார். அக்காலத்தில் தனக்கு நிகரான செல்வந்தனாக இருந்த கீழக்கோயில்குடி கருத்தமலைக்கு ஒய்யம்மா என்ற பெண் இருப்பதை கேள்விப்பட்டு அந்த வீட்டில் சென்று பெண் கேட்பது என முடிவு செய்கிறார். அதற்காக ஏழு வண்டி மாடுகளைப் ப+ட்டி அதில் வாழைத்தார்களையும், வெற்றிலைகளையும், தென்னங்காய்களையும் மூட்டை, மூட்டையாக எடுத்துக் கொண்டு தனது மகனையும் அழைத்துக் கொண்டு கீழக்கோயில்குடி செல்கிறார்.
பெரிய செல்வந்தராகக் கருதப்பட்ட சொரிக்காம்பட்டி கருத்தமாயன் தனது வீட்டிற்குப் பெண் கேட்டு வருகிறார் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்த கருத்தமலை என்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்து கருத்தமலை வருகின்றவர்களைக் அக்கால முறைப்படி கொட்டுமேளத்துடன் வரவேற்று எல்லோருக்கும் வெற்றிலை பாக்கு கொடுத்து உபசரிக்கிறார்.
பிறகு எல்லோரும் சமுக்காளம் விரித்து அமர்ந்து ஒருவருக்கொருவர் வெற்றிலை வைத்துப் ;பறிமாறிக் கொள்கின்றனர். வந்திருக்கின்ற மாமன் மைத்துணர்களுக்கெல்லாம் வணக்கம். உங்கள் வீட்டில் சம்பந்தம் செய்வதில் எனக்கு முழுச் சந்தோசம். இப்படி நாம் விருப்பப்பட்டாலும் வாழப்போகின்ற சின்னஞ்சிறுசுகளை கேட்கவேண்டும் என கருத்தமலை கூறியுள்ளார் மேலும் தன்னுடைய மகள் சம்மதித்தா எனக்கு எந்த திருமணத்தில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்கிறார். கருத்தமாயன்; தனது மகள் அழகாத்தேவனைப் பார்க்கிறான். அதற்கு அவன், தான் பெண்ணை ஒருமுறை பார்த்துவிட்டுச் செல்கிறேன் என்கிறான். பெண்ணைச் சபைக்கு அழைக்கின்றார்கள். அப்பெண்ணைப் பார்த்தவுடன் அந்த அழகில் மயங்கிவிடுகிறான் அழகாத்தேவன். தனக்கு விருப்பம் உள்ளது எனக்கூறாமல் ஒரு புன்சிரிப்பை மட்டும் ப+த்துவிட்டு தன்னுடைய சம்மதத்தை தெரிவிக்கிறான். தன் மகனுக்கு பெண் பிடித்துப் போய்விட்டது என்பதை உணர்ந்து கொண்ட கருத்தமாயன்;, எங்களுக்கு ப+ரண சம்மதம், பெண்ணை ஒரு வார்த்தை கேட்டுங்கப்பா என்கிறார்கள். அதனைக் கேட்டதும் ஒய்யம்மாள் சபையைப் பார்த்து அய்யா பெரியோர்களே எங்கப்பன் கழுதையை கட்டச்சொன்னாலும் கட்டிக்கிடுவேன். ஆனால் எனக்கு கணவனாக அமையவேண்டும் என்றால் எங்க வீட்டில் ஏழு காளைகள் வளர்த்து வருகிறோம். அந்தக்காளையை யார் அடக்குகிறார்களோ அவனைத்தான் திருமணம் செய்வேன் எனக்கூறியுள்ளார் ஒய்யாரம்மாள். அதே வேளையில் அந்தக்காளையை அடக்காவிட்டால் அதாவது தோல்வி அடைந்தால் அக்காலமுறைப்படி காலமெல்லாம் பண்ணைஅடிமையாக எங்க வீட்டில் பண்ணைக்கு இருக்கனும் எனச் சபையோரைப் பார்த்துக் கூறுகிறாள். இதைக்கேட்டு சபையோர் அதிர்ச்சி அடைகின்றனர். ஒய்யாரம்மாள் அழகில் மயங்கிய அழகாத்தேவன் அந்தச்சவாலை ஏற்றுக்கொள்கிறான். வருடந்தோறும் கீழக்கோயில்குடி, செக்காணூரணி, அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அந்த ஜல்லிக்கட்டிற்குரிய நாள் வருகிறது. அப்போது அழகாத்தேவன் ஜல்லிக்கட்டுகளை அடக்குவதற்கு தயாராகின்றான். அவனுடைன் அவனுடைய நண்பன் தோட்டியையும் அழைத்து வாடிவாசலை நோக்கிச்செல்கிறான். செல்லும் முன் தான் பெற்ற தாயிடம் விடைபெற்றுக்கொண்டு அழகாத்தேவன்புறப்படும் போது தாய் ஒரு வார்த்தை கூறுகிறாள். நீ பிடித்த மாட்டை மறுபடியும் திருப்பிப் பிடிக்காதே என எச்சரிக்கை விடுத்து நெற்றியில் திலகமிட்டு வழியனுப்புகிறாள். தன் தாயைப் பார்த்து அழகாத்தேவன், தாயே நான் ஏழு காளைகளையும் அணைத்து விடுவேன். ஒரு வேளை எனக்கு மரணம் நேர்ந்தாலும் நேரலாம். அதனால் எனக்கு வாய்க்கரிசி போட்டு அனுப்பி வை என்றான். அவன் தாய் அவனுக்குக் கும்பாவில் வாய்க்கரிசி எடுத்து வாய்க்கரிசி கொடு;த்து வழியனுப்புகிறான். அழகாத்தேவனும், அவனது நண்பன் தோட்டி மாயாண்டியும மஞ்சள் ஆடை தரித்து வாடிவாசல் முன்பு நிற்கின்றனர். ஊர் சனங்களை மட்டுமல்லாமல் எட்டு நாட்டு சனங்களும் கூடி இருக்கின்றனர். முதல் காளை வாடிவாசலில் இருந்துது சீறிப்பாய்கிறது. அழகாத்தேவன் வாடிவாசலின் வடக்குப் பக்கத்திலிருந்து தாவி அதன் திமில் மீது விழுந்து அதனைப் பற்றி அமுக்குகிறான். அவனது நண்பன் தோட்டி மாயாண்டி வாடி வாசலின் தெற்குப் பக்கமிருந்து தாவி அதன் வாலை பற்றி இழுக்கிறான். இவ்வாறு ஆறு காளைகளையும் அழகாத்தேவன் அடக்கிவிடுகிறான். கடைசியாக ஏழாவது காளை சீறிப் பாய்கிறது. அதேபோல் அழகாத்தேவன் அதன் திமில் மீது விட்டு வாடிவாசலைத்த தாண்டி அருகிலுள்ள வயக்காட்டிற்குள் சென்றுவிடுகிறது. அழகாத்தேவன் அதனை விரட்டிச் சென்று அடக்க முயலும்பொது அது கொம்பினால் முட்டி அவனது வயிற்றைக் கிழித்து விடுகின்றது. அவன் குடல் சரிந்து வெளியே வருகிறது. சரிந்த குடலை உள்ளே தள்ளி விட்டு ஒரு கையால் தனது வயிற்றைப் பிடித்து அதனை அடக்கி விடுகிறான். இவ்வாறு நிபந்தனைப்படி எல்லாக்காளைகளையும் அவன் அடக்கவிட்டதனால் அவனுக்கு பெண் கொடுக்க சம்மதிக்கின்றனர். கொம்பு பட்டு காயம் அடைந்துள்ளதால் அக்காயங்களுக்கு மருந்து போட்டு அதன் பின்னர் திருமணத்தை முடிக்க முடிவு செய்கின்றனர்.
இதற்கிடையில் ஒய்யம்மாளின் சகோதர்கள் தங்களது காளைகளை அணைந்து ஒருவன் தங்கள் தங்கையை மணந்து கொண்டு செல்வதா? எனப் பொறாமை அடைந்து அவனது புண்ணிற்கு மருந்து கட்டும் மருத்துவச்சியிடம் பணத்தைக்கொடுத்து மருந்திற்கு பதிலாக விஷத்தை வைத்து கட்டிவிடச் சொல்கின்றனர். அவளும் விஷச்செடியை அரைத்து மருந்து எனச்சொல்லி கட்டிவிடுகிறாள். அதனால் புண் புரையோடி சலம் கட்டி மிகவும் பெரிதாக வீங்கி விடுகிறது. தனக்கு ஏதோ நேரப் போகிறது என்பதனை உணர்ந்து கொண்ட அழகாத்தேவன் தன்னுடன் உடன்பிறந்த சகோதர்களை அழைத்து நான் இறந்துவிடுவேன். அதனால் என்னுடைய நினைவாக எனக்கு கல்லில் சாமிசிலை வடித்து என்னை வணங்குங்கள் எனக்கூறி இறந்து விடுகிறார்.
பிறகு காலம் செல்ல செல்ல அழகாத்தேவன் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக ஒய்யம்மாளுக்கு தகவல் தெரியவரவே, அவளும் அக்கால வழக்கப்படி உடன்கட்டை ஏறி தன்னுயிரை மாய்த்துக்கொள்கிறாள்.
அழகாத்தேவன் இறந்ததும் அவன் புகழ் பட்டி தொட்டி எல்லாம் பரவுகிறது. எங்கு ஜல்லிக்கட்டு நடந்தாலும் அவன் பெயரில் ஒரு காளை விடுகின்றனர். அக்காளையை யாரும் அடக்கக் கூடாது என்ற மரபையும் கடைபிடிக்கின்றனர். விக்கிரமங்கலம் ஜல்லிக்கட்டில் அழகாத்தேவனுக்கும் தோட்டி மாயாண்டிக்கும் சிலை செய்து வைத்துவிட்டுத்தான் ஜல்லிக்கட்டு ஆரம்பிக்கின்றனர்.
அதன் பின்னர் பல ஆண்டுகாலம் கழித்து சொரிக்காம்பட்டியில் 1952 ஆம் ஆண்டு ஊர் மக்கள் எல்லாம் ஒன்று கூடி அவனுக்கு ஒரு தனிக்கோயில் கட்டியுள்ளனர். அதன் கருவறையில் அழகாத்தேவன் ஒரு காளையின் கொம்பை பிடித்து அடக்குவது போலவும், அதன் வாலை தோட்டி மாயாண்டி அடக்குவது போலவும் அது உள்ளது. அதே போல விக்கிரமங்கலத்தில் ஒரு காளையை அழகாத்தேவன் அடக்குவது போலவும் அதனுடைய வாலை தோட்டி மாயாண்டி இழுப்பது போல மண்ணில் ஆன சிலையை செய்து வணங்கிவிட்டு ஜல்லிக்கட்டை ஆரம்பிக்கின்றனர். அப்படி ஜல்லிக்கட்டை வாடிவாசலில் திறந்துவிடும்போது முதல் காளையை அழகாத்தேவன் நினைவாக சாமி மாடு என்று விட்டுவிட்டு மற்ற காளைகளை அடக்குகின்றனர். இன்றும் விக்கிரமங்கலம் மற்றும் சொரிக்காம்பட்டியில் அழகாத்தேவனையும், அவனது நண்பர் தோட்டி மாயாண்டியையும் வண்ணங்களில் தீட்டியும், சிலைகள் வைத்தும் வழிபடுகின்றனர். வீரமிக்க ஜல்லிக்கட்டிற்கு பின்பு சோகவரலாறும் நம்மை அதிரவைக்கிறது.

Series Navigationகண்ணாடியில் தெரிவது யார் முகம்?பிரசிடண்டுக்கும் வால்டருக்குமிடையிலான உரையாடல் அல்லது ஏகாதிபத்தியவாதியின் மக்கள் மீதான பற்று
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *