சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 43

Spread the love

  

இந்த வாரம் यावत् – तावत् (yāvat – tāvat)(as long as – so long as) என்ற ஒன்றுக்கொன்று தொடர்புடைய உருமாற்றம் பெறாத சொற்கள்(Indeclinable) பற்றித் தெரிந்து கொள்வோம். ஒரு வாக்கியத்தில் यावत् என்ற சொல்லை உபயோகித்தால் तावत् என்பதையும் உபயோகிக்க வேண்டும்.

கீழே உள்ள உதாரணத்தை உரத்துப் படிக்கவும்.
यावत् हिमालयः भवति तावत् हिन्दुसंस्कृतिः तिष्ठति।
yāvat himālayaḥ bhavati tāvat hindusaṁskṛtiḥ tiṣṭhati|
எதுவரை இமயமலை இருக்கிறதோ அதுவரை இந்தியகலாசாரம் நிலைத்திருக்கும்.

यावत् सूर्यः तिष्ठति तावत् संस्कृतं विराजते।
yāvat sūryaḥ tiṣṭhati tāvat saṁskṛtaṁ virājate |
எதுவரை சூரியன் இருக்கிறதோ அதுவரை சமஸ்கிருதம் பிரகாசிக்கும்.

सः यावत् खादति तावत् एषः न खादति।
saḥ yāvat khādati tāvat eṣaḥ na khādati |
அவன் எவ்வளவு சாப்பிடுகிறானோ அவ்வளவு இவன் சாப்பிடுவதில்லை.

सुवर्णस्य यावत् मूल्यं तावत् मूल्यं रजतस्य नास्ति।
suvarṇasya yāvat mūlyaṁ tāvat mūlyaṁ rajatasya nāsti |
தங்கத்தினுடைய விலை எவ்வளவு இருக்கிறதோ வெள்ளியின் விலை அவ்வளவு இல்லை.

अभ्यासः (abhyāsaḥ)
एतानि वाक्यानि पूर्णानि करोतु –
etāni vākyāni pūrṇāni karotu !
கீழே உள்ள வாக்கியங்களை பூர்த்தி செய்யவும்.

उदा – १. नद्यां यावत् जलम् अस्ति तावत् सरोवरे नास्ति।
nadyāṁ yāvat jalam asti tāvat sarovare nāsti |
நதியில் எவ்வளவு நீர் உள்ளதோ அவ்வளவு நீர் குளத்தில் இல்லை.

२. कर्णाटकं यावत् विशालं केरलं तावत् विशालं नास्ति।
karṇāṭakaṁ yāvat viśālaṁ keralaṁ tāvat viśālaṁ nāsti |
கர்நாடகம் பரந்திருப்பதைப் போல் கேரளம் பரந்ததாக இல்லை.

३. एषा यावत् कार्यं करोति ——————————————–।
eṣā yāvat kāryaṁ karoti ——————————————– |
இவள் எவ்வளவு வேலை செய்கிறாளோ —————————————- !

४. भीमस्य यावत् धैर्यम् अस्ति ——————————————।
bhīmasya yāvat dhairyam asti ——————————————|
பீமனுக்கு எவ்வளவு தைரியம் இருக்கிறதோ ——————————————- !

५. सः यावत् वदति ———————————–।
saḥ yāvat vadati ———————————– |
அவன் எவ்வளவு பேசுகிறானோ __________________________________ !

६. मम भगिनी यावत् पठति ——————————–।
mama bhaginī yāvat paṭhati ——————————– |
என்னுடைய சகோதரி எவ்வளவு படிக்கிறாளோ —————————————— !

७. अहं मधुरं यावत् इच्छामि ————————————-।
ahaṁ madhuraṁ yāvat icchāmi ————————————- |
நான் இனிப்பு எந்த அளவுக்கு விரும்புகிறேனோ —————————————– !

८. सुधा यावत् क्रीडति ————————————–।
sudhā yāvat krīḍati ————————————– |
சுதா எவ்வளவு விளையாடுகிறாளோ __________________________________ !

விடைகளை கீழே சரி பார்த்துக்கொள்ளவும். (விடைகள் கீழே கொடிக்கப்பட்டிருப்பதைப் போலவே இருக்கவேண்டும் என்பது அவசியமில்லை. )

ஆதிசங்கரர் எழுதிய ’பஜ கோவிந்தத்தில் ‘ வரும் ஸ்லோகத்தை கவனிப்போமா?

यावद्वित्तोपार्जनसक्तः
तावन्निजपरिवारो रक्तः।
पश्चाज्जीवति जर्जरदेहे
वार्तां कोऽपि न पृच्छति गेहे॥
yāvadvittopārjanasaktaḥ
tāvannijaparivāro raktaḥ |
paścājjīvati jarjaradehe
vārtāṁ ko’pi na pṛcchati gehe ||

எதுவரை உன்னால் பணம் சம்பாதிக்க முடிகிறதோ அதுவரை உன்னைச் சார்ந்தவர்கள் உன்னிடம் பற்றுடையவர்களாக இருப்பார்கள். அதற்குப் பின் உன்னுடைய முதிர்ந்த (வயதான) காலத்தில் யாரும் உன்னுடன் ஒரு வார்த்தை கூடப் பேச மாட்டார்கள். (As long as you have the ability to earn money, so long will your dependents be attached to you. After that when you live with an infirm body, no one will even speak to you a word.)

அன்றாட நிகழ்ச்சிகளை ,यावत् – तावत् (yāvat – tāvat) உபயோகித்துப் பேசிப்பழகவும்.

’यावत् -तावत् ’ इत्येतत् युगलम् अवधिं ( दैर्घ्यं , कालं च ) सूचयति। यावत् इत्यस्य प्रयोगः कृतः चेत् तावत् इत्यपि प्रयोक्तव्यम् एव।
’yāvat – tāvat’ ityetat yugalam avadhiṁ (dairghyaṁ, kālaṁ ca ) sūcayati | yāvat ityasya prayogaḥ kṛtaḥ cet tāvat ityapi prayoktavyam eva |
’யாவத் – தாவத்’ என்ற இந்த ஜோடிச் சொற்கள் அளவு மற்றும் காலத்தை தெரியப்படுத்துகிறது. ’यावत् ’ என்ற சொல்லை உபயோகப்படுத்தினால் ‘तावत्’ என்ற சொல்லையும் அதே வாக்கியத்தில் உபயோகிக்கவேண்டும்.

விடைகள்

२. एषा यावत् कार्यं करोति तावत् कार्यं अहं न करोमि।
eṣā yāvat kāryaṁ karoti tāvat kāryaṁ ahaṁ na karomi |

३. भीमस्य यावत् धैर्यम् अस्ति तावत् धैर्यं धर्मराजस्य नास्ति।
bhīmasya yāvat dhairyam asti tāvat dhairyaṁ dharmarājasya nāsti |

४. सः यावत् वदति तावत् सा न वदति।
saḥ yāvat vadati tāvat sā na vadati |

५. मम भगिनी यावत् पठति तावत् मम अग्रजः न पठति।
mama bhaginī yāvat paṭhati tāvat mama agrajaḥ na paṭhati |

६. अहं मधुरं यावत् इच्छामि तावत् कटु न इच्छामि।
ahaṁ madhuraṁ yāvat icchāmi tāvat kaṭu na icchāmi |

७. सुधा यावत् क्रीडति तावत् रमा न क्रीडति।
sudhā yāvat krīḍati tāvat ramā na krīḍati |


திண்ணை ஆசிரியர் குறிப்பு

சென்ற வாரம் ஒருவர் பின்வரும் வினாவைக் கேட்டிருந்தார்.

Radhakrishnan Srinivasan says:
July 23, 2011 at 11:18 pm
Is it possible to get all the Sanskrit lessons in “Thinnai” in PDF format ?

ஒவ்வொரு படைப்பின் கீழும் printfriendly என்ற இணைப்பை பார்க்கலாம்.
அதனை கிளிக் செய்தால், அந்த படைப்பை pdf கோப்பு வடிவத்தில் எடுக்கவும், அதனை பிரிண்ட் செய்யவும் இயலும்.
முயற்சி செய்து பாருங்கள்.

நன்றி

Series Navigationஆதிசங்கரரின் பக்தி மார்க்கம்கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மீட்சி – The Return (Love & Equality) (கவிதை -47 பாகம் -3)