மனைவி சொல்லே மேனேஜ்மெண்ட் மந்திரம். ஷாரு ரெங்கனேகர். தமிழில் வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன். நூல் பார்வை

This entry is part 10 of 36 in the series 18 மார்ச் 2012

மனைவி சொல்லே மந்திரம்னு சிலர் இருப்பாங்கன்னு கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அவங்களுக்கும் மேனேஜ்மெண்ட்டுக்கும் என்ன சம்பந்தம் என சிலர் கேட்கலாம். வீட்டை பொறுப்பா நிர்வகிக்கிற தன்னோட மனைவிகிட்ட இருந்து தன் அலுவலக மேலாண்மை நிர்வாகத்தைக் கத்துக்கலாம்னு சொல்றார் இந்தக் கட்டுரை ஆசிரியர் ஷாரு ரெங்கனேகர். தமிழில் இந்த நூலை மொழிபெயர்த்தவர் வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன்.

பொதுவா ஆண்கள் பெண்கள் கிட்டேருந்து இதை கத்துக்கலாம் அதைக்கத்துக்கலாம்னு சொன்னா ஒப்புக்கவே மாட்டாங்க.. எல்லாம் தங்களுக்குத் தெரியும்னு நினைப்பாங்க. ஆனால் இந்த நூலில் பெண்களிடமிருந்து உபயோகமானதை அதுவும் உங்கள் அலுவலக மேலாண்மையையும், நிர்வாகத்தையும் கத்துக்கலாம்னு ஒரு ஆண் ஆசிரியர் குறிப்பிட்டது இனிமை சேர்க்குது.

குவாலியர் ரேயான் நிறுவனத்துக்காக மேலாண்மை பயிற்சி வகுப்பு நடத்த சென்ற இவர் அந்த நிறுவன ஊழியர்களின் மனைவிகளும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என வலியுறுத்த அதன் பின் அவர்களுக்கு ஹிந்திமட்டுமே புரியும் என சொல்லப்பட அதிலேயே தான் உரையாற்றுவதாக சொல்லி நடத்தி இருக்கிறார். அதன் பின் பார்த்தால் இது ஒரு சுவாரசியமான தலைப்பாக மாறி கிட்டத்தட்ட 200 முறைகளுக்கு மேல் உரையாற்றி இருக்கிறார்.

இதன் பின் இதற்கு ஒலிநாடா, ஒளிக் குறுந்தகடு, பின் 25 வருடங்களுக்குப் பிறகு புத்தகமாக வெளிவந்துள்ளது. கிடங்கு இருப்பு மேலாண்மை, மேலாண்மையின் அடிப்படை, மேலதிகாரிகளைக் கையாளுதல், கீழே பணிபுரிபவர்களைக் கையாளுதல், பணிப்பகிர்வு, பணிபுரிபவர்களை மேம்படுத்துவது, ஊக்கப்படுத்துவது, செயல்பாதை மகிழ்ச்சி, அதிகாரத்தைப் பெறுதல், தொடர் தாக்குதல் மூலம் வெற்றி, உள்ளுணர்வு வாயிலாக மேலாண்மை, சந்தைப்படுத்துதல், தரக்கட்டுப்பாடு, என்பதோடு மட்டுமல்ல மனைவியின் நான்கு பிறப்புகள் என பெருமைப்படுத்தி ஒரு நிறுவன மேம்பாட்டுக்கும் இல்ல மேம்பாட்டுக்கும் உள்ள ஒற்றுமைகளைப் புலப்படுத்தி இருக்கிறது இந்தப் புத்தகம்.

மனைவிகள் மதியூக மந்திரிகள் என சொல்லப்படுவதுண்டு. அந்த மனைவியிடம் சம்பளக் கவரைக் கொடுத்து விட்டு என் செலவுக்கு மட்டும் பெற்றுக் கொள்வேன் என சொல்வோரும் உண்டு. என் மனைவிக்குத் தேவையானதை மட்டும் கொடுத்து விட்டு மிச்சத்தை நானே செலவழிப்பேன் என்போரும் உண்டு. இனி மனைவியுடன் கலந்துரையாடி வரவு செலவைப் பகிர்ந்து சேமிப்பு, இருப்பு குறித்து ஆராய்ந்து பாருங்கள். இந்த மாதிரியான பத்திரப் பிணைப்பில் குடும்பம் வெல்லும். ஒரு நிறுவனம் தன் ஊழியர்களுடன் சேர்ந்து கலந்துரையாடி நிர்வாகம் செய்தால் ஜெயிக்கும் என உறுதியாகக் கூறப்பட்டுள்ளது இக்கட்டுரைகளில்.

வீட்டில் கண் அளவை வைத்தே பொருட்கள் இருப்புக் குறைந்தால் வாங்கி நிரப்புதல், நமக்குக் கிடைத்துள்ள மூலப்பொருட்களைக் கொண்டு , நமது பொறுப்புக்கள் உணர்ந்து ஒத்திசைவோடு செயல்படுதல்., மேலதிகாரியை கையாளுதல், ( அவர்களின் தான் என்ற எண்ணத்தைப் பேணுவது) , கீழே பணிபுரிபவர்களை இணைத்துக் கொள்ளுதல் ( நாம் இணைந்து இதை செயல்படுத்துவோம் என சொல்லுதல் ) , பணிகளைப் பிரித்து அளித்தல்,( இதன் மூலம் பொறுப்புள்ளவர்களை உருவாக்குதல்), அவர்களை ( கோபமூட்டும் அளவு விமர்சிக்காமல்) ஆக்கபூர்வமாக மேம்படுத்துதல், ஊக்கப்படுத்துதல், ( முக்கியமாக உணரச் செய்தல்), PROCESS HAPPINESS எனப்படும் ஒரு செயலை மகிழ்ச்சியோடு செய்தல், அதிகாரத்தை திறமையின் மூலம் பெறுதல்,உள்ளுணர்வு வாயிலாக மேலாண்மை, சந்தைப்படுத்தும் மேலாண்மையில் TINA ( THERE IS NO ALTERNATIVE ) , தரக்கட்டுப்பாடு,( வீட்டினுள் சமையல், எரிபொருள் , தண்ணீர், நிதித்திட்டம், முரண்கள், குழந்தைகளைப் பேணுதல், வேலைக்காரி ) ஆகியன ஒரு குடும்பத்தலைவியிடம் கற்றுக் கொள்ள முடிகிறது.

இதில் அங்கங்கே மனைவிகளின் மனோபாவம் பற்றியும் செயல்முறைகள் பற்றியும் நகைச்சுவையாக விவரிக்கப்பட்டுள்ளது. அதில் எனக்குப் பிடித்த பகுதி..

/// கணவனானவன் மாமியாரால் ஏற்கனவே அன்பால் தவறுதலாக வளர்க்கப்பட்டுள்ளான். அதை மாற்றுதல் கடினம். ஆனாலும் அவள் தனது போர்க்கொடியை, வெறுப்பு ஏற்படா வண்ணம், உயர்த்தி பிடித்துக் கொண்டே இருக்கிறாள். இதையும் மேலாண்மை என்பார்கள்..எறும்பு ஊரக் கல்லும் தேயும். இதை நாம் ( NAGGING ) தொல்லை என்று கூறுகிறோம் .////

கடைசியில் மனைவியின் நான்கு பிறப்பாக குழந்தை, இளம்பெண், இளம்தாய் , மாமியார் என்ற சுற்றில் இந்தக் காலத்தில் மாமியாரும் மருமகளும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அனுசரித்து செயலாற்ற வேண்டியுள்ளதையும் அலுவலக மேலாண்மைக்கு ஒரு சான்றாக கூறி இருக்கிறார். ஒரு நிறுவனம் சிறப்பாக நடக்க நிர்வாகமும். ஊழியர்களும் ஒருவருக்கொருவர் அனுசரித்து நடக்க வேண்டியதன் தேவையையும் இது கூறுகிறது.

ஒரு பெண் தான் பிறக்கும் போது முதல் முறையும், தன் திருமணத்தின் போது இன்னொரு குடும்ப மருமகளாக இரண்டாம்முறையும். தன் குழந்தையைப் பெற்றெடுக்கும்போது புதுப்பிறவி எடுத்தது போல் மூன்றாம் முறையும். நான்காவதாக முதுமையில் தன் கணவனுக்கும் தாயை போல நான்காம் முறையும் பிறப்பெடுக்கிறாள்.. அதாவது அவள் தன் மாற்றங்களை அங்கீகரித்துக் கொள்கிறாள். தலைமுறை இடைவெளி, பிணக்குகளைக் சரிப்படுத்துதல், என்பதெல்லாம் எளிதாக கையாள்கிறாள்.

ஆண்கள் ஒரு சிறிய கணினி போன்றவர்கள். இடுதகவல், தயாரித்தல் அல்லது வெளியிடுதல் போன்றவை மட்டுமே செய்ய முடியும். பெண்கள் பிரம்மாண்டமான கணினி போன்றவர்கள், ஒரே நேரத்தில் பல விஷயங்களைச் செய்ய முடியும் என்கிறார். எனவே மனைவி என்ற பெண்ணுக்கும் மதிப்புக் கொடுத்து மேலாண்மை மட்டுமல்ல இன்னும் பலவும் தெரிந்து கொள்ளுங்கள்.. ஒரு ஆயுள் போதாது உங்களுக்கு..

இதை எல்லாம் எளிய வழிமுறைகளில் சொன்ன இந்தப் புத்தகம் ஒவ்வொரு நிறுவனத்திலும் இருக்க வேண்டிய நூலாகும். மிக சரளமான மொழிபெயர்ப்பில் இதை ரசனையோடு கொடுத்துள்ளார் வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன்.

நூல் :- மனைவி சொல்லே மேனேஜ்மெண்ட் மந்திரம்.

ஆசிரியர் – ஷாரு ரெங்கனேகர்
தமிழில் – வெற்றி விடியல் ஸ்ரீனிவாசன்.

பதிப்பகம்:- கற்பகம் புத்தகாலயம்.

விலை ரூ . 50/-

Series Navigationச.முத்துவேலின் கவிதைத்தொகுப்பு “மரங்கொத்திச் சிரிப்பு” : இனிய தொடக்கம்கூந்தல்
author

தேனம்மை லெக்ஷ்மணன்

Similar Posts

4 Comments

  1. Avatar
    jayashree says:

    கட்டுரையின்…நிஜத்தின் த்வனி இருந்தது…
    சொல்லுவதெல்லாம்…உண்மை..உண்மையைத் தவிர வேறில்லை….என்பது போல்..
    அருமை….பகிர்ந்தமைக்கு நன்றி.–

  2. Avatar
    era murukan says:

    Sharu Rengnekar’s all time classic ‘In the wonderland of Indian Managers’ is also worth translating. It has not lost its relevance even after 35 years of its first publication.

  3. Avatar
    Thenammai says:

    கருத்துக்கு நன்றி முருகன் சார்..:)வெற்றிவிடியல் ஸ்ரீனிவாசனிடம் தெரிவிக்கிறேன்.:)

Leave a Reply to Thenammai Cancel reply

Your email address will not be published. Required fields are marked *