அமரர் “கலைஞன்” மாசிலாமணி – கலைஞன் பதிப்பகம்

This entry is part 14 of 15 in the series 13 டிசம்பர் 2020

ஜோதிர்லதா கிரிஜா      நான் அறிந்த தமிழ்ப் புத்தக வெளியீட்டாளர்களில் கலைஞன் பதிப்பகத்தைத் தோற்றுவித்த அமரர் “கலைஞன்” மாசிலாமணி அவர்கள் சற்றே வித்தியாசமானவர். சமுதாயப் பிரச்சினகள் பற்றிக் கவலைப்பட்டு அலசக்கூடியவராக அவர் இருந்துள்ளார்.      அவரை நான் சந்திக்க வாய்த்தது தற்செயலாகத்தான். ஒரு நாள் தியாகராய நகர்ப் பேருந்து நிறுத்தம் ஒன்றில் என் தோழி ருக்மிணியும் நானும் நின்றிருந்தபோது எங்கள் சந்திப்பு நிகழ்ந்தது. ருக்மிணியைச் சந்தித்துவிட்டு அன்று எங்கள் வீட்டுக்குச் செல்லும் பொருட்டு நான் பேருந்து நிறுத்தத்தில் […]

அனார் கவிதைகள்- ஒரு சுருக்கமான அறிமுகம்

This entry is part 13 of 15 in the series 13 டிசம்பர் 2020

                              பேராசிரியர் எம். ஏ. நுஃமான் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய  கலைச்சங்கம் நடத்தும் அனார் கவிதைகள் பற்றிய கலந்துரையாடலைத் தொடக்கிவைக்கும் முகமாக அனாரை அறிமுகப்படுத்தும் வகையில் ஒரு சிறு குறிப்பை அனுப்பிவைக்குமாறு நண்பர் நடேசன் என்னைக் கேட்டுக்கொண்டார். அனாருக்கு புதிதாக அறிமுகம் எதுவும் தேவையில்லை எனினும், கருத்தரங்கச் சம்பிரதாயத்துக்காக நான் இந்தச் சிறிய அறிமுகக் குறிப்பை உங்கள் முன்வைக்கின்றேன். அனார் 1990 களின் நடுப்பகுதியில் கவிதை எழுதத் தொடங்கினார் என்று நினைக்கிறேன். எனினும் அவருடைய ஆரம்ப காலத்திலேயே, […]

பதிவுகள்

This entry is part 12 of 15 in the series 13 டிசம்பர் 2020

  மஞ்சுளா என் கனவுக் கூட்டுக்குள்  வந்தடையும்  இரவுப் பறவைகளின் சிறகுகள்  விடிந்ததும் முறிந்து விடுகின்றன  அதிகாலைக் குளிரில்  நீளவானின் நிறம்  மெல்ல மாறி வருகிறது  கடமைகள் பூத்த பகல்  என்னை நகர்த்தி விட  அனிச்சையாக  உடல் வேகம் பெறுகிறது  தொடர் காரியங்களில்  உள்ளம் தொலை தூரம்  சென்று விட….  அசதியும் சோர்வுமான  வேளைகளில்  வியர்வை பூத்த உள்ளங்கையை  விரித்துப் பார்க்கிறேன்  ஓய்வு நேரத்திலும்  உழைப்பின் கவிதைகளாக  பதிந்தே கிடக்கிகின்றன  கைரேகைகள்          […]

சொல்வனம் இணைய இதழின் 236 ஆம் இதழ்

This entry is part 11 of 15 in the series 13 டிசம்பர் 2020

அன்புடையீர், சொல்வனம் இணைய இதழின் 236 ஆம் இதழ் இன்று (13 டிசம்பர் 2020) வெளியிடப்பட்டது. இதழை இந்த முகவரியில் படிக்கலாம்: உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: “கலையின் மாயத்தைப் பற்றி எழுதுகிறேன்”  ரா. கிரிதரன் எழுத்து பத்திரிக்கை – 1968 – தலையங்கம் – சி.சு.செல்லப்பா (மீள்பதிப்பு) ஓஸோன் அடுக்கில் ஓட்டை – ரவி நடராஜன் கோன்ராட் எல்ஸ்ட்டின் இந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் கடலூர் வாசு கொரொனா தடுப்பூசி  – சுந்தர் வேதாந்தம் ஜிகா வைரஸ் – கோரா பைடனின் மந்திரி சபை – லதா குப்பா ஒரு போராட்டத்தின் கதை – ராமையா அரியா நீலச்சிறுமலர்-ஸ்வேதை– லோகமாதேவி வளர்ந்து வரும் பத்து சிறந்த தொழில் நுட்பங்கள் – 2020 பானுமதி ந. ஃபிலிப் லார்கின்: சாதாரண உன்னதம் – நம்பி கதைகள்: நிறங்கள் – முனைவர் ப. சரவணன் கருடனின் கைகள் – கே. ஜே. அசோக் குமார் ம்ருத்யோ மா – சிவா கிருஷ்ணமூர்த்தி கத்திகளின் மொழி – ஹாலாம்பி மார்கோவ் – மாயன் – கா. சிவா சிந்திய ரத்தத்தில் ஒரு ஓவியம் – பாஸ்கர் ஆறுமுகம் […]

தோள்வலியும் தோளழகும் – இலக்குவன்

This entry is part 10 of 15 in the series 13 டிசம்பர் 2020

                                                                            தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்ற பழமொழி இவனாலேயே ஏற்பட்டது. இணை பிரியாமல் இருப்பவர்களை இராம லக்ஷ்மணன் போல் என்று சொல்வார்கள். இந்தத் தம்பி இல்லாவிட்டால் அந்த ராமனே இல்லை என்று கூடச் சொல்லலாம்! இராமகைங்கர்யத்தில் தன்னையே கரைததுக் கொண்ட அன்புத் தம்பி இலக்குவன்! 14 வருடங்கள் வனவாசத்தில் தூக்கத்தைத் துறந்து காவல் காத்தவன் இவன்! அண்ணனுடன் வனவாசம் செய்ய உத்தரவு தரும்படி அன்னை சுமித்திரையிடம் வேண்டுகிறான் இலக்குவன். அன்னை சொல்கிறாள்,                                                 மகனே!இவன் பின் […]

என் செல்லக்குட்டி கண்ணணுக்கு..!

This entry is part 9 of 15 in the series 13 டிசம்பர் 2020

  குரு அரவிந்தன் மகப்பேறு மருத்துவமனைப் படுக்கையில் அரைகுறை மயக்கத்தில் இருந்த நிருவிடம் குழந்தையைக் குளிப்பாட்டிக் கொண்டு வந்து கொடுத்தாள் நர்ஸ்.  குழந்தையின் முகத்தை உற்றுப் பார்த்தவள், ‘செல்லக்குட்டி கண்ணா’ என்று குழந்தையின் கன்னத்தில் மெதுவாக முத்தம் ஒன்றைப் பதித்து விட்டுக் குழந்தையை அணைத்து முகம் புதைத்து விசும்பத் தொடங்கினாள். ‘அம்மா குழந்தையைக் கொடுங்க நான் வெச்சிருக்கிறேன்’ என்றாள் இக்கட்டான சூழ்நிலையைப் புரிந்து கொண்ட தாதி. ‘நோ.. நோ.. இவன் அவரோட செல்லக் கண்ணன், அவர் வரும்வரை […]

வார்த்தை தவறிவிட்டாய் ட..டீ..ய்..!

This entry is part 8 of 15 in the series 13 டிசம்பர் 2020

குரு அரவிந்தன் அமீரா தூக்கத்தில் வீரிட்டபடி எழுந்தாள்.‘என்னம்மா என்னாச்சு கனவு கண்டியா?’ அருகே படுத்திருந்த தாய் அவளை அணைத்து ஆறதல் சொன்னாள். ‘டாட் சொன்ன சொல்லைக் காப்பாற்ற இல்லையேம்மா’ என்று சொல்லி விம்மி விம்மி அழுதாள். அவளுக்கு ஆறுதல் சொல்லி அவளைத் தூங்க வைத்தாலும் மெலோடியால் தூங்க முடியவில்லை. மகளை மட்டுமல்ல, தன்னையும் ஏமாற்றி விட்ட துயரத்தில் குலுங்கிக் குலுங்கி அழுதாள். வேகமாக நடந்து முடிந்த எல்லாமே ஒரு கனவு போல அவளது கண்ணுக்குள் நிழலாடியது. 19-3-2020 […]

எழுத்தின் உரசல்களும் பழுதின் காரணங்களும் – ப.க.பொன்னுசாமி அவர்களின் எழுத்து

This entry is part 7 of 15 in the series 13 டிசம்பர் 2020

                                   மு.கவியரசன்                                            முனைவர் பட்ட ஆய்வாளர்,                                            தமிழ்த்துறை,                                            தூய சவேரியார் கல்லூரி – தன்னாட்சி                                            பாளையங்கோட்டை, திருநெல்வேலி.                                                                                  7397164133 எழுத்து பல வகைப்படும். ஒவ்வொரு எழுத்தும் தனித்துவமாக விளங்குவதற்கு தனித்துவமான தன்மைகள் அதற்குள் இருந்தாக வேண்டும். அப்போதுதான் அவ்வெழுத்து உயிர்ப்பெற்று சமூகம் எனும் நிலப்பரப்பிற்குள் அலைந்து திரியும். முன்னாள் துணைவேந்தர் ப.க.பொன்னுசாமி அவர்களின் எழுத்தும் அலைந்து திரிகிறது. முட்டி மோதிக்கொள்கிறது. இம்மோதல் எங்கிருந்து தொடங்குகிறது என்பதுதான் கேள்வி. கல்விப்புலத்தில் […]

இஸுரு சாமர சோமவீர – ‘திருமதி. பெரேரா’ எனும் மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு

This entry is part 6 of 15 in the series 13 டிசம்பர் 2020

வணக்கம்.       ‘திருமதி. பெரேரா’ எனும் எனது சமீபத்திய மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு அண்மையில் வெளிவந்துள்ளது. இலங்கையில், யாழ்ப்பாணத்திலுள்ள  ‘ஆதிரை பதிப்பகம்’ இந்த சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளது.       சிங்கள இலக்கியவுலகின் நவீன தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவரான இஸுரு சாமர சோமவீரவை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த முடிந்ததிலும், அவரது சிறுகதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து, அது ஒரு நூலாக வெளிவருவதையிட்டும் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.        ‘திருமதி. பெரேரா’ எனும் இந்தத் தொகுப்பில் இதுவரையில் சிங்கள மொழியில் வெளிவந்துள்ள அவரது இரண்டு சிறுகதைத் தொகுப்புகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் இடம்பெற்றிருக்கின்றன. ‘திருமதி. பெரேரா’ எனும் இந்த நூலை முழுமையாக வாசித்து முடிக்கும்போது சிறுகதைகளால் பின்னப்பட்ட ஒரு நாவல் போல இந்தத் தொகுப்பை நீங்கள் உணரக் கூடும். காரணம், ஒரு […]

வரலாற்றில் வளவனூர்

This entry is part 5 of 15 in the series 13 டிசம்பர் 2020

                                                         [ஆவணங்களால் அறியப்படும் அரிய வரலாறு]                 முனைவர் க. நாகராசன் ”வரலாற்றில் வளவனூர்” எனப்படும் அரிய நூலை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. லட்சுமி மூர்த்தி அவர்களால் எழுதப்பட்டு 1922- இல் சேகர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு கலை விளக்கப் பெட்டமாக அது காட்சி அளித்தது.                விழுப்புரத்தை அடுத்த பிரௌட தேச மகரஜபுரம் என்னும் வளவனூரில் பல கோயில்கள் நீண்ட நெடுங்காலமாக இருந்து வந்துள்ளன. ஜகன்னாத ஈஸ்வரர் கோயிலையும், லட்சுமிநாராயணப் பெருமாள் கோயிலையும் ஆய்வுப் பொருள்களாக […]