தோள்வலியும் தோளழகும் – வாலி

This entry is part 15 of 16 in the series 31 ஜனவரி 2021

                                       இந்திரனின் அம்சமாகத் தோன்றியவன் வாலி. “நான் தசரதன் மதலையாக அயோத்தி வருகிறேன்.  நீங்கள் எல் லோரும் பூமிக்குச் சென்று வானரர்களாக அவதாரம் செய்யுங்கள்” என்று திருமால் கட்டளையிட தேவர்கள்  எல்லோ ரும் பூமிக்கு வந்தார்கள். அப்படி இந்திரனின் அம்சமாக வாலியும் சூரியனின் அம்சமாக சுக்கிரீவனும் பிறக்கிறார்கள்.               கிட்டுவார் பொரக்கிடக்கின் மற்றவர்                                         பட்ட நல்வலம் பாகம் எய்துவான்.           [கிஷ்கிந்தா காண்டம்]   [நட்புக்கோட் படலம் 40]                   வாலியோடு யாராவது […]

தோள்வலியும் தோளழகும் – கும்பகருணன் (2)

This entry is part 14 of 16 in the series 31 ஜனவரி 2021

                                               கும்பகணன் என்றதுமே நம்நினைவுக்கு வருவது தூக்கம் தான். ஆண்டாள் நாச்சியாரும் திருப்பாவையில்”கும்பகருணனும் தோற்று உனக்கே துயில் தந்தானோ?” என்று அவன் தூக்கத்தைப் பதிவு செய்கிறாள். இலக்குவனால் மூக்கறுபட்ட நிலையில் சூர்ப்பணகை                  அரக்கர் குலத்து அவதரித்தீர்!         கொல் ஈரும் படைக் கும்ப                 கருணனைப்போல் குவலயத்துள்        எல்லீரும் உறங்குதிரோ? யான் அழைத்தல் கேளீரோ என்று இவனுடைய தூக்கத்தைத் தெரிவிக்கிறாள்                  இவன் ஆறு மாதம் தூங்கி ஆறுமாதம் விழித்தி ருப்பான் […]

தோள்வலியும் தோளழகும் – இந்திரசித்

This entry is part 13 of 16 in the series 31 ஜனவரி 2021

                                                                          இடியும் மின்னலுமாக இருந்தபோது இவன் பிறாந்ததால் மேகநாதன் எனப் பெயரிடப்பட்டான். பின்னால் இந்திரனைப் போரில் வென்றதால் இந்திரசித் எனப் பெயர் பெற்றான்i மேகநதன் இந்திரனை வெற்றி கொண்டதை சூர்ப்பணகை      தானவரைக் கரு அறுத்து, சதமகனைத் தளையிட்டு      வானவரைப் பணி கொண்ட மருகன்”         என்றும்      இருகாலில் புரந்தரனை, இருந்தளையில்        இடுவித்த மருகன் என்றும்  பெருமையோடுகுறிப்பிடுகிறாள்                         கடும் தவமிருந்து, மும்மூர்த்திகளிட மிருந்து பிரும்மாஸ்திரம், நாகாஸ்திரம், பாசுபதாஸ்திரம் […]

நிரம்பி வழிகிறது !

This entry is part 12 of 16 in the series 31 ஜனவரி 2021

அவன் மனம் முழுவதும்  பணத்தாட்கள்  முளைத்துக் கிடக்கின்றன தன்னை  ஒரு கஜானாவாக எண்ணியெண்ணி அவன் மகிழ்கிறான் பணத்தேடலில் அவன் கோரமுகம் பரிதாபமாய்ச் சிரிக்கிறது தலை சீவி முயலும் போது கொம்புகள் தடுக்கின்றன கற்ற கல்வியோ அவனிடமிருந்து விலகியே நிற்கிறது  பிறர் உழைப்பின் பயன் அவனும் நிரம்பி வழிகிறது …

வீடு “போ, போ” என்கிறது

This entry is part 11 of 16 in the series 31 ஜனவரி 2021

  ஜோதிர்லதா கிரிஜா (ஜனவரி 1976 கலைமகள்-இல் வந்தது. தொடுவானம் எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றது.)       சச்சிதானந்தம் தாம் படுத்திருந்த சாய்வு நாற்காலியின் பின் சட்டத்தின் மீது நன்றாகக் கழுத்தைப் பதித்துத் தலையை உயர்த்திய நிலையில், மோட்டுப் பக்கம் பார்த்துக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அதைத் தவிர வேறு சோலி ஏதும் அவருக்கு இல்லை. சமையற்கட்டில் செங்கமலம் காப்பிக் கஷாயம் இறக்கிக்கொண்டிருந்த மணம் அந்த வீடு முழுவதும் பரவிக்கொண்டிருந்தது. வடிகட்டியின் மேல் அவள் […]

வானவில் (இதழ் 121)

This entry is part 10 of 16 in the series 31 ஜனவரி 2021

வானவில்‘ 11வது ஆண்டில் VAANAVIL issue 121 – January  2021 has been released and is now available for download at the link below. 2021 ஆண்டு தை  மாதத்திற்குரிய வானவில் (இதழ் 121) வெளிவந்துவிட்டது. இதனை கீழுள்ள இணைப்பில் பதிவிறக்கம் செய்யலாம். Please click on the link below to read the issue. இதழினை வாசிப்பதற்கு கீழுள்ள இணைப்பினை அழுத்தவும். கீழுள்ள இணைப்பில் அனைத்து வானவில் இதழ்களையும் வாசிக்கலாம். வானவில் இதழின் முகநூல் பக்கம்: வானவில் ‘Vaanavil’ […]

சத்திய சோதனை

This entry is part 16 of 16 in the series 31 ஜனவரி 2021

உண்மை சுடும். உண்மை சுடப் படலாம். வலி நாட்டிற்கு… தன்னைச் சுடும் உண்மை தங்கமாக மாறும் யாரையும் சுடாத உண்மையின் பெயர்தான் அன்பு.

மூன்று ஆப்பிரிக்க அமெரிக்கக் கவிதைகள்

This entry is part 9 of 16 in the series 31 ஜனவரி 2021

தமிழில்: ட்டி.ஆர். நடராஜன்  இரக்கம்  பால் லாரன்ஸ் டன்பர்  அந்தக் கூண்டுப் பறவை ஏன் பாடுகிறதென்று எனக்குத் தெரியும்  காயமுற்ற  அதன் இறகு , துடிக்கின்ற அதன் நெஞ்சு –  கதவுக் கம்பிகளில் அதன்  படபடப்பு – எக்களிப்போ மகிழ்சியோ அல்ல  வெளிவருவது . இதயத்தின் ஆழத்திலிருந்து அது இறைஞ்சுகிறது  :  சொர்க்கத்தை நோக்கி மேலே என்னைப்  பறக்க  விடு. அந்தக் கூண்டுப் பறவை ஏன் பாடுகிறதென்று எனக்குத் தெரியும்   ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்காவுக்குக் கொண்டு வருகையில்  பில்லிஸ்  வீட்லி  கருணை என்னை அந்தக் காட்டிலிருந்து கூட்டி வந்தது. வெளிச்சம் […]

மகாத்மா காந்தியின் மரணம்

This entry is part 8 of 16 in the series 31 ஜனவரி 2021

[1869-1948] சி. ஜெயபாரதன், கனடா [ சத்தியம், சுதந்திரம், சமத்துவம் ] அறப் போர் புரிய மனிதர்ஆதர வில்லை யெனின்தனியே நடந்து செல் ! நீதனியே நடந்து செல் ! இரவீந்திரநாத் தாகூர் பூமியில் பிறந்த எவனும் மரணத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது. மரணம் நம் எல்லாருக்கும் நண்பன். நமது நன்றிக்கு உரியது. எனென்றால் அது எல்லா விதத் துயர்களிலிருந்தும் நமக்கு விடுதலை அளிக்கிறது.மகாத்மா காந்தி முடிவிலாக் கீர்த்தி பெற்றார்! புவிக்குள்ளே முதன்மை யுற்றார்! கி.மு.399 இல் […]

பக்கத்து வீட்டுப் பூனை !

This entry is part 7 of 16 in the series 31 ஜனவரி 2021

      பக்கத்து வீட்டு வெள்ளை நிறக் கொழு கொழு பூனை நேற்று இரவில்கூட குழந்தைக் குரலில் ” ஆவு … ஆவு … “என அழுத்து அதன் கண்ணீரைத் துடைத்து ஆறுதல் சொல்ல அம்மா விரல்கள் இல்லை அழுகையின் பின்னணியில் பசியா ? வருத்தமா ? தன் துணையை அழைக்கும் உத்தியா ? மர்மத்தில் மயங்கி நிற்கிறது உண்மை அழுகையில் முட்களின் வருடல்கள் தொடர்கின்றன அந்த ஒற்றைக் குரல் அடிக்கடி மௌனம் கிழிக்கிறது ! […]