பஞ்சதந்திரம் – தொடர் – நூல்வரலாறு

This entry is part 33 of 34 in the series 17 ஜூலை 2011

நூல் வரலாறு உலக இலக்கியத்தில் முன்வரிசையில் முதலிடம் பெற்று விளங்குவது பஞ்சதந்திரம். சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர், 1859-ம் ஆண்டில் இந்நூலை ஜெர்மன் மொழியில் தியோடோர் பென்•பே (Theodor Benfey) அவர்கள் வெளியிட்டார்கள். அதைத் தொடர்ந்துதான் பஞ்சதந்திரத்தின் வரலாற்றை ஆராய்வதில் பல அறிஞர்கள் ஈடுபட்டனர். பல்வேறு நாடுகளின் இலக்கியங் களை ஒன்றோடு ஒன்று ஒப்புநோக்கி ஆராயும் விஞ்ஞானத்துறை என்பதே இதிலிருந்துதான் ஆரம்பமாயிற்று என்று கூறப் படுகிறது. இந்நூலின் வரலாற்றை ஆராய்ந்த அறிஞர் யோஹான் ஹெர்டல் அவர்கள் இது […]

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 9

This entry is part 32 of 34 in the series 17 ஜூலை 2011

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “என் பீரங்கி வெடி மருந்து எதிரிகளைக் கொல்வது ! ஏராளமாய்க் கொல்வது ! அது என் நெறிப்பாடு ! ஆயிரம் ஆயிரம் பேரைக் கொல்லாமல் போர் ஏது ? உலகில் சமாதானம் ஏது ? எமது போர் நெறியே எமக்கு வணிக நெறி ! ஒரு பீரங்கி வெடி நூறு பேரைக் கொன்றால், வெடி மருந்து நல்முறையில் செலவாகியுள்ளது என்று […]

ஆள் பாதி ஆடை பாதி

This entry is part 31 of 34 in the series 17 ஜூலை 2011

சமீபத்தில் ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோருக்கு பொருள் வாங்க செல்ல வேண்டியிருந்தது. வாங்கிய உணவு பொருளை வீட்டுக்கு சென்று பிரித்து பார்த்தபோது தரமில்லாமல் இருப்பது தெரிந்தது. சரி, சிரமத்தைப் பார்க்காமல் திருப்பி கொடுத்து விட்டு, தரமான பொருளை விற்க வலியுறுத்தலாம் என்று தோன்றியது. மறு நாள் கடையின் மேலாளரை சந்தித்து பொருளின் தரக்குறைவை தெரிவித்தேன். புளுவை பார்ப்பது போல் பார்த்தார். எங்கே பொருள் என்று கோபமாக கேட்டார்? பொறுமையாக பொருளை எடுத்துக்கொடுத்தேன். இப்படி அப்படி பார்த்தார். நான் பொய் […]

அம்ஷன் குமாருடன் ஒரு சந்திப்பு

This entry is part 30 of 34 in the series 17 ஜூலை 2011

அம்ஷன் குமார் தொடர்ந்து உயிர்மை, கால்ச்சுவடு, ஹிண்டு போன்ற இதழ்களில் எழுதி வருபவர். சுப்பிரமணிய பாரதி, சர் சி வி ராமன், அசோகமித்திரன், வங்க நாடக முன்னோடி பாதல் சர்க்கார் ஆகியோ ர் பர்றிய சிறப்பான ஆவணப் படங்களை இயக்கியவர். அவர் இயக்கிய “ஒருத்தி” (கதை – கி ராஜ நாராயணன்) திரைப்படம் பல திரைப்பட விழாக்களில் பங்கு பெற்றிருக்கிறது சிறந்த திரைப்படத்துக்கான அரசு விருதை பாண்டிச்சேரி மானிலம் வழங்கியுள்ளது.னியூ ஜெர்சி சிந்தனை வட்டமும் இந்தப் பட்த்திற்கு […]

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இதயத்தின் இரகசியங்கள் (Secrets of the Heart) (கவிதை -46)

This entry is part 29 of 34 in the series 17 ஜூலை 2011

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா என் இதயம் ஒன்றால் இப்போ துரைப்ப தெல்லாம் ஆயிரம் இதயம் சொல்லும் நாளைக்கு ! பிறக்க வில்லை நாளை ! இறந்து விட்டது நேற்று ! ஏன் அவலம் அவை மேல் இன்று இனிக்கும் போது ? நானொரு வார்த்தை சொல்ல வந்தேன் ! நானதைச் சொல்ல வேண்டும் இப்போது ! மரணம் எனைத் தடுத்தால் நாளைக்குக் கூறப் படும் அது ! […]

மிக பெரிய ஜனநாயக திட்டம்?!!! ஊழலில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புதல்!

This entry is part 28 of 34 in the series 17 ஜூலை 2011

இந்தியாவில் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து எழும் குரல், ஊழல்வாதிகளை, ஊழல் அரசியல் கட்சிகளை களை எடுத்தல் என. இந்தியாவின் உச்ச நீதி மன்றம் சொல்கிறது, அன்னிய (சுவிஸ்) வங்கிகளில் உள்ள கோடி கோடியாக உள்ள சுரண்டபட்ட செல்வங்களை இந்தியாவிற்க்கு கொண்டுவர சட்டரீதியாக அதிகாரிகள், நீதிபதிகள் கொண்ட குழுவை அனுப்பு என்று! இந்தியாவின் உயர்மட்ட காவல் நிறுவனம், மத்திய ஆட்சியில் உள்ள மந்திரிகளை ஒன்றன் பின் ஒன்றாக கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது! காந்தியவாதிகள், யோக […]

நினைவுகளின் மறுபக்கம்

This entry is part 27 of 34 in the series 17 ஜூலை 2011

நிலாவையே நினைத்துக் கொண்டிருந்தேன். நிமிடங்கள் பறந்து போயிற்று.   குளிர்ச்சியாய் மனது குதூகலாமாயிற்று.   என்னைப் போல் அங்கும் நிலாவிலிருந்து யாரோ பூமியை நினைத்துக் கொண்டிருக்கலாம்.   பூமியின் வெப்பம் அவர்களின் மனதை வியர்க்க வைக்கலாம். மறைந்த பசுமை அவர்களின் மனதை உறைய வைக்கலாம். சுற்றும் பூமியின் சிமென்ட் சிரங்குகள் அவர்களின் மனதினை அருவருக்க வைக்கலாம்.   மழைவராத பேரிடியும் இரைச்சலும் மனதை நெருட வைக்கலாம்.   இப்போதும் நிலாவை நினைத்துக் கொண்டிருந்தேன். அங்கே பூமியை நினைத்துக் […]

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரு கதைகளுக்கு இடையே (கவிதை -40 பாகம் -3)

This entry is part 26 of 34 in the series 17 ஜூலை 2011

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா   நாமிருவரும் இந்த மர்மத்தைச் செவிகளில் கேட்கிறோம் பேசுவது போல் ! வேறு யார் சேர்ந்தி டுவார் விந்தைப் பந்தத்தில் ? மதக்குரு ஒருவர் அடுத்தவரிடம் கேட்டார் : “உன் ஆன்ம உள்நோக்கு என்ன இறைவன் இருக்கை பற்றி ? எனக் கொன்றும் தெரிய வில்லை ! ஆதலால் உனக்கொரு கதை சொல்வேன் கேள் நீ ! ++++++++++++ நேர் எதிரே இருப்பான் […]

விடாமுயற்சியும் ரம்மியும்!

This entry is part 25 of 34 in the series 17 ஜூலை 2011

  கலைத்துப் போட்டு அடுக்கி பிரித்துப் பின் கோர்த்துப்போட்டாலும்… விசிறிக் கலைத்து என எல்லா வித்தைகளும் தோற்று எதிரிக்குத்தான் வாய்க்கிறது ரம்மியும் ஜோக்கரும்!   பதினாலாவது அட்டையோ புதிய அமைப்பாய் தனித்துத் தொலைக்க அதுவும் சேர்கிறது அவனுக்கு!   தோல்வியைத் துரத்தும் புள்ளிகள் குறைக்க முனைகையிலும் எடுப்பதெல்லாம் படம்பதித்தே வருகிறது!   மேற்கை இறக்குவதெல்லாம் மூன்றாம் கைக்குத் தேவையாம் கீழ்க்கையோ நான் கீழே விட்டதெல்லாம் பொறுக்கி   சட்டென அடிக்க…   முதல் ஆட்டமும் துரதிருஷ்டமும் முற்றிலும் […]

சித்தி – புத்தி

This entry is part 24 of 34 in the series 17 ஜூலை 2011

முச்சந்தி கோபுரத்தின் முகப்பில் சித்தியும் புத்தியும்,பிள்ளையாரின் தோள்களில் சாய்ந்திருப்பது போல், ஆறுதலான தோள்கள் எங்கே ? காலங்கள் மாறியது காட்சிகள் மாறியது தோள்கள் தென்படாமலேயே .. துவண்டவிட்ட நேரத்தில் புலப்பட்டது – பிள்ளையாராக மாறிவிட்டால் என்ன ? தன்நிறைவான இருப்பில், சித்தியென்ன புத்தியென்ன எவருக்கெனும் ஆறுதலாக இருக்க முடிகிற பிள்ளையாராகி விட்டால் தேடுதல் நிற்குமே! பிள்ளையாராக இருக்கவே பிறக்கிறார்கள் சிலர் புரிகிற கணத்தில் பிறக்கிறது வாழ்க்கை