புறநானூற்றில் மனிதவள மேம்பாடு

This entry is part 1 of 19 in the series 24 மே 2015

முனைவர் சு.மாதவன் உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத்துறை, மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி (த), புதுக்கோட்டை 622001 உலக உயிர்களிலேயே தன்னையும் மேம்படுத்திக் கொண்டு தன் சமூகத்தையும் மேம்படுத்தும் உயர்த்தும் ஒரே உயிரினம் மனித இனமாகும். இந்த இனம் வெறும் உயிரினம் மட்டுமன்று; மாறாக – சிறப்பாக – மனித இனம் ஓர் உயரினம் (உயர் இனம்). எனவேதான், தமிழ்ச் சான்றோர் மனிதனை ‘உயர்திணை’ என்றனர். இத்தகைய நோக்குநிலைப் பின்னணியில், மனிதன் தன் இயல்பு வளத்தையும் இயற்கைவளத்தையும் படைப்பாளுமையோடு […]

மிருக நீதி

This entry is part 2 of 19 in the series 24 மே 2015

0 சர்வதேச விமான தளத்தை ஒத்திருந்தது அந்த விமான தளம். இலங்கையை ஒட்டிய ஒரு சிறிய நாட்டின்  பிரதான விமான தளம் அது. உள்நாட்டுப் போர் எவ்வளவு மோசமாக நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் வெளிநாட்டுப் பயணிகளைக் கவரும் வகையிலும், வெளிநாட்டு வர்த்தகம் செழித்து வளரவும் சிகப்புக் கம்பளம் விரித்திருந்தது அந்த நாட்டு அரசாங்கம். பல வகைகளிலும் செழிப்பு நிறைந்த நாடுதான் அது என்றாலும் தொடர்ந்த பிரச்சினைகளால் முன்னேற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் நாடுகளில் அதுவும் ஒன்று. உதவிக் கரம் […]

ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி-2015

This entry is part 3 of 19 in the series 24 மே 2015

    ஐந்தாம் ஆண்டாக நடைபெறும் ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டிக்கு நூல்கள் வரவேற்கப்படுகின்றன. *நாவல்-நாடகம் ,சிறுகதை, நவீன கவிதை ஆகிய மூன்று பிரிவுகளில், 2014 ஆம் ஆண்டு ( ஜனவரி 2014 முதல் திசம்பர் 2014 வரை) வெளியான நூல்கள் மட்டும் வரவேற்கப்படுகின்றன.எழுத்தாளர்கள்,பதிப்பாளர்கள், வாசகர்கள் யாரும் அனுப்பி வைக்கலாம். *ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியே பரிசுத்தொகை ரூ 10,000 வழங்கப்படும். *நூல்களின் மூன்று பிரதிகள் அனுப்பவேண்டும். *நூல்கள் வந்து சேரக் கடைசி நாள் 20-06-2015 *அனுப்ப […]

நியூட்டிரினோ ஆராய்ச்சி செய்ய அண்டார்க்டிகாவில் பனிப் பேழை [ICECUBE] ஆய்வுக்கூடம் நிறுவகம்

This entry is part 4 of 19 in the series 24 மே 2015

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++ https://www.youtube.com/channel/UCqhypTo6SWmi5bbVBmUf9NA https://www.youtube.com/watch?v=aMnGWqoDaAA https://www.youtube.com/watch?v=iv-Rz3-s4BM http://www.telegraph.co.uk/news/worldnews/antarctica/10466476/Neutrinos-from-outer-space-found-in-Antarctic.html https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=yjodNwu2r8s http://www.nsf.gov/news/special_reports/science_nation/icecube.jsp ++++++++++++++ அற்பச் சிறு நியூட்டிரினோ அகிலத்தின் சிற்பச் செங்கல் ! அண்டத்தைத் துளைத்திடும் நுண்ணணு ! அகிலப் பெரு வெடிப்பில் உதிர்ந்த கோடான கோடி அக்கினிப் பூக்கள் ! சுயவொளிப் பரிதிகளின் வயிற்றில் உண்டானவை ! வலை போட்டுப் பிடிக்க முடியாத வையகக் குஞ்சுகள் ! ஒளிவேகத்தில் விரையும் மின்மினிகள் ! கண்ணுக்கும் தெரியா ! கருவிக்கும் […]

மிதிலாவிலாஸ்-20

This entry is part 5 of 19 in the series 24 மே 2015

தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com மாலை ஆகிவிட்டது. மைதிலி சோர்வுடன் வீட்டுக்குத் திரும்பி வந்தாள். ஏமாற்றம் அவளை சூறாவளியாய் சூழ்ந்து கொண்டுவிட்டது. மைதிலி படியேறி வரும்போதே ராஜம்மா எதிரே வந்தாள். “இத்தனை நேரம் எங்கே போயிருந்தீங்க அம்மா? அய்யா உங்களுக்காக ரொம்ப நேரம் காத்திருந்தார்” என்று செய்தியைச் சொன்னாள். மைதிலி ஒரு நிமிடம் நின்று அதைக் கேட்டுக் கொண்டாள். அந்த நிமிடம் அவளுக்கு இந்த உலகத்தில் எதுவும் ஒரு பொருட்டாக இருக்கவில்லை. எதைப் […]

பாகிஸ்தானில் நடக்கும் தாக்குதல்களால், நாட்டை விட்டு ஓடும் ஷியாக்கள்

This entry is part 19 of 19 in the series 24 மே 2015

க்வெட்டாவில் தன் வீட்டில் சையது குர்பான் இந்த பேட்டிக்காக பேசியபோது எடுத்த படம். பாகிஸ்தான் வரலாற்றில் ஷியாக்களின் மீதான மோசமான தாக்குதலில் தனது இரண்டு மகன்களில் ஒருவரை இழந்தபின்னால், மற்றொரு மகனுக்கு வெளிநாட்டில் புதிய வாழ்வை உண்டு பண்ணித்தரும் தீவிரத்தில் இருக்கிறார். தன் சகோதரனை இந்த தாக்குதலில் இழந்த அவரது இன்னொரு மகன் இக்பால் ஹூஸேன் தனது வேலையையும் தனது குடும்பத்தையும் விட்டுவிட்டு நம்பிக்கையை தேடிச் செல்லும் ஆயிரக்கணக்கானவர்களோடு சேர்ந்து வெளிநாட்டுக்கு செல்ல கிளம்பியிருக்கிறார். க்வெட்டா நகரில் […]

தொடுவானம் 69. கற்பாறை கிராமங்கள்

This entry is part 6 of 19 in the series 24 மே 2015

ஆங்கில வகுப்புகள் மதிய தூக்கத்திலும் கலகலப்பாகவே நடந்தன. பாட நூலான தாமஸ் ஹார்டியின் நாவல் ” த மேயர் ஆப் கேஸ்ட்டர்பிரிட்ஜ் ” சூடு பிடிக்கத் தொடங்கியது. அந்த கதை நடந்த காலம் 1826. இங்கிலாந்து நாட்டின் வெசெக்ஸ் எனும் கிராமத்தில் கதை துவங்குகிறது.அதன் கதாநாயகன் மைக்கல் ஹென்சார்ட் வேலை இல்லாத இளைஞன். கிராமங்களில் அறுவடை சமயங்களில் பண்ணை வேலை செய்பவன். அந்த கிராமத்து சந்தைக்கு மனைவியும் கைக்குழந்தையுமான மகளுடன் வந்தவன் அங்கு மதுபானம் விற்பனையாகும் ஒரு […]

பரிசுத்தம் போற்றப்படும்

This entry is part 7 of 19 in the series 24 மே 2015

கனவு திறவோன்   இங்கே சிலுவையைச்சுமந்து உதிரம் சிந்தி தூங்கினால் தான் பரிசுத்தம் மெச்சப்படும்.   எனக்கான சிலுவையை நான் தேடிக் கொண்டிருக்கிறேன். அப்பாவோ எனக்காக மாப்பிள்ளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். கிடைத்ததும் தட்சணையாய்க் கட்டிலும் தந்து என்னைப் பலி தந்தால் என் பரிசுத்தம் நாட்டப்படும்   வெள்ளிக் காசுகளுக்காய்க் காட்டித் தரும் யூதாஸ் தரகர்களும் கசப்பான காடியோடு வரும் இனப் போராளிகளும் என் சிலுவையைச் சிங்காரிப்பார்கள்.   யூத சிலுவையில் ஆணிகள் அறையப்பட்டன. நான் சுமந்து செல்லும் […]

“என்னால் முடியாது”

This entry is part 8 of 19 in the series 24 மே 2015

  ஒரு ஆங்கில தினசரிக்கும், ஒரு தமிழ் தினசரிக்குமாகச் சேர்த்து ஆண்டுச் சந்தா செலுத்தி நாளிதழ் வாங்கிப் படித்து வருபவன் நான். இதை கடந்த நான்கைந்து வருடங்களாகத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன். என் வீட்டுக்குப் பேப்பர் போடும் நியூஸ் ஏஜென்டும் ஒருவரே. அவரை நான் இன்றுவரை மாற்றவில்லை.எதிர் வீடு, பக்கத்து வீடு என்று பலரும் ஆள் மாற்றி, ஆள் மாற்றிச் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். நான் அதைப் பண்ணுவதில்லை. பொதுவாக மனிதர்கள் பழக்கத்திற்கு அடிமையானவர்கள். அப்படித்தான் அவர் ஒருவரே […]

அந்தப் புள்ளி

This entry is part 9 of 19 in the series 24 மே 2015

தோன்றும் வேகத்தைப்                           பிடித்து நிறுத்து எங்கு நின்றதோ அங்கு ஒரு புள்ளி வை அதை மையமாக்கி கிளைகள் பிரி அதன் வழியே பயணம் மேற்கொள் பாதை தெரியும் தானே விரியும் கடந்த பாதை தனக்கான இடத்தில் தானே நிற்கும் உனக்கான முடிவை உன்முன் விரிக்கும் அங்கும் ஒரு புள்ளி வை அந்தப் புள்ளிதான் அடையாளப்படுத்தும் ஆட்கொள்ளும் உன்னை…! ————————