’சாரல் விருது’ பெற்ற விழா மேடையில் விக்ரமாதித்யன் நிகழ்த்திய ஏற்புரை

This entry is part 22 of 22 in the series 27 செப்டம்பர் 2015

இனம் மொழி கவிதை யாயும் யாயும் யாரா கியரோ எந்தையுந் நுந்தையு மெம்முறைக் கேளிர் யானு நீயும் எவ்வழி அறிதும் செம்புலப் பெய்ந்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே –    செம்புலப் பெய்ந்நீரார் ( ’குறுந்தொகை’ பாடல் :40 ) பதினைந்து வருஷங்களுக்கு மேலேயே இருக்கும்; ஆங்கில நாளேடு ஒன்றில் வந்த செய்தி; உலகமொழிகள் ஒவ்வொன்றிலிருந்தும் மாதாமாதம் ஒரு கவிதையைத் தெரிவுசெய்து – அதன் ஆங்கில மொழிபெயர்ப்பையும் இணைத்து – லண்டன் மெட்ரோ ரயிலின் எல்லாப் […]

அவன், அவள். அது…! -3

This entry is part 4 of 22 in the series 27 செப்டம்பர் 2015

        எல்லா விதத்திலும் தன்னோடு, தன் சிந்தனையோடு ஒத்துழைத்தவள் எப்படி இந்த விபரீத முடிவுக்கு வந்தாள்? – கண்ணனால் நம்பவே முடியவில்லை. சுமதி, இந்த வாரக் கதை படிச்சியா…? எதைச் சொல்றீங்க…? அதான், கமலம் வார இதழ்ல வந்திருக்கே “சபலம்”ங்கிற சிறுகதை…அதைத்தான் படிச்சியான்னு கேட்டேன்… ம்ம்…படிச்சேன்…. என்ன? சுரத்தில்லாமப் பதில் சொல்றே? வெறுமே ஒரு வார்த்தைல இப்டி பதில் சொன்னேன்னா எப்டி? ஏதாவது பாராட்டுக் கிடையாதா? நடை எப்படியிருந்தது? கதையோட வேகம் எப்படி? உள்ளே சொல்லியிருக்கிற […]

இளங்கோ கிருஷ்ணன் கவிதைகள்

This entry is part 5 of 22 in the series 27 செப்டம்பர் 2015

கோவையில் வசித்து வரும் இளங்கோ கிருஷ்ணன் [ இயற்பெயர் ; பா. இளங்கோவன் ] வரி ஆலோசகராகப் பணிசெய்து வருகிறார். ஃறிணை என்ற பெயரில் கவிதைகள் , கட்டுரைகள் எழுதியுள்ளார். ‘ பட்சியன் சரிதம் ‘ இவருடைய இரண்டாவது கவிதைத் தொகுப்பு. இதில் 43 கவிதைகள் உள்ளன. இவரது கவிதை இயல்புகள் [ 1 ] புனைவு [ 2 ] எல்லாவற்றையும் கவிதையாக்க விரும்பும் ஆர்வம். [ 3 ] வித்தியாசமான சிந்தனைகள் எனலாம். புத்தகத்தின் […]

திரும்பிப்பார்க்கின்றேன் – இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

This entry is part 2 of 22 in the series 27 செப்டம்பர் 2015

முருகபூபதி இயற்கை எழில் கொஞ்சிய கிழக்கிலங்கை கிராமத்திலிருந்து வல்லரசு இங்கிலாந்து வரையில் பயணித்த பெண்ணிய ஆளுமை இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் படைப்பு இலக்கியத்திலும் , பெண்ணிய மனிதஉரிமை செயற்பாட்டிலும் ஆவணப்படத்துறையிலும் மனித நேயப்பணிகளிலும் பங்காற்றிய மருத்துவ தாதியின் வாழ்வும் பணிகளும். எதிர்வினைகளை எதிர்கொண்டு, அவதூறுகளை துச்சமாக்கிய புகலிட இலக்கிய முன்னோடி முருகபூபதி – அவுஸ்திரேலியா பெண்கள் எப்பொழுதும் வீட்டுக்குள் இருந்து குடும்பக் கடமைகளைப்பார்த்தால் போதும் என்றும் – அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்றும் சொல்லப்பட்டு, அவர்களுக்கு தேர்தல்களில் வாக்களிக்கும் […]

ஐரோப்பிய செர்ன் அணு உடைப்பு யந்திரம் பிரபஞ்ச அடிப்படைச் சீரமைப்பை உறுதிப்படுத்துகிறது.

This entry is part 3 of 22 in the series 27 செப்டம்பர் 2015

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அணுத்தொடர் இயக்கம் புரிந்து அணுசக்தி படைத்தது போல், உயிரியல் விஞ்ஞானத்தில் முதன்முதலாய் டியென்ஏ கண்டது போல் அகிலநாட்டு விஞ்ஞானிகள் இயக்கும் செர்ன் விரைவாக்கி யந்திரம் பிரபஞ்சப் பெரு வெடிப்பைச் சிறிதாய் அரங்கேற்றி உருவாக்கும் ! கடவுள் துகள் தடத்தைக் கண்டதாய் அறிவிக்கும். ஒளிவேகத் துக்கு ஒட்டிய விரைவில் எதிர் எதிரே புரட்டான்களை மோத விட்டு எழும்சக்தி துகளாய் மாறும் விந்தை ! கனமான நுண் துகளே பரமாணுக்கு நிறை […]

தொடுவானம் 87. ஊர் செல்லும் உற்சாகம்

This entry is part 7 of 22 in the series 27 செப்டம்பர் 2015

விடுமுறை நாட்கள் ஓடி மறைந்ததே தெரியவில்லை. தரங்கம்பாடியின் பாடும் அலைகளின் கீதம் நாட்களை ரம்மியமாகியது. அண்ணியின் ருசியான சமையல் அங்கேயே இருந்துவிடலாம் போன்றிருந்தது. அன்றாடம் வகைவகையான மீன்கள்,இறால், நண்டு, ஊளான் குருவி, கோழி என்று விதவிதமாக சமைத்து தந்தார். அவை அனைத்துமே சுவையோ சுவை. அவருடைய விருந்தோம்பல் என்னை திக்குமுக்காட வைத்தது. பத்து வருடங்கள் சிங்கப்பூரில் அப்பாவிடம் தனிமையில் பட்ட பாடு, பின் சென்னையில் ஒரு வருடம் விடுதி வாழ்க்கை என்று ஒரு குடும்பத்தின் வாசம் இல்லாமலேயே […]

‘ஜிமாவின் கைபேசி’ – திரு.கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது

This entry is part 8 of 22 in the series 27 செப்டம்பர் 2015

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வழங்கிய திரு.கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது. சிறந்த குழந்தை இலக்கிய நூலாக நானெழுதிய ‘ஜிமாவின் கைபேசி’ ( சிறுவர் அறிவியல் புனைகதை) புத்தகத்துக்கு வழங்கப்பட்டது. இந்த ஆண்டு திருன்னாமலையில் நடத்தப்பட்ட சிறுவர் இலக்கிய முகாமில் திரு. எஸ்.ரா அவர்கள் 12 சிறந்த சிறுவர் இலக்கிய நூல்களை தெரிந்தெடுத்து ஆய்வுரை நிகழ்த்தினார். அதில் எனது ‘ஜிமாவின் கைபேசி’ புத்தகமும் அடங்கும். விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளின் அசாத்தியங்களை, அற்புதங்களை சிறுவர்கதை அம்சங்களிலிருந்து மாறுபட்டு இதில் நான் […]

கடலோடி கழுகு

This entry is part 9 of 22 in the series 27 செப்டம்பர் 2015

கடலும் கடல் சார்ந்த இடம் பரத நிலப்பரப்பு என தமிழ் இலக்கியங்கள் கூறுகிறது.அந்த நிலப்பரப்பின் சொந்தக்காரர்கள் பரதவர் என அழைக்கப்பட்னர். இங்கு உப்பும் மீனும் பிரபலம்.தமிழகத்தின் கடலோர பகுதி அது. இராமேஸ்வரம் என அழைக்கப்படும் பகுதி. அன்று சாதாரண நாளாகவே பொழுது விடிந்திருந்தது.”ச்சே என்ன வாழ்க்கைடா” என்ற வார்த்தைகளோடு அவன் தன் குலத்தொழிலுக்கு புறப்பட்டான் கடல் அன்னையை வணங்கிவிட்டு. வாலிபன் அவன்..அதே ராமேஸ்வரத்தில் அவன் ஊரில் அதிகம் படித்தவன் அவன் தான்.அதாவது நாலாம் வகுப்பு.அவனை அனைவரும் மைக்கேல் […]

விலை போகும் நம்பிக்கை

This entry is part 10 of 22 in the series 27 செப்டம்பர் 2015

அன்று காலை முதலே அருளினிக்குக் காலும் ஓடல கையும் ஓடல.சம்பாத்தியத்தின் இறுதி நாளை எட்டிவிட்டோமே என்ற எண்ணம் நெஞ்சுக் குழியில் ஆழமாக இறங்கி அவரை நிதானமிழக்கச் செய்துக்கொண்டிருந்தது. மதியம் உணவு வேளை நெருங்கியும் அந்த எண்ணம் தனியாமல் ஆர்பரிக்கும் கடல் அலையாய் மனதில் அலைமோதியது.இன்னும் அரை நாள் பொழுது மட்டுமே எஞ்சியுள்ளது என்று கவலை நெற்றிப் பொட்டில் தெரித்துக் கொண்டிருந்த வலி விலைவாசி போல ஏறிக்கொண்டிருந்தது. உற்சாகத்தை தொலைத்தவராய்த் தளர்ந்த நடையோடு தோழியுடன் உணவு விடுதிக்குச் செல்கிறார் […]