சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் – 57

This entry is part 37 of 40 in the series 6 மே 2012

Samaskritam kaRRukkoLvOm 57

சமஸ்கிருதம் 57

சென்ற வாரம் अपेक्षया (apekṣayā) என்ற சொல்லை இரண்டு பொருள்களுக்கிடையில் ஒரு குறிப்பிட்ட பண்பைக் கொண்டு ஒப்பிடும்போது உபயோகிக்கவேண்டும் என்று அறிந்து கொண்டோம்.
கீழேயுள்ள கதையை உரத்துப் படிக்கவும்.
कः बलवान्?
पुरातनकाले गङ्गातीरे एकः आश्रमः आसीत्। तत्र याज्ञवल्क्यः नाम महर्षिः वसति स्म। सः श्येनमुखात् पतिताम् एकां मूषिकां दृष्टवान् | करुणया सः तां मूषिकाम् आश्रमं प्रति नीतवान् | तत्र मन्त्रबलेन तां कन्यकां कृतवान्। याज्ञवल्क्यस्य सन्ततिः न आसीत्। अतः तां कन्यकां स्वपुत्रीवत् पालितवान् सः|
कालान्तरे सा कन्यका विवाहयोग्या अभवत् | याज्ञवल्क्यः सूर्येण सह तस्याः विवाहं कारयितुम् इष्टवान् | अतः सः पुत्रीं पृष्टवान् – “भवती सूर्यं परिणेष्यति किम् ?” इति|
तदा सा उक्तवती – “अहं सूर्यस्य तापं सोढुं न शक्नोमि । अतः इतोऽपि उत्तमम् अन्यं वरं सूचयतु” इति।
ऋषिः सूर्यम् एवं पृष्टवान् –“भगवन् ! भवतः अपेक्षया उत्तमः वरः क?” इति।
सूर्यः उक्तवान् – “मेघः माम् आच्छाद्य तिष्ठति। सः मम अपेक्षया बलवान् योग्यः अपि” इति।
ऋषिः मेघम् आहूतवान्। पुनः पुत्रीं पृष्टवान् –“भवती एतं परिणेष्यति किम्?” इति।
सा उक्तवती –” एतस्य वर्णः कृष्णः। अतः एषः मास्तु। इतोऽपि उत्तमं वर सूचयतु।” इति।
ऋषिः मेघं पृष्टवान्। मेघः उक्तवान्- “यद्यपि अहं सूर्यम् आच्छाद्य तिष्ठामि तथापि वायुः सहस्रधा मम विभागं करोति । अतः सः एव मम अपेक्षा बलवान्” इति।
ऋषिः वायुम् आहूतवान्। परन्तु पुत्री वायुम् अपि न इष्टवती। “इतोऽपि बलवान् कः अस्ति?” इति
पृष्टवती |
“यद्यपि अहं मेघस्य सहस्रधा विभागं करोमि तथापि अहं पर्वतं कम्पयितुं न शक्नोमि। अतः पर्वत्ः एव बलवान्।“ इति वायुः उक्तवान्। अनन्तरं ऋषिः पर्वतम् आहूतवान्।
परन्तु पर्वतः उक्तवान् –“यद्यपि अहं बलवान् तथापि मूषकः मम शरीरे सर्वत्र बिलं करोति। अतः मूषकः एवे मम अपेक्षया बलवान्” इति।

ऋषिः मूषकम् अहूतवान्। पुत्रीं पृष्टवान्- “भवती एतं परिणेष्यति किम्?” इति। सा सन्तोषेण तम् अङ्गीकृतवती। अनतरं ऋषिः तां मूषिकं कृत्वा मूषकेणन्श् सह तस्याः विवाह्ं कारितवान्।
kaḥ balavān?
purātanakāle gaṅgātīre ekaḥ āśramaḥ āsīt| tatra yājñavalkyaḥ nāma maharṣiḥ vasati sma| saḥ śyenamukhāt patitām ekāṁ mūṣikāṁ dṛṣṭavān| karuṇayā saḥ tāṁ mūṣikām āśramaṁprati nītavān| tatra mantrabalena tāṁ kanyakāṁ kṛtavān| yājñavalkyasya santatiḥ na āsīt| ataḥ tāṁ kanyakāṁ svaputrīvat pālitavān saḥ|
Kālāntare sā kanyakā vivāhayogyā abhavat | yājñavalkyaḥ sūryeṇa saha tasyāḥ vivāhaṁ kārayitum iṣṭavān| ataḥ saḥ putrīṁ pṛṣṭavān –“bhavatī sūryaṁ pariṇeṣyati kim ?” iti|
tadā sā uktavatī – “ahaṁ sūryasya tāpaṁ soḍhuṁ na śaknomi| ataḥ ito’pi uttamam anyaṁ varaṁ sūcayatu” iti|
ṛṣiḥ sūryam evaṁ pṛṣṭavān –”bhagavan ! bhavataḥ apekṣayā uttamaḥ varaḥ kaḥ ?”
sūryaḥ uktavān – ”meghaḥ mām ācchādya tiṣṭhati | saḥ mama apekṣayā balavān yogyaḥ api” iti|
ṛṣiḥ megham āhūtavān| punaḥ putrīṁ pṛṣṭavān –”bhavatī etaṁ pariṇeṣyati kim?” iti|
sa uktavatī – ”etasya varṇaḥ kṛṣṇaḥ | ataḥ eṣaḥ māstu| ito’pi uttamaṁ vara sūcayatu|” iti |
ṛṣiḥ meghaṁ pṛṣṭavān| meghaḥ uktavān-”yadyapi ahaṁ sūryam ācchādya tiṣṭhaṭhāmi tathāpi vāyuḥ sahasradhā mama vibhāgaṁ karoti| ataḥ saḥ eva mama apekṣā balavān” iti|
ṛṣiḥ vāyum āhūtavān| parantu putrī vāyum api na iṣṭavatī| ”ito’pi balavān kaḥ asti?” iti
pṛṣṭavatī |
” yadyapi ahaṁ meghasya sahasradhā vibhāgaṁ karomi tathāpi ahaṁ parvataṁ kampayituṁ na śaknomi| ataḥ parvatḥeva balavān|” iti vāyuḥ uktavān| anantaraṁ ṛṣiḥ parvatam āhūtavān|
parantu parvataḥ uktavān,” yadyapi ahaṁ balavān tathāpi mūṣakaḥ mama śarīre sarvatra bilaṁ karoti | ataḥ mūṣakaḥ eve mama apekṣayā balavān” iti|
ṛṣiḥ mūṣakam ahūtavān| putrīṁ pṛṣṭavān – “ bhavatī etaṁ pariṇeṣyati kim?” iti| sā santoṣeṇa tam aṅgīkṛtavatī | anataraṁ ṛṣiḥ tāṁ mūṣikaṁ kṛtvā mūṣakeṇanś saha tasyāḥ vivāhṁ kāritavān|

யார் பலசாலி?
முன்னொரு காலத்தில் கங்காநதிக்கரையில் ஒரு ஆசிரமம் இருந்தது. அங்கு யாக்ஞவல்கியர் என்ற ஒரு மகரிஷி இருந்தார். அவர் கழுகின் வாயிலிருந்து விழுந்த ஒரு எலியைப் பார்த்தார். கருணையுடன் அவர் எலியை ஆசிரமத்திற்கு கொண்டுவந்தார். அங்கு மந்திரசக்தியால் அந்த எலியை பெண்ணாக்கினார். யாக்ஞவல்கியருக்கு சந்ததி இல்லை.அதனால் அந்தப் பெண்ணைத் தன் சொந்த மகளைப் போல் வளர்த்து வந்தார்.
சில வருடங்களில் அந்தப் பெண் திருமண வயதை அடைந்தாள். யாக்ஞவல்கியர் சூரியதேவனுக்குத் தன் மகளைத் திருமணம் செய்து கொடுக்க விரும்பினார். அதனால் அவர் மகளிடம், “ நீ சூரியனைத் திருமணம் செய்து கொள்கிறாயா?” என்று கேட்டார்.
அப்போது அவள், “என்னால் சூரியனுடைய வெப்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியாது. இதைவிட நல்ல மற்றொரு வரனைக் கூறுங்கள்” என்று சொன்னாள்.
மகரிஷி சூரியனிடம் இவ்வாறு கேட்டார்,” பகவன்! உங்களைவிட நல்ல மணமகன் யார்?”
சூரியன்,”மேகம் என்னை மறைத்து நிற்கிறது. மேகம் என்னைக் காட்டிலும் பலசாலி, தகுந்தவர் கூட” என்று கூறினார்.
ரிஷி மேகத்திடம் கேட்டார். மேகம் சொன்னார்,” என்னதான் நான் சூரியனை மறைத்து நின்றாலும் காற்று என்னை ஆயிரம் பகுதிகளாக பிரித்துவிடுகிறது. அதனால் காற்று என்னைவிட பலசாலி “ என்று கூறியது.
ரிஷி காற்றை அழைத்தார். ஆனால் மகள் காற்றையும் மணக்க விரும்பவில்லை. “காற்றைவிட உயர்ந்தவர் யார் ?” என்று கேட்டாள்.
“நான் மேகத்தை ஆயிரம் பகுதிகளாக்கிய போதிலும், என்னால் மலையை அசைக்கக் கூட முடியவில்லை. அதனால் மலை தான் பலசாலி” என்று காற்று கூறியது. பின் ரிஷி மலையை அழைத்தார்.
ஆனால் மலை கூறியது,” நான் பலசாலியாக இருந்தபோதிலும் கூட, எலி என்னுடைய உடலின் எல்லா இடங்களிலும் ஓட்டை செய்துவிடுகிறது. அதனால் எலிதான் என்னைக் காட்டிலும் பலசாலி” என்று கூறியது.
ரிஷி எலியை அழைத்தார். மகளைக் கேட்டார்,” நீ இவரை (எலி) மணந்து கொள்வாயா? அவள் மகிழ்ச்சியுடன் தன் சம்மதத்தைத் தெரிவித்தாள். பின் முனிவர் அவளை எலியாக மாற்றி அந்த எலியுடன் திருமணம் செய்து வைத்தார்.

இந்த கதையை திரும்பப் படித்து அதில் வரும் अपेक्षया (apekṣayā) என்ற சொல்லின் பொருளையும் , எந்த சந்தர்பத்தில் அச்சொல் உபயோகிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் நன்கு அறிந்து கொள்ளவும்.

Series Navigation“பேசாதவன்”தமிழ் ஸ்டுடியோ நடத்தும் “சிறுவர் உலகத் திரைப்பட திருவிழா”
author

ரேவதி மணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *