கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) பிதற்றும் சிறுவன் (கவிதை -37)

This entry is part 25 of 33 in the series 12 ஜூன் 2011

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

நீ சொல்ல நினைப்பதை

நான் பேச வில்லை

என்றால் எனது

கன்னத்தில் அறைந்து விடு !

பிதற்றும் சிறுவன்

தவறிப்

பிடிபடும் போது

அன்புத் தாய் போல் எனக்கு

நன்னெறி புகட்டு !

தாக முள்ள மனிதன்

சாகரம் நோக்கி ஓடினான் !

கழுத்துக்குக்

கத்தியை நீட்டியது

கடல் !

 

++++++++++++

 

ரோஜாப் பூ மேடை

நோக்கிய மல்லிகைப் பூவும்

சிரம் தாழ்த்திச்

செப்பாது எதுவும் !

நானோர் இசை கருவி

நடனம் முடியும் வரை அதைக்

கடத்தி விடாதே !

என்னைப் பற்றிப் பாடு

எந்த நேரமும்

இசைக் கருவியில்.

உதவி செய் எனக்கு

மெல்லோசை தன்னில் !

 

++++++++++++

 

வனப்புடன் தோன்று¡ன் ஜோஸ•ப்

உடுப்புகள் இன்றி !

அவனது மேனிச் சட்டையே

அதற்குச் சான்ற ளிக்கும்.

ஆத்மாவின் நீரில்

எதிரொ லிக்கும் ஒளிச்சுடரை

இனிது காணும்

மனித உடம்பு !

பிணத்தைத் துடைப்பவன்

என் வாயை மூடினும்

இன்னும் கேட்கும் உனக்கு

இந்தப் பாடல்

என் மௌனப் பேசாமையில் !

 

+++++++++++

 

வெளிப் புறத்தி லிருந்து

உட்புறம் காண்பவர் யார் ?

ஆடிப் போன

நெஞ்சங் களின்

கோடிக் கணக்கான

மர்மங்களைத்

தேடிச் செல்பவர் யார் ?

கண்கள் மூலமே நோக்கு

முறிந்த மனிதன்

காண்பது என்ன வென்று ?

 

 

***************

தகவல் :

 

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

 

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

 

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

 

3. Life of Rumi in Wikipedia

 

********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] (June 7, 2011)

 

 

 

Series Navigationகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -4)“பழமொழிகளில் தன்முன்னேற்றச் சிந்தனைகள்“
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *