கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நடு நிசியில் சொக்கப்பான் (Bonfire at Midnight) (கவிதை -39)

This entry is part 37 of 46 in the series 26 ஜூன் 2011

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

எழுகிறது ஒரு குரல்
சுருண்டு சோம்பிக் கிடக்கும்
என் அறையி லிருந்து !
உன்னோடு
இன்னும் நான் வசிக்க முடியும்
செத்த உடலோடு
மெத்த மோகத் துடன் !
என்னை விரும்பு கிறாய்
இன்னும் நீ !
உணவு சமைக்கிறாய் !
தின்ன எடுத்து வருகிறாய் !
என்ன நிலையில்
இருந்தேன் என்பதை நீ
மறந்து போனாய் !

++++++++++++

பட்டப் பகலில்
வெப்பத் தகிப்பினில்
கொந்த ளிக்கும் கடல் வெள்ளம்
ஓய்வின்றி
ஏறி இறங்கி !
இந்தச் சூட்டுச் சிந்தனையை
ஏன் மனித இனம்
எதிர்க்க வில்லை
சீறிக் கொண்டு ?
தம்பட்டை அடிப்பும்
தன் கை அசைப்பும் விளிக்கும்
மலைச் சிகர விளிம்பில்
சொக்கப் பனைத் தீ தெரியுது
நடு நிசியில் !
இந்தச் சந்திப்பு
எனக்கு நேரும் மீண்டும்
உன்னோடு !

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (June 21, 2011)

Series Navigationகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -1)21 ஆம் நூற்றாண்டில் பாதுகாப்பாய் இயங்கி வரும் அணுமின் நிலையங்கள் நாட்டுக்குத் தேவையான தீங்குகள் – 5
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *