மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் அஸ்ட்ரோ வானவில் தொலைக்காட்சியும் இணைந்து நடத்திய மூன்றாம் நாவல் போட்டியின் பரிசளிப்பு விழா.

This entry is part 25 of 26 in the series 24 பிப்ரவரி 2013

Maadhuri
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் அஸ்ட்ரோ வானவில் தொலைக்காட்சியும் இணைந்து நடத்திவரும் நாவல் போட்டியின் வரிசையில் மூன்றாம் போட்டி 2012இல் தொடங்கப்பட்டது. அப்போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கும் விழா கடந்த பெப்ரவரி 21அன்று மலேசியத் தலை நகர் குவால லும்பூரில் நடைபெற்றது.
முதன்மைப் பரிசு ஆதி.குமணன் நினைவுப் பரிசான 10,000 ரிங்கிட்டையும் சென்னைக்குச் சென்றுவரும் விமான டிக்கட்டையும் வென்றவர் “துளசி” எனும் நாவலை எழுதிய ஓர் புதிய இளம் எழுத்தாளரான மாதுரி மனோகரன்.
முதல் பரிசான  5,000 ரிங்கிட்டையும் சென்னைக்கான விமான டிக்கட்டையும் பெற்ற நாவல் ”பெரிய கங்காணி”. எழுதியவர் நாடறிந்த எழுத்தாளரான கல்யாணி மணியம்.
இரண்டாம் பரிசான 3,000 ரிங்கிட் மற்றும்  சென்னைக்கான விமான டிக்கட்டையும் பெற்ற நாவல் “இன்னொரு இருட்டத்தியாயம்”. எழுதியவர் நாடறிந்த எழுத்தாளர் கோ. புண்ணியவான்.
மூன்றாம் பரிசான 2,000 ரிங்கிட் மற்றும் சென்னைக்கான விமான டிக்கட்டையும் பெற்ற நாவல் “பள்ளியினூடே ஒரு பயணம்”. எழுதியவர் மேலுமொரு நாடறிந்த எழுத்தாளர் நிர்மலா ராகவன்.
ஊக்குவிப்புப் பரிசானதலா 1,000 ரிங்கிட் ஐவருக்குக் கிடைத்தது. எஸ்.பி.பாமா, கந்தசாமி சின்னையா, குணவதி வீரையா, ஆதிலட்சுமி, வசந்தி முருகன் ஆகியோர் அவற்றைப் பெற்றனர். பரிசுகள் அனைத்தையும் அஸ்ட்ரோ உயரதிகாரி டாக்டர் எஸ்.ராஜமணி எடுத்து வழங்கினார். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ. இராஜேந்திரனும் உடன் இருந்தார்.
பரிசு பெற்ற ஒன்பதின்மரில் ஏழு பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டிக்கு முதல் சுற்று நடுவர்களாக முனைவர் ரெ.கார்த்திகேசு, முனைவர் வே.சபாபதி, திருமதி சந்திரா சூரியா ஆகியோர் பணியாற்றினர். இரண்டாம் சுற்று நடுவர்களாக தமிழகத்தின் குமுதம் குழும ஆசிரியர் கோசல்ராமும், தினகரன் பத்திரிகையின் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த ஏக் நாத் அவர்களும் மலேசிய நடுவராக முனைவர் கிருஷ்ணன் மணியமும் பணியாற்றினர்.
பரிசு பெற்ற முதல் நான்கு படைப்புக்கள் தரமுள்ள நாவல்கள் என்று பாராட்டிய தலைமை நடுவர் கோசல்ராம் அந்த நாவல்களின் நுணுக்கங்கள் பற்றி விரிவாகப் பேசினார். இந்த நாவல்களைப் பதிப்பிக்கும் முயற்சிகளை குமுதம் பதிப்பகம் மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.

 

Series Navigationதாகூரின் கீதப் பாமாலை – 53 ஆத்மாவில் நுழையும் புன்னகை !நாத்திகர்களை காப்பாற்றுங்கள். இஸ்லாமிஸ்டுகள் அவர்களை பங்களாதேஷில் கொல்கிறார்கள்
author

ரெ.கார்த்திகேசு

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *