க்ருஷ்ணகுமார்
மதக்காழ்ப்புகளும் மதம் சார்ந்த தவறான தகவல்களும் :-
மத ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கம் பற்றிப் பேச முனையும் வ்யாசம் மதத்தின் பேரால் நிகழ்ந்த வன்முறைகளைப் பட்டியலிடுகிறது. ஆனால் எந்தெந்த மதத்தை / மதத்தைச் சார்ந்தவர்களைக் குற்றவாளிக்கூண்டிலேற்றுகிறது? ஹிந்துஸ்தானத்தில் ஹிந்துக்கள் மாற்று மதத்தவர் பேரில் நிகழ்த்திய வன்முறைச் சம்பவங்களை மட்டும் பத்தி பத்தியாக வ்யாசம் பதிகிறது. அப்படியானால் ஹிந்துஸ்தானத்தில் மாற்று மதத்தவர் ஹிந்துக்களின் மீது வன்முறைகளை அறவே நிகழ்த்தியதில்லை என்று வ்யாசம் சொல்லாமல் சொல்கிறதா?
மதநல்லிணக்கத்தில் கருத்துச் சமநிலை உடைய கருத்தாளர்கள் மதவன்முறையைப் பற்றிப் பேசவேண்டுமானால் ஒரு பக்கம் மட்டும் பக்ஷபாதமாகப் பேசாது பொதுவிலே மதத்தின் பேரால் நிகழ்ந்த பூசல்களைப் பட்டியலிட வேண்டும். அப்பட்டியல் ஹிந்துஸ்தானத்தில் எந்த மதத்தைச் சார்ந்தவராக இருப்பினும் பிற மதத்தின் மீது வன்முறைகளை நிகழ்த்தியோ பிணக்குகளை முன்வைத்தோ போராடியிருப்பின் அவற்றைப் பட்டியலிட வேண்டும். ஆனால் வ்யாசம் கருத்துச் சமநிலையற்றதால் அதீத பக்ஷபாதத்துடன் ஹிந்துக்களை மட்டும் குற்றவாளிக்கூண்டிலேற்றுகிறது.
\\\\\காந்தி ஏசு நாதரை மிகவும் நேசித்தார். ‘ஏசு நாதரின் ‘மலைப் பிரசங்கம்’ [Sermon on the Mount] காந்தியைக் கவர்ந்த ஓர் அரிய வாக்குரை! இந்து வேதங்கள் மட்டுமே தேவ வாக்குகள் என்பதைக் காந்தி ஒருபோதும் ஒப்புக் கொண்ட தில்லை! அவை ஏன் பைபிளாகவும், கொரானாகவும் இருக்கக் கூடாது ? என்று கேள்வி எழுப்பினார்\\\\\
இது சார்ந்து இரண்டு கருத்துக்கள்.
“””””””இந்து வேதங்கள் மட்டுமே தேவ வாக்குகள் என்பதைக் காந்தி ஒருபோதும் ஒப்புக்கொண்டதில்லை””””” என்று பொத்தாம்பொதுவாகக் கருத்துப்பரிமாறும் வ்யாசம்……….
ஹிந்து வேதங்கள் அதன் நிலையில் என்ன சொல்கின்றன…….
வேதங்களை ப்ரமாணமாக ஏற்கும் வைதிக சமயத்தினர் இது சம்பந்தமாக என்ன சொல்லியுள்ளனர்……….
என்பதைப் பற்றி சற்றேனும் யோசிக்காது ஒரு பிசகான கருத்தினை முன்வைத்துள்ளது என்றால் மிகையில்லை.
ஆ நோ பத்ரா: க்ரதவோ யந்து விச்வத: (ரிக்வேதம்)
உயர்ந்த கருத்துக்கள் நாற்புரத்திலிருந்தும் நம்மிடம் வரட்டும்.
1. இக்கருத்தை ஆரம்பத்திலும் சொல்லியுள்ளேன். ஆனால் அங்கு நற்கருத்துக்கள் எம்மொழியில் சொல்லப்பட்டிருந்தாலும் அவையெல்லாம் நற்கருத்துக்களே என்ற நேர்மறையான ஆதர்சமான ஒரு கருத்து மட்டிலும் வைக்கப்பட்டிருந்தது.
வேதங்களை தேவ வாக்குகள் என்று வைதிக சமயத்தினர் ஒட்டுமொத்தமாக ஏற்பதில்லை என்பதைப் புரிந்து கொள்ளல் முதற்கண் அவசியம்.
வேதம் என்று போற்றப்படும் மத நூல் இறைவனால் அளிக்கப்பட்டது என்றும் அதனை ஏற்காதவர்களை அந்த இறைவன் நரகத்தில் தள்ளுவான் என்ற பூச்சாண்டி சமாசாரங்கள் வைதிக சமயத்தில் அறவே காணப்படாதவை என்பது நோக்கத் தக்கது.
மாறாக, பகவத் கீதைக்கு உரை எழுதிய ஆதிசங்கரர் ‘நெருப்பு சுடாது என்று நூறு முறை வேதத்தில் சொல்லப்பட்டாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டாம்; அனுபவம் தான் பிரமாணம் என்கிறார்’. http://www.sangatham.com/news/
வேதங்கள் அபௌருஷேயமானவை (யாராலும் இயற்றப்படாதவை) என்று பூர்வ மீமாம்சம் என்ற தர்சனம் (வைதிக சமயப்பிரிவு) கருதுகிறது. இந்த சமயப்பிரிவு ஈச்வரன் – கடவுள் என்ற தத்துவத்தைப் பற்றிப் பேசாத ஒரு தர்சனம்.
ஈச்வரனிடமிருந்து (முழுமுதற்காரணர்) வெளிப்பட்டவை என்ற கருத்து நையாயிகர்கள் எனப்படும் ந்யாய வாதிகளால் முன்வைக்கப்படுவது.
எந்த ரிஷிகளால் வேத சூக்தங்கள் (வேதப்பாடல்கள்) முன்வைக்கப்பட்டனவோ அவர்களால் இயற்றப்பட்டன என்று நவீன வேதாந்திகள் சொல்கின்றனர்.
வேதம் யாரால் இயற்றப்பட்டது என்பதில் வேதத்தை ப்ரமாணமாகக் கொள்பவர்களில் பல கருத்து வேறுபாடுகள் உண்டு என்பது காய்த்தல் உவத்தல் இல்லாது சொல்லப்பட வேண்டிய விஷயம். மாறாகப் பொத்தாம் பொதுவாக வேதங்கள் மட்டிலும் தேவ வாக்குகள் என்று ஹிந்துக்கள் சொல்வதாக ஒரு கருத்தை முன்வைப்பது தவறானது.
2. வேதங்களே சொல்லும் கருத்துக்களானால் உயர்ந்த கருத்துக்கள் நாற்புரத்திலிருந்தும் நம்மிடம் வரட்டும்(மேலே பார்த்தோம் – ரிக் வேதம்). உன் மனதை மாற்றுக்கருத்துக்களிலிருந்து மூடி வை என்று வேதங்கள் சொல்லவில்லை. ஆகவே இதற்கு மாறான கருத்தை ப்ரதிபலிக்கும் வ்யாசத்தின் மேற்கண்ட வாசகம் ஏற்புடையதன்று.
வேதத்தில் சொன்ன கருத்துக்களுக்குப் புறம்பான கருத்துக்கள் முன்வைக்கப்படில் அவை முழு முற்றாக வேதத்திற்குப் புறம்பானவை என்பதால் மட்டும் வைதிக சமயத்தினரால் புறக்கணிக்கப்பட்டதில்லை. மாறாக முழுமுற்றாகத் தர்க்க விசாரம் செய்து ஏன் ஏற்கப்படவில்லை என்று நிறுவிய பின்னரே புறம்பாகச் சொல்லப்பட்ட கருத்துக்கள் மறுதலிக்கப்பட்டன.
~~~~~~~~~ ~~~~~~~~~~~ ~~~~~~~~~~~
மஹாத்மா காந்தியடிகள் மலைப்ரசங்கத்தினால் கவரப்பட்டார் என்று விதந்தோதும் வ்யாசம் காந்தியடிகள் க்றைஸ்தவ மதத்தினர் செய்து வந்த மதமாற்றம் பற்றியும் கருத்துக்கொண்டுள்ளதைப் பற்றி ஏன் பேசவேயில்லை? சௌகர்யமில்லாத கருத்து அது என்பதாலா? ஆங்க்ல மொழியில் Cherry picking என்று இப்போக்கு சுட்டப்படுகிறதே. வேண்டிய கருத்தை மட்டும் விதந்தோதி வேண்டாத கருத்தைப் புறந்தள்ளல் கருத்துச் சமநிலைக்குப் புறம்பானதல்லவா. ஆகவே மதமாற்றம் பற்றி (அதுவும் க்றைஸ்தவர்கள் முனைந்து செய்யும் மதமாற்றம்) காந்தியடிகள் ஹரிஜன் இதழில் என்ன சொல்லியுள்ளார் என்பதையும் இங்கு பார்க்கலாம்.
ஹிந்துஸ்தானத்திலும் மற்றைய இடங்களிலும் மதமாற்றம் (க்றைஸ்தவ மதத்திற்கு) நிகழ்த்தப்படுவதையும் அது நிகழ்த்தப்படும் முறைகளையும் நோக்குங்கால்…… என்னால் அதை ஏற்கவே இயலாது. இது தவறானது; மேலும் உலகத்தின் முன்னேற்றத்திற்கும் அமைதிக்கும் (மதமாற்றம்) பெரும் தடைக்கல்…….ஒரு க்றைஸ்தவர் ஏன் ஹிந்துவை க்றைஸ்தவ மதத்திற்கு மாற்ற வேண்டும்? ஒரு ஹிந்து நல்லவனாகவும் கடவுளுக்குப் பணிந்தவனாகவும் இருப்பதில் ஏன் அவர் த்ருப்தியடையக்கூடாது (ஹரிஜன் இதழ் – 30-ஜனவரி-1937)
It is impossible for me to reconcile myself to the idea of conversion after the style that goes on in India and elsewhere today. It is an error which is perhaps the greatest impediment to the world’s progress toward peace … Why should a Christian want to convert a Hindu to Christianity? Why should he not be satisfied if the Hindu is a good or godly man?
Harijan (30 January 1937)
காந்தியடிகள் ஹிந்துக்குடும்பத்தில் பிறந்து ஹிந்துவாக வாழ்ந்து ஹிந்துவாக இறந்து ஹிந்துவாக அந்திம சம்ஸ்காரம் செய்யப்பட்ட ராம பக்தர். வைஷ்ணவ இலக்கணப்படி வாழ்ந்திறந்த மகான். எல்லா மதங்களையும் மதித்த காந்தியடிகள் மலைப்ரசங்கத்தால் கவரப்பட்டார் என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மை அவரது வாழ்க்கை வைஷ்ணவ லக்ஷணங்களால் வழிநடத்தப்பட்டது என்பதும்.
காந்தியடிகள் என்றதும் “ரகுபதி ராகவ ராஜாராம்” என்ற பாடல் எவ்வாறு நினைவுக்கு வருமோ அதே போல் நினைவுக்கு வர வேண்டிய மற்றொரு பாடல், பூஜ்ய ஸந்த் மஹாத்மா ஸ்ரீ நர்ஸி மேத்தா அவர்களால் இயற்றப்பட்ட “வைஷ்ணவ ஜன தோ தேனே கஹியே ஜே” என்ற குஜராத்தி மொழிப் பாடல். காந்தியடிகள் இந்தப் பாடலை வெகுவாக ரசித்து மகிழ்ந்தார் என்பது மட்டுமின்றி பாடலின் கருத்துக்களால் கவரப்பட்டு அதன் படி தன் வாழ்க்கைமுறைகளையும் நெறிப்படுத்திக்கொண்டார் என்பதும் நோக்கத் தக்கது.
வைஷ்ணவ ஜன தோ தேனே கஹியே ஜே பீட் பராஈ ஜாணே ரே
वैष्णव जन तो तेने कहिये जे पीड पराई जाणे रे,
vaishNava jana tO thEnE kahiyE jE pId parAyI jANE rE
பர் துகே உப்கார் கரே தோயே மன் அபிமான் ந ஆணே ரே
पर दुखे उपकार करे तोये मन अभिमान न आणे रे॥
par dukhE upkAr karE tOyE man abhimAn na ANE rE
பாடலின் கருத்து :-
அடுத்த மனிதர்களின் கஷ்டங்களை வலிகளை அறிந்தவர் வைஷ்ணவர் ஆவார் (விஷ்ணுவின் அடியார்). அவர் அடுத்தோருக்கு நன்மை செய்வார். குறிப்பாக கஷ்டத்தில் உள்ள அன்பர்களுக்கு. மற்றும் எப்போதும் தான் தன்னுடைய என்பதான அஹங்காரம் மனதிலேறாமல் இருப்பர்.
காந்தியடிகளை நான் முற்று முழுதாக ஏற்பதும் இல்லை. முற்று முழுதாக முத்திரை குத்தி நிராகரணம் செய்வதும் இல்லை. ஆனால் மதமாற்றம் பற்றிய காந்தியடிகளின் கருத்து எவ்வளவு தீர்க்க தர்சனமுடையது என்பதை ——- ஹிந்துஸ்தானத்தில் நிகழ்த்தப்பட்ட மதமாற்றங்களும் அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த, நிகழும் வன்முறைகளும் ——-அது போலவே உலக முழுதிலும் க்றைஸ்தவ மதமாற்றத்திற்காக நிகழ்த்தப்பட்ட சிலுவைப்போர்களில் எண்ணற்ற உயிர்கள் பலி வாங்கப்பட்டுள்ளமையும் ——- சரித்ரம் பறைசாற்றுகிறது.
\\\\வட இந்தியாவில் இந்து மத வெறியர்கள், அடிக்கடிக் கிறிஸ்துவக் கோயில்களைத் தீயிட்டுக் கொளுத்தியும், அங்குள்ள பாதிரியார்களைக் கொலை செய்தும் வருகிறார்கள்! \\\\\
ஒரிஸ்ஸா மற்றும் குஜராத்தில் ஒரு பத்து வருஷம் முந்தி நிகழ்ந்ததைச் சொல்ல வருகிறது வ்யாசம் என எண்ணுகிறேன். ஹிந்துஸ்தான அரசியல் சாஸனம் மத உரிமைகளை ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கியுள்ளது. தத்தம் மதப்படி ஒழுகுவதல்லாது மதம் மாறுவது கூட ஒரு குடிமகனின் அடிப்படை உரிமை தான். மதத்தைப் பரப்புவதும் அடிப்படை உரிமை தான்.
ஆனால் விஷயமென்னவென்றால் க்றைஸ்தவர்கள் தங்கள் மதத்தை வனவாசிகளிடம் பரப்புவது அடிப்படை உரிமை என்றும் ஆனால் ஹிந்துக்கள் அவர்கள் மதத்தை வனவாசிகளிடம் பரப்ப முனைவது அடிப்படை உரிமை இல்லை என்றும் வாதிடும் ஒரு போக்கு (வ்யாசத்தில் காணப்படவில்லை – ஆயின் பொதுவில் காணப்படும் வாதம்) ——- இது சமநிலையின் பாற்பட்டதன்று. மேலும் என் புரிதலின் படி கருத்து ரீதியாக வனவாசிகளின் சமயம் ஹிந்துமதத்தைச் சார்ந்ததே. ஒரு விதத்தில் ஹிந்துக்கள் வனவாசிகளிடம் நிகழ்த்தும் சம்பாஷணம் அவர்களது தாய் மதத்தைப் பேணுதலே.
நடுநிலை என்றிருந்தால் ஒரிஸ்ஸா மாகாணத்தில் பரங்கிய மதமாற்றி க்றைஸ்தவர் தன் மகவுகளுடன் படுகொலை செய்யப்பட்டதை சொல்லும் வ்யாசம் (கொலை என்றிருந்தாலும் – அமரர் ஸ்ரீ மலர் மன்னன் மஹாசயர் சொன்னபடி விபத்து என்றிருந்தாலும் வருந்தத்தக்கதே) அதற்கு முன் பூஜ்ய ஸ்வாமி ஸ்ரீ லக்ஷ்மணானந்த ஸரஸ்வதி அவர்கள் க்றைஸ்தவ வன்முறையாளர்களால் வதம் செய்யப்பட்டதையும் சொல்லியிருக்க வேண்டும். ஸ்வாமி லக்ஷ்மணானந்த ஸரஸ்வதி அவர்கள் க்றைஸ்தவ மதமாற்றத்தைத் தடுக்க முனைந்த சான்றோர்; மேலும் க்றைஸ்தவத்திற்கு மாறிய பல அன்பர்களைத் தாய்மதத்திற்குத் திரும்ப அழைத்து வந்தார் என்பதும் சரித்ரம். சமநிலையுடன் கருத்துக்கள் பகிரப்பட்டிருந்தால் இவையும் உடன் பதிவிடப்பட்டிருக்க வேண்டும்.
க்றைஸ்தவ மதத்திற்கு மாறிய பல அன்பர்களை அவர்களுடைய தாய் மதமாம் ஹிந்து மதத்திற்கு அழைத்து வரும் பணியை நம் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ள அமரர் ஸ்ரீ மலர்மன்னன் மஹாசயர் அவர்களும் தம் வாழ்வில் நிறைவாக செய்துள்ளமையையும் இங்கு நினைவு கூர்கிறேன்.
ஒரு பத்து வருஷமுன்பு பரங்கிப்பணத்தில் தழைத்த க்றைஸ்தவ மதமாற்ற முனைப்புகள் (இன்னமும் மறைமுகமாக வித விதமாக தொடர்கிறது என்பதும் உண்மை) —– ஏமாற்று ஜாலவித்தைகளின் (முதல் பாகத்தில் சுட்டப்பட்டுள்ளன) மூலம் நயவஞ்சகத்தின் மூலம் ( உதாரணம் – http://www.tamilhindu.com/
மிஷநரிகளின் அதீத மதமாற்ற ஈடுபாடு அதன் முறைமைகள் என்பயவை உலக முன்னேற்றத்திற்கும் அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கத்தக்கது என்ற காந்தியடிகளின் கூற்றையும் மீண்டும் நினைவு கூர்வோம். பற்பல மதத்தினருடன் புழங்கி மதஒற்றுமைக்காகப் பாடுபட்டவர்களில் முதன்மையாக முன்னிறுத்தப்படுபவர் காந்தியடிகள். அவர் ஹிந்துக்கள் மாற்று மதத்தினரால் ஹிம்சிக்கப்படுகையில் அதை மத ஒற்றுமை என்ற கோட்பாட்டின் பேரில் ஆதரித்தவர் என்ற கருத்தையும் நான் கொண்டிருப்பவன். அப்படியெல்லாம் இருப்பினும் கூட ——– அப்படிப்பட்ட காந்தியடிகளால் கூட ——- க்றைஸ்தவ மதமாற்றத்தையோ அதற்கானா அவர்களுடைய வழிமுறைகளையோ ஏற்க இயலவில்லை என்பது வெள்ளிடைமலை.
வன்முறைகளை ந்யாயப்படுத்துமுகமாய் இதைப் பகிரவில்லை. ஆயினும் ஒரு குறிப்பிட்ட சமூஹத்தை மட்டும் வன்முறைகளுக்குக் காரணமாகக் கட்டம் கட்டும் போக்கு சமூஹ நல்லிணக்கத்திற்கு என்றும் வழி வகுக்காது என்பதைச் சொல்ல வேண்டியது அவசியம் என்பதால் இதைக்குறிப்பாகச் சொல்ல நேர்கிறது.
காந்தியடிகளால் கூட ஏற்கப்படாத க்றைஸ்தவ மதமாற்றம் ஹிந்துஸ்தானத்தின் ஹிந்துக்களால் எப்படி நோக்கப்படும் என்பதற்குப் பெரிய ஆராய்ச்சிகளும் தேவையோ?
ராம ஜன்மஸ்தான் மற்றும் ராமர் பாலம் போன்ற விஷயங்களில் மட்டிலும் சரித்ரத்தை அளவுகோலாக எடுத்துக்கொண்டு இவ்விஷயங்களை இகழ்ச்சியாகப் பேச முயலும் வ்யாசம் ஏசுபிரானை மட்டும் சரித்ர ஆதாரங்கள் இல்லாது போனாலும் ஜபர்தஸ்தியாகச் சரித்ர நாயகனாகக் காட்ட முனைவது க்றைஸ்தவ மத மேட்டிமைவாதத்தைப் பறைசாற்றுதலே அல்லாது மதஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தினை முன்வைத்து அல்ல என்பதும் வெள்ளிடைமலை.
\\\\\மீண்டும் வட நாட்டில் 2002 ஆம் ஆண்டில் ‘ராம் ஆலயப் போர்’ தலை தூக்கி யிருக்கிறது! இந்து முஸ்லீம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக், கொலை செய்து பலிவாங்கிக் கொண்டனர்! இறந்தவர்களில் முஸ்லீம் மக்கள் எண்ணிக்கை மிக அதிகம்! பெரும்பான்மையான அடிப்படை இந்து மத வெறியர்கள், தீங்கிழைக்காத சிறுபான்மை முஸ்லீம் மக்கள் இல்லங்களைத் தீயிட்டு, அவர்களை உயிரோடு கொளுத்தி யிருக்கிறார்கள்! \\\\\\
“””””இந்து முஸ்லீம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக், கொலை செய்து பலிவாங்கிக் கொண்டனர்!”””” *******ஒருவரை ஒருவர் தாக்கி******** என்பதில் விதிவிலக்காக ——– முழு வ்யாசத்திலும் காண இயலா எள்ளளவு சமநிலை ——— இவ்வாசகத்தில் காணப்படினும் ——- முத்தான இந்த சமநிலை சுட்டும் சொற்களுக்கு —– அனேக வாழ்த்துக்கள். மிகுந்த நன்றிகள்.
நடுநிலை என்றிருந்தால் 2002ம் வருஷம் குஜராத் மாகாணத்தில் நிகழ்ந்த மதக்கலஹத்தைச் சொல்லும் வ்யாசம் அதற்கு முன் நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்பு பற்றியும் அதில் மாற்று மதத்தவரால் வதம் செய்யப்பட்ட ஹிந்துக்கள் பற்றியும் சொல்லியிருக்க வேண்டும். . “””””பெரும்பான்மையான அடிப்படை இந்து மத வெறியர்கள் தீங்கிழக்காத சிறுபான்மை முஸ்லீம் மக்கள் இல்லங்களைத் தீயிட்டு அவர்களை உயிரோடு கொளுத்தி இருக்கிறார்கள்”””””” என்பது எவ்வளவு வேதனை மிகுந்த விஷயமோ அதே அளவு வேதனை மிகுந்த விஷயம் எண்ணிக்கையில் குறைவாக இருப்பினும் வன்முறையில் தாக்கப்பட்டு உயிர் துறந்த அப்பாவி ஹிந்துக்களும். ஒரு வரி அல்லது ஒரு வரியில் பாதியாகவாவது வெறும் வாய்வார்த்தைக்காகவேனும் கொலை செய்யப்பட்ட அப்பாவி ஹிந்துக்களுக்கும் வருத்தம் தெரிவித்திருக்கலாமே. இந்த வ்யாசத்தில் மட்டுமன்று எப்போதெல்லாம் குஜராத் கலவரம் பற்றி தொலைக்காட்சிகளில் விவாதங்கள் நிகழுமோ அப்போதெல்லாம் கூட கோத்ராவிலோ அல்லது 2002ம் வருஷத்திலோ இறந்த அப்பாவி ஹிந்துக்களைப் பற்றி யாரும் வாய்வார்த்தைக்காகக் கூட வருத்தம் தெரிவிப்பதாகத் தெரியவில்லை.
எப்போது இறக்கும் ஒவ்வொரு உயிருக்கும் மத வேறுபாடின்றி நாம் வருந்துகிறோமோ அதை நிவர்த்திக்கப் பாடுபடுகிறோமோ அதுவரை மத ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கம் போன்ற கோட்பாடுகளைப் பேசுவது……….
வெறும்பேச்சாக மட்டும் தான் அமையும்.
மதப்பூசல்களில் இழக்கப்படும் ஒவ்வொரு மனித உயிரும் மானுடம் சாவதைப் பறைசாற்றுகின்றன………
மதப்பூசல்களில் சொட்டப்படும் ஒவ்வொரு சொட்டு உதிரமும் மதங்களைப் பரிகசிக்கின்றன………
என்ற கூற்றுகளுடன்……..
நான் முற்று முழுதாக உடன்படுவேன்.
ஹிந்துக்களை மட்டும் மதப்பூசல்களுக்குக் காரணமாகச் சுட்டுவதும் ஹிந்து மதத்தை மட்டும் அடிப்படை வாதமுடையதாகச் சித்தரிப்பதும் எதிர்வினையாற்றப்பட்ட வ்யாசத்தின் போக்கு. இப்போக்கு தவறானது; மத ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கத் தக்கது என்பது என் தாழ்மையான ஆனால் அழுத்தந்திருத்தமான அபிப்ராயம்.
\\\\ பாரத்திலே பிறந்து வளர்ந்த புத்த மதத்தினரை, இந்து மதவாதிகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நசுக்கி பாரத நாட்டிலிருந்து விரட்டி விட்டதால், மிஞ்சிய சிறுபான்மையினர் இருக்குமிடம் தெரியாமல் முடங்கிக் கிடக்கிறார்கள்!\\\\\
பௌத்த மதத்தில் பலப் பல சம்ப்ரதாயங்கள் ஹிந்துஸ்தானமுழுதும் இருந்திருக்கின்றன. இருந்து வருகின்றன.
ஹீனயானம், மஹாயானம், மத்யமகம், யோகாசாரம், விக்ஞானவாதம், தேராவாதமும் அதன் பிரிவுகளும், வஜ்ரயானமும் அதன் பிரிவுகளும். சமீபத்தில் அறிமுகமான நவயானம்.
ஹிந்துஸ்தானத்தில் இருந்து அருகில் இருக்கும் தேசங்களிலெல்லாம் பௌத்தத்தைப் பரப்ப பிக்ஷுக்கள் சென்றார்கள் என்பது சரித்ரம். பூர்வ மீமாம்சை, உத்தர மீமாம்சை, சைவம், வைஷ்ணவம் போன்ற சமயத்தினருக்கும் பௌத்தர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்ததும் உண்மை. அந்த வேற்றுமைகளெல்லாம் தத்துவம் சார்ந்தவை என்பதும் உண்மை. இன்றைக்கும் பௌத்த —- பூர்வ மீமாம்சா —– உத்தர மீமாம்சா நூற்களில் இந்த தத்துவ வேறுபாடுகளைப் பற்றிய விளக்கங்களைக் காண இயலும். இன்றும் முறையாக வேதாந்தம் வாசிப்பவர் பூர்வ பக்ஷம் – மாற்றுக்கருத்து என்ற படிக்கு பௌத்தக் கருத்துக்கள் என்ன அதற்கு மாறான சித்தாந்தம் என்ன என்று வாசிக்கிறார்கள். பௌத்தக்கருத்துக்கள் மிக முக்யமான மாற்றுக்கருத்துக்கள் —— வேதாந்தத்தை முழுமையாக அறிய முற்படுவோருக்கு பயனளிக்கவல்லவை தெளிவளிக்க வல்லவை ——- என்றபடிக்கு இன்று வரை இவை ஆழ்ந்து வாசிக்கப்படுகின்றன என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லிக்கொள்கிறேன்.
பௌத்தக்கருத்துக்களுடன் முதன் முதலில் கருத்துச் சமர் செய்தவை பூர்வமீமாசக்கருத்துக்கள். சப்தநித்யத்வம் என்ற கோட்பாடு சார்ந்து. சொற்களும் பொருட்களும் நித்யமானவையா அல்லவா. (இதுபோன்ற விவாதம் கணித வடிவங்களும் கோட்பாடுகளும் சார்ந்தும் உண்டு). மேற்கத்திய உலகிலும் இது சார்ந்து விவாதங்கள் உண்டு. Formalism மற்றும் Platonism என்று மாற்றுக் கருத்துக்களைச் சொல்வர். முந்தைய கருத்து சொற்களும் பொருட்களும் மனித மனத்தில் மட்டும் இருப்பவை. அதை விடுத்து இவற்றுக்கு தனித்ததான இருப்பு கிடையாது என்று சொல்வது. பிந்தைய கருத்தானால் சொற்களுக்கும் அதன் பொருட்களுக்கும் (கணித வடிவங்களும் கோட்பாடுகளும்) மனித மனத்தில் இருப்பதைத் தவிரவும் தனித்த இருப்பும் இவற்றிற்கு உண்டு — “in Platonic World” என்று சொவது. ரத்தினச் சுருக்கமாக மட்டும் கோட்பாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
பௌத்தர்கள் முந்தைய கருத்தை முன்வைப்பவர்கள். பூர்வ மீமாம்சகர்கள் பிந்தைய கருத்தை முன்வைப்பவர்கள். இது வேறுபாடு.
இந்த இரு தர்சனங்களிடையே ஒரு ஒற்றுமையும் உண்டு. பௌத்தர்கள் மற்றும் பூர்வ மீமாம்சகர்கள் கடவுள் – ஈச்வரன் என்ற கோட்பாடு பற்றி பேசாதவர்கள்.
ஒற்றுமை வேற்றுமைகள்.
புத்தர் தசாவதாரங்களில் ஒன்றாக வணங்கப்படுகிறார்; புத்தர் வைதிக சமயத்தில் வணங்கப்படுகிறார் என்பதை உப்பு மிளகாய் மசாலாக்கள் கலந்து முன் வைப்பவர்கள் பௌத்த சாஸ்த்ரங்களில் ஸ்தோத்ரங்களில் மற்றைய வைதிக சமய தைவங்கள் புத்தரை வணங்குபவர்களாகக் காண்பிக்கப் படுதலையும் காய்த்தல் உவத்தலில்லாமல் யோஜிக்கலாமே!!!!!
சைவ ஸ்தோத்ரங்களில் பகவான் விஷ்ணு சிவனை வணங்குதலும் விஷ்ணு ஸ்தோத்ரங்களில் சிவபெருமான் விஷ்ணுவை வணங்குதலும் கூட காய்த்தல் உவத்தல் இல்லாது நோக்கத் தக்கவையே.
இரண்டு பௌத்த நூற்களை மட்டிலும் இப்போது முன்வைக்கிறேன்.
ஒன்று கரந்த வ்யூஹ சூத்ரம்…….
இந்த சூத்ரத்தை வாசிக்கையில் ஆர்ய அவலோகிதேஸ்வரர் என்ற போதிசத்வரை தர்மராஜனான யமன், சிவபெருமான், உமாதேவி போன்றோரெல்லாம் ஸ்துதி செய்வதை வாசிக்கலாம் கீழ்க்கண்ட சுட்டியில். *ஓம் மணிபத்மே ஹூம்* என்ற ஆறு அக்ஷரங்களாலான ஷடாக்ஷர மந்த்ரத்திற்கு ப்ரதிபாத்யரானவர் (மந்த்ரத்தால் ஆராதிக்கப்படுபவர்) ஆர்ய அவலோகிதேஸ்வரர். ஆங்க்ல லிபியில் சூத்ரங்களின் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது. இப்போதைய ஹிந்துஸ்தானம், திப்பத், சீனம், பர்மா, வியட்நாம், கம்போடியா, கொரியா, ஜப்பான் போன்று பௌத்தம் புழக்கத்திலுள்ள தேசமனைத்திலும் வணங்கப்படுபவர் ஆர்ய அவலோகிதேஸ்வரர் என்றும் பத்மபாணி என்றும் போற்றப்படும் இந்த போதிசத்வர். இவர் கருணைமிகு புத்தர். budha of compassion.
http://www.virtualvinodh.com/
நம்மில் பலருக்கு இணையமூலம் பரிச்சயமான ஸ்ரீ வினோத் ராஜன் மஹாசயர் அவர்கள் தளத்தில் பல பௌத்த ஜின சாஸ்த்ரங்கள் மற்றும் ஸ்தோரங்களை (தமிழ், பாலி, சம்ஸ்த்ருதம்) ஆர்வமுள்ள அன்பர்கள் வாசிக்கலாம். யாப்பின் படி எழுதப்படும் தமிழ்ப்பாக்களின் தளை சரிபார்க்க மென்பொருள் வடிவமைத்தவர் ஸ்ரீ வினோத் ராஜன் மஹாசயர் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொன்று பெண் போதிசத்வராய் போற்றப்படும் ஆர்ய தாராதேவி பற்றியதான தாராஷ்டோத்தர சதநாம ஸ்தோத்ரம்…….
பற்பல சம்ஸ்க்ருத மொழியிலான பௌத்த சாஸ்த்ரங்கள் மற்றும் ஸ்தோத்ரங்கள் ஆங்க்ல லிபியிலும் மற்றும் தேவ நாகர லிபியிலும் வாசிக்கத் தோதான இணையம் www.dsbcproject.org.
தாராஷ்டோத்தர சதநாம ஸ்தோத்ரம் கீழ்க்கண்ட சுட்டியில் நாகரலிபியில் கிட்டும்.
ச்லோகம் எண் – 35
रक्षणी मोहनी शान्ता कान्तारी द्रावणी शुभा।
ब्रह्माणी वेदमाता च गुह्या च गुह्यवासिनी॥ ३५॥
ரக்ஷணீ மோஹனீ சாந்தா காந்தாரீ த்ராவணீ சுபா
ப்ரம்ஹாணீ வேதமாதா ச குஹ்யா ச குஹ்யவாஸினீ
தாராதேவி பௌத்தர்கள் ப்ரமாணமாகக் கொள்ளாத ஆனால் வைதிகர்கள் ப்ரமாணமாகக் கொள்ளும் வேதங்களையும் அருளியவளாக *வேதமாதா* எனக் கொண்டாடப்படுகிறாள்.
நமஸ் தாராயை.
விரட்டல் துரத்தல் இவையெலாம் வெறும் முன் தீர்மானங்களின் பாற்பட்ட ஹேஷ்யங்கள் என்றே படுகிறது. சரித்ர ஆதாரம் எனக்குத் தெரிந்து இல்லை.
ஹிந்துஸ்தானத்திலிருந்து ஹிந்து மதத்தின் மற்ற சமயத்தவரால் பௌத்தர்கள் விரட்டப் பட்டனர் என்பதற்கு என்ன ஆதாரம்? பௌத்த மத சாஸ்த்ரங்களில் (தமிழ், பாலி, சம்ஸ்க்ருதம்) இது பற்றி ஏதேனும் கூறப்பட்டுள்ளதா என்பதைத் தகுந்த நூற்குறிப்புகளுடன் பதிவு செய்யலாமே? (விருப்பு வெறுப்புகளின் பாற்பட்டு புனையப்படும் கதைகளை / ஹேஷ்யங்களை / உரல்களை தயவு செய்து சுட்ட வேண்டாம்). கூடவே எந்தப் பிரிவினைச் சார்ந்த பௌத்தர்கள் விரட்டப்பட்டனர் எப்போது விரட்டப்பட்டனர் எங்கு விரட்டப்பட்டனர் என்பதையும் சரித்ரச் சான்றுகளுடன் விளக்கலாம். (பௌத்த சாஸ்தரங்கள் – எந்த உட்பிரிவாயினும் சரி – முதன்மையான சரித்ர ஆவணமாக ஏற்கப்படும்) அப்படி ஏதும் பதிவு செய்ய இயலவில்லையானால் இது தகவற்பிழை என்று மட்டும் ஏற்கப்படும்.
மீதி இருப்பவர் இருக்குமிடம் தெரியாமல் முடங்கிக் கிடக்கிறார்கள் என்ற கருத்து அப்பட்டமான பச்சைப் பொய்.
ஏனெனில் நான் லத்தாக்கிலுள்ள பல பௌத்த மடாலயங்களுக்கு நேரில் சென்று வந்துள்ளேன். அங்கு மடாலயங்கள் எவ்வாறு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. சம்ஸ்க்ருதத்திலிருந்து திப்பத்திய பாஷையில் மாற்றப்பட்ட பௌத்த சாஸ்த்ரங்களடங்கிய ஓலைச்சுவடிகள் எப்படி பாதுகாக்கப்படுகின்றன; படியெடுக்கப்படுகின்றன என்பதை நேரடியாகக் கண்டுள்ளேன்.
வஜ்ரயான பௌத்தம் எவ்வாறு ஹிந்துஸ்தானத்தில் தழைத்து வருகிறது; பௌத்த சாஸ்த்ரங்கள் எவ்வாறு அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் மேலும் த்வீபாந்தரத்தில் இருந்து வரும் பரங்கியருக்கும் கூட கற்பிக்கப் படுகிறது என்பதை கண்ணாரக் கண்டிருக்கிறேன்.
வஜ்ரயான பௌத்த பிக்ஷுக்களுடன் இது சம்பந்தமாக உரையாடியும் இருக்கிறேன். ஆகவே ஹிந்துஸ்தானத்தில் இன்று இருக்கும் பௌத்தர்கள் முடங்கி இருக்கிறார்கள் என்பது உண்மைக்கு மாறான கூற்று. சொந்த (க்றைஸ்தவ) விருப்ப (ஹிந்து) வெறுப்பின் பாற்பாட்டு முனைந்து செய்யப்படும் பொய்யான பரப்புரை.
ஹிந்துஸ்தானத்தில் மேற்கு வங்காளத்திலுள்ள டார்ஜீலிங், ஹிமாசலத்திலுள்ள லாஹௌல், ஸ்பிட்டி, முழு சிக்கிம் மாகாணம், பீஹாரின் புத்தகயா, மிகப்பெரும்பாலான அருணாசலப்ரதேசம் ——- போன்ற பல இடங்களில் இன்றும் பௌத்தம் விகசிதமாய் உள்ளதை அறிவேன். லத்தாக் தவிரவும் மற்றைய சில பௌத்த விஹாரங்களுக்கும் மடாலயங்களுக்கும் சென்றுள்ளேன்.
புத்த கயா க்ஷேத்ரத்தை பரிபாலனம் செய்யும் விஷயத்தில் பௌத்தர்களுக்கும் ஹிந்து மதத்தின் மற்றைய சமயத்தவருக்கும்ம் இடையே அபிப்ராய பேதங்கள் உண்டு என்பது அதனளவில் தத்யம்.
ஆனால் மந்த்ர – தந்த்ர – காலசக்ர – வஜ்ர – யான பௌத்தத்திற்கும் வைதிக – தாந்த்ரிக – சைவ – சாக்த சமயங்களிடையே இன்றும் கூட இணக்கமான சம்வாதங்கள் நிகழ்கின்றன – தொடர்கின்றன என்றறியாது வைக்கப்படும் பச்சைப்பொய் “மீதி இருக்கும் பௌத்தர்கள் இருக்குமிடம் தெரியாமல் முடங்கிக் கிடக்கிறார்கள்” என்ற கருத்து.
பூனை கண்ணை மூடிக்கொண்டு லோகமே இருண்டு விட்டது என்றால் உண்மையாகுமோ?
ஹிந்து மத வெறுப்பு என்ற முன் தீர்மானத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு வ்யாசம் எழுதப்பட்டதால் ஹிந்து மதத்தின் ஒரு அங்கமாகிய பௌத்த சமயத்திற்கும் ஏனைய ஹிந்து மதத்திய சமயங்களிடையேயும் நிகழ்ந்த கருத்துப் பரிமாற்றங்கள் யாவை இவற்றினிடையே உள்ள இணக்கங்கள் யாவை வேறுபாடுகள் யாவை என்பதைப் பற்றி யோசித்தும் பார்க்காது ஹேஷ்யங்களை வெறுப்புக்களாக்கி அதை மத ஒற்றுமை என்ற சாதுர்யமான குடுகையிலிட வ்யாசம் முனைகிறது என்றால் மிகையாகாது.
சீக்கிய சமயத்துக் கருத்துக்கள் சிலவற்றை (வ்யாசத்தின் தலைப்பில் மேலும் வ்யாசத்தின் நிறைவில்) பகிர்ந்து கொண்டுள்ளேன். நான் முனைந்து சொல்லாமலேயே இவற்றில் உள்ள இணக்கமான கருத்துக்களை வாசகர்கள் அவதானித்திருக்கலாம்.
இதன் தொடர்ச்சியாக சமய நல்லிணக்கக் கருத்துக்கள் மற்றும் மத நல்லிணக்கக் கருத்துக்கள் இவற்றையும் தனி வ்யாசங்களாகப் பதிக்க முனைகிறேன். ஆங்கு ஹிந்து மதத்தின் பல சமயங்களிடையே காணப்படும் சமய நல்லிணக்க விஷயங்கள் யாவை. ஹிந்துஸ்தானத்தில் புழங்கும் பல மதத்தினரிடையே வேறுபாடுகள் பலவும் காணப்படினும் விகசிதமாகக் காணப்படும் மத ஒற்றுமை சார்ந்த விஷயங்கள் யாவை? மிகக் குறிப்பாக பௌத்த சமயத்திற்கும் மற்றைய ஹிந்து சமயப்பிரிவுகளுக்கும் இடையில் காணப்படும் இணக்கமான விஷயங்கள் யாவை? அவை நம் எதிர்கால சந்ததிகளுக்குச் சுட்டுவது என்ன? போன்ற விஷயங்களையும் பார்ப்போம்.
அது போன்ற இணக்கங்களைச் சுட்டும் எண்ணப்பகிர்வுகள் சமய ஒற்றுமைக்கு மத ஒற்றுமைக்கு ஒரு பாலமாக அமையட்டும் என்ற நப்பாசை கூட எனக்கு உண்டு.
\\\\இப்போது அடிப்படைவாத இந்துக்கள் மதப் போர்வைக்குள் புகுந்து கொண்டு, இஸ்லாமியர், கிறிஸ்துவர், சீக்கியர் ஆகியோர்க்குத் தொல்லை கொடுத்து வருகிறார்கள்.\\\\\
மிகவும் கடுமையான சொற்களால் வன்மையாகக் கண்டிக்கப் பட வேண்டியதும் அதீத வெறுப்பு நிறைந்த மற்றும் உண்மைகளை பக்ஷபாதமாகப் பேச முற்படுவதுமானது மேற்கண்ட வாசகம்.
அதற்கு முன் :-
முதற்கண் ஹிந்துஸ்தானத்தில் மாற்று மதத்தவர்களும் ஹிந்துக்களால் தாக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை காய்த்தல் உவத்தல் இல்லாது பதிவு செய்து விடுகிறேன். இது ஹிந்துஸ்தானத்தின் பல நீதிமன்றங்களில் தீர்மானம் செய்யப்பட்ட விஷயம். நேர்மையாக மதப்பூசல்களை அணுகுபவர்கள் பக்ஷபாதமில்லாது மதப்பூசல்களை அணுகுவது அவசியம் என்பதால் இந்த விஷயத்தை முதலில் பதிவு செய்கிறேன். நான் முன்னமே பதிவு செய்தபடி மதப்பூசல்களும் அதனால் நிகழும் வன்முறைகளும் தவிர்க்கப்பட வேண்டியவை தான்.
ஆனால் மாற்று மதத்தவர்களும் ஹிந்துக்களுக்குத் தொல்லை கொடுத்து வருகிறார்கள் என்பது ஏன் மேற்கண்ட வாசகத்தில் மறைக்கப்பட்டுள்ளது? அதே ஹிந்துஸ்தான நீதிமன்றங்கள் மாற்று மதத்தினர் ஹிந்துக்களின் மீது கட்டவிழ்த்து விட்ட படுகொலை மற்றும் வன்முறைகளுக்காக மாற்று மதத்தினரை தண்டித்ததும் சரித்ரம் தானே. வ்யாசத்தில் இவை ஏன் அறவே பேசப்படவில்லை?
மாற்று மதத்தினர் ஹிந்துக்களைப் படுகொலை செய்தது அவர்களை ஹிம்சித்தது ஹிம்சித்து வருவது போன்ற நூற்றுக்கணக்கான சம்பவங்கள் உண்டு. மும்பை குண்டு வெடிப்புகள்; கோவை குண்டு வெடிப்புகள்; காசிமாநகரத்து குண்டு வெடிப்புகள் – சற்றுப் பழையவை. என்றாலும் ஒரு சில சமீபத்திய சம்பவங்களையும் வாசகர்களின் முன் வைக்கிறேன்.
http://www.tamilhindu.com/
http://www.tamilhindu.com/
http://www.tamilhindu.com/
http://www.tamilhindu.com/
http://www.tamilhindu.com/
http://www.tamilhindu.com/
http://www.tamilhindu.com/
http://www.tamilhindu.com/
ஆனால் அடிப்படை உண்மைகள் என்ற ஆதாரத்தால் நிறுத்துப்பார்க்கப் பட வேண்டியது “ஹிந்து மத அடிப்படை வாதிகள் சீக்கியர்களுக்கு தொல்லை கொடுத்து வருகிறார்கள்” என்ற நயவஞ்சகமான கருத்து.
1……………………….
சில அடிப்படை உண்மைகளைப் பகிர்ந்து கொண்டால் தகவற்பிழைகள் தானாகத் துலங்கும் என்ற படிக்கு சில அடிப்படை உண்மைகள். கருத்துச் செறிவு என்ற தீபமேற்ற அறியாமை என்ற இருள் அகல்வதாக.
முதலாவதாக குருதசமேஷ் (பத்து சீக்கிய குருமார்கள்) அவர்களது கருத்துக்களை பஞ்சாப் மற்றும் அண்மையிலுள்ள மாகாணங்களில் எல்லா சமயத்தினரும் சமய வேறுபாடின்றி விதந்தோதுகிறார்கள் என்பது. ஆரம்பத்தில் நான் பகிர்ந்த மூல்மந்தர் என்ற பாடல் பஞ்சாபி மொழி பேசும் அன்பர்கள் அனைவராலும் (சீக்கியர் மற்றும் சீக்கியரல்லாதோர்) போற்றப்படுகிறது. தொலைபேசியில் பேசுகையில் பஞ்சாபி மொழிபேசும் பல அன்பர்களின் ரிங்க்டோனாக இந்தப்பாடலையே கேட்க இயலும். ஹிமாசலம், தில்லி, பஞ்சாப், ஹரியாணா, ஜம்மு & கஷ்மீர் போன்ற மாகாணங்களைச் சார்ந்த அன்பர்களுடன் பழகிய எனது நேரான அனுபவத்தின் பாற்பட்டு உறுதியாக இதைச் சொல்கிறேன்.
கேஷ் (kEsh) (மழிக்காமுடி) கங்கா (kangA) (அதைப் பராமரிக்க தலைப்பாகையில் வைக்கப்பட்டிருக்கும் சீப்பு) கடா (kadA) ( கையில் அணியும் கங்கணம்) கச்சா (kachcha) ( எப்போதும் கத்தியுடன் இருக்கும் இவர்கள் பாதுகாப்புக்காக அணிய வேண்டிய உள்ளாடை) கிர்பான் (kirpAn) ( பற்பல அளவுகளில் அவரவர் சௌகர்யப்படி வைத்திருக்கும் கத்தி) இவை ஐந்தும் சீக்கிய அடையாளங்கள். கேஷ், கங்கா, கடா, கச்சா, கிர்பான். தலைப்பாகை அணிந்த சீக்கியர்கள் குருமார்களின் கட்டளைகளின் படி வாழ்க்கையை நடத்துவதன்றி இந்த அடையாளத்தையும் பேணுகிறார்கள். பல அன்பர்கள் குருமார்களை கட்டளைகளை மட்டும் ஏற்று இந்த அடையாளங்களை ஏற்பதில்லை. இவ்வாறு சீக்கிய அடையாளங்களை ஏற்காது ஆனால் முழுமுற்றாக குருதசமேஷின் கருத்துக்களை சிரமேற்கொள்பவர்களை மோனா (mOna)என்று அழைக்கிறார்கள்.
ஒவ்வொரு சீக்கியரும் ஆணும் பெண்ணும் எப்போதும் கிர்பான் என்ற கத்தியை தங்களுடன் வைத்திருக்க வேண்டும். வீர தீர பராக்ரமத்தைச் சரித்ரமாகக் கொண்ட சீக்கியர்களுக்கு மற்ற சமயத்தவர்கள் தொந்தரவு கொடுக்க இயலும் என்பது நகைப்பிற்குறிய விஷயம். “தொ” என்ற எழுத்துத் தொடங்கி “வு” என்று அது நிறைவு பெறுமுன்னேயே கொடுக்கப்படும் தொந்தரவுகளை களையறுக்க வல்லவர்கள் சீக்கிய சஹோதரர்கள் என்பது சற்று மிகைப்படுத்தப்பட்ட கூற்றாக இருக்கலாம். ஆனால் தங்களுக்குக் கொடுக்கப்படும் தொந்தரவுகளை “ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு” என்று செயல்படுபவர்கள் சீக்கியர்கள் அல்லர். மாறாக தர்மத்திற்கு எதிராக வன்முறையுடன் எழும் கைகளை அவை உயரும் போதே பலம் கொண்டு அடக்கும் பயிற்சியை கால்ஸா பந்த் (கால்ஸா இயக்கம்) சீக்கியர்களுக்கு அளித்துள்ளது என்பதை சரித்ரம் சுட்டுகிறது.
பின்னிட்டும் சீக்கியர்களுக்கு ஹிந்து மத அடிப்படை வாதிகள் தொல்லை கொடுக்கிறார்கள் என்று சொல்லப்படும் கூற்றில் உண்மை என்று ஏதும் இருந்தால் “ஹிந்து மத அடிப்படை வாதிகள்” என்று சுட்டப்படுபவர் யார்? அவர்கள் சீக்கிய சஹோதரர்களுக்குக் கொடுக்கும் தொல்லை யாது என்பதை அறிய ஆவலாக உள்ளேன்.
ஹிந்து அடிப்படை வாதிகள் சீக்கியர்கட்குத் தொல்லை கொடுக்கிறார்கள் என்றால் அப்படித் தொல்லை கொடுப்பவர்கட்கும் அது தகவற் பிழை என்றால் அவ்வாறு தகவற் பிழையை அளிக்கும் அன்பர்களுக்கும் வாஹேகுரு ஸன்மதி அளிக்கவேண்டும் என்று மட்டிலும் இப்போது என்னால் ப்ரார்த்தனை செய்ய இயலும்.
வாஹே குரு தீ கால்ஸா! வாஹே குரு தீ ஃபதே!
வல்லமை படைத்த குருவின் இயக்கம் கால்ஸா; அவருக்கு வெற்றி உண்டாகட்டும்.
நான் கடந்த இரண்டரை தசாப்தங்களாக உத்தரபாரதத்தில் வசித்து வருகிறேன். ஹிந்துக்கள் குருத்வாராக்களுக்குச் (சீக்கியர் கோவில்) செல்வதும் சீக்கியர்கள் ஹிந்துக்கோவில்களுக்குச் செல்வதும் மிகவும் சர்வ சாதாரணமான விஷயம். அதுமட்டுமின்றி ஹிந்துக்களுக்கும் சீக்கியர்களுக்கும் இடையே திருமண பந்தங்கள் தொடர்வதும் மிகவும் பொதுவான விஷயம். என்னுடைய மிகப்பல நண்பர் குடும்பங்களின் சொந்த பந்தங்களில் சீக்கியர்களை (ஹிந்துக்குடும்பங்களில்)மற்று
ஹிந்துஸ்தானத்தின் கூரை எனப்படும் லத்தாக்கிலுள்ள பத்தர் சாஹேப் குருத்வாராவிலிருந்து ஹிந்துஸ்தானத்தின் பல குருத்வாராக்களுக்குப் பலமுறை சென்று வணங்கியுள்ளேன். குரு கீ லங்கர் எனப்படும் குருத்வாராவில் அளிக்கப்படும் ப்ரசாதத்தைச் சாப்பிட்டுள்ளேன். குருத்வாராவில் ஹிந்து, முஸல்மான், க்றைஸ்தவர் என மதவேறுபாடின்றி அனைத்து மத மக்களும் சேவை செய்வதைக் கண்டுள்ளேன். இவர்கள் அனைவரையும் அன்பர் அவர்களின் வ்யாசத்தில் சொல்லப்பட்ட மேற்கண்ட வாசகம் பரிகசிக்கிறதோ என்றும் ஒரு க்ஷணம் தோன்றுகிறது.
விஷமவாதங்களை வாஹே குரு களையறுப்பாராக.
2………………………..
ஹிந்துக்கள் (சீக்கியரல்லாத மற்ற ஹிந்து சமயத்தினர்) சீக்கியருக்கு தொல்லைகள் ஏதும் கொடுத்ததில்லை என்பது மட்டுமல்லாது பன்முறையு சீக்கியரால் தாக்கப்பட்ட போதும் எதிர்த் தாக்குதல் நிகழ்த்தியதில்லை என்பதும் சரித்ரம். இது விஷயமாய் பற்பல சான்றுகள் அளிக்க இயலும் என்றாலும் ஒரு முக்யமான சான்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
காலிஸ்தான தீவ்ரவாத சமயத்தில் பஞ்சாப் மாகாணத்தில் சீக்கியர் மற்றும் சீக்கியரல்லாதோர் மத்தியில் பகைமை இருந்தது உண்மை. இன்றைக்கு பஞ்சாப் மற்றும் அண்டைய மாகாணங்களில் ஹிந்து (சீக்கியரல்லாத மற்ற ஹிந்துக்கள்) சீக் பாய் பாய் (Bhai Bhai). ஹிந்துவும் சீக்கியரும் சஹோதரர்களே.
1988ம் வருஷம் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள மோகா (Moga) என்ற நகரத்தில் RSS ஷாகாவில் (தினப்பயிற்சிக் குழு / கூடம்) பயிற்சி செய்த 26 ஸ்வயம்சேவகர்களை கலவர காலத்தில் பாதை தவறிய காலிஸ்தான தீவ்ரவாத சீக்கியர்கள் படுகொலை செய்தனர். ஆனால் அப்பொழுதும் அதற்குப் பின்னும் ஹிந்துக்கள் எந்த பதில் தாக்குதலும் சீக்கியர் பால் நிகழ்த்தியதில்லை என்பது சரித்ரம்.
1984 ம் வருஷம் பாரதத்தின் முன்னாள் ப்ரதம மந்த்ரி ஸ்ரீமதி இந்திரா காந்தி அவர்கள் தனது சீக்கிய பாதுகாவலரால் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட போது பல வன்முறையாளர்கள் சீக்கியர்களைக் கொன்று குவித்தனர். அப்போது RSS மற்றும் பாஜகவினர் சீக்கியர்களைப் பாதுகாத்தமை —— இந்த இயக்கங்களின் சித்தாந்தத்திலிருந்து கருத்து ரீதியாகக் கடுமையாக வேறுபடும் —— அன்பர்களான ஸர்தார் குஷ்வந்த் சிங்க் மற்றும் அமரர் ஸர்தார் க்யானி ஜெய்ல் சிங்க் அவர்களும் பதிவுசெய்த விஷயங்கள்.
மதங்கள் மற்றும் சமயங்களிடையே வேற்றுமைகள் ஒருபுறம் இருக்கட்டும். இல்லாத ஒரு வேற்றுமையை ஏன் உருவாக்க வேண்டும். இருக்கும் ப்ரகாசமான ஒற்றுமையை மேலும் தழைக்க வைப்பதில் ஏன் ஈடுபாடு காட்டக்கூடாது? ஆம் ப்ரகாசமாய் இருக்கும் ஹிந்து சீக்கிய ஒற்றுமையைத் தழைக்க வைப்பது அந்த ஒற்றுமையைக் குலைக்க முனையும் சக்திகளையும் மீறி ஒற்றுமையில் நாட்டம் கொண்டோர் மிகுந்த முனைப்புடன் எடுக்க வேண்டிய விஷயம் என்பது துலங்குகிறது.
வாஹே குரு ஒற்றுமையில் நாட்டமுடைய அன்பர்களுக்கு நிறைந்த சக்தி அளிக்க இறைஞ்சுகிறேன்.
———— xxxxxx———-xxxxxx——–
நிறைவாகச் சில கருத்துக்கள் :-
\\\\\\\\\ உயர்ந்த கருத்துக்கள் உருது மொழியில் இருந்தா லென்ன ? சமஸ்கிருதத்தில் இருந்தா லென்ன ? பார்ஸி மொழியில் இருந்தா லென்ன ? அவை எல்லாமே மெய்யான மொழிகள் தான்!\\\\\\\\\\\\\அதற்கு மக்களிடம் மதச் சகிப்பு, இனச் சகிப்பு, ஜாதிச் சகிப்பு, மாநிலச் சகிப்பு, மொழிச் சகிப்பு மிக மிகத் தேவை! மதச் சார்பில்லாமை என்றாலும் இதுதான் அர்த்தம்! பாரதத்தின் பல பிரச்சனைகளுக்கு மூல காரணம், இந்தியரிடம் குறைந்துள்ள, இந்தச் சகிப்பற்ற தன்மைகளே !\\\\\
RSS பற்றி பயங்கரமாக எதிர்மறையான கருத்துக்களை வ்யாசம் முன்வைத்ததைப் பார்த்தோம்.
RSS இயக்கம் சிறுவயதில் எனக்குப் போதித்து —— இன்னமும் பசுமையாய் நினைவில் இருக்கும் என் தாய்மொழி தமிழ்மொழியிலான சங்கப் பாடலை நிறைவாகப் பகிர்ந்துகொள்கிறேன்.
பாரதத் தாயைப் பணிந்து வணங்கும் வீர மைந்தர் நாம்
அர்ப்பணமாவோம் அவள் தாளினிலே தூய நினைவுடனே
பேசுகிறோம் நாம் பலமொழி ஆனால் பேதம் இங்கில்லை
வங்கள மொழியும் சிங்கத் தமிழும் எங்களதென்றிடுவோம்
கன்னடம் தெலுங்கு கவின் மலையாளம் ஹிந்தியும் எங்களதே
இதில் மொழிவெறி, இனவெறி, ஜாதிவெறி, மாநில வெறி, மத வெறி என்று ஏதும் தென்படுகிறதா என்பதை வாசகர்களிடம் விட்டு விடுகிறேன்.
\\\\ ‘எம்மதமும் சம்மதமே’ என்று காந்தியின் மரணம், நமக்கு அறிவுரை சொல்லட்டும்! \\\\
ஒற்றுமை நீங்கில் நம் அனைவருக்கும் தாழ்வே என்று கொட்டை எழுத்துக்களால் கருத்தைப் பகிர்ந்த வ்யாசத்தில் பத்தி பத்தியாக க்றைஸ்தவ மத மேட்டிமையும் சமயம் சார்ந்த வேற்றுமைகளை விதைக்கும் தகவற் பிழைகளும் மற்றும் ஹிந்து மதத்தினர் பற்றியும் ஹிந்து இயக்கங்கள் பற்றியும் வெறுப்புக் கருத்துக்களும் பகிரப்பட்டனவேயல்லாது எம்மதமும் சம்மதம் என்ற கூற்றுக்கு எள்ளளவும் வ்யாசம் வலுசேர்க்கவில்லை என்பது வெள்ளிடைமலை. ஆகையால் அப்படி ஒரு கோட்பாட்டின் படி வாழ்ந்த (காந்தியடிகளை?????—-(சம்சயமே – என் புரிதலில் வைஷ்ணவராக வாழ்ந்தவர் காந்தியடிகள்) யாரையும் அவர்களுடைய வாழ்வியல் நிகழ்ச்சிகளின் மூலம் சுட்டவும் வ்யாசம் விழையவில்லை.
“ஏக்ல சொலோ ஏக்ல சொலோ ஏக்ல சொலோரே” (தனியாகச் செல்) என்ற மிகவும் புகழ்வாய்ந்த குருதேப் ரவீந்த்ரநாத் தாகூர் அவர்களுடைய அருமையான மற்றும் மிகவும் ப்ரசித்தியான பாடலுடன் வ்யாசம் துவங்கியது. ரொபீந்த்ரொ ஷொங்கீத் (ரவீந்த்ர சங்கீதம்) என பாங்க்ளா பாஷையில் (வங்காள மொழியில்) மிகவும் உகப்புடன் குறிப்பிடப்படுவது குருதேவர் கவிதைகளும் அவரது பாடல்களாலான சங்கீதமும். “அமார் ஷோனார் பாங்க்ளா” (எமது பொன்மயமான வங்காளம்) என்றொரு பாடலும் குருதேவரின் மிகவும் ப்ரசித்தியான பாடல்.
எதற்கு இப்படி ஒரு அவதாரிகை என்றால் இப்படியெல்லாம் புகழ் வாய்ந்த பொன்மய வங்காளத்தில் பாரத அன்னை பெற்றெடுத்த தவப்புதல்வர்களுக்குள் இன்னொரு புகழ்வாய்ந்த கவியரசரும் இருந்திருக்கிறார் என்பதைச் சொல்வதற்கு. பித்ரோஹி கவி (வித்ரோஹி கவி) – விரோதமான கருத்துக்கொண்ட கவி – Rebel poet – என்றெல்லாம் சுட்டப்படும் கவியரசரான கவி காஜி நஸ்ருல் இஸ்லாம் (Kazi Nazrul Islam) என்ற அன்பரும் குருதேவர் காலத்திலேயே வங்காளத்தில் வாழ்ந்தவர். இவர் குருதேவர் பேரில் பேரன்பு கொண்டவரும் கூட.
அவரது ஒரு கவிதையின் சில பொற்துளிகளின் தமிழாக்கமும் (மூலம் இல்லாததால் நாகரத்திலோ அல்லது தமிழிலோ சுட்ட இயலவில்ல; க்ஷமிக்கவும்) அப்பெருந்தகையின் சுருக்கமான வாழ்க்கைக் குறிப்புகளையும் இப்போது பார்ப்போம்.
கவிதையின் சாரம்:-
ஓ அறியாமையின் பாற்பட்டவர்களே!
மனிதர்களே நூற்களைக் கொணர்ந்தவர்கள்
நூற்கள் மனிதர்களைக் கொணர்ந்ததில்லை
ஆதாம், தாவீது, இசையா, மோசஸ்,அப்ரஹாம், மொஹம்மத்
க்ருஷ்ணர், புத்தர், நானக், கபீர் போன்ற உலகப்பொக்கிஷங்கள்……
அவர்கள் நம் மூதாதையர்கள்
அவர்களுடைய குருதியே நம் நரம்புகளில் ஓடுகிறது
மேற்கண்ட கவிதையை சித்தாந்த ரீதியாக நான் ஏற்கவில்லை. ஏனெனில் உலகப்பொக்கிஷங்களில் இரண்டாம் வரிசையில் சொல்லிய மாந்தர்களை மட்டும் நான் என் மூதாதையர்களாகக் கருதுவதால். ஆனால் இங்கு இக்கவிதையைக் குறிப்பிடுவதற்குக் காரணம் உண்டு. இது இந்தப்பெருந்தகையின் வெற்று வாய்ச்சொல் அல்ல. மாறாக தன் சொற்படி வாழ்ந்த பெருமை மிகுப் பெருந்தகை இந்த அன்பர் என்பதால். எக்கணம் வாழ்வாங்கு வாழ்ந்த ——- பாரத அன்னை பெற்றெடுத்த பெருந்தவச்செல்வர் இவர். வாழ்க நீ எம்மான்.
இந்தக் கவிப்பேரரசர் முஸல்மானாகப் பிறந்தும் சிவன், அம்பிகை, க்ருஷ்ணர் போன்ற ஹிந்து தெய்வங்களின் பாலும் சுவை மிகும் கவியமுதங்களைப் பொழிந்துள்ளார். இவருடைய ஷ்யாம சங்கீத் மிகவும் ப்ரசித்தியானது. இவருடைய கவிதைத் தொகுப்பு நஸ்ரூல் கீதி (Nazrul geeti) என்று அழைக்கப்படுகிறது.
ப்ரமீளா என்ற ஹிந்துப்பெண்ணை மணந்தார் இந்தப்பெருந்தகை. இந்த ஆதர்ச தம்பதியினரின் மகவுகளின் பெயர்களைப் பாருங்கள். க்ருஷ்ண மொஹம்மத்; புல்புல் (Bulbul – (குயில் போன்றதொரு பக்ஷி) என்று ஆசையுடன் அழைக்கப்பட்ட அரிந்தம் காலித்; காஜி சப்யசாசி, காஜி அனிருத்.
ஸ்ரீமதி ப்ரமீளா அம்மையார் 1939ம் வருஷம் நோய்வாய்ப்பட்டார். தன் தர்மபத்னியின் வைத்தியத்திற்காகத் தன் சொத்துக்கள் அனைத்தையும் செலவு செய்தார் அன்பர் அவர்கள். ஆயினும் அம்மையாருக்குப் பூர்ண குணம் கிட்டவில்லை. 1941ம் வருஷம் குருதேப் ரவீந்த்ரநாத் தாகூர் அவர்கள் இறந்தது இவருக்கு மேலும் பேரிடியாய் இருந்தது. இந்தத் துயரமிகு சூழ்நிலையால் தானும் நோய்வாய்ப்பட்டார். தன்னிலை இழந்தார். பித்தர் போல் ஆனார். மிகவும் மோசமான உடல்நிலையில் இருப்பினும் இவரது தர்மபத்னி ஸ்ரீமதி ப்ரமீளா அம்மையார் தன்னிலையையும் பொருட்படுத்தாதுத் தன்பதிதேவருக்குச் சேவை செய்தார்.
இந்தப் பொன்மய பூமியின் தாய்த்திரு சாரதா மணி அம்மையும் குருதேவர் ராமக்ருஷ்ண பரமஹம்சரும் இங்கு நினைவுக்கு வருகின்றனர் அன்றோ!!!!!!!! க்ருஷ்ண சைதன்ய மஹாப்ரபுவும் ஹரிப்ரியா தேவியும் கூட.
அமார் பாங்க்ளா ஷோனார் பாங்க்ளா!
எமது வங்காளம் பொன்மய வங்காளம்!
சத்யம் தான்.
இவருக்குச் சரியான வைத்தியமளிக்க லண்டனுக்கு இவரை அனுப்ப முடிவு செய்தது “Nazrul Treatment Society” என்ற ஸ்தாபனம். பல ப்ரசித்தி வாய்ந்த அரசியல் தலைவர்களும் இந்த அமைப்பு மூலம் அவரை லண்டன் அனுப்ப முயற்சி செய்தனர். ஹிந்து மஹாசபையைச் சார்ந்தவரான பண்டித ஷ்யாம ப்ரசாத் முகர்ஜி அவர்களும் அதில் முக்யமான ஒருவர்.
எந்த ஹிந்துமஹாசபை காந்தியடிகளைக் கொலை செய்யத் திட்டம் வகுத்தது எனத் தனித்துப் பழிக்கப்பட்டதோ —— எந்த ஹிந்து மஹாசபையைச் சார்ந்தவர்கள் மதவெறி பிடித்தவர்கள் என்று வ்யாசத்தில் இழித்துறைக்கப்பட்டார்களோ —– அந்த இயக்கத்தைச் சார்ந்தவர்.
என்ன ஒரு வாழ்வு? எவ்வளவு உயர்ந்த மனிதர்கள்? என்ன ஒரு ஆதர்சம்?
த்வீபாந்தரத்தில் வைத்தியமளிக்கப்பட்டு “பிக்ஸ் நோய்” என்ற தீரா நோயால் பீடிக்கப்பட்டுள்ளார் எனக் கண்டறிந்த பின்னர் ஹிந்துஸ்தானம் வந்தார் 1953ல். 1962ல் ஸ்ரீமதி ப்ரமீளா அம்மையார் இறைவனடி சேர்ந்தார். 1972ல் அதுசமீபம் உருவான பாங்க்ளாதேசத்திற்கு ஹிந்துஸ்தான சர்க்காரின் சம்மதத்தின் பேரில் இப்பெருந்தகை அனுப்பப்பட்டார். அதன் தலைநகரான டாக்காவில் வாழ்ந்து 1976ல் இறைவன் திருவடி நீழலை அடைந்தார்.
எம்மதமும் எனக்கு சம்மதம் என்றில்லாவிடினும் இக்கருத்துடன் எனக்கு அறவே உடன்பாடு இல்லாவிடினும் அக்கருத்துப் படி வாழ்ந்திறந்த அற்புத மனிதரை பாரத அன்னை பெற்றெடுத்த அருந்தவப் புதல்வரை வங்காளிகள் அன்புடன் போற்றும் பித்ரோஹி கவியை மறக்கவும் இயலுமோ? அதன் பாற்பட்டு அந்த அற்புத மனிதரின் ஆதர்ச வாழ்க்கை சில வரிகளில் பகிரப்பட்டது.
~~~~~~~~~~~———-~~~~~~~~~
வ்யாசத்தின் கருத்துக்களில் சொல்லப்பட்ட எம்மதமும் சம்மதம் என்ற கூற்றில் மதங்களின் பட்டியிலில் இருந்து ஹிந்து மதம் விலக்கி வைக்கப்பட்டுள்ளதோ என்றே தோன்றுகிறது. அப்படி விலக்கி வைக்கப்பட்ட பின்பும் க்றைஸ்தவர்களுக்கு இஸ்லாமும் இஸ்லாமியர்களுக்கு க்றைஸ்தவமும் சம்மதமா என்ற வினாவும் கூடவே எழுகிறது. இது பற்றி இங்கு கருத்துப் பதியும் க்றைஸ்தவ இஸ்லாமிய சஹோதரர்களிடம் தெரிந்து கொள்ள விழைகிறேன். கூடவே இந்த இருமதத்தைப் பின்பற்றுபவர்களுக்கும் ஹிந்து மதம் சம்மதமா என்பதையும். ஹிந்து மதம் என்றதும் உடனே மனுஸ்ம்ருதி – ஜாதிகள் – என்று இறங்கிவிட வேண்டாம். நான் பகிர விழையும் விஷயம் கருத்து ரீதியிலான – சித்தாந்த ரீதியிலான விஷயம் மட்டிலும். அதனை கீழே விளக்கியுள்ளேன்.
எனக்கு என் மதம் மட்டுமே சம்மதம். மற்ற எந்த மதமும் எனக்கு சம்மதமல்ல.
ஆனால் மற்ற மதத்தினரையும் நான் மிகவும் மதிக்கிறேன். அவர்கள் தங்கள் வழிபாடுகளில் முனைந்து ஈடுபடுவதை நான் போற்றுகிறேன். இங்கு பங்கு பெறும் அனைத்து அன்பர்களின் – அவர்கள் என் மதத்தினராயினும் சரி – மாற்று மதத்தினராயினும் சரி —- அன்பர்களின் பண்பு, ஆர்ஜவம் இவை எனக்கு மிகவும் ஆதர்சமான விஷயங்கள். மாற்று மத சஹோதரர்களுடன் கருத்துப் பரிமாறும் போது இவற்றை வெளிப்படையாகப் போற்றியும் வந்துள்ளேன்.
இது போன்ற ஒரு நேர்மையான அடிப்படையை முன் வைத்து மத வேறுபாடுகள் இருந்த போதிலும் கூட மத ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கம் சாத்யம் என்பது எனது தாழ்மையான அபிப்ராயம்.
இது விஷயமாக ஆழ்ந்த கருத்துள்ள மாற்று மத சஹோதரர்களின் கருத்துக்களை மனமுவந்து வரவேற்கிறேன்.
என் மதத்தில் எனது சமயம் எனக்குப் போதித்த கருத்துக்கள் :-
ஆ நோ பத்ரா: க்ரதவோ யந்து விச்வத: (ரிக்வேதம்)
உயர்ந்த கருத்துக்கள் நாற்புரத்திலிருந்தும் நம்மிடம் வரட்டும்.
ஆகாசாத் பதிதம் தோயம் யதா கச்சதி சாகரம்
ஸர்வ தேவ நமஸ்கார: கேசவம் ப்ரதிகச்சதி
எப்படி ஆகாயத்திலிருந்து பொழியும் நீர் கடைசியில் சமுத்ரத்தைச் சென்றடைகிறதோ அதே போல் எந்த தெய்வத்தைத் தொழுதாலும் அது (தொழுதல்) கேசவன் திருவடியைச் சென்றடையும்.
என் மதம் எனக்குப் போதிப்பது யார் எந்த தெய்வத்தைத் தொழுதாலும் அவருக்குக் கேடில்லை என்பது. இந்த அளவுகோலின் படி மற்ற மதங்களைப் பேணுபவர்கள் யாராயினும் யார் எந்த தெய்வத்தைத் தொழினும் அவர்கள் நிறைவான வாழ்வு வாழ்ந்து இறைவன் திருவடி நீழலை அடைவர் என்று கருதுகிறேன்.
இன்னொரு கருத்தும் இருக்கிறது. என்னைத் தவிர மற்றெவரைத் தொழுபவனும் கொலை செய்யப்படுவான் என்று சொன்னது ஹிரண்ய கசிபு என்ற அசுரன். அது பெற்ற மகனே ஆயினும் சரி. தன்னைத்தவிர மற்றவரைத் தொழுபவர்களை அழித்தொழிப்பது அசுராவேசம் என்று ஹிந்துக்களால் நிந்திக்கப்படுவது.
ஹிந்து மதத்தின் பல சமயங்களிடையே வேற்றுமைகளும் கூட உள்ளன தான். சிவனைத் தொழுதால் தான் முக்தி என்று சைவம் சொல்கிறது. விஷ்ணுவைத் தொழுதால் தான் முக்தி என வைஷ்ணவம் சொல்கிறது. புறந்தொழுதல் நிந்திக்கப்படுகிறது தான். மறைக்க விரும்பவில்லை. பௌத்த ஜைன சீக்கிய சமயங்கள் முக்தியை வேறு விதமாகப் போதிக்கின்றன தான். ஆனால் வேறுபாடு இல்லாது ஹிந்துஸ்தானத்தில் பிறந்து தழைத்த சமயங்கள் அனைத்தும் தங்கள் கூற்றுப்படி தங்கள் தங்கள் சமய ஒழுக்கங்களைக் கைக்கொள்ளாதவர் மீளா நரகமேகுவர் என்று எப்போதும் பயமுறுத்தியதில்லை.
அவ்வாறிருக்க ஹிந்து மதப்படி ஒழுகுபவர்கள் (சைவம், வைஷ்ணவம், பௌத்தம், ஜைனம், வைதிகம், சீக்கியம், நாட்டார் சமய ஒழுகுமுறைகள் – இத்யாதி இத்யாதி) தங்கள் மதத் தெய்வங்களைத் தொழுவதற்காக மட்டிலும் தங்கள் மதக்கூற்றுகளின் படி வாழ்வதால் மட்டிலும் நரகம் ஏகுவார்களா? அல்லது அதற்காக மட்டிலும் நரகம் ஏக மாட்டார்களா? என்று க்றைஸ்தவ மற்றும் முஸல்மான் சஹோதரர்கள் தங்கள் மதப் புஸ்தகங்கள் சார்ந்து கருத்துப் பகிர வேண்டுகிறேன்.
———— xxxxxx———-xxxxxx——–
என்னுடைய கருத்துடன் சாம்யதை உடையதானது என நான் புரிந்து கொண்ட படிக்கான ஒரு குருவாணியை (நான் பலமுறை முணுமுணுக்கும்) நினைவு கூர்கிறேன் – ஒரு இருபது இருபத்தைந்து வருஷங்களுக்கு முன் ராமாயணத் தொடரின் முன்பு பலரும் இந்த குருவாணியை தில்லி தூர்தர்ஷனில் கேட்டிருக்கலாம். இந்த குருவாணியுடன் (பாடல் எண் 885 – குரு க்ரந்த் சாஹேப்) வ்யாசத்தை நிறைவு செய்கிறேன்.
கொயி போலே ராம் ராம் கோயீ குதாய்
कोई बोले राम राम कोई खुदाय
koi bolE rAm rAm koi khudhAi
(சிலர் உம்மை ராம் என்று போற்றுவர் சிலர் குதா (இறைவன் – உர்தூ) என்று போற்றுவர்)
கோயீ சேவே கொசாய்ன் கோயீ அல்லாஹ்
कोई सेवे गुसैयां कोई अल्लाह
koI sEvE gosai(n) koI allAh
(சிலர் உம்மை கொசாய்ன் (Gosain) (சாது – சந்த்) என்றும் அல்லாஹ் என்றும் சேவை செய்வர்)
காரண் கரண் கரீம்
कारण करण करीम
kAraN karaN karIm
(ஆயின் நீயோ காரணங்களுக்கெல்லாம் காரணமானவன்)
கிர்பா தார் ரஹீம்
कृपा धार रहीम
kirpA dhAr rahIm
(எல்லோர் மீதும் உனது அன்பு மற்றும் கருணையைப் பொழிவாய்)
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!
பாரதத் தாயைப் பணிந்து வணங்கும் வீர மைந்தர் நாம்
அர்ப்பணமாவோம் அவள் தாளினிலே தூய நினைவுடனே
அமரர் ஸ்ரீ மலர்மன்னன் மஹாசயர் அவர்களது தூய அர்ப்பணிப்பும் ஆழ்ந்த ஆன்மீகமும் நம்மை வழிகாட்டுவதாக.
அகண்ட ஹிந்துஸ்தானம் மீண்டும் மலரட்டும்.
- இஸ்லாமும் உளவியல் பகுப்பாய்வும்
- விண்கற்கள் தாக்குதலைக் கையாள அகில நாட்டு பேரவைப் பாதுகாப்புக் குடையை அமைக்க ரஷ்யத் துணைப் பிரதமர் அழைப்பு
- ரியாத்தில் தமிழ் கலை மனமகிழ் மன்ற ((TAFAREG) விழா!
- கதையும் கற்பனையும்
- நானும், நாமும்தான், இழந்துவிட்ட இரு பெரியவர்கள்
- காரைக்குடி கம்பன் கழகப் பவளவிழா அழைப்பிதழ்
- பிரதிநிதி
- சமாதானத்திற்க்கான பரிசு
- பாசச்சுமைகள்
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -8
- அமேசான் காடுகளும் சஹாரா பாலைவனமும் எப்படித் தோன்றின.?
- இருள் தின்னும் வெளவால்கள்
- மந்திரச் சீப்பு (சீனக் கதை)
- வாழ்வியல்வரலாற்றில்சிலபக்கங்கள்-46
- மார்கழி கோலம்
- PAPILIO BUDDHA : Bangalore screening on SUNDAY 3 MARCH 2013
- வாலிகையும் நுரையும் – கலீல் ஜிப்ரான் (13)
- சுமை
- வெள்ளிவிழா ஆண்டில் “கனவு“ சிற்றிதழ்
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 2
- நீலபத்மம், தலைமுறைகள் விருதுகள் வழங்கும் விழா… 26 ஏப்ரல் 2013..
- மாமன் மச்சான் விளையாட்டு
- நிழல்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -13 என்னைப் பற்றிய பாடல் – 6 (Song of Myself)
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து………..19. வெங்கட் சாமிநாதன் – ‘இன்னும் சில ஆளுமைகள்’
- மிரட்டல்
- கவிதைகள்
- தாகூரின் கீதப் பாமாலை – 54 என் மனதில் இருப்பதை அறிபவன் !
- போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 10
- தன் வரலாற்றுப் பதிவுகளில் அடித்தள மக்கள்
- திருக்குறளில் ‘இயமம் நியமம்’
- அக்னிப்பிரவேசம்-25
- ஹிந்துமத வெறுப்பென்பது மதஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தைப் பேணுதல் ஆகாது மஹாத்மா காந்தியின் மரணம் – ஒரு எதிர்வினை – பாகம் – 2