கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரு கதைகளுக்கு இடையே (கவிதை -40 பாகம் -1)

This entry is part 6 of 51 in the series 3 ஜூலை 2011

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

கடலை இப்போது விட்டுக்
காய்ந்து போன
கரைத் தளத்துக்கு வா !
குழந்தைகள் அருகிலே நீ
பழகி வரும் போது
விளையாட்டு பொம்மையைப் பற்றி
உரையாடு !
தெளிவ டைந்த குழந்தைக்குச்
சலிப்பு உண்டாக்கும்
களிப்புச் சாத னங்கள்
சிறுகச் சிறுக,
அறிவு ஆழம் பெற்ற
பிறகு ! இப்போதே
உள்ளத் தில் அவர்க்கு
உள்ளதோர் பூரண உணர்வு !
பித்த ரென்றால்
பிரியமாய் விளையா டுவாரா
பிள்ளை களோடு ?

++++++++++++

கேட்டாயா அந்தத் தகவலை ?
திருவினைத்
தேடிச் செல்பவன்
ஆடவன் !
அவன் குரல் கேட்டி லையா ?
அப்படி யாயின்
என்னுள் இருந்து
அந்த அரவம் வர வேண்டும் :
“தேடும் செல்வம் இதோ !
ஓடிவா இங்கே !”
முனைந்து தேடுபவன் என்று
நினைத்திடாய் !
மனிதன்
என்ன தேடிச் செல்வான்
தன்னைத் தவிர ?
காதலன் எப்படி வாழ முடியும்
காதலி யைத் தவிர்த்து ?

++++++++++

ஒவ்வொரு வினாடியும்
கண்ணாடி
முன் நின்று
தன்னை வணங்கும் மனிதன்
ஆடியின் மூலக்கூறு ஒன்றைக்
கண நேர மாவது
கனவு மயக்கத்தில்
காண முடிந்தால்
மேனி வெடித்துப் போவான் !

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (June 27, 2011)

Series Navigationமுன்பொரு காலத்தில் ஒரு மன்னன் இருந்தான்கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -3)
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *