5.
”உள்ளூர்ல இருந்துக்கிட்டே பொண்டாட்டியைஏமாத்துறவங்க எண்ணிக்கை நாளூக்கு நாள் அதிகமாயிட்டிருக்கு! ஃபாரீன் மாப்பிள்ளை யெல்லாம் எனக்கு வேணவே வேணாம்ப்பா, எனக்கு. அங்கேயே எவளையானும் வச்சிருப்பான் அவன்!”என்று ராதிகா வாரியிறைத்த சொற்களின் கடுமையால் தாக்குண்டு அந்த நால்வரும் சில நொடிகளுக்கு திகைப்புற்று வாயிழந்து போனார்கள்.
அவளால் பழிக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் தாங்கள் இருவரும் என்கிற முறையில் தீனதயாளனும் பூரங்கமும் ஒருவரை யொருவர் பார்த்துக்கொண்டபின் விழிகளின் சந்திப்பைத் தவிர்த்துக்கொண்டார்கள்.
பெண்மணிகள் இருவரும் அப்படியே அதிர்ந்து போனார்கள். மேற்கொண்டு சில கணங்களுக்கு அங்கே யாருமே வாய்திறக்கவிலை.
இறுக்கமான அந்த அமைதியைத் தனலட்சுமிதான் கலைத்தாள். என்னங்க இது! இவ் காதுக்குச் சில மோசமான ஆம்பளைகளோட அக்கிரமம் பத்தின சேதி எட்டியிருக்குன்னு தோணுது. அப்படிச் சின்னவீடு வெச்சிருய்க்கிறவங்க அயோக்கியங்களோட பொண்ணுங்க யாராச்சும் இவளோட சிநேகிதியோ என்னவோ. அதான் இம்புட்டு ஆவேசமாப் பேசிட்டுப் போறா.”
ராதிகாவின் கையைப் பிடித்து நிறுத்திய நாகம்மாள், இத பாரு, ராதிகா. நீ ஒண்ணும் என் நாத்தனார் மகனைக் கட்ட வேணாம். கொஞ்ச நேரம் இப்படி எங்களோட உக்காரு, சொல்றேன். நாம சந்திச்சு எம்புட்டு நாளாச்சு. உக்காரும்மா!” என்று கெஞ்சுதலாய்க் கூற, ராதிகா, இல்லே, பெரியம்மா. காலையில பாத்துப் பேசலாம். எனக்குப் படிக்க வேண்டியது நிறைய இருக்கு. அதான், ப்ளீஸ் தப்பா எடுத்துக்காதீங்க. நாளைக்கு ஞாயித்துக் கெழமைதானே? ரெண்டு பேரும் இங்கேயே மதியச் சாப்பட்டை முடிச்சுட்டு அப்பால சாயங்காலமாக் கெளம்பிப் போகலாம். சாவகாசமா உக்காந்து பேச்லாம்…. ப்ளீஸ்!’
”சரிம்மா, போய்க்க!”
”குட் நைட், எல்லாருக்கும்!” என்ற ராதிகா தனது அறைக்குப் போய்க் கதவைச் சாத்திக்கொண்டாள்.
மூடிக்கொண்ட கதவைப் பார்த்து தனலட்சுமி பெருமூச்செறிய, தீனதயாளனும் வெளியே ஓசை கேட்காதவாறு சன்னமாய் உள்ளுக்குள் நெடுமையாக மூச்சுவிட்டுக்கொண்டார்.
பூரங்கம், ”இந்தக் காலத்துப் பசங்களை – ஆம்பளைப் பிள்ளைங்களானாலும் சரி, பொம்பளப்பிள்ளைங்களானாலும் சரி – விட்டுத்தான் புடிக்கணும். என்ன செய்யிறது? காலம் ரொம்பவும் மாறிடிச்சு. நாம வாழ்ந்த காலம் இல்லே இது!” என்றார்.
”உண்மைதான்!” என்று கூறி தீனதயாளன் அவருடன் ஒத்துப்போனார்.
“அதுக்குன்னு ஒரேயடியா அதுங்க இஷ்டத்துக்கு நடந்துக்க விட்டுட முடியுமா என்ன? சின்னதுகளுக்கு நல்லது, கெட்டது எப்படித் தெரியும்? உலக அனுபவம் இல்லாததுனால அப்படித்தான் துள்ளுவாங்க. நாமதான் தலையிட்டு – அதுங்க திட்டினாலும் திட்டட்டும்னு – வழி காட்டணும். இல்லாட்டி, அப்பால், நாளைக்கி, ‘இந்த அம்மாவ்யும் அப்பாவும் நம்மளைக் கண்டிச்சு நல்ல வழி காட்டலை’ ன்னு அதுங்களுக்கு ஒரு வருத்தமோ மன்க்குறையோ வரக்கூடாதில்லே?” எனற தனலட்சுமியுடன், அதுவும் மெய்தான்,” என்று கூறி நாகம்மாள் பெருமூச்சு விட்டாள்.
”படுக்கிறதுக்கு முந்தி ராத்திரி பால் சாப்பிடுவீங்கதானே?” என்று தனலட்சுமி பூரங்கத்திடம் வினவ, “அய்யோ! வாணாம்மா. கல்யாணச் சாப்பாடு வயிறு முட்டச் சாப்பிட்டிருக்குறோமில்ல? வெத்திலையும் போட்டாச்சு. உங்க அக்கா வேணும்னா குடிக்கட்டும். அது வெத்திலை போடல்லே.”
”நான் மட்டும் என்ன ராட்சசியா? … நீயும் அத்தானும் குடிங்க, தனம். ராதிகா குடிச்சாச்சா?”
”இன்னும் இல்லே. நாங்களும் கொஞ்ச நேரம் கழிச்சுக் குடிக்கிறோம். சாப்பாடு சாப்பிட்டுக் கொஞ்ச நேரந்தான் ஆகுது…வா, நாகம்மா. இவங்க ரெண்டு பேரும் இங்க் உக்காந்து பேசிக்கிட்டிருக்கட்டும். நாம சமைய்க்கட்டுக்குப் போயிறலாம். கழுவித் தள்ளுற வேலை பாக்கி இருக்குது. ..” என்று கூறியவாறு தனலட்சுமி எழ, நாகம்மாளும் எழுந்துகொண்டாள்.
”நம்ம கூட இங்கிட்டே உக்காந்து ரெண்டு பொம்பளைங்களும் பேசுதுங்களா, பாத்தீங்களா, மச்சான்? தனியாப் போய்ப் பேசுதுங்களாம்!”
”நம்ம ரெண்டு பேத்தையும் திட்டிப் பேசுவாங்களா யிருக்கும். அதான் எந்திரிச்சுப் போகுதுங்க!” – பூரங்கம் இவ்வறு கூறிச் சிரிதத சிரிப்பில் தீனதயாளனும் கலந்துகொண்டாலும், அவரது முகம் பெருமையில் மலர்ந்திருந்தது.
”உன் விஷயம் எனக்குத் தெரியாது, மச்சான். ஆனா, தனம் என்னை ஒருக்காலும் திட்ட மாட்டா. திட்டும்படி நான் நடந்துக்கிறதும் இல்லே. – இவ்வாறு சொல்லி முடித்த மறு நொடியே அவரது நெஞசுக்கூடு படபடவென்றது.
’எத்தனையோ பேரைப் பாத்தாச்சு, பெரியப்பா சந்தோஷமா யில்லைங்கிறதைப் புரிஞ்சுக்கிட்டு மனக்கஷ்டப்பட்றவங்களை விட, தாங்கள் சந்தோஷமா யில்லை, கல்யாணம்கிற உறவு தங்களை ஏமாத்திட்ட ஒரு வெவகாரம்கிறதைப் புரிஞ்சுக்கக்கூடச் செய்யாம சில பொண்ணுகள் – ஏன்? பல பொண்ணுகள் – ஒரு பொய்யான சந்தோஷத்துல தங்களைத் தாங்களே ஏமாத்தி வாழ்ந்துக்கிட்டு இருக்காங்க. அதுதான் ரொம்பக் கொடுமை!’ என்று ராதிகா வாரி இறைத்த கடுஞ்சொற்கள் தீனதயாளனின் செவிப்பறையில் ஒலித்து, மோதிச் சிதறின.
கொஞ்ச நேரத்துக்கு முன்னால் அவருள் விளைந்திருந்த நெருடல் இப்போது அதிகத் தீவிரங் கொண்டது. தம்மைப்பற்றி ராதிகா அரசல் புரசலாய்த் தெரிந்துகொண்டு விட்டிருக்க வேண்டுமென்பது உள்ளுணர்வாக அவருக்குப் புரிச்து போனதில், நெஞ்சுக்குள் ஆழமாக ஒரு பள்ளம் ஏற்பட்டது.
ராதிகாவை – அவள் தாயைக்காட்டிலும் – தாமே அதிகமாய் அறிந்தவர் என்பதாய் அவருக்கு எண்ணம் இருந்தது. தம்மைப் பற்றிய உண்மை மெய்ப்போக்காக அவருக்குத் தெரிந்து போயிருந்திருப்பின், இனி அவளது அன்பை மறுபடி பெறுவது என்பது தம்மால் இயலப் போவதில்லை என்கிற எண்ணம் அவரைத் துணுக்குறச் செய்தது.
ஆனால், எந்த அடிப்படையில் ராதிகா அப்படியெல்லாம் பேசினாள் என்பதைத் திட்டவட்டமாய்த் தெரிந்துகொள்ளாமல் எந்த முடிவுக்கும் வந்து விடவும் அவர் தயாராக இல்லை. இல்லாத எதையோ இருப்பதாக அசட்டுத் தனமாய்க் கற்பனை செய்துகொண்டு தம் தலையில் தாமே மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டு விடக்கூடாது என்று அவர் எண்ணினார். எனவே, மகளின் ஜாடைமாதையான பேச்சுகளின் உண்மைப் பின்னணி என்ன வென்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும் என்றும், அதற்குப் பிறகே எந்த முடிவுக்கும் வர வேண்டும் என்றும் அவர் தமக்குள் கூறிக்கொண்டார்.
‘’என்ன, மச்சான், ஏதோ யோசனையில மூழ்கிட்டீங்க?”
”எல்லாம் ராதிகாப் பொண்ணைப் பத்தின யோசனைதான். இந்தப் பொண்ணு என்ன இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போடுது?”
”வெளையாட்டுப் போண்ணு. எல்லாம் நேரம்னு வர்றப்ப வழிக்கு வந்துடுவா. கவலைப்படாதீங்க. நிறையக் கஷ்டப்பட்ட பொண்ணுங்களைப் பத்தின கதைங்க அவ காதை எட்டி யிருக்கும். அதான், கல்யாணம்னாலே ஒரு பயமும் வெறுப்பும் வந்திருக்கும்.”
தமது இராண்டாம் வாழ்க்கை பற்றி ராதிகா கண்டுபிடித்திருப்பின், ஏமாந்து போய்ப் பொய்யான மகிழ்ச்சி வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கும் பெண்களில் தனலட்சுமியும் அடக்கம் என்பதைத் தமக்குத் தெரியப்படுத்தவே அந்த அவளது குமுறல் என்பது வெளிப்படுத்திய அதிர்ச்சியில் அவர் அப்படியே இடிந்து போனார்.
’எத்தனை ஆண்டுகளாய் நான் கட்டிக்காத்து வரும் ரகசியம் அது! எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்து வருகிறேன்! எப்படி இவளுக்கு அது தேரிந்து போயிருக்கும்? ஒன்றுமே புரியவில்லையே! இல்லாவிடில், எனது குற்றமுள்ள நெஞ்சத்தின் குறுகுறுப்பால் இல்லாத பொல்லாத கற்பனைக ளெல்லாம் தோன்றுகின்றனவா?’
`”ஒண்ணும் கவலைப் படாதீங்க, மச்சான். நீங்க சொல்ற மாதிரியே, விட்டுப் பிடிக்கலாம். இப்போதைக்கி அவ கிட்ட கல்யாணத்தைப் பத்திப் பேச்சே எடுக்காதீங்க. சரியா?”
”சரி. நானும் அப்படித்தான் நினைக்கிறேன். ஆனா தனலட்சுமிதான் அவளைக் கெளறாம இருக்கணும்……”
”அதெல்லாம் ஒண்ணும் கெளறாது – நானும் நாகம்மாவும் ஸ்ட்ராங்கா தனம் கிட்ட சொல்லி வைக்கிறோம். ஆனா, இதுக்கிடையில என் ஒண்ணுவிட்ட தங்கை மகன் – கானடா மாப்பிள்ளைப்பையன் – பத்தி வெசாரிச்சு வைக்கிறேன்.
”ஆமாமா. வெசாரிச்சு வையுங்க. நாம என்ன வாக்குறுதியா தர்ப்போறோம்? ஜஸ்ட், கேட்டு வெச்சுக்கப் போறோம். என்ன கேப்பாங்க, கொள்ளுவாங்க், வேற என்னென்ன எதிர்பார்ப்பாங்க அது மாதிரியான விவரங்களைத்தானே கேக்கப் போறோம்? எல்லாத்தையும் வெசாரிச்சுட்டு எனக்கு ஆஃபீசுக்கு ஒரு ஃபோன் போட்டஈப் போதும். அப்பால, ராதிகாவோட படிப்பு முடிஞ்சதுக்குப் பெறகு அவ கிட்ட கல்யாணம் பத்திப் பேசலாம்…”
” சரி… ரகு லெட்டர் போட்டுக்கிட்டு இருக்கானா?”
”உம். … அவனுக்கும் இருபத்திநாலு வயசு ஆகுது. ராதிகா கல்யாணத்தை முடிச்ச பெற்குதான் அவனுது…”
”ஆமாம. தங்கச்சிக்குப் பண்ணாம அண்ணனுக்குப் பண்ணுறது சரியில்லியே?”
அப்போது தனலட்சுமியும் நாகம்மாவும் ஒருசேர எதற்கோ பெருங்குரலெடுத்துச் சிரித்தது இருவர் செவிகளிலும் விழுந்தது. இருவரும் புன்சிரிப்புக் கொண்டார்கள்.
”இந்த ரெண்டு பொம்பளைங்களும் சேந்தாப் போதும். ஒரே அட்டகாசந்தான்!” என்று பூரங்கம் சிரிக்க, இருவருள் அதிகமாய்ச் சிரித்தது தனலட்சுமியே என்பதால் தீனதயாளனின் குற்ற உணர்ச்சி அதிகத் தீவிரமுற்று அவரது நெஞ்சினுள் சுருக்கென்று ஒரு குத்தல் விளைந்தது.
’கடவுளே! இது வரைக்கும் அமைதியாய்ப் போய்க்கொண்டிருக்கும் என் வாழ்க்கையைத் திசை திருப்பி விட்டுவிடாதே! தனலட்சுமியின் மகிழ்ச்சிக்குப் பஙம் விளைவித்துவிடாதே!’ – இவ்வாறு தீனதயாளன் தம் மனத்துள் வேண்டிக்கொண்டார். தனலட்சுமியின் மகிழ்ச்சி என்பதாய்த் தாம் குறிப்பிட்டது தமது மகிழ்ச்சியையே முழு அளவில் குறித்த உண்மை என்பதால், அடுத்த கணமே அவருள் ஒரு சிறுமை உணர்ச்சி பரவியது.
உண்மை தெரிய வந்தால், மிக உயர்ந்த பீடத்தில் தம்மை அமர்த்தி ஆராதித்து வரும் தனலட்சுமி தன்னை மன்னிப்பாளா என்கிற கேள்வி அவருள் ஒரு மலைப்பையும் திகிலையும் தோற்றுவித்தது. ‘ஆனால், ராதிகாவுக்கு உண்மை தெரிந்து விட்டதா இல்லா விட்டால் அவள் பேசியது எல்லாம் பொதுவான பேச்சா என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது? ….யோசிக்க யோசிக்க அவருக்கு மண்டை வெடித்துவிடும் போல் ஆயிற்று.
’எப்படிக் கண்டு பிடிப்பது? எப்படிக் கண்டு பிடிப்பது – அவளே சொன்னாலொழிய….?’
”ஒண்ணும் கவலைப் படாதீங்க, மச்சான். எல்லாம் நல்லபடியாவே நடக்கும்.”
அப்போது தனலட்சுமியும் நாகம்மாளும் கூடத்துக்கு வந்தார்கள். தனலட்சுமியின் கையில் பால் தம்ப்ளர் இருந்தது. அதை வாங்கிப் பருகிய தீனதயாளன் தம்ப்ளரை முக்காலியின் மீது வைத்தார்.
”மணியாச்சு. எல்லாரும் படுக்கலாம். அத்தானை நீங்க உங்க ரூமுக்குக் கூட்டிட்டுப் போங்க. நானும் நாகம்மாளும் இப்படி கூடத்துலேயே பாயை விரிச்சுப் படுத்துக்குறோம்….”
இரண்டு ஆண்களும் எழுந்துகொண்டார்கள்.
”அது சரி, அதென்ன அப்ப்டி ஒரு சிரிப்புச் சிரிச்சீங்க ரெண்டு பேரும்?”
”நீங்க ஏதேதோ பேசுறீங்க, சிரிக்கிறீங்க, நாங்க வந்து என்ன, ஏதுன்னு கேக்குறோமா? எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும்.”
”பரவால்ல. நீங்க ரெண்டு பேரும் பணக்காரிங்கதான். எங்க ரெண்டுபேரு கிட்டவும் சேந்து மொத்தமே ஐநூறுதான் இருக்கு.,” என்று பூரங்கம் கூற, போதும், அறுக்காதீங்க!” என்ற நாகம்மாள் அங்கிருந்து நீங்கினாள்.
பிறகு எல்லாரும் படுக்க, அந்த வீடு மங்கிய வெளிச்சத்தில் ஆழ்ந்தது. அதற்குப் பிறகு ராதிகா தன்னறைக் கதவைத் திறந்துகொண்டு சமையற்கட்டுக்குப் போய்ப் பாலை எடுத்துக் குடித்துவிட்டுத்தானும் படுத்துக்கொண்டாள். ஆனால், வெகு நேரம் வரையிலும் உறக்கம் வரவில்லை. விட்டத்தை வெறித்துக்கொண்டு படுத்திருந்தாள்.
jothigirija@live.com
- பொன்விழா காணும் தமிழ்ச் சீன வானொலி
- கணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் – சான்றிதழ்ப் படிப்பு
- மாணவ நெஞ்சில் நஞ்சு கலக்கும் கிராதகர்கள்
- சின்னஞ்சிறு கிளியே
- காலத்தின் கொலைகாரன்
- அமெரிக்க அனுபவங்கள் – ஒரு சமூகவியல் பார்வை – புத்தக மதிப்புரை ஆசிரியர் – நாகேஸ்வரி அண்ணாமலை
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -18 என்னைப் பற்றிய பாடல் – 11
- சங்க இலக்கிய மகளிர்: விறலியர்
- தங்கமே தங்கம்
- விண்மீனை தேடிய வானம்
- தாகூரின் கீதப் பாமாலை – 59 காதல் தரும் நித்தியப் புத்துணர்ச்சி !
- வெல்லோல வேங்கம்மா
- கனிகரம்
- பணிவிடை
- 40ஆவது இலக்கிய சந்திப்பு! லண்டன்
- செயற்கைக் கதிரியக்கம் உருவாக்கி நோபெல் பரிசு பெற்ற ஐரீன் ஜோலியட் கியூரி [Revised]
- அகல்விளக்கு புதினத்தில் வாழ்வியல் விழுமியங்கள்
- எம்.வி.வெங்கட்ராமின் “வேள்வித் தீ” புதினம் காட்டும் சௌராஷ்டிரர்களின் வாழ்வும் பண்பாடும்
- வெற்றிக் கோப்பை
- புரிந்துணர்வின் மென்னிழைகளால் தன்னுலகை உருவாக்கும் எஸ். கிருஷ்ணமூர்த்தி
- போதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 15
- புகழ் பெற்ற ஏழைகள் – சார்லி சாப்ளின்
- நம்பி கவிதைகள் இரண்டு
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 5
- அக்னிப்பிரவேசம்-29
- நன்றியுடன் என் பாட்டு…….அத்தியாயம் – 3
- முத்தம்
- விஸ்வரூபம் – விமர்சனங்களின் அரசியல்
- புகழ் பெற்ற சமூகவிரோதி – ஷேக்ஸ்பியர்
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -2 பாகம் -4 மூன்று அங்க நாடகம்
- தமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத் பற்றிய குறும்படம்