குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 8

This entry is part 29 of 29 in the series 28 ஏப்ரல் 2013

ஜோதிர்லதா கிரிஜா

8.

தயாவின் அலுவலகத் தோழி ரமாதான் வந்துகொண்டிருந்தாள். அடிக்கடி வந்துபோகிற வழக்கம் உள்ளவளாதலால், ஈசுவரனும் ரேவதியும் அவளை வரவேற்ற பின்

தத்தம் அலுவலைப் பார்க்கப் பிரிந்தனர்.

……“வாடி, வா”

”பக்கத்துத் தெருவுக்கு வந்தேனா? அப்படியே இங்கேயும் தலையைக்

காட்டலாம்ன?ு? வந்தேன். . .ஆமா? ஏண்டி, மூஞ்சியெல்லாம் ஒரு மாதிரி இருக்கு?

அழுத மாதிரி?”

தயா பதில் சொல்லாதிருந்தாள்.

ரமா,மெதுவாக, “எனக்கு எல்லாம் தெரியும்டி, தயா. சங்கரன் சொன்னார்.

ஆனா, தெரியாத மாதிரி உங்கம்மா அப்பா கிட்ட நடிக்கப் போறேன்,” என்று கூறிப்

புன்னகைசெய்தாள்.

குரலைத் தாழ்த்திக்கொண்ட தயா, “மத்ததை அப்புறம் பேசலாம். ஆ?ன?ா? ஒ?ண்ணு மட்டும் இப்பவே சொல்லிடறேன். நான் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்

பட்றவன் டில்லியிலே டி·பென்ஸ் டிபார்ட்மெண்ட்ல அக்கவுண்டண்டா இருக்கிறதா

இவா கிட்ட சொல்லியிருக்கேன். அவா விசாரிச்சா நீயும் அப்படியே சொல்லிடு. . .”

என்றாள்.

“சரி. இப்ப நான் ரொம்ப முக்கியமான விஷயமா உன்னைப் பாக்க வந்திருக்கேண்டி.”

“சொல்லு.”

அப்போது சமையலறையிலிருந்து எட்டிப் பார்த்த ரேவதி, “அடியே, ரமா!

இங்கே கொஞ்சம் வந்துட்டுப் போ. உன்னோட கொஞ்சம் பேசணும்,” என்று குரல்

கொடுத்தாள்.

“இதோ வந்துட்டேன், மாமி. நானே உங்களோட கொஞ்சம் பேசணும்,” என்ற

ரமா ரேவதியின் முன்னால் சென்று நின்றாள்.

“நீ என்ன பேசப் போறே?”

“தயா ஏன் ரொம்ப அழுது மாஞ்ச மாதிரி இருக்கா?”

“அவளையே கேக்கறதுதானே?”

“கேக்கத்தான் போறேன். அதுக்குள்ள நீங்க கூப்பிட்டேளா? வந்தேன். என்ன

விஷயம்? தயா எதுக்கு அழுதிருக்கா?”

“வெள்ளிக?்? கிழமையன்னிக்கு தயாவும் சாம்பவியும் வழக்கம் போல கபாலீசுவரர்கோவிலுக்குப் போனா. அப்ப அம்மாவும் பிள்ளையுமா ரெண்டு பேர் – அவா

திருநெல்வேலிக்காராளாம். – இங்க ஏதோ கல்யாணத்துக்கு வந்திருக்கா – அம்மன்சந்நிதியில தயாவைப் பாத்திருக்கா. ரொம்பப் பெரிய பணக்காரா. திருநெல்வேலியில?

காப்பி எஸ்டேட் இருக்காம். மூணு பங்களா இருக்காம். சொத்தான சொத்தாம்.

அந்தப் ப?ி?ள?்?ள?ை?க்கு இவளை ரொம்பவே பிடிச்சுப் போயிடுத்து. அவா பின்னாலேயே வந்து வீட்டைத் தெரிஞ்சுண்டு இங்கே இருக்கிற சொந்தக்காராளை நேத்து அனுப்பி

வெச்சா. இ?வ?ள?ு?க?்?கு ஒரு அக்கா இன்னும் கல்யாணம் ஆகாம நின்னுண்டிருக்கிறதால, எங்க கையில இப்ப சத்தியா முப்பதாயிரம் அவ கல்யாணச் செலவுக்குன்னு தராளாம். அது மட்டுமா? நாளைக்கு அவளுக்குக் கல்யாணம் கூடி வர்றச்சே அவாளே எல்லாச்

செலவையும் ஏத்துக்கறாளாம். . . தயாவையும் அவாளே செலவு எல்லாத்தையும்

ஏத்துண்டு பண்ணிக்கிறாளாம். இது மாதிரி பொண்ணாத்துக் காராளுக்கு முப்பதாயிரம்கையில குடுக்கிற அதிசயம் பத்தி சின?ி?மாவில கூட நாம பாத்ததில்லே, இல்லியா?

உன்னோட அருமந்த சிநேகிதி அவனைப் பண்ணிக்க மாட்டாளாம். எவனையோ லவ் பண்றாளாம். ஏதுடா, இருபத்தெட்டு வயசு ஆயிட்ட அக்காவுக்கும் சேத?்?து ஒரு

வாழ்க்கை அமையறதே, கொஞ்சம் விட்டுக் குடுப்போம்கிறதைக் காணல்லே. லவ்வாம், லவ்வு! நீ கொஞ்சம் அவளுக்கு எடுத்துச் சொல்லுடி, அம்மா.”

ரமா சிரிப்பை யடக்கிக்கொண்டு ரேவதியைப் பார்த்தபடி ஒன்றும் சொல்லா

திருந்தாள்.

“என்னடியம்மா, ஒண்ணும் சொல்லாம முழிச்சுப் பாக்கறே? நீயும் எவனை

யாவதுலவ் பண்றியா என்ன? அது மாதிரின்னா, உனக்கெங்கே நியாயம் புரியப்

போறது?”

“அப்படி யெல்லாம் எதுவும் இல்லே, மாமி. ஆனா, நீங்க சொல்றது எனக்கு

நியாயமாப் படல்லே.”

ரேவதியுள் சினம் சிலிர்த்துக்கொண்டு எழும்பிற்று. அடக்கிக்கொண்டு கேட்டாள்: “அந்தப் பையனை உனக்குத் தெரியுமா?”

“எங்க ரெண்டு பேருக்கும் தெரிஞ்சவர்தான், மாமி. டில்லியில டி·பென்ஸ்

டிபார்ட்மெண்ட்ல இருக்கார்.”

ரேவதியின் முகத்தில் இலேசாய்த் தென்பட்ட சந்தேகக் கீற்று உடனே அகன்றது.

‘அம்மாடி! இங்க கிட்டத்துலே இல்லே. அதனால இவளால உடனே அவனை இங்க

வரப் பண்றதோ, உடனே வேற எதுவும் பண்ணிக் காரியத்தைச் சாதிச்சுக்கிறதோ

முடியாது. . .’

“சரிடியம்மா. அவ பக்கமே நியாயம் இருக்கிறதா வெச்சுக்கலாம். இருபத்தெட்டுவயசு வரைக்கும் கல்யாணம் ஆகாத அக்காவுக்காக இவ விட்டுக் குடுக்கக்கூடாதா?”

“தயா ரொம்ப நல்லவ, மாமி. உங்க பொண்ணை உங்களுக்குத் தெரியாதா

என்ன? நான் என்ன சொல்றது! இது மாதிரி ஒருத்தர் மேல அவ மனசு போகாம

இருந்திருந்தா, சாம்பவிக்காக அவ யாரை வேணும்னாலும் கல்யாணம் பண்ணிக்கத் த?யாரா இருப்பா. ஆனா, ஏற்கெனவே ஒருத்தனைப் பிடிச்சுப் போயிட்டதால, மனசு

ஒட்டாம இன்னொருத்தனோட வாழ அவளுக்குப் பிடிக்கல்லே.”

“என்னடி, பெரிய மனசு! மாமி பட்டவர்த்தனமாப் பேசறாளேன்னு

நெனைக்காதே. மனசு கினசுங்கிறதெல்லாம் சும்மாடி. அது ஒரு பிரமை. உடம்புதான்

பிரதானம்.”

ரமாவின் முகம் சிவந்துவிட்டதைக் கவனித்துச் சிரித்த ரேவதி, “உங்களுக்

கெல்லாம் தெரியாத விஷயங்களே இல்லே. அதான் வெளிப்படையாப் பேசறேன்.

கல்யாணம்கிறது உடம்புக்காகச் செஞ்சுக்கிறதுதான். மனசாவது, மண்ணாங்கட்டியாவது! மனசுதான் முக்கியம்னா, இந்த உலகத்திலே இத்தனை ஜனப் பெருக்கம் இருக்குமோ?

எல்லாம் கல்யாணம்னு ஒண்ணு ஆயிட்டா சரியாப் போயிடும்டி யம்மா. நீ சொல்றபடி மனசுதான் முக்கியம்னா உன் சிநேகிதி தன் புருஷனோட மனசு ஒட்டாமதான் வாழ்ந்துட்டுப் போறது. அவன் என்ன கண்டு பிடிக்கவா போறான்! உடம்பு வேற, மனசு

வேறன்னா அது சாத்தியம்தானே?” என்றாள்.

ரமா அயர்ந்து போனாள்: “மாமி! நீங்க வக்கீலுக்குப் படிச்சிருக்கணும்.

பிரமாதமா வந்திருப்பேள்.. . . சரி. மனசு ஒட்டாமதான் வாழ வேண்டி வரும். ஆனாஅது தப்புன்னு உங்களுக்குத் தோணல்லியா? மனசு ஒருத்தன் கிட்டேயும், உடம்பு

இன்னொருத்தன் கிட்டேயுமா ஒரு பொண்ணால சந்தோஷமா இருக்க முடியுமா?”

“அதுக்கும் அவாவா மனசுதாண்டியம்மா காரணம். முதல்ல கொஞ்ச நாள் கஷ்டமாத்தான் இருக்கும். நான் இல்லேங்கல்லே. ஆனா ஒரு கொழந்தை பொறந்துட்டா

எல்லாம் சரியாயிடும். ஒருத்தன் மேல ஆசைப் பட்றதுங்கிறது கிட்டத்தட்ட எல்லாப்

பொண்ணுகள் வாழ்க்கையிலேயும் நடக்கிறதுதான். ஆனா, எல்லாரும் நெனைச்சவனை

யேவா கல்யாணம் பண்ணிக்கிறா? இல்லவே இல்லே. யாராருக்கு எங்கெங்க

விதிச்சிருக்கோ அங்கங்கதான் வாழ்க்கை அமையும்! இது மாதிரி ஒரு அதிருஷ்டம்

கதைப் புஸ்தகத்திலயோ சினிமாவிலயோ கூட எனக்குத் தெரிஞ்சு எந்தப்

பொண்ணுக்கும் அடிச்சதில்லே. இவளுக்கு அடிச்சிருக்கு! நீ தான் அவளுக்கு எடுத்துச்சொல்லணும். ·ப்ரண்ட் சொன்னா அது மாதிரியே வேறதான். என்ன? சொல்லுவியா?”

“எனக்கு இது சரியாப் படாட்டாலும் உங்களுக்காக வேண்டி அவளோட பேசிப்பாக்கறேன், மாமி.”

“பேசுடியம்மா. ரெண்டு பேரும் பிராண சிநேகிதிகளாச்சே! நீ சொன்னா

ஏத்துப்பா. சொல்ற விதமாச் சொன்னா எடுபடும். நீதான் கெட்டிக்காரியாச்சே! உனக்கு நான் சொல்லித்தரணுமா என்ன? இருந்தாலும் சொல்றேன். நீ சொல்ல வேண்டிய

முக்கியமான விஷயம் இதுதான் : படிக்காத சாம்பவிக்கு இருபத்தெட்டு வயசு

ஆயிடுத்து. குடும்பம் இருக்கிற இருப்பில அவளைக் கரையேத்தறது ரொம்பக் கஷ்டம்.அவ பிரச்னையும் தீரும், இவ பிரச்னையும் தீரும்கிறச்சே, தயா விட்டுத்தான்

குடுக்கணும். எங்களுக்கும் வயசு ஆயிண்டிருக்கு. காடு வா, வாங்கிறது, வீடு போ,

போங்கிறது. எங்க காலத்துக்கு அப்புறம் இவாளுக்குத் துணை வேண்டாமாடியம்மா?”

“காடு வா, வாங்கிறது, வீடு போ, போங்கிறதுங்கிறதுக்காக யாரும் அவாவா

ஆசைகளைக் கட்டுப் படுத்திக்கிறதில்லே, மாமி.”

அழுத்தமாகவும் ஒரு தோரணையுடனும் வெளிப்பட்ட ரமாவின் சொற்கள்

சாதாரணமாய்ச் சொல்லப்பட்டவையாகத் தோன்றாததால், ரேவதிக்குத் திக்கென்றது.

‘என்ன சொல்ல வருகிறாள் இந்தப் பெண்?’

“மாமி! நீங்க பெரியவா. ஆனாலும் எறங்கி வந்து எனக்குச் சரியாப் பேசறேள்.அதனால?, நானும் பேசறதுக்காக என்னை மன்னிக்கணும். ஓரொருத்தருக்கு ஓரொரு

ஆசை, மாமி. ஆசையை அடக்குறதுங்கிறது மனசை அடக்குறதுதான். இல்லியா?

இப்படி யெல்லாம் உங்களோட பேசறதுக்கு எனக்குக் கஷ்டமா யிருக்கு. ஆனாலும்

நீங்க தொடங்கிட்டேள். நான் பேசித்தானே ஆகணும்?”

“. . . . . . ”

“மனசு வேற, உடம்பு வேறன்னு இப்ப நீங்க சொன்னேள், இல்லியா?”

“நான் அப்படிச் சொல்லல்லே. ‘மனசு வேற, உடம்பு வேறன்னா, மனசு ஒட்டாமஒருத்தனோட வாழற?து சாத்தியம்’னு தான் சொன்னேன்.”

“சரி, மாமி. மனசுதான் முக்கியம்னா, இந்த உலகத்துல இத்தனை ஜனப்

பெருக்கம் இருக்காதுன்னு சொன்னேள், இல்லியா? அப்ப, மனசை மீறித்தான் உடம்பு

செயல் பட்றதுன்னு ஆறது. அ?தாவது உடம்பு தானாச் செயல்பட்றதுன்னும?்? மனசு என்ன சொன்னாலும் அது கேக்கப் போறதில்லேன்னும?்? வெச்சுக்கலாமா?”

“எனக்குத் தலையைச் சுத்தறது. சரி, நீ என்னத?ா?ன?்? சொல்ல வறே?”

“ஆனா, உடம்புங்கிறது, மனசுல இருக்கிற ஆசைகளை நிறைவேத்திக்கிற ஒரு

கருவிதானே, மாமி? மனசு நல்லது சொன்னா உடம்பு நல்லது செய்யும். மனசு கெட்டதுசொன்னா? உடம்பு கெட்டதைச் செய்யும். இல்லியா?”

“ . . . . .என்னவோ ஒரே கொழப்பலாயிருக்கு உன் பேச்சு. சரி சொல்லு.”

“கடைகள்லே அந்த மூணு எழுத்து சமாசாரம் ஏன் மாமி ஆயிரக் கணக்குல

விக்கிறது? மனசு வேண்டாம்னாலும் உடம்பு அடங்க மறுக்கிறதுனாலதானே அப்படி?

கல்யாண வயசில பொண்ணு பிள்ளைகளை வெச்சிண்டிருக்கிற பெரியவா நிறையப்

பேரு அதை வாங்கறா, மாமி. தயா தன்னோட ஆசையை விட்டுக் குடுக்கணும்னு

நீங்க சால்றேள். அவ சின்னப் பொண்ணு இல்லியா? பெரியவாளுக்கே மனசு அடங்க

மாட்டேங்கிறது. அவ விட்டுக் குடுக்கணும்னு சொல்றேளே? அது நியாயமா, மாமி?”

வாரந்தோறும் வெள்ளிக் கிழமைகளில் பெண்களையும் பிள்ளைகளையும்

கோவிலுக்கு அனுப்பிவிட்டு, விளக்கு வைக்கிற நேரத்தில் அந்த மூன்றெழுத்துப்

பொருளுடன் கதவு சாத்தித் தன்னை நெருங்கும் ஈசுவரனின் நினைப்பு வர,

ரேவதிக்குப் பட படவென்று வந்தது.

‘இவள் சொல்லுவது ரொம்ப நியாயந்தான். இன்னும் சொல்லப் போனால்,

மனசுக்குப் பிடித்தவன் கிடைக்கவில்லை யென்றால், சின்ன வயதுக் காரர்கள்

உடம்புக்கு எந்தச் சுகமும் வேண்டாம் என்று சொல்லுவது மிகப் பெரிய விஷயம்தான்.’

“மனசோட உன்னதமான எண்ணங்களுக்கு முன்னால உடம்போட சுகங்கள்

அற்பம்னு ஒரு பொண்ணு நெனைக்கிறது உங்களுக்கு ஒசத்தியாப் படல்லியா, மாமி?”

ரேவதியால் பேச முடியவில்லை. அதையே தனது வெற்றியாக எடுத்துக்கொண்டரமா, புன்சிரிப்பை அடக்கிக்கொண்டு, “நான் தயாவை நீங்க கேட்டுண்டபடி கட்டாயப்படுத்தணுமா, மாமி?” என்றாள்.

ரேவதி சில நொடிகள் வரை மவுனமாக இருந்தாள். பிறகு, ஒரு நெடிய மூச்சைவெளியேற்றிவிட்டு, “நீ பேசறது ஒரு விதத்துல சரிதாண்டியம்மா. இருந்தாலும், எங்க

ளோட வறுமை இப்படியெல்லாம் எங்களைப் பண்ணச் சொல்றது. எங்களோட

நெலமையை யோசிச்சா நீ அவளை வழிக்குக் கொண்டுவரத்தான் பார?்?ப்பே. அதுதான் நியாயம். அப்புறம் உன்னிஷ்டம்! இதுக்கு மேல நான் பேசறதுக்கு ஒண்ணுமில்லே,”

என்றாள்.

“அது உங்க நியாயம், மாமி. ஆனா – சின்னவா – எங்களோட நியாயம் வேற.இருந்தாலும், நீங்க சொன்னபடியே நான் தயாவோட பேசிப் பாக்கறேன்,” என்ற ப?ி?ற?க?ு?

ரமா தயாவிடம் சென்றாள்.

மனம் விட்டுப் பேச அந்தச் சிறிய வீட்டுப் பகுதியில் இருந்தது ஒரே ஓர்

அறைதான். கூடத்தில் இருந்த அந்த அறைக்குள் இருவரும் நுழைந்து கதவைச்

சாத்தித் தாழிட்டுக்கொண்டார்கள்.

பேசத் தொடங்குவதற்கு முன்னால், ரமா தன் கைப் பையிலிருந்து ஓர்

உறையை டுத்துத் தயாவிடம் கொடுத்தாள்.

“சங்கர் எங்காத்துக்கு வந்து இதைக் குடுத்துட்டுப் போனார்.அதைக் குடுக்கத்

தான் வந்தேன். முதல்ல அதைப் படிச்சுடு. அப்புறம் பேசலாம்.”

தயா கடிதத்¨தைப் படிக்கத் தொடங்கினாள்:

‘அன்புள்ள தயா,

உன் கடிதத்தைப் படித்தேன். சீனுவிடம் நான் சொல்லி யனுப்பிய அந்த ஒரே

வாக்கியம் உன்னை எந்த அளவுக்கு வேதனைப் படுத்தி யிருக்கும் என்பது எனக்குத்

தெரியும். ஆனால், அதைத் தவிர வேறு என்ன சொல்லுவ தென்று எனக்குத்

தெரியவில்லை.

தயா! இது உனக்குக் கிடைக்கும் மிகப் பெரிய வரப்பிரசாதம். உன் அக்காவைப்பற்றி அடிக்கடி என்னிடம் கவலைப் பட்டுப் பேசி இருக்கிறாய். அவளுக்கும் உன் திருமணத்தால் வாழ்வு கிடைக்கு மென்கிற நிலையில், நீ அந்தப் பணக்கார வாலிபனை

மணக்கச் சம்மதித்துத்தான் ஆக வேண்டும். இப்படி ஒரு சந்தர்ப்பம் யாருக்காவது

கிடைத்ததுண்டா? எனவே, காதல், ஊதல் என்று அழுது, அரற்றி இருவருடைய

வாழ்வுகளும் நாசமாக நீ காரணமாகாதே.

இப்படி நான் எழுதுவது உனக்குப் பிடிக்காது என்பது எனக்குத் தெரியும்தான். ஆனாலும் என்ன செய்ய! ‘இப்போதே உன்னைக் கல்யாணம் செய்துகொள்ளூகிறேன்’

என்று சொல்லக் கூடிய நிலையில் நான் இல்லையே. எனக்கும் கல்யாணத்துக்கு

இரண்டுதங்கைகள் இருக்கிறார்கள். வேலையிலிருந்து ஓய்வு பெற்று விட்ட என் அப்பாவால் ஓ?ரு நயா பைசாவுக்குப் பிரயோசனம் இல்லை. என்னை நம்பித்தான் எல்லாருமே

இருக்கிறார்கள். இந்த நிலையில் திருமணத்தைப் பற்றி என்னால் எப்படி நினைத்துப்

பார்க்க முடியும்? நீயே சொல்லு.

தயா! நாம் வெற்றி பெற வழியே இல்லை என்று தோன்றினாலும், எதற்கும்

மனம் விட்டு நாம் இருவரும் நிறைய பேசிய பின் ஒரு முடிவுக்கு வரலாம் என்றும்

தோன்றுகிறது. நாளைக்கு நீ ஆ·பீசுக்கு வருவாயல்லாவா? இருவரும் பெர்மிஷன்

போட்டுவிட்டு வெளியே எங்கேயாவது போய்ப் பேசலாம். ஏதாவது வழி

தோன்றுகிறதா என்று பார்க்கலாம்.

உன்னை இழக்க எனக்கு மனமில்லாததால்தான், நான் இப்படி இரண்டுங்

கெட்டானாக எழுதுகிறேன். என்னைப் புரிந்து கொள். உன்னை இன்று அவர்கள்

பெண்பார்க்க வரும் போது, முகத்தில் எதையும் காட்டாதே. உன் அம்மா அப்பாவைத்திருப்திப் படுத்த இப்போதைக்குச் சரி என்று சொல்லிவிடு. எப்படியும் நிச்சய

தார்த்தம், கல்யாணம் என்று இருக்கிறதே. கொஞ்சம் அவகாசம் கிடைக்கும். அந்த

இ?டைவெளியில் ஏதாவது செய்ய முடியுமா என்று பார்ப்போம்.

எனக்குப் பதில் எழுத உனக்குத் தனிமை இப்போது கிடைக்காமல் போகலாம். எனவே ரமாவிடம் சொல்லியனுப்பு – என்ன செய்யப் போகிறாய் என்பதை. அதற்குப்பிறகு கடவுள் விட்ட வழி. தயா! எது எப்படி ஆனாலும் என் மனத்தில் உன்னைத்

தவிர வேறு யாருக்கும் இடம் இல்லை.

உன் அன்புள்ள,

சங்கர்.’

பி.கு: கடிதம் பத்திரம். பத்திரமாக வைப்பது இயலாதெனில், ரமாவிடமே திருப்பிக்

கொடுத்துவிடு. சாயந்திரம் நான் ரமாவைச் சந்திக்க இருக்கிறேன். அப்போது அதை

வாங்கிக் கொள்ளுகிறேன்.

விசும்பல் ஓசையால் கவரப்பட்டு ரமா தலை திருப்பிப் பார்த்தாள். குத்துக்

காலிட்டு அமர்ந்தவாறு தயா அழுதுகொண்டிருந்தாள். ரமா நகர்ந்து வந்து அவள்

தோளில் கை வைத்து, “ஸ்ஸ்ஸ்! அழாதே, தயா. எந்தப் பிரச்னைக்கும் ஒரு தீர்வு

இருக்கு. சங்கர் என்ன எழுதி இருக்கார்? ‘என்னை மறந்துட்டு அவனையே கல்யாணம்பண்ணிக்கோ’ அப்படின்னா?” என்றாள்.

“சீனு கிட்ட அது மாதிரிதான் சொல்லியனுப்பினார். ஆனா, இப்ப ரெண்டு

மாதிரியும் எழுதி யிருக்கார். நீயே படிச்சுப் பாரு. இதுலேர்ந்து என்ன தெரியறதுன்னா,சீனுகிட்ட அவர் மனசார அப்படிச் சொல்லல்லேன்னு!”

ரமா கடிதத்தை வாங்கிப் படித்தாள். பிறகு ஒரு பெரு மூச்சுடன் அதை மடித்து,தயாவிடம் நீட்டினாள்.

“நீயே உன்கிட்ட வெச்சுக்கோடி. சாயந்தரம் உங்க வீட்டுக்கு வர்றதாச் சொல்லி யிருக்காரில்லே? அப்ப அவர் கிட்ட குடுத்துடு.”

“இன்னைக்குக் காலையிலே சங்கர் எங்க வீட்டுக்கு வந்தப்பவே, யாரு, என்ன, ஏது, எதுக்கு வந்தான்னு இல்லாத பொல்லாத கேள்விகள்லாம் கேட்டா எங்கம்மா.

நீதான் அந்தப் பொண்ணுங்கிறதை மட்டும் மறைச்சுட்டு மத்ததை யெல்லாம் எங்கம்மா கிட்டச் சொன்னேன். சங்கர் கிட்டவும் உன் பேரைச் சொல்லாம பேசச் சொல்லி

‘வார்ன்’பண்ணினேன்.”

“உங்கம்மா என்னடி சொன்னா?”

ரமா சிரித்தாள். “இந்த வயசானவா எல்லாருமே ஒரே குட்டையில

ஊறின மட்டைகள்தான். கல்யாணம் ஆயிட்டா எல்லாம் சரியாப் போயிடுமாம். காதல்,கத்திரிக்கா யெல்லாம் சுத்தப் பொய்யாம். அபத்தமாம். அசட்டுத்தனமாம். அவாளும்

சின்ன வயசைத் தாண்டி வந்தவாதானே? ஆனாலும் ஏனோ சின்னவாளோட உணர்ச்சி

களைப் புரிஞ்சுக்கவே மாட்டேங்கறா. வயசாக, வயசாக அவாளோட எண்ணங்கள்

மாறிப் போயிட்றது போலேருக்கு. அம்பது வயசு ஆளுக்கு ஒரு கலர் பொம்மை

அல்பமாத்தான் தெரியும் ஆனா, அஞ்சு வயசுக் கொழந்தைக்கு அப்படியா? இதை

ஏன் வா புரிஞ்சுக்க மறுக்கிறா?”

ரமா சொன்ன பொம்மை உதாரணம் தயாவின் முகத்தில் புன்சிரிப்பைத்

தோற்றுவித்தது. ‘உண்மைதான்! பொம்மை ஓர் ஐந்து வயதுக் குழந்தைக்குப்

பொக்கிஷம் போன்றது. ஆனால் அதுவே வயதானவர்களுக்கு அற்பமானது!’

“அது சரி, எங்கம்மா உங்கிட்ட என்ன பேசினா?”

ரேவதிக்கும் தனக்குமிடையே நடந்த வாக்குவாதத்தைப் பற்றி ரமா அவளுக்குச் சொன்னாள்.

“தயா! நீ என்னதான் சொல்லு. நம்மள மாதிரி ஏழைக் குடும்பங்கள்லேயும்,

நடுத்தரக் குடும்பங்கள்லேயும் நாமெல்லாம் வெறும் பண்டமாற்றுப் பொருள்கள் மாதிரி

தாண்டி. மூவபிள் ப்ராபெர்ட்டி!”

“சரியாச் சொன்னேடி, ரமா. பண்டமாற்றுப் பொருள்கள்தான் நாம. நமக்குன்னு

சில உணர்ச்சிகள் இருக்கும்கிற பிரக்ஞையே இல்லேடி இந்தப் பெரியவாளுக்கு. அவா விரும்புற ஆளுக்கு அவா விருப்பம் போல நம்மளை எடுத்துக் குடுத்துடுவா!

பொண்ணுகள் மட்டுந்தானா?சில குடும்பங்கள்லே ஆம்பளைகளுக்கும் இதே கதிதான்.”

“பொதுவாப் பேசற தெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்டீ , தயா. உன்னோட

விஷயத்துலே நீ என்ன பண்றதா யிருக்கே? அதைச் சொல்லு இப்ப. சங்கர் சாயந்தரம்எங்காத்துக்கு வருவாரே? நான் என்னடி சொல்லட்டும்?”

“சங்கர் சொல்லி யிருக்கிறபடிதான். சரின்னு சொல்லிட்டு, அப்புறமா என்ன

பண்றதுன்னு யோசிப்போம், ” என்று பதில் சொன்ன தயா பெருமூச்செறிந்தாள்.

Series Navigationஅக்னிப்பிரவேசம்-32 தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Comments

 1. Avatar
  ஜெயஸ்ரீ says:

  “உண்மைதான்! பொம்மை ஓர் ஐந்து வயதுக் குழந்தைக்குப்
  பொக்கிஷம் போன்றது. ஆனால் அதுவே வயதானவர்களுக்கு அற்பமானது!’-
  சிந்திக்க வைத்த வரிகள்.

  அன்பின் கிரிஜாம்மா,

  தங்களின் தொடர்கதையை மிகவும் நேர்த்தியாக கொண்டு செல்கிறீர்கள்.
  யதார்த்தமான சம்பாஷணை . படிக்க விறுவிறுப்பாக இருக்கிறது குருக்ஷேத்திர குடும்பங்கள். மிக்க நன்றி.

  அன்புடன்
  ஜெயஸ்ரீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *