சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 41

This entry is part 48 of 51 in the series 3 ஜூலை 2011

சமஸ்கிருதம் 41

இந்த வாரம் अद्यतन (adyatana) இன்றைய, श्वस्तन (śvastana) நாளைய , ह्यस्तन (hyastana)நேற்றைய  ஆகிய வார்த்தைகளைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.  ஏற்கனவே படித்த अद्य (adya) இன்று , श्वः(śvaḥ) நாளை , ह्यः (hyaḥ) நேற்று ஆகியவற்றைப் உபயோகித்து எளிதான  வாக்கியங்களை அமைத்துப் பேசிப் பழகவும்.

 

இனி கீழேயுள்ள உரையாடலை உரத்துப் படிப்போமா?

 

एतत् सम्भाषणं पठतु ! (etat sambhāṣaṇaṁ paṭhatu!)

இந்த உரையாடலைப் படிக்கவும்.

 

रामः     –    अद्य परीक्षा आसीत् वा ? (adya parīkṣā āsīt vā?)

ராமன்  –  இன்று தேர்வு இருந்ததா ?

कृष्णः    –    आम् आसीत्। (ām āsīt |)

கிருஷ்ணன்  – ஆமாம் இருந்தது.

 

रामः    –  अद्यतनप्रश्नपत्रिका कथम् आसीत् ? (adyatanapraśnapatrikā katham āsīt?)

ராமன் –  இன்றைய தேர்வுத்தாள் எப்படி இருந்தது ?

 

कृष्णः  –   अद्यतनप्रश्नपत्रिका सरला आसीत्। (adyatanapraśnapatrikā saralā āsīt |)

இன்றைய தேர்வுத்தாள் சுலபமாக இருந்தது.

ह्यस्तनप्रश्नपत्रिका तु कठिना आसीत्। (hyastanapraśnapatrikā tu kaṭhinā āsīt |)

நேற்றைய தேர்வுத்தாள் கடினமாக இருந்தது.

रामः   –  श्वस्तनपरीक्षार्थम्  अभ्यासं कृतवान् वा भवान्  ? (śvastanaparīkṣārtham  abhyāsaṁ kṛtavān vā bhavān? )

 

ராமன்  –  நாளைய தேர்வுக்காக படித்துவிட்டீர்களா நீங்கள் ?

कृष्णः   –  आम् किञ्चित् कृतवान्। (ām kiñcit kṛtavān |)

கிருஷ்ணன் –  ஆமாம் . கொஞ்சம் படித்தேன்.

 

पश्यन्तु , पठन्तु , अवगच्छन्तु !

paśyantu paṭhantu avagacchantu ca !

பாருங்கள் , படியுங்கள் அறிந்துகொள்ளுங்கள் !

 

 

 

अहम् सुरेशः। (aham sureśaḥ |)

நான் சுரேஷ்.

अद्य मम परीक्षा आसीत्। (adya mama parīkṣā āsīt |)

இன்று என்னுடைய தேர்வு இருந்தது.

अहम् अद्यतनपरीक्षां सम्यक् लिखितवान्। (aham adyatanaparīkṣāṁ samyak likhitavān |)

நான் இன்றைய தேர்வை நன்றாக எழுதினேன்.

 

 

 

अहं सरिका। (ahaṁ sarikā |)

நான் சரிகா.

ह्यः मम परिक्षा आसीत्। (hyaḥ mama parikṣā āsīt |)

நேற்று என்னுடைய தேர்வு இருந்தது.

अहम् अपि ह्यस्तनपरीक्षां सम्यक् लिखितवती। (aham api hyastanaparīkṣāṁ samyak likhitavatī |)

நான் கூட நேற்றைய தேர்வை நன்றாக எழுதினேன்.

 

 

 

 

 

वयं बालाः ।  (vayaṁ bālāḥ  |)

நாங்கள் சிறுவர்கள்.

श्वः अस्माकं परीक्षा भविष्यति। (śvaḥ asmākaṁ parīkṣā bhaviṣyati |)

நாளை எங்களுடைய தேர்வு இருக்கும்.

वयं श्वस्तनपरीक्षार्थम् अभ्यासं कुर्मः। (vayaṁ śvastanaparīkṣārtham abhyāsaṁ kurmaḥ |)

நாங்கள் நாளையதேர்வுக்காக பயிற்சி செய்கிறோம்.

वयं श्वस्तनपरीक्षां सम्यक् लेखिष्यामः। (vayaṁ śvastanaparīkṣāṁ samyak lekhiṣyāmaḥ |)

நாங்கள் நாளைய தேர்வை நன்றாக எழுதுவோம்.

 

कोष्ठकस्य साहाय्येन पञ्चवाक्यानि रचयन्तु – (koṣṭhakasya sāhāyyena pañcavākyāni racayantu !)

அட்டவணையை உபயோகித்து ஐந்து வாக்கியங்கள் எழுதுங்கள்.

 

 

सः  (  saḥ   )

सा   (sā)

अद्यतन (adyatana ) 

पूर्वतन  (pūrvatana)

श्वस्तन  ( śvastana )

ह्यस्तन (hyastana)

 

 

 

स्माचारं(smācāraṁ )

पठितवान्  (paṭhitavān ) 

पठितवती (paṭhitavatī )

पठति (paṭhati)

पठिष्यति (paṭhiṣyati)

 

उदा  –   सः अद्यतन समाचारं पठितवान्।

saḥ adyatana samācāraṁ paṭhitavān |

உதா –  அவன் இன்றைய செய்தியைப் படித்தான்.

இதேபோல மற்ற வாக்கியங்களை அமைத்து உரத்துப் படிக்கவும்.

पूर्वतन  (pūrvatana) –  முந்தைய

 

Series Navigationபிம்பத்தின் மீதான ரசனை.:-நினைவு நதியில் ஒரு உயிரின் மிச்சம் !
author

ரேவதி மணியன்

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *