கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரு கதைகளுக்கு இடையே (கவிதை -40 பாகம் -3)

This entry is part 26 of 34 in the series 17 ஜூலை 2011


ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

நாமிருவரும் இந்த மர்மத்தைச்
செவிகளில் கேட்கிறோம்
பேசுவது போல் !
வேறு யார் சேர்ந்தி டுவார்
விந்தைப் பந்தத்தில் ?
மதக்குரு ஒருவர் அடுத்தவரிடம் கேட்டார் :
“உன் ஆன்ம உள்நோக்கு என்ன
இறைவன் இருக்கை பற்றி ?
எனக் கொன்றும் தெரிய வில்லை !
ஆதலால்
உனக்கொரு கதை சொல்வேன்
கேள் நீ !

++++++++++++

நேர் எதிரே இருப்பான் இறைவன்
நெருப்பில் தோன்றுவான்
ஒருபுறம் !
தெளிந்த நீரோட் டத்தில்
தெரிவான் மறுபுறம் !
தீயை நோக்கிச் செல்லும் ஓரினம்
தீயிக்குள் பாயும் ஓரினம்
நீரோட்டம் நோக்கிச் செல்லும்
வேறினம் !
ஆசீர்வாதம் பெறுபவர் யாரிந்த
ஈரினங்களில் ?

++++++++++

நெருப்பில் மிதக்கும் மனிதர்
நீரோட் டத்தில் தோன்றுவர்
திடீரென !
நீரில் மூழ்கிடும் தலை
நெருப்பில் முளைத் தெழும்
திடீரென !
பெரும் பாலோர்
நெருப்பை நெருங்க அஞ்சி
இறுதியில் மடிந்து போவார் !
நீரின்பம் வேண்டி
நிதமும் வணங்கு வோர்
ஏமாற்றம் அடைவார்
இந்த எதிர்நிகழ்ச்சி யால் !

+++++++++++

நீடிக்கும் இந்த சூழ்ச்சி !
அப்போது
தீயின் குரல் ஒலிக்கும் :
“நெருப் பில்லை நான் !
வெறும் நீரூற்று தான் !
நெருங்கி வருவீர் என்னை !
தெறிக்கும்
தீப்பொறி களைப் பற்றிச்
சிறிதும்
கவலைப் படாதீர் ”

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (July 11, 2011)

 

Series Navigationவிடாமுயற்சியும் ரம்மியும்!நினைவுகளின் மறுபக்கம்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *