கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இதயத்தின் இரகசியங்கள் (Secrets of the Heart) (கவிதை -46)

This entry is part 29 of 34 in the series 17 ஜூலை 2011


மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

என் இதயம் ஒன்றால்
இப்போ துரைப்ப தெல்லாம்
ஆயிரம் இதயம் சொல்லும்
நாளைக்கு !

பிறக்க வில்லை நாளை !
இறந்து விட்டது நேற்று !
ஏன் அவலம் அவை மேல்
இன்று இனிக்கும் போது ?

நானொரு வார்த்தை சொல்ல
வந்தேன் !
நானதைச் சொல்ல வேண்டும்
இப்போது !
மரணம் எனைத் தடுத்தால்
நாளைக்குக்
கூறப் படும் அது !
ஏனெனில்
எதிர் கால மானது
ஒரு போதும்
புறக்கணிக் காது
இரகசியம் ஒன்றை
நிரந்தர வரலாறு ஏட்டில் !

உன்னத அன்பிலும்
ஒளிச்சுடர் அழகிலும்
வாழப் பிறந்தவன் நான் !
இறைவனின் பிரதி பலிப்பு அவை !
நானிங்கு வசித்து வருவது
அவற்றால் தான் !
விரட்ட முடியா தென்னை
அவ்வாழ்வு
அரங்கத்தை விட்டு !
ஏனெனில்
மரணத்திலும் நான் வாழ்பவன்
உயிருடன் உலவும்
என் உரைமொழி மூலம் !

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (July 11, 2011)

Series Navigationமிக பெரிய ஜனநாயக திட்டம்?!!! ஊழலில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புதல்!அம்ஷன் குமாருடன் ஒரு சந்திப்பு
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *