இந்த வாரம் यथा -तथा (yathā -tathā)(As – so)என்ற ஒன்றுக்கொன்று தொடர்புடைய உருமாற்றம் பெறாத சொற்கள்(Indeclinable) பற்றித் தெரிந்து கொள்வோம். ’ यथा’ इति शब्दः यत्र प्रयुज्यते ’ तथा ’ इत्यपि प्रयोक्तव्यम् एव।(yathā iti śabdaḥ yatra prayujyate tathā ityapi prayoktavyam eva |) ஒரு வாக்கியத்தில் ’ यथा ‘ என்ற சொல்லை உபயோகித்தால் ‘तथा’ என்ற சொல்லையும் உபயோகிக்கவேண்டும்.
सादृश्य प्रदर्शनार्थं यथा – तथा शब्दयोः प्रयोगः क्रियते।( sādṛśya pradarśanārthaṁ yathā – tathā śabdayoḥ prayogaḥ kriyate |) இரு வேறுபட்ட பொருள்களையோ, செயல்களையோ ஒப்பிடும்போது ’ यथा -तथा’ உபயோகிக்கப்படுகிறது.
கீழேஉள்ளவாக்கியங்களைஉரத்துப்படிக்கவும்.
यथा अश्वः धावति तथा धेनुः न धावति।
yathā aśvaḥ dhāvati tathā dhenuḥ na dhāvati |
எப்படி குதிரை ஓடுகிறதோ அப்படி பசு ஓடாது.
यथा नरः करोति तथा वानरः करोति।
yathā naraḥ karoti tathā vānaraḥ karoti |
எவ்வாறு மனிதன் செய்கிறானோ அவ்வாறே குரங்கு செய்கிறது.
भवान् यथा इच्छति तथा करोतु।
bhavān yathā icchati tathā karotu |
நீங்கள் எப்படி விரும்புகிறீர்களோ அப்படியே செய்யுங்கள்.
यथा राजा तथा प्रजाः।
yathā rājā tathā prajāḥ |
ராஜா எப்படியோ மக்களும் அப்படியே.
यथा भवान् प्रयत्नं करोति तथा फलं प्राप्नोति।
yathā bhavān prayatnaṁ karoti tathā phalaṁ prāpnoti |
எவ்வாறு நீங்கள் முயற்சி செய்கிறீர்களோ அவ்வாறு பலன் கிடைக்கும்.
यथा श्रेष्टः आचरति तथा जनाः अपि आचरन्ति।
yathā śreṣṭaḥ ācarati tathā janāḥ api ācaranti |
எப்படி உயர் குறிக்கோள் உடையவர் செயலாற்றுகிறாரோ அப்படியே மக்களும் கூட செயலாற்றுகின்றார்கள்.
सर्वेषाम् अभिप्रायः यथा अस्ति तथा भवतु !
sarveṣām abhiprāyaḥ yathāastitathā bhavatu !
எல்லோருடைய அபிப்ராயம் எப்படி இருக்கிறதோ அப்படியே அமையட்டும்.
अभ्यासः (abhyāsaḥ)
‘यथा–तथा ‘उपयुज्य एतानिवाक्यानिपूर्णानिकरोतु –
yathā tathā upayujya etāni vākyāni pūrṇāni karotu !
‘यथा–तथा ‘என்றசொற்களைக்கொண்டுகீழேஉள்ளவாக்கியங்களைபூர்த்திசெய்யவும்.
उदा – यथा सचिन् तेण्डुल्कर् क्रीडति तथा अहं न क्रीडामि।
yathā sacin teṇḍulkar krīḍati tathā ahaṁ na krīḍāmi |
எப்படி சச்சின் தெண்டுல்கர் விளையாடுகிறாரோ அப்படி நான் விளையாடுவதில்லை.
यथा भीमसेनजोशी गायति तथा अन्यः न गायति।
yathā bhīmasenajośī gāyati tathā anyaḥ na gāyati |
எப்படி பீமசேனஜோஷி பாடுகிறாரோ அப்படி மற்றவர்கள் பாடுவதில்லை.
1. ———— कालिदासः काव्यं लिखितवान् ——————————–।
—————- kālidāsaḥ kāvyaṁ likhitavān ——————————– |
—————– காளிதாசர் காவியம் எழுதினாரோ ————————— .
2. ————- रविवर्मा चित्रं लिखति ——————————-।
——————- ravivarmā citraṁ likhati ——————————- |
——————- ரவிவர்மா ஓவியம் வரைகிறாரோ —————————— .
3. ————– मम मित्रं गायति ——————————–।
——————- mama mitraṁ gāyati ——————————– |
——————– என்னுடைய நண்பன் பாடுகிறாரோ ——————————— .
4. ———– भवान् पाठयति —————————–।
————– bhavān pāṭhayati —————————– |
————— நீங்கள் கற்பிக்கிறீர்களோ —————————– .
5. ———— सः उपन्यासं करोति ——————————।
——————- saḥ upanyāsaṁ karoti —————————— |
——————- அவர் உரையாற்றுகிறாரோ ————————- .
6. ———– मम अध्यापकः संस्कृतं जानाति ———————।
—————- mama adhyāpakaḥ saṁskṛtaṁ jānāti ——————— |
—————- என்னுடைய ஆசிரியர் சமஸ்கிருதம் அறிந்திருக்கிறாரோ ——————– .
இனி भगवद्गीतायाम (bhagavadgītāyām) பகவத்கீதையில் यथा -तथा என்ற ஜோடி சொற்களைக் கொண்டு வரும் சில ஸ்லோகங்களைப் படிப்போமா?
देहिनोऽस्मिन् यथा देहे कौमारं यौवनं जरा।
तथा देहान्तरप्राप्तिर्धीरस्तत्र न मुह्यति॥ (२ -१३)
dehino’smin yathā dehe kaumāraṁ yauvanaṁ jarā |
tathā dehāntaraprāptirdhīrastatra na muhyati || (2-13)
இந்த உடம்பு எப்படி இளமையும், வாலிபமும், மூப்பும் அடைகிறதோ அப்படியே அதில் உறைகின்ற ஆன்மா வேறு உடலையும் பெறுகிறது. அறிவாளி அதை எண்ணி வருத்தப்படுவதில்லை. (Just as, how for an indweller of this body , the jīvā , there is childhood, youth and old age , so too , is the gaining of another body. With reference to that, a wise person does not come to grief.)
वासांसि जीर्णानि यथा विहाय
नवानि गृह्णाति नरोऽपराणि।
यथा शरीराणि विहायजीर्णान्-
यन्यानि संयाति नवानि देही॥ (२- २२)
vāsāṁsi jīrṇāni yathā vihāya
navāni gṛhṇāti naro’parāṇi |
yathā śarīrāṇi vihāyajīrṇān-
yanyāni saṁyāti navāni dehī || 2-22)
பழைய உடைகளைக் களைந்துவிட்டு புதிய உடைகளை மனிதன் அணிந்துகொள்வதுபோல் ஆன்மா பழைய உடம்புகளை விட்டுவிட்டு புதிய உடம்புகளை ஏற்றுக்கொள்கிறது. (Just as a person gives up old clothes and takes up new one, so too , the indweller of the body gives up old bodies and takes others which are new.)
ये यथा मां प्रपद्यन्ते तांस्तथैव भजाम्यहम्।
मम वर्त्मानुवर्तन्ते मनुष्याः पार्थ सर्वशः॥ (४. ११)
ye yathā māṁ prapadyante tāṁstathaiva bhajāmyaham |
mama vartmānuvartante manuṣyāḥ pārtha sarvaśaḥ || (4-11)
யார் என்னை எப்படி வழிபடுகிறார்களோ, அவர்களை அப்படியே நான் வழிநடத்துகிறேன். அர்ஜுனா! மனிதர்கள் என்னுடைய வழியையே எப்போதும் பின்பற்றுகிறார்கள். (Those who worship me in whatever way, I bless them in the same way. O Arjuna, people follow My path in always. )
यथा दीपो निवासस्थो नेङ्गते सोपमा स्मृता।
योगिनो यतचित्तस्य युञ्जतो योगमात्मनः॥ (६ -१९)
yathā dīpo nivāsastho neṅgate sopamā smṛtā |
yogino yatacittasya yuñjato yogamātmanaḥ ||( 6 -19)
ஆன்ம தியானம் செய்கின்ற தியானயோகியின் அடங்கிய மனத்திற்கு காற்றில்லாத இடத்தில் இருக்கின்ற தீபச்சுடர் உவமையாகச் சொல்லப்படுகிறது. (Just as a lamp, protected from the wind, does not flicker – for the composed mind of the meditator who practices contemplation of the self, this illustration is cited. )
यथाकाशस्थितो नित्यं वायुः सर्वत्रगो महान्।
तथा सर्वाणि भूतानि मत्स्थानीत्युपधारय॥ (९ -६)
yathākāśasthito nityaṁ vāyuḥ sarvatrago mahān |
tathā sarvāni bhūtāni matsthānītyupadhāraya || (9 -6)
எங்கும் நிறைந்ததும் ஆற்றல் வாய்ந்ததுமான காற்று எப்படி எப்போதும் ஆகாசத்தில் இருக்கிறதோ, அப்படியே எல்லா உயிர்களும் என்னிடம் உள்ளன என்பதைத் தெரிந்துகொள். (Just as the vast air, which goes everywhere, always exists in space similarly, may you understand that all beings exist in Me.)
இனி அடுத்தவாரம் ‘ स्म ‘ (sma) என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 3
- தோற்றக் காலத்தில் பூமியை இரு நிலவுகள் சுற்றி வந்திருக்கலாம் (Earth Once Had Two Moons, Astronomers Theorize) (August 3, 2011)
- கவிதைகள். தேனம்மைலெக்ஷ்மணன்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் இருக்கும் போது (காலை இளம் ஒளியில் ரூபி) (கவிதை -43)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மீட்சி (The Return) (கவிதை -47 பாகம் -4)
- ஸிந்துஜா – முப்பது வருடங்களுக்குப் பிறகு
- நினைவுகளின் சுவட்டில் – (74)
- ஜென் ஒரு புரிதல் பகுதி 6
- தமிழ் ஸ்டுடியோ வழங்கும் ‘லெனின் விருது’ – பெறுபவர்: ஆர்.ஆர். சீனிவாசன்
- ஐ-போன் வியாதி
- வாக்குறுதியின் நகல்..
- நான்(?)
- ஒன்றாய் இலவாய்
- சிறு கவிதைகள்
- ஆதி
- பாசாவின் உறுபங்கம்
- எங்கோ தொலைந்த அவள் . ..
- சொல்வலை வேட்டுவன்
- குவிந்த விரல்களுக்குள் படபடக்கும் சிறுவண்ணாத்தி
- அறப்போராட்டமாம் !
- பூனையின் தோரணை
- கதையல்ல வரலாறு: ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் -? (தொடர்ச்சி)
- நானும் ஸஃபிய்யாவும்
- காற்றும் நிலவும்
- பொம்மை ஒன்று பாடமறுத்தது
- ஜெயந்தன் & ரங்கம்மாள் விருது பெற்றநாவல் “வெட்டுப்புலி” குறித்த கலந்துரையாடல்.
- வெறுமை
- எனது இலக்கிய அனுபவங்கள் – 11 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு – 3 (ஆர்வி)
- சகிப்பு
- கூடு
- மறைபொருள் கண்டுணர்வாய்.
- காலம்
- பிரசவ அறை
- தொலைக்காட்சி – ஓர் உருமாற்றம்
- பேசும் படங்கள்
- மகிழ்ச்சிக்கான இரகசியம் இரகசியம் : ரோண்டா பைரன் நூல் தமிழ் மொழிபெயர்ப்பு
- கலித்தொகையின் தலைவி தோழி உரையாடலில் திருமணம்
- புத்தரின் பிறந்தநாளைக் கொண்டாடுவோம்
- பழமொழிகளில் வரவும் செலவும்
- சொல்
- பஞ்சதந்திரம் தொடர் 4 – ஆப்பைப் பிடுங்கிய குரங்கு 2
- இனிய சுதந்திர நாள் நல்வாழ்த்துக்கள்
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 44