மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
“ஏழ்மையில் உழலும் என் தோழனே ! செல்வீகம் ஏழ்மைத் தீங்கை நிவர்த்தி செய்தாலும், வறுமைதான் ஆன்மாவின் பெருந்தன்மையைத் தோன்ற வைக்கிறது. துயர் ஏழ்மையின் உணர்ச்சிகளை மிதமாக்குகிறது. களிப்பு இதயத்தின் காயங்களை ஆற்றுகிறது. வறுமையும், துயரும் நீக்கப் பட்டால், மனித ஆன்மா தன்னலம், பேராசை சின்னகளாய்த் தெரியும் ஒரு சூனிய வில்லை போல் ஆகிறது.”
கலில் கிப்ரான் (அன்பு மயமும் சமத்துவமும்)
என் ஆத்மா
எனக்கு உபதே சிக்கும்
எனக்குக் கற்றுக் கொடுக்கும் :
தீயவர் வெறுக்கும் மாந்தருடன்
நேயமாய் இரு !
தீயவர் திட்டும் மனிதரை
நேயத் தோழ ராக்கு !
என் ஆத்மா
உபதே சிக்கும் முன்பு
கம்பம் இரண்டைக் கட்டிய
பாசக் கயிறாய்
நேசம் என்
நெஞ்சில் இருந்தது !
இப்போது
நேசம் ஒளிவளையம் ஆனது
முடிவே துவக்கமாய்
துவக்கமே முடிவாய்
புவியில் ஒவ்வோர் உயிரையும்
போர்த்திக் கொண்டது !
உயிர் புகும் இனத்தையும்
ஓடித் தழுவும் !
என் ஆத்மா
எனக்கு அறிவுரை புகட்டும்
தோலுக்குள், தோற்றத் துக்குள்,
நிறத்துக்குள் மறைந்துள்ள
அழகுத்து வத்தை
எனக்குக் கற்றுக் கொடுக்கும்
அழகீனத் தீவினைகளின்
கவர்ச்சியும் களிப்பும்
இழிவாகத் தெரியும் வரை
தியானம் செய் யென்று
ஆத்மா போதிக்கும் !
அழகுத்துவம் கண்டேன்
ஆத்மா எனக்கு
அறிவுரை புகட்டும் முன்பு
புகை மூட்டத் தூண்களுக் கிடையே
நடுங்கும் ஒரு தீப்பந்தமாய் !
இப்போது நான் காண்பது
புகை மூட்டம் நீங்கி
தீக்கனல் மட்டும் !
(தொடரும்)
+++++++++++++
தகவல் :
1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)
2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)
3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)
4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)
5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)
For further information:
The Prophet By Kahlil Gibran :
http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm
Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (August 24, 2011)
- இவரைத் தெரிந்து கொள்ளுங்கள்
- குழந்தைகளும் சமூக அரசியல் போராட்டங்களும்
- திருத்தகம்
- வரிகள் லிஸ்ட்
- இன்னும் பிறக்காத தலைமுறைக்காக : திரு.தியடோர் பாஸ்கரன்
- மரணத்தை ஏந்திச் செல்லும் கால்கள்.
- தேனீச்சையின் தவாபு
- கேள்வியின் கேள்வி
- பேச மறந்த சில குறிப்புகள்
- அதீதம்
- பேசும் படங்கள் – பிரிஸ்பேன் ஆஸ்திரேலியா
- எதிர்பதம்
- கதையல்ல வரலாறு -2-2: நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்
- உங்கள் மகிழ்ச்சி, என் பாக்கியம்!
- (76) – நினைவுகளின் சுவட்டில்
- நன்றிக்கடன்
- எனது இலக்கிய அனுபவங்கள் – 13 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு – 5 (கி.கஸ்தூரிரங்கன்)
- என்று வருமந்த ஆற்றல்?
- ரியாத்தில் கவிதை நூல் வெளியீட்டு விழா!
- பதிற்றுப் பத்து – வீதி நாடக அமைப்பு
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 5
- சூரிய குடும்பத்தின் முதற்கோள் புதனைச் சுற்றும் நாசாவின் விண்ணுளவி மெஸ்ஸெஞ்சர். (NASA’s Messenger Space Probe Entered Mercury Orbit)
- தவளையைப் பார்த்து…
- வெளியே வானம்
- நிலாச் சிரிப்பு
- தேனம்மை லட்சுமணன் கவிதைகள்
- கிழக்கில் சூரியனை இழந்து போயுள்ள ரமணி
- சென்னை ஓவியங்கள்
- காதலாகிக் கசிந்துருகி…
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -2)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் இருக்கும் போது (ஓங்கிப் பாடு பாட்டை) (கவிதை -45)
- அழியும் பேருயிர் : யானைகள் திரு.ச.முகமது அலி
- உறுதியின் விதைப்பு
- உன்னைப்போல் ஒன்று
- அழகியல் தொலைத்த நகரங்கள்
- ஏய் குழந்தாய்…!
- இயற்கை
- நிலாக்காதலன்
- ஜென் ஒரு புரிதல் பகுதி 8
- நேரம்
- மரத்துப்போன விசும்பல்கள்
- பஞ்சதந்திரம் தொடர் 6 – தந்திலன் என்ற வியாபாரி
- முனனணியின் பின்னணிகள் – 2 டபிள்யூ. சாமர்செட் மாம் 1930
- கார்ட்டூன்
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 45
- குணங்குடி மஸ்தான் சாகிபின் கண்ணே ரஹ்மானே….