சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 46

This entry is part 25 of 33 in the series 11 செப்டம்பர் 2011

  


இந்த வாரமும் स्म (sma) என்ற இறந்தகால தொடர்வினைப் பற்றி பார்ப்போம். கீழே உள்ள கதையை உரத்துப் படித்து புரிந்து கொள்ள முயற்சிக்கவும்.

 

काकस्य उपायः

kākasya upāyaḥ

காக்கையின்தீர்வு

कश्चन महावृक्षः आसीत्। तत्र एकः काकः पत्न्या सह वसति स्म। तस्य एव वृक्षस्य कोटरे एकः कृष्णसर्पः अपि वसति स्म। यदा काकी प्रसूता भवति तदा कृष्णसर्पः तस्याः शावकान् खादति स्म। एतेन काकः काकी च महत् दुःखम् अनुभवतः स्म।

kaścana mahāvṛkṣaḥ āsīt | tatra ekaḥ kākaḥ patnyā saha vasati sma | tasya eva vṛkṣasya koṭare ekaḥ kṛṣṇasarpaḥ api vasati sma| yadā kākī prasūtā bhavati tadā kṛṣṇasarpaḥ tasyāḥ śāvakān khādati sma| etena kākaḥ  kākī ca mahat duḥkham anubhavataḥ sma|

ஒரு பெரிய மரம் இருந்தது. அங்கு காகம் தன்னுடைய மனைவியுடன் வசித்து வந்தது. அந்த மரத்தினுடைய குழியில்தான் ஒரு கருநிறமுடைய பாம்பு வசித்துக்கொண்டிருந்தது. எப்போது பெண்காகம் பிரசுவிக்கிறதோ அப்போது அவளுடைய காக்கைக் குஞ்சுகளை சாப்பிட்டு வந்தது.  இதனால் ஆண் காகம் மற்றும் பெண் காகம் மிகுந்த துக்கத்தை அனுபவித்து வந்தன.

 

अतः एकदा काकः स्वमित्रस्य श्रुगालस्य समीपं गत्वा उक्तवान् , “ भोः मित्र। सः कृष्णसर्पः कथाञ्चित् मारणीयः। उपायं सूचयतु ” इति। श्रुगालः एकम् उपायं सूचितवान्। तत् श्रुत्वा काकः बहु सन्तुष्टः।

ataḥ ekadā kākaḥ svamitrasya śrugālasya samīpaṁ gatvā uktavān, “bhoḥ mitra| saḥ kṛṣṇasarpaḥ kathāñcit māraṇīyaḥ | upāyaṁ sūcayatu “iti | śrugālaḥ ekam upāyaṁ sūcitavān| tat śrutvā kākaḥ bahu santuṣṭaḥ|

அதனால் ஒருமுறை ஆண்காகம் தன்னுடைய நண்பன் நரியிடம் சென்று ,”நண்ப ! அந்த கருநிறபாம்பு எப்படியாவது கொல்லப்பட வேண்டும்.  அதற்கான வழியைச் சொல்லவும் “ என்று கூறியது. நரி ஒரு வழியைக் கூறியது. அதைக் கேட்டு காகம் மிகவும் மகிழ்ச்சியடைந்தது.

 

तदनन्तरं काकः उड्डयनं कुर्वन् नगरम् आगतवान्। तत्र महाराजस्य प्रासादस्य सरोवरे अन्तःपुरस्त्रियः जलक्रीडायां मग्नाः आसन्। तासां वस्त्राणि आभरणानि च सरोवरस्य सोपानेषु स्थापितानि आसन्।काकः तत्र गतवान्। एकं सुवर्णहारं स्वीकृत्य अरण्याभिमुखं प्रस्थितवान्। तत् दृष्ट्वा राजभटाः काकम् अनुसृतवन्तः।

tadanantaraṁ kākaḥ uḍḍayanaṁ kurvan nagaram āgatavān| tatra mahārājasya prāsādasya sarovare antaḥpurastriyaḥ jalakrīḍāyāṁ magnāḥ āsan| tāsāṁ vastrāṇi ābharaṇāni ca sarovarasya soopāneṣu sthāpitāni āsan| kākaḥ tatra gatavān| ekaṁ suvarṇahāraṁ svīkṛtya araṇyābhimukhaṁ prasthitavān| tat dṛṣṭvā rājabhaṭāḥ kākam anusṛtavantaḥ|

அதற்குப் பின் காகம் மேலே பறந்து கொண்டே நகரத்தை அடைந்தது. அங்கு மகாராஜாவின் அரண்மனையின் குளத்தில் அந்தப்புரப் பெண்கள்  நீர் விளையாட்டில் மூழ்கியிருந்தனர். அந்தப் பெண்களுடைய ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் குளத்தின் படிகளில் வைக்கப்பட்டிருந்தன. காகம் அங்கு சென்றது. ஒரு தங்க அட்டிகையை எடுத்து காட்டை நோக்கி பறக்க ஆரம்பித்தது. அதைக் கண்டு காவலாளிகள் காகத்தை பின்தொடர்ந்தனர்.

 

काकः अरण्यम् आगत्य महावृक्षस्य कोटरे तं हारं पातितवान्। स्वयं दूरं गतवान् च। राजभटाः तत्र आगतवन्तः। कोटरे हारं दृष्टवन्तः। तदा तत्र स्थितः कृष्णसर्पः कोपेन बहिः आगतवान्। राजभटाः दण्डप्रहारेण तं मारितवन्तः। हारं च नीतवन्तः।

kākaḥ araṇyam āgatya mahāvṛkṣasya koṭare taṁ hāraṁ pātitavān| svayaṁ dūraṁ gatavān ca| rājabhaṭāḥ tatra āgatavantaḥ| koṭare hāraṁ dṛṣṭavantaḥ| tadā tatra sthitaḥ kṛṣṇasarpaḥ kopena bahiḥ āgatavān| rājabhaṭāḥ daṇḍaprahāreṇa taṁ māritavantaḥ| hāraṁ ca nītavantaḥ|

காகம் காட்டை அடைந்து பெரிய மரத்தினுடைய குழியில் அந்த ஆபணத்தைப் போட்டது.  பிறகு வெகு தூரம் சென்றுவிட்டது. ராஜாவின் காவலாளிகள் அங்கு வந்துசேர்ந்தனர். குழியில் ஆபரணத்தைப் பார்த்தனர். அப்போது அங்கிருந்த கருநாகம் கோபத்துடன் வெளியே வந்தது. காவலாளிகள் தடியினால் அடித்து அதை கொன்றுவிட்டார்கள். அட்டிகையையும் எடுத்துவிட்டனர்.

 

तदनन्तरं काकः स्वपत्न्या सह सुखेन जीवितवान्।

tadanantaraṁ kākaḥ svapatnyā saha sukhena jīvitavān|

அதற்குப்பின் காக்கை தன்னுடைய மனைவியுடன் மகிழ்ச்சியாக வசித்தது.

 

 

 

 

अभ्यासः (abhyāsaḥ ) பயிற்சி

 

श्रीकण्ठः इदानीं मध्यवयस्कः। सः कदाचित् विरामकाले बाल्यस्य घटनाः स्मृतवान्। बाल्यस्य क्रियाः वर्तमानकाल-प्रथमपुरुषैकवचने निर्दिष्टाः सन्ति। तासां योग्यं रूपं ज्ञात्वा ’स्म’ योजयित्वा रिक्तानि स्थलानि पूरयन्तु।(śrīkaṇṭhaḥ idānīṁ madhyavayaskaḥ| saḥ kadācit virāmakāle bālyasya ghaṭanāḥ smṛtavān| bālyasya kriyāḥ vartamānakāla-prathamapuruṣaikavacane nirdiṣṭāḥ santi| tāsāṁ yogyaṁ rūpaṁ jñātvā ‘sma’ yojayitvā riktāni sthalāni pūrayantu|)

ஸ்ரீகண்டன் இப்போது நடுத்தர வயதுடையவர். அவர் ஒருசமயம் விடுமுறையில் சிறுவயதில் நடந்தவைகளை நினைவு கூர்ந்தார். சிறுவனுடைய செயல்கள் நிகழ்கால படர்க்கை ஒருமையில் (Present Tense – First person Singular)  கொடுக்கப்பட்டுள்ளது. அவைகளின் சரியான முறையை அறிந்து , அதனுடன் ‘’स्म’ சேர்த்து கோடிட்ட இடங்களை நிரப்பவும்.

 

விடைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. சரிபார்த்துக் கொள்ளவும்.

 

यदा   – बाल्ये अहं प्रातः अष्टवादने (उत्तिष्ठति )————–।

बाल्ये अहं प्रातः अष्टवादने उत्तिष्ठामि स्म।

yadā   – bālye ahaṁ prātaḥ aṣṭavādane (uttiṣṭhati) ————– |

bālye ahaṁ prātaḥ aṣṭavādane uttiṣṭhāmi sma|

 

சிறுவயதில் நான் காலை எட்டுமணிக்கு (எழுகிறார்)  —————-  !

சிறுவயதில் நான் காலை எட்டுமணிக்கு எழுவது வழக்கம் (அல்லது) எழுந்துகொண்டிருந்தேன்.

 

मम बाल्ये –

mama bālye –

என்னுடைய சிறுவயதில் –

 

१  अहं नद्यां (तरति )———————-।

ahaṁ nadyāṁ (tarati) ———————- |

நான் நதியில் (நீந்துகிறார்) ———— !

 

 

२   कक्षायाम् अहं प्रथमस्थानं (प्राप्नोति )——————।

kakṣāyām ahaṁ prathamasthānaṁ (prāpnoti) —————— |

வகுப்பில் நான் முதல்இடத்தை (பெறுகிறார்) ———— !

 

३  अध्यापकाः मम प्रशंसां (करोति) —————-।

adhyāpakāḥ mama praśaṁsāṁ (karoti) —————- |

ஆசிரியர்கள் எனக்குப் பாரட்டு (செய்கிறார்) —————— !

 

४  वयं सर्वे तिन्त्रिणीवने (क्रीडति) ———————–।

vayaṁ sarve tintriṇīvane (krīḍati) ———————– |

நாங்கள் அனைவரும் புளியந்தோப்பில் அல்லது புளியங்காட்டில் (விளையாடுகிறார்) ——————- !

 

५  गृहात् खाद्यानि आनीय वयं वने (खादति )———————।

gṛhāt khādyāni ānīya vayaṁ vane (khādati) ——————— |

வீட்டிலிருந்து பலகாரங்களை எடித்துக்கொண்டு நாங்கள் வனத்தில்  (சாப்பிடுகிறார்) ——————- !

 

६  मातामही रमणीयाः कथाः (वदति) ——————-।

mātāmahī ramaṇīyāḥ kathāḥ (vadati) ——————- |

பாட்டி (அம்மாவின் தாயார்) சுவையான கதைகளை (சொல்கிறார்) ———– !

 

७  बालाः वयं श्रद्धया (शृणोति) ——————-।

bālāḥ vayaṁ śraddhayā (śṛṇoti) ——————- |

சிறுவர்களாகிய நாங்கள் சிரத்தையுடன் (கேட்கிறார்) ——————– !

 

८   वयं महिषीभिः सह अरण्यं (गच्छति )———————-।

vayaṁ mahiṣībhiḥ saha araṇyaṁ (gacchati) ———————- |

நாங்கள் எருமைகளுடன் காட்டிற்கு (செல்கிறார்) —————— !

 

 

 

விடைகள்

 

१.  तरामि स्म। (tarāmi sma|)

२. प्राप्नोमि स्म। (prāpnomi sma|)

३.  कुर्वन्ति स्म। (kurvanti sma|)

४. क्रीडामः स्म। (krīḍāmaḥ sma|)

५.  खादामः स्म।(khādāmaḥ sma |)

६.  वदति स्म। (vadati sma|)

७.  शृणुमः स्म। (śṇuumaḥ sma|)

८.  गच्छामः स्म।(gacchāmaḥ sma|)

 

Series Navigationஇலைகள் இல்லா தரைகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -4)
author

ரேவதி மணியன்

Similar Posts

2 Comments

 1. Avatar
  nagarajan says:

  vanakkam,
  i am a sanskrit learner,kindly tell about the alphabets. in swaras what do lu and lU do ? and the vyanjan la ,lu, and rlu are confusing. kindly explain
  nagarajan

 2. Avatar
  Vidya says:

  namaste!

  I am also a learner. For this comment, I am going to follow the following convention for vowels (svarAs): a, i, u, R, LR, e, ai, o, au.

  For consonants, k, kh, g, gh, ~g; ch, Ch, j, jh, ~j, T, Th, D, Dh, N; t, th, d, dh, n; p, ph, b, bh, m; y, r, l, v, sh, Sh, s, h (notice that these are pure consonants, without any vowel attached to them).

  I believe you are asking about the LR I have listed under the svaras. And, you are asking about the ‘L’ that exists in Tamil and other South Indian languages (manjaL, mangaLam ..)

  The vowel LR does not have a ‘long’ form.

  The consonant ‘L’ is not considered to be part of classical Sanskrit. But, it is present in the Vedas (agni mILe purohitam …)

  All consonants combine with vowels. k and a for ‘ka’… In this process, I believe l cannot combine LR. I hope your question is answered to some extent. LR is not a vowel that occurs commonly. A couple of words (or maybe just one) are used as examples.

  There are many books that will explain this. One is M. R. Kale’s A Higher Sanskrit Grammar. Another is ‘sandhiH’, published by Samskrita Bharati.

  I hope this addresses your question. If I have understood the question incorrectly, I beg pardon.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *