கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (மாயக் காட்சிகள் மீது மர்மச் சிந்தனைகள்) (கவிதை -36 பாகம் -1)

This entry is part 32 of 42 in the series 22 மே 2011

 

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

 

 

 

நள்ளிரவுப் பொழுதில்

துள்ளி அலறினேன் :

“நான் கொண்டுள்ள காதலில்

வசித்து வருவது யார் ?”

நீ சொல்வாய் :

“நான் அறிவேன். அதனில்

நான் மட்டு மில்லை.

மற்றுள்ள காட்சிப் படங்கள் ஏன்

பற்றி யுள்ளன என்னை ?”

நான் உரைத்தேன் :

உனது பிரதி பலிப்புகள்

அவை எல்லாம் !

ஒருவரை ஒருவர் ஒத்திருக்கும்

துருக்கிய எழிலவர் அவர்.”

 

++++++++++++

 

நீ கேட்டாய் :

“காதலில் அடுத்துள்ள

அந்தக் குடிவாசி யாரெனச் சொல் ?”

“காயப் பட்ட

எந்தன் ஆத்மா அது,

அந்தச் ஆத்மாவைச் சிறைப்பிடித்து

வந்துள்ளேன் உன்னிடம் !

ஆபத் தானது ஆத்மா !

அதற்கு விடுதலை கொடுக்காதே

எளிதாய் !” என்று

அளித்தேன் பதில் நான் !

கண் சிமிட்டிக்

கையில் ஒரு நூல் முனைக்

கயிற்றைக் கொடுத்தாய் !

இறுக்கிப் பிடி நாணை, ஆனால்

அறுந்து போகாமல் !

 

++++++++++++

 

உனைத் தொட நான்

முனைந் திட்ட போது

வெடுக்கெனத் தடுத்தாய்

எனது கையை !

வெஞ்சினம் கொள்வதும் ஏன் ?”

“நல்ல காரணம்

உள்ளது அதற்கு !

ஒதுக்க வில்லை உன்னை !

இங்கு வருவோரில்

‘நான் நான்’ என்று

கர்வம் கொண்டவன்

கன்னத்தில் அறைய வேண்டும்.”

 

 

***************

தகவல் :

 

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

 

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

 

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

 

3. Life of Rumi in Wikipedia

 

********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] (May 16, 2011)

 

Series Navigationகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -1)ஜப்பான் டோகைமுரா யுரேனியச் செறிவுத் தொழிற்கூடத்தில் நேர்ந்த விபத்து
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *