நானும் நானும்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 9 of 13 in the series 11 செப்டம்பர் 2022

 

  • ஒருபாகன்

கட்டமைக்கப்பட்ட நான்

உள்ளிருக்கும் நானிடம்

தோற்றுப் போன தருணங்கள் –

 

உதடுகளின் முத்தங்கள்

உணர்வுகளின் உக்கிரங்கள்

கிளர்ச்சிகளின் கிரகிப்புகள்

புணர்ச்சிகளின் மயக்கங்கள்

 

சமூக வரையறைகள் சுருங்கிப் போயின!

இரத்த/பாச எல்லைகள் கருகிப் போயின!

 

கனவோ? நனவோ?

கட்டமைப்பு களைந்த

சக உயிர்களுடன்

சில ஆயிரம் ஆண்டுகள்

பிரக்ஞை வெளியில்

பின்னோக்கிப் பிரயாணித்து

ஆனந்தக் கூத்தாடிய தருணங்கள் –

 

ஆனால் அக்கால

ஆனந்தமும்/அழிவும்

நாணயத்தின் இரு பக்கங்கள் போல!

ஆனந்தமுற்று அழிவது பரவாயில்லை போல!

 

  • ஒருபாகன்
Series Navigationப க  பொன்னுசாமியின் படைப்புலகம்பால்வீதி ஒளிமந்தை வெப்ப வாயு முகில் மூட்டத்தில் பதிக்கப் பட்டுள்ளது
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *