கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) காதல் என்பது என்ன ? (கவிதை – 49 பாகம் -2)

This entry is part 36 of 45 in the series 9 அக்டோபர் 2011

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

“சகோதரர்களே ! ஒருவருக் கொருவர் போதனை கூறிக் கொள்வீர். அதுவே உமக்கு பிழைகளைத் திருத்தவும், வீணான மன நோவைத் தவிர்க்கவும் வழி வகுக்கும். பலரின் அனுபவ ஞானமே சித்திரவதைக்கு எதிரான ஒரு கவசம் உமக்கு ! அம்முறைப்பாடு நமது எதிரிகளைக் குறைக்கும்”

கலில் கிப்ரான் (ஞானியின் பொன்மொழிகள்)

+++++++++++

காதல் என்பது என்ன ?

காதல் என்பது கவிஞனுக்குப்
பெருமித உணர்ச்சி !
கலைஞனுக்கு
உணர்ச்சி வெளிப்பாடு !
இசைப் பாடக னுக்கு
உள்ளூக்கும் உணர்ச்சி !

தாயின் பரிவு வெள்ளத்தால்
பெரு மதிப்புறும்
அன்பு மயம் என்பது
சேய் இதயத்தின் உள்ளிருக்கும்
புனித ஆலயப் பீடம் !

காதல் தெரியுது
ஓர் இதயத்தின் ஏங்கலுக்கு !
ஒரு தேவை
இச்சையைப் பூர்த்தி செய்வது !
காதலின் பூரணம்
நெஞ்சின்
தேடலைப் பின்பற்றும் !
ஏவாளின் மூல மாகத் தான்
ஆதாமுக்குத் தெரிந்தது
காதல் என்ன வென்பது !
ஆயினும்
தானாகத் தெரிந்தது
சாலமனுக்கு !
காதற் தெரிசனம்
மூலமாய்
ஞானத்தைப் பெற்றான்
சாலமன் !

(தொடரும்)

+++++++++++++

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (October 3, 2011)

Series Navigationநிலாவும் குதிரையும்கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மரக்கோடரி ( புதையல் தோண்டுதல்) (கவிதை -51 பாகம் -1)
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *