சமஸ்கிருதம் கற்றுகொள்வோம். 48 பிடிஎஃப் கோப்பு
இந்த வாரமும் क्त्वा प्रत्ययः (ktvā pratyayaḥ ) பற்றிப் படிப்போம். எழுவாய் (Subject) ஒன்றுக்கு மேற்பட்ட செயல்களைச் செய்யும்போது முதலில் செய்யும் செயலுடன் क्त्वा प्रत्ययः சேர்க்கவேண்டும். கீழேயுள்ள உரையாடலை உரத்துப் படிக்கவும்.
रविवासरेकुत्रगमिष्यति ?
ravivāsare kutra gamiṣyati ?
ஞாயிற்றுக்கிழமைஎங்குசெல்வீர்?
प्रमोदः – अशोक। अद्य रविवासरः। भवान् कुत्र कुत्र गमिष्यति ?
pramodaḥ – aśoka | adya ravivāsaraḥ| bhavān kutra kutra gamiṣyati?
பிரமோத் – அசோக! இன்று ஞாயுற்றுக்கிழமை. நீங்கள் எங்கெங்கு செல்வீர்?
अशोकः – अहम् अधुना मन्दिरं गमिष्यामि। मन्दिरं गत्वा पूजां करिष्यामि। पूजां कृत्वा नगरं गमिष्यामि। नगरं गत्वा पुष्पवाटिकां द्रक्ष्यामि।पुष्पवाटिकां दृष्ट्वा वाचनालयं गमिष्यामि। वाचनालयं गत्वा पत्रिकां पठिष्यामि। पत्रिकां पठित्वा विपणिं गमिष्यामि।
aśokaḥ – aham adhunā mandiraṁ gamiṣyāmi | mandiraṁ gatvā pūjāṁ kariṣyāmi | pūjāṁ kṛtvā nagaraṁ gamiṣyāmi | nagaraṁ gatvā puṣpavāṭikāṁ drakṣyāmi puṣpavāṭikāṁ dṛṣṭvā vācanālayaṁ gamiṣyāmi | vācanālayaṁ gatvā patrikāṁ paṭhiṣyāmi | patrikāṁ paṭhitvā vipaṇiṁ gamiṣyāmi |
அசோக் – நான் இப்போது கோவிலுக்குச் செல்வேன். கோவிலுக்குச் சென்று பூஜை செய்வேன். பூஜை செய்துவிட்டு நகரத்திற்குச் செல்வேன். நகரம் சென்று மலர்பூங்காவைப் பார்ப்பேன். மலர்பூங்காவைப் பார்த்துவிட்டு படிக்கும் அறைக்குச்(reading room) செல்வேன். படிக்கும் அறை சென்று செய்தித்தாளைப் படிப்பேன். செய்தித்தாள் படித்துவிட்டு அங்காடி செல்வேன்.
प्रमोदः – अद्य विपण्याः अवकाशः नास्ति किम् ?
pramodaḥ – adya vipaṇyāḥ avakāśaḥ nāsti kim?
பிரமோத் – இன்று கடைகளுக்குச் செல்ல நேரமில்லையா என்ன?
अशोकः – नैव। अद्य एव साप्ताहिकी विपणिः भविष्यति।
aśokaḥ – naiva | adya eva sāptāhikī vipaṇiḥ bhaviṣyati |
அசோக் – இன்றுதான் வாரச் சந்தை இருக்கும்.
प्रमोदः – अस्तु। विपणिं गत्वा किं क्रेष्यति ?
pramodaḥ – astu | vipaṇiṁ gatvā kiṁ kreṣyati?
பிரமோத் – சரி ! அங்காடி சென்று என்ன வாங்குவீர்?
अशोकः – विपणिं गत्वा शाकानि क्रेष्यमि। शाकानि क्रीत्वा गृहं आगमिष्यामि। गृहम् आगत्य क्रीडिष्यमि। क्रीडित्वा..।
aśokaḥ – vipaṇiṁ gatvā śākāni kreṣyami| śākāni krītvā gṛhaṁ āgamiṣyāmi | gṛham āgatya krīḍiṣyami | krīḍitvā.. |
அசோக் – கடைக்குச் சென்று காய்கறிகள் வாங்குவேன். காய்கறிகள் வாங்கிவிட்டு வீட்டிற்கு திரும்புவேன். வீட்டிற்கு வந்து விளையாடுவேன்.
விளையாடிவிட்டு…. !
प्रमोदः – कृडित्वा हस्तपादं प्रक्षालयिष्यामि। हस्तपादं प्रक्षाल्य दूरदर्शनं द्रक्ष्यामि। दूरदर्शनं दृष्ट्वा भोजनं करिष्यामि। भोजां कृत्वा ..।
pramodaḥ – kṛḍitvā hastapādaṁ prakṣālayiṣyāmi | hastapādaṁ prakṣālya dūradarśanaṁ drakṣyāmi | dūradarśanaṁ dṛṣṭvā bhoojanaṁ kariṣyāmi | bhojāṁ kṛtvā |
பிரமோத் – விளையாடிவிட்டு கைகால் சுத்தம் செய்வேன். கைகால் சுத்தம் செய்து தொலைகாட்சி பார்ப்பேன். தொலைகாட்சி பார்த்துவிட்டு சமையல் செய்வேன். சமையல் செய்துவிட்டு .. !
असोकः – किं भोः ! मम कार्याणि भवतः उपहासस्य विषयः खलु ?
asokaḥ – kiṁ bhoḥ mama kāryāṇi bhavataḥ upahāsasya viṣayaḥ khalu ?
அசோக் – என்னப்பா ! என்னுடைய காரியங்கள் உங்களுக்கு பரிகாசத்திற்குரிய விஷயமாக இருக்கிறதா ?
प्रमोदः – मित्र। कोपः मास्तु। अहं विनोदार्थं तथा उक्तवान्।
pramodaḥ – mitra| kopaḥ māstu | ahaṁ vinodārthaṁ tathā uktavān |
பிரமோத் – நண்ப ! கோபம் கொள்ளாதே! நான் விளையாட்டிற்காக அவ்வாறு சொன்னேன்.
असोकः – भवान् अत्र उपविश्य किं करोति ? भवान् अपि मया सह चलतु !
asokaḥ – bhavān atra upaviśya kiṁ karoti? bhavān api mayā saha calatu!
அசோக் – நீங்கள் இங்கமர்ந்து என்ன செய்கிறீர்? நீங்களும் கூட என்னுடன் வாருங்கள்.
प्रमोदः – नैव भोः। अहम् इतः उत्थाय गृहं गमिष्यामि। गृहे कार्याणि सन्ति।
pramodaḥ – naiva bhoḥ | aham itaḥ utthāya gṛhaṁ gamiṣyāmi | gṛhe kāryāṇi santi |
பிரமோத் – வேண்டாம் . நான் இங்கிருந்து வீட்டிற்கு செல்வேன். வீட்டில் வேலைகள் இருக்கின்றன.
उदाहरणंदृष्ट्वावाक्यानिरचयन्तु ! (udāharaṇaṁ dṛṣṭvā vākyāni racayantu!)
உதாரணத்தைப்பார்த்துவாக்கியங்களைஅமைக்கவும்.
१. बालकः स्नाति, विद्यालयं गच्छति।(bālakaḥ snāti, vidyālayaṁ gacchati |)
சிறுவன் குளிக்கிறான். பள்ளிக்கூடம் செல்கிறான்.
बालकः स्नात्वा विद्यालयं गच्छति।(bālakaḥ snātvā vidyālayaṁ gacchati |)
சிறுவன் குளித்துவிட்டு பள்ளிக்கூடம் செல்கிறான்.
२. शिशुः दुग्धं पीतवान् , शयनं कृतवान्।(śiśuḥ dugdhaṁ pītavān, śayanaṁ kṛtavān |)
குழந்தை பால் குடித்தான், தூங்கினான்.
३. बालिका लिखितवती , शयितवती।(bālikā likhitavatī śayitavatī |)
சிறுமி எழுதினாள். தூங்கினாள்.
४. सख्यः पृच्छन्ति, कार्यं कुर्वन्ति। (sakhyaḥ pṛcchanti, kāryaṁ kurvanti |)
தோழிகள் கேட்கிறார்கள், வேலை செய்கிறார்கள்.
५. पिता वस्त्रं धरति ,कार्यालयं गच्छति।(pitā vastraṁ dharati kāryālayaṁ gacchati |)
அப்பா ஆடை அணிகிறார், வேலைக்குச் செல்கிறார்.
कथा (kathā) கதை
अतिथि –देवोभव(atithi -devo bhava)
விருந்தாளியைகடவுளுக்குசமமாகக்கருது
कश्चन दुष्टः व्याधः आसीत्। एकदा सः वनं गत्वा जालं प्रसारितवान्। एका कपोता जाले पतितवती। तां कपोतां पञ्जरे स्थापयित्वा व्याधः दूरं गतवान्। अनुक्षणं वृष्टिः आरब्धा। व्याधः शीघ्रं धावित्वा एकस्य महावृक्षस्य अधः उपविष्टवान्। उपरि दृष्ट्वा -”कृपया मां रक्षतु ” इति सः उक्तवान्। तस्मिन् वृक्षे कपोतायाः पतिः आसीत्। सा कपोता पतिं दृष्ट्वा उक्तवती , “भोः कान्त, एषः व्याधः अस्माकं अतिथिः अस्ति। तस्य सत्कारं करोतु !” कपोतः शीघ्रं शुष्कपर्णानि आनीय अग्निं ज्वालयित्वा उक्तवान् ,”भवान् इदानीं शीतबाधं दूरीकरोतु !अहं आहारं सिद्धं कृत्वा ददामि !” तत्र अन्यः आहारः नास्ति इति ज्ञात्वा कपोतः स्वयं अग्निं प्रविष्टवान् उच्चैः उक्तवान् च , ”मम मांसं खादित्वा सन्तुष्टः भवतु ” इति। व्याधस्य लज्जा जाता। सः शीघ्रं जालं उद्घाट्य कपोतायाः मोचनं कृतवान्। पतिविरहितपीड्या कपोता अग्निं प्रविष्टवती। कपोतायाः धर्माचरणम् अवगत्य दुःखितः व्याधः अपि अग्निं प्रविष्टवान्। ते सर्वे स्वर्गं गतवन्तः।
kaścana duṣṭaḥ vyādhaḥ āsīt| ekadā saḥ vanaṁ gatvā jālaṁ prasāritavān| ekā kapotā jāle patitavatī| tāṁ kapotāṁ pañjare sthāpayitvā vyādhaḥ dūraṁ gatavān| anukṣaṇaṁ vṛṣṭiḥ ārabdhā| vyādhaḥ śīghraṁ dhāvitvā ekasya mahāvṛkṣasya adhaḥ upaviṣṭavān| upari dṛṣṭvā -” kṛpayā māṁ rakṣatu” iti saḥ uktavān| tasmin vṛkṣe kapotāyāḥ patiḥ āsīt| sā kapotā patiṁ dṛṣṭvā uktavatī, “ bhoḥ kānta, eṣaḥ vyādhaḥ asmākaṁ atithiḥ asti| tasya satkāraṁ karotu!” kapotaḥ śīghraṁ śuṣkaparṇāni ānīya agniṁ jvālayitvā uktavān, ” bhavān idānīṁ śītabādhaṁ dūrīkarotu! ahaṁ āhāraṁ siddhaṁ kṛtvā dadāmi!” tatra anyaḥ āhāraḥ nāsti iti jñātvā kapotaḥ svayaṁ agniṁ praviṣṭavān uccaiḥ uktavān ca , “mama māṁsaṁ khāditvā santuṣṭaḥ bhavatu” iti| vyādhasya lajjā jātā| saḥ śīghraṁ jālaṁ udghāṭya kapotāyāḥ mocanaṁ kṛtavān| pativirahitapīḍyā kapotā agniṁ praviṣṭavatī| kapotāyāḥ dharmācaraṇam avagatya duḥkhitaḥ vyādhaḥ api agniṁ praviṣṭavān| te sarve svargaṁ gatavantaḥ|
ஒரு தீயகுணமுடைய வேடன் இருந்தான். ஒருமுறை அவன் காட்டிற்குச் சென்று வலையை விரித்தான். ஒரு பெண்புறா வலையில் விழுந்தது. அந்தப் புறாவை கூண்டினுள் வைத்து வேடன் தொலைதூரம் சென்றான். அந்த சமயத்தில் மழை ஆரம்பித்தது. வேடன் விரைவாக ஓடிச் சென்று ஒரு மரத்தின் கீழே அமர்ந்தான். மேலே நோக்கி, “தயவுசெய்து என்னைக் காப்பாற்று” என்று அவன் சொன்னான். அந்த மரத்தில் பெண்புறாவினுடைய கணவர் இருந்தார். அந்தப் பெண்புறா கணவரைப் பார்த்து, “ அன்பிற்குரியவரே, இந்த வேடன் நம்முடைய விருந்தாளி. அவனுக்கு நற்செயல்களைச் செய்வீர்” என்று கூறியது. ஆண்புறா விரைவில் காய்ந்த இலைகளை கொண்டுவந்து நெருப்பைப் பற்றவைத்து,”நீங்கள் இப்போது குளிரைப் போக்கிக்கொள்ளுங்கள். நான் உணவு தயார் செய்து தருகிறேன்!” என்று கூறியது. அங்கு வேறு எந்த உணவுப் பொருளும் இல்லை என்பதை அறிந்து ஆண்புறா தானே நெருப்பில் பிரவேசித்தது. சத்தமாக, “என்னுடைய மாமிசத்தைச் சாப்பிட்டு சந்தோஷமாக இருங்கள்” என்று கூறியது. வேடன் வெட்கிப்போனான். அவன் விரைவில் வலையைத் திறந்து பெண்புறாவை விடுவித்தான். கணவரை இழந்த துக்கத்தில் பெண்புறா நெருப்பில் பிரவேசித்தது. பெண்புறாவின் நற்செயல்களை நினைவுகூர்ந்து துக்கமடைந்த வேடனும் நெருப்பில் பிரவேசித்தான். அவர்கள் அனைவரும் சொர்க்கலோகம் சென்றார்கள்.
அடுத்த வாரம் आगत्य , उपविश्य, प्रक्षाल्य (āgatya, uapaviśya, prakṣālya)போன்ற உதாரணங்களில் உள்ள ल्यबन्त (ल्यप् suffix) பற்றிப் படிப்போம். சென்ற வாரம் படித்த क्त्वा प्रत्ययः (ktvā pratyayaḥ ) அட்டவணையை மனனம் செய்து கொள்ளவும்.
- நாட்டிய கலாமணி வசந்தா டானியல் அவர்களின் நடன நெறியாள்கையில் நாட்டிய கலாலய மாணவிகள் வழங்கும் உயிர்ப்பு நாட்டிய நாடகம்.
- உறவுகள்
- இப்போதைக்கு இது – 3 மரணதண்டனை
- மகிழ்ச்சியைத் தேடி…
- வாழ்க்கை எதார்த்தம்
- மனுநீதி நாளில் ஒரு மாசற்ற ஊழியன்
- மனித நேயர்
- சிறகை விரிப்போம். தென்கச்சி கோ. சுவாமிநாதனின் நூல் விமர்சனம்
- காலமாகாத கனவுகள்
- வேறு தளத்தில் என் நாடகம்
- சயனம்
- மனித நேயம் கடந்து ஆன்ம நேயத்துக்கு
- உடனடித் தேவை தமிழ் சாகித்ய அகாதெமி
- ஜென் ஒரு புரிதல் – பகுதி-14
- வாழும் கலை 212 Durham Avenue Metuchen, NJ 08840 Map
- 21 ஆம் நூற்றாண்டில் பாதுகாப்பாய் இயங்கி வரும் அணுமின் நிலையங்கள் நாட்டுக்குத் தேவையான தீங்குகள் – 1
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 10
- மேலும் மேலும் நசுங்குது சொம்பு!
- நன்றி மறவா..!
- திறவுக்கோல்
- வியாபாரி
- ஷாம்பூ
- அவரோகணம்
- ஆப்பிள்-ன் புதுமைக் கடவுள் ஸ்டீவ் ஜாப்ஸ்- சில தகவல்கள்
- கரும்புள்ளியின்மீது விழும் வெளிச்சம் ( ”தேவந்தி” என்னும் சுசிலாவின் சிறுகதைத்தொகுப்புக்கு எழுதிய முன்னுரை
- (79) – நினைவுகளின் சுவட்டில்
- நாயுடு மெஸ்
- எனது இலக்கிய அனுபவங்கள் – 19
- துளிப்பாக்கள் (ஹைக்கூ)
- கொக்கும் மீனும்..
- சாமியாரும் ஆயிரங்களும்
- Strangers on a Car
- சிற்சில
- காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன் – சிறுகதை
- நிலாவும் குதிரையும்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) காதல் என்பது என்ன ? (கவிதை – 49 பாகம் -2)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மரக்கோடரி ( புதையல் தோண்டுதல்) (கவிதை -51 பாகம் -1)
- யார் குதிரை?
- இரு கவிதைகள்
- கேரளா நெல்வயல் மற்றும் நீர்பாங்கான பகுதி பாதுகாப்பு சட்டம் 2008
- கையாளுமை
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 48
- பஞ்சதந்திரம் தொடர் 12 நன்றி கெட்ட மனிதன்
- முன்னணியின் பின்னணிகள் – 8 சமர்செட் மாம்
- பேசும் படங்கள்::: பஸ்ஸ்டாண்டில் சாரயக்கடை வருமா…?