கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) திருமணப் பாதையில் ! (கவிதை – 50 பாகம் -1)

This entry is part 27 of 37 in the series 23 அக்டோபர் 2011

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

“உனக்கொரு பிரச்சனை இருப்பது தெளிவாகத் தெரிந்தால் உறுதியோடு நீ அதை தீர்வு செய்ய முனைந்திடு ! அதுவே வல்லமை படைத்தோர் செய்வது. முதியோர் ஆலோசனையைக் கேட்டுக் கொள் மேலும்.”

கலில் கிப்ரான் (ஞானியின் பொன்மொழிகள்)

+++++++++++

திருமணப் பாதையில் !

திருமணப் பேச்சு துவங்கும்
முதல் விழி நோக்கோடு !
முதல் முத்த மோடு !
காதலன் காதலி இருவரின்
முதல் நோக்கு
வாழ்வின் கொந்தளிப்பைத்
தணித்து வைக்கும்
திருமணத்தில் இருவர்
தவிப்பி லிருந்து !
இதயத்தின் உட்கரு அரங்கில்
ஏற்றி வைக்கும் முதற்
தீப்பொறி அது !
உள்ளத்தின்
வெள்ளி நாண்களில்
முறுக்கி மீட்டும்
முதல் மர்ம மான
இசைக் கீதம் !

சிறிது கணம் ஆயினும்
திறக்கும் அது
ஆத்மாவின் முன்பு
கால வெளி கடந்து !
கண்களுக்கு
எடுத்துக் காட்டும்
இரவின் இரகசியத்தை !
சுட்டிக் காட்டும்
மன எழுச்சி உணர்வின்
மகத்து வத்தை !
எதிர்கால
நித்திய உலகின்
நிலைத்துவம் வெளிப்படும்
இருவர்
திருமணத்தில் !

(தொடரும்)

+++++++++++++

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (October 20, 2011)

Series Navigationகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மது விலக்கு ஏன் ? (கவிதை -51 பாகம் -2)அந்த நொடி
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *