இந்த வாரம் ल्यप्प्रत्ययः ( lyappratyayaḥ) பற்றித் தெரிந்து கொள்வோம். எப்போது ஒருவர் இரண்டு செயல்கள் செய்கிறாரோ அப்போது முதலில் செய்த காரியத்தின் வினைச்சொல்லுடன் क्त्वाप्रत्ययः (ktvāpratyayaḥ ) சேர்க்கவேண்டும் என்று படித்தோமல்லவா? அதே விதிமுறைதான் ल्यप्प्रत्ययः ( lyappratyayaḥ)க்கும். வாக்கியத்தில் ल्यप्प्रत्ययः உபயோகித்தாலும் क्त्वाप्रत्ययः உபயோகித்தாலும் பொருள் மாறாது . முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள உரையாடலை உரத்துப் படிக்கவும்.
एतत् सम्भाषणम् उच्चैः पठन्तु – (etat sambhā ṣaṇam uccaiḥ paṭhantu -)
இந்த உரையாடலை உரத்துப் படியுங்கள் :-
बालकः – तात। सेवफलम् आवश्यकम्।
bālakaḥ – tāta | sevaphalam āvaśyakam |
சிறுவன் – அப்பா! ஆப்பிள் வேண்டும்.
प्रदीपः – अस्तु। (आपणिकं प्रति) भोः। पञ्च सेवफलानि ददातु।
pradīpaḥ – astu | (āpaṇikaṁ prati) bhoḥ | pañca sevaphalāni dadātu |
பிரதீப் – சரி! (கடைக்காரரிடம்) மதிப்பிற்குரியவரே ! ஐந்து ஆப்பிள்பழங்கள் கொடுங்கள்.
आपणिकः – स्वीकरोतु श्रीमन्।
āpaṇikaḥ – svīkarotu śrīman |
கடைக்காரர் – வாங்கிக்கொள்ளுங்கள் !
प्रदीपः – भोः। फलं नष्टम् अस्ति। एतत् परिवर्त्य अन्यत् ददातु।
pradīpaḥ – bhoḥ | phalaṁ naṣṭam asti| etat parivartya anyat dadātu |
பிரதீப் – பழம் நன்றாக இல்லை. இதற்கு பதிலாக வேறொன்று கொடுங்கள்.
(आपणिकः ददाति)(āpaṇikaḥ dadāti)
(கடைக்காரர் கொடுக்கிறார்.)
बालकः – अहं फलं खादितुम् इच्छामि।
bālakaḥ – ahaṁ phalaṁ khāditum icchāmi|
சிறுவன் – நான் பழத்தை சாப்பிட விரும்புகிறேன்.
प्रदीपः – खादतु किन्तु प्रक्षाल्य खादतु। प्रातः उत्थाय दन्तधावनं कृतवान् वा ?
pradīpaḥ – khādatu kintu prakṣālya khādatu| prātaḥ utthāya dantadhāvanaṁ kṛtavān vā ?
பிரதீப் – சாப்பிடு ஆனால் சுத்தப்படுத்தியபின் சாப்பிடு. காலை எழுந்து பல் தேய்த்தாயா?
बालकः – आम् कृतवान्।
bālakaḥ – ām kṛtavān |
சிறுவன் – ஆம் செய்தேன்.
प्रदीपः – उत्तमम्। इदानीं भवान् शीध्रं गृहं गत्वा स्यूतं स्वीकृत्य आगच्छतु। अहं भवन्तं विद्यालयं प्रापय्य कार्यालयं गमिष्यामि।
pradīpaḥ – uttamam | idānīṁ bhavān śīdhraṁ gṛhaṁ gatvā syūtaṁ svīkṛtya āgacchatu| ahaṁ bhavantaṁ vidyālayaṁ prāpayya kāryālayaṁ gamiṣyāmi |
ப்ரதீப் — நன்று! இப்போது நீர் சீக்கிரமாக வீட்டிற்குச் சென்று பையை எடுத்துக்கொண்டு வரவும். நான் உன்னை பள்ளியில் விட்டுப் பின் வேலைக்குச் செல்வேன்.
(बालकः स्यूतं स्वीकृत्य आगच्छति।)
(bālakaḥ syūtaṁ svīkṛtya āgacchati |)
(சிறுவன் பையை எடுத்து வருகிறான்.)
प्रदीपः – पुत्र। मध्याह्ने विद्यालयात् आगत्य अल्पाहारं च समाप्य एकघण्टां यावत् उपविश्य पठतु।
pradīpaḥ – putra| madhyāhne vidyālayāt āgatya alpāhāraṁ ca samāpya ekaghaṇṭāṁ yāvat upaviśya paṭhatu |
பிரதீப் – மகனே! மத்தியானம் பள்ளியிலிருந்து வந்து சிற்றுண்டி சாப்பிட்டு விட்டு ஒருமணிநேரம் வரை உட்கார்ந்து படிக்கவும்.
बालकः – अस्तु। तथैव करिष्यामि।
bālakaḥ – astu| tathaiva kariṣyāmi|
சிறுவன் – சரி! அப்படியே செய்கிறேன்.
धातुः यदि उपसर्गसहितः भवति तर्हि क्त्वाप्रत्ययस्य स्थाने ल्यप्प्रत्ययः भवति। आगत्य , विस्मृत्य , आनीय – इत्यादीनि ल्यप्प्रत्ययान्तानि अव्ययानि।
dhātuḥ yadi upasargasahitaḥ bhavati tarhi ktvāpratyayasya sthāne lyappratyayaḥ bhavati| āgatya , vismṛtya, ānīya – ityādīni lyappratyayāntāni avyayāni|
எப்போது வினை (மூலரூபம்) முன்னடைச் சொல்லுடன் (prefix) சேர்ந்திருக்கிறதோ அப்போது क्त्वाप्रत्ययः (ktvāpratyayaḥ)வரக்கூடிய இடத்தில் ल्यप्प्रत्ययः(lyappratyayaḥ) வரும். ल्यप्प्रत्ययः உம் क्त्वाप्रत्ययः (ktvāpratyayaḥ ) போலவே எவ்வித மாறுதலுக்கும் உட்படாதது (Indeclinable) என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும்.
22 முன்னடைச் சொற்கள் இருக்கின்றன.
उपसर्गाः द्वाविंशतिः सन्ति। ते च – प्र ,परा ,अप, सम् , अनु, अव, निस् ,निर् ,दुस् ,दुर् ,वि ,आ, नि ,अधि, अपि ,अति ,सु ,उत् ,अभि ,प्रति ,परि, उप
(upasargāḥ dvāviṁśatiḥ santi | te ca – pra, parā, apa, sam , anu, ava ,nis, nir, dus ,dur ,vi ,ā ,ni ,adhi ,api ,ati, su ,ut ,abhi, prati, pari, upa)
अभ्यासः (abhyāsaḥ ) பயிற்சி :
१ परि + शीलयित्वा = परिशील्य (பரிசோதித்து விட்டு)
pari +śīlayitvā = pariśīlya
२. आ + नीत्वा = आनीय (கொண்டுவந்து)
ā + nītvā = ānīya
३. प्र +क्षालयित्वा = प्रक्षाल्य (தூய்மை செய்து)
pra+ kṣālayitvā = prakṣālya
४. अनु +भूत्वा =अनुभूय (அனுபவித்து)
anu +bhūtvā = anubhūya
५. सं +मार्जयित्वा = संमार्ज्य (விளக்குமாற்றால் (broom)தூய்மை செய்து)
ā + nītvā = saṁmārjya
६. वि + स्मृत्वा = विस्मृत्य (மறந்துவிட்டு)
vi + smṛtvā = vismṛtya
७. आ + गत्वा = आगत्य (வந்து விட்டு)
ā + gatvā = āgatya
८. परिष् + कृत्वा =परिष्कृत्य (சூழ்ந்து)
pariṣ + kṛtvā = pariṣkṛtya
கீழேயுள்ள வாக்கியங்களை படிக்கவும்.
१. आरक्षकः चोरम् अनुसृत्य गतवान्।
ārakṣakaḥ coram anusṛtya gatavān|
பாதுகாவலர் (police) திருடனைப் பின் தொடர்ந்து சென்றார்.
२. चोरः धनम् अपहृत्य धावितवान्।
coraḥ dhanam apahṛtya dhāvitavān|
திருடன் பணத்தைப் பறித்துக் கொண்டு ஓடிவிட்டான்.
३. सेवकः वृक्षात् अवतीर्य गतवान्।
sevakaḥ vṛkṣāt avatīrya gatavān|
காவலாளி மரத்திலிருந்து கீழிறங்கி சென்றான்.
४. अहं स्न्मार्गम् आश्रित्य गच्छामि।
ahaṁ snmārgam āśritya gacchāmi|
நான் நல்வழியைப் பின்பற்றிச் செல்கிறேன்.
५. बालकः उपविश्य पठति।
bālakaḥ upaviśya paṭhati|
சிறுவன் அமர்ந்து கொண்டு படிக்கிறான்.
६. सः उत्थाय वदति।
saḥ utthāya vadati|
அவன் எழுந்து சொல்கிறான்.
७. अर्चकः देवम् अलङ्कृत्य पूजयति।
arcakaḥ devam alaṅkṛtya pūjayati |
அர்ச்சகர் தெய்வத்தை அலங்கரித்து பூஜிக்கிறார்.
अभ्यासः (abhyāsaḥ ) பயிற்சி :
उदाहरणानुगुणं ल्यबन्तरूपैः वाक्यानि योजयनतु
udāharaṇānuguṇaṁ lyabantarūpaiḥ vākyāni yojayanatu
सुधीरः प्रातः उत्थितवान् , मुखं क्षालितान्।(sudhīraḥ prātaḥ utthitavān mukhaṁ kṣālitān |)
சுதீர் காலையில் எழுந்தார், முகத்தைத் தூய்மைசெய்தார்.
सुधीरः प्रातः उत्थाय मुखं क्षालितवान्।(sudhīraḥ prātaḥ utthāya mukhaṁ kṣālitavān|)
சுதீர் காலையில் எழுந்து முகத்தைத் தூய்மைசெய்தார்.
१. छात्रः विद्यालयं प्रविष्टवान् , पुस्तकं पठितवान्।(chātraḥ vidyālayaṁ praviṣṭavān, pustakaṁ paṭhitavān|)
மாணவன் பள்ளிக்கூடம் நுழைந்தான், புத்தகம் படித்தான்.
२. हनूमान् पर्वतम् उन्नीतवान्, आनीतवान्। (hanūmān parvatam unnītavān, ānītavān|)
ஹனுமான் மலையை தகர்த்தெடுத்தார், கொண்டுவந்தார்.
३. साधवः उपविशन्ति, ध्यायन्ति।(sādhavaḥ upaviśanti ,dhyāyanti|)
நற்குணமுடையவர்கள் அமர்கிறார்கள், தியானம் செய்கிறார்கள்
४. माधवः देवं नमस्कृतवान् ,पूजां कृतवान्।( mādhavaḥ devaṁ namaskṛtavān, pūjāṁ kṛtavān|)
மாதவன் கடவுளை வணங்கினார், பூஜை செய்தார்.
५. सर्वे हस्तान् प्रक्षालयन्तु, भोजनं खादन्तु।(sarve hastān prakṣālayantu ,bhojanaṁ khādantu|)
அனைவரும் கைகளை சுத்தம் செய்யுங்கள், உணவு சாப்பிடுங்கள்.
- நினைவின் நதிக்கரையில் – 2
- படிமங்கள்
- கந்த சஷ்டி விழா இந்த ஆண்டும் விமரிசையாக ஹாங்காங்கில்
- பயணக்குறிப்புகள்
- கவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு சிறந்த பாடலாசிரியர் விருது
- எல்லார் இதயங்களிலும்
- இருள்
- மழையாகிவிட்ட தவளையின் சாகசம்
- அது
- போதிதர்மர் தமிழரா…? ஆரியரா…?
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 13
- கூடங்குளத்தின் ரஷ்ய அணுமின் நிலையம் பற்றிய சில பாதுகாப்பு ஆய்வுரைகள்
- நெடுஞ்சாலை அழகு..
- மூன்று தலைமுறை வயசின் உருவம்
- சூர்யகாந்தனின் முத்தான பத்து கதைகள்
- (78) – நினைவுகளின் சுவட்டில்
- தொலைத்து
- கதையல்ல வரலாறு 3-1:ஸ்டாலின் மரணத்தின் பின்னே…
- எது உயர்ந்தது?
- தமிழ் இலக்கியங்களில் மகளிர் விளையாட்டுக்கள்
- மழை
- நிர்மால்யம்
- பிரான்சு தமிழ் கண்ணதாசன் கழகம் கொண்டாடிய காந்தி விழா
- துளித்துளி
- “மூவர் உலா” (நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள்)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மீட்டெழுச்சி நாள் (The Resurrection Day)) (கவிதை -51 பாகம் -3)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மீட்டெழுச்சி நாள் (The Resurrection Day)) (கவிதை -51 பாகம் -4)
- ஜென் ஒரு புரிதல் -17
- அவர்களில் நான்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) திருமணப் பாதையில் ! (கவிதை – 50 பாகம் -2)
- கூடங்குளம்
- இரவில் நான் உன் குதிரை. சில தேசங்களின் சில கதைகள். நூல் விமர்சனம்
- இதுவும் அதுவும் உதுவும் – 2
- பறவைகளின் தீபாவளி
- கைப்பேசி பேசினால்
- ஜயமுண்டு பயமில்லை
- ஜீ வி த ம்
- அந்த இடைவெளி…
- பஞ்சதந்திரம் தொடர் 15 அன்னமும் ஆந்தையும்
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 49
- முன்னணியின் பின்னணிகள் – 11 சாமர்செம் மாம்
- அந்நியர்களின் வருகை…
- Harry Belafonte வாழைப்பழ படகு
- தொலை குரல் தோழமை