கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) திருமணப் பாதையில் ! (கவிதை – 50 பாகம் -4)

This entry is part 36 of 41 in the series 13 நவம்பர் 2011

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

“பொறுமையுடன் விரைந்து செல். வாய்ப்புக்கள் வாசலுக்கு வரும் போது சோம்பிக் கிடக்காதே. அவ்வழியில் சென்றால் உன் தவறுகள் தவிர்க்கப் படும்.”

கலில் கிப்ரான் (ஞானியின் பொன்மொழிகள்)

+++++++++++

திருமணப் பாதையில் !

காதலரின் முதல் நோக்கு
இதய நிலத்தில்
இறைவன்
மானிடத் துக்கு
விதைத்த
வித்து போன்றது !
காதலர் முதல் முத்தம்
வாழ்வு மரக்கிளை
முனை யிலே
முளைத்த
முதல் பூ மலர்ச்சி !

திருமணத்தில் காதல்
வாழ்வு
வசனத்தைக்
கீதமாய்ப் பாடுது !
போற்றும்
வழிபாட்டு நூலாய்
பகலில் பாடும்
இரவின்
இன்னிசை யோடு, !

இங்கே காதலின் தாகம்
முகத்திரை நீக்கி
இதயத் துக்கு ஒளியூட்டும் !
பூரிப்பு உண்டாக்கும்
காதலி
தெய்வீ கத்தை
அணைக்கும் போது !
புறத்துவக் களிப்பு வேறு
எதுவும்
மகிழ்ச்சியை
உருவாக் காது
ஆத்மாவைத் தவிர !

(தொடரும்)

+++++++++++++

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (November 9, 2011)

Series Navigationசமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 50இதுவும் அதுவும் உதுவும் – 4
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *