சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 52

This entry is part 38 of 42 in the series 1 ஜனவரி 2012

சமஸ்கிருதம் 52
சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 52
இந்த வாரம் மேலும் சில बन्धुवाचकशब्दाः (bandhuvācakaśabdāḥ), சொந்தபந்தங்களைக் குறிப்பிடும் சொற்களைப் பற்றி பார்ப்போம்.

 

अन्ये केचन बन्धुवाचकाः शब्दाः (anye kecana bandhuvācakāḥ śabdāḥ)

மேலும் சில சொந்தபந்த ங்களை க் குறிப்பிடும்   சொற்கள்

 

मातुलः – मातुः भ्राता

mātulaḥ – mātuḥ bhrātā (அம்மாவின் தம்பி)

 

मातुलानी – मातुलस्य पत्नी

mātulānī – mātulasya patnī (மாமாவின் மனைவி)

 

भागिनेयः – भगिन्याः पुत्रः

bhāgineyaḥ – bhaginyāḥ putraḥ (சகோதரியினுடைய மகன்)

 

भागिनेयी –  भगिन्याः पुत्री

bhāgineyī –  bhaginyāḥ putrī (சகோதரியினுடைய  மகள்)

 

ननान्दा – पत्युः भगिनी

nanāndā – patyuḥ bhaginī (கணவருடைய சகோதரி)

 

पितृव्यः – पितुः भ्राता

pitṛvyaḥ – pituḥ bhrātā (அப்பாவின் சகோதரர்)

 

पितृभगिनी – पितुः भगिनी

pitṛbhaginī – pituḥ bhaginī (அப்பாவின் சகோதரி)

 

श्यालः – पत्न्याः भ्राता

śyālaḥ – patnyāḥ bhrātā (மனைவியின் சகோதரர்)

 

देवरः – पत्युः भ्राता

devaraḥ – patyuḥ bhrātā (கணவரின் சகோதரர்)

 

आवुत्तः – भगिन्याः पतिः

āvuttaḥ – bhaginyāḥ patiḥ (சகோதரியினுடைய கணவர்)

 

प्रपितामहः

prapitāmahaḥ (அப்பாவின் கொள்ளுத்தாத்தா)

 

प्रपौत्रः

prapautraḥ (மகனினுடைய மகனின் மகன்))

 

प्रपितामही

prapitāmahī (அப்பாவின் கொள்ளுப்பாட்டி)

 

प्रपौत्री

prapautrī (மகனுடைய மகனின் மகள்)

 

याता

yātā (கணவரின் தம்பியின் மனைவி)

 

विमाता

vimātā  (சிற்றன்னை)

 

पितृव्या

pitṛvyā (அப்பாவின் சகோதரரின் மனைவி)

 

பகவத்கீதையில் முதல் அத்தியாயத்தில்  அர்ஜுனன் ஸ்ரீகிருஷ்ணரிடம் இவ்வாறு கூறுகிறார்.

 

येषामर्थे काङ्क्षितं नो राज्यं भोगाः सुखानि च।

त इमेऽवस्थिता युद्धे प्रणांस्त्यक्त्वा धनानि च॥ (33)

आचार्याः पितरः पुत्रास्तथैव च पितामहाः।

मातुलाः श्वशुराः पौत्राः श्यालाः सम्बन्धिनस्तथा॥(34)

yeṣāmarthe kāṅkṣitaṁ no rājyaṁ bhogāḥ sukhāni ca |

ta ime’vasthitā yuddhe praṇāṁstyaktvā dhanāni ca ||

ācāryāḥ pitaraḥ putrāstathaiva ca pitāmahāḥ |

mātulāḥ śvaśurāḥ pautrāḥ śyālāḥ sambandhinastathā ||

 

’எவர் பொருட்டு எங்களால் ராஜ்யமும்,போகங்களும், சுகங்களும் விரும்பப்பட்டனவோ, அவர்கள் (தம்) உயிரையும், செல்வங்களையும் துறந்துவிட்டு யுத்தத்தில்(ஆயத்தமாய்) நிற்கிறார்கள்.’(33)

”உற்றாரைக் கொன்றுதான் ராஜ்யத்தை அநுபவிக்கவேண்டும் என்றால் அவர்களை இழந்தபின் அந்த ராஜ்யத்தை எப்படி அநுபவிப்பது? இது நலம் பயக்காத பேரம் நஷ்டத்தில் முடியும் பேரம் அல்லவா?” என்று மனம் சோர்கிறான் அர்ஜுனன்.

“அவர்கள் எங்களது ஆசார்யர்களும், தந்தைமார்களும், புத்திரர்களும், பாட்டனார்களும், மாமனார்களும், பேரன்களும், மைத்துனர்களும் அவ்வாறே சம்பந்திகளும் ஆவர்.” (34)

 

மேலேயுள்ள ஸ்லோகத்தில் आचार्याः , पितरः , पुत्राः,पितामहाः, मातुलाः,  श्वशुराः ,  श्यालाः ,पौत्राः என்று அனைத்தும் பன்மையில் உள்ளதை கவனிக்கவும். இனி அடுத்த வாரம் रुचिवाचकाः शब्दाः (rucivācakāḥ śabdāaḥ) அதாவது சுவைகளை சமஸ்கிருதத்தில் எப்படிக்கூற வேண்டும் என்று அறிந்துகொள்வோம்.

 

Series Navigationஜென் ஒரு புரிதல் – 25முன்னணியின் பின்னணிகள் – 20 சாமர்செட் மாம்
author

ரேவதி மணியன்

Similar Posts

3 Comments

 1. Avatar
  நந்திதா says:

  வணக்கம்
  prapitāmahaḥ (அப்பாவின் கொள்ளுத்தாத்தா)
  prapitāmahī (அப்பாவின் கொள்ளுப்பாட்டி)
  ப்ரபிதா மஹன் – கொள்ளுப் பாட்டன்(தந்தையின் பாட்டன்)
  ப்ரபிதாமஹி – கொள்ளுப் பாட்டி(தந்தையின் பாட்டி)
  என்று இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்
  தவறாக இருப்பின் திருத்திக் கொள்கிறேன்
  என்றும் மாறா அன்புடன்
  நந்திதா

 2. Avatar
  Revathi Manian says:

  வணக்கம்,
  प्रपितामहः(prapitāmahaḥ)-அப்பாவின் தாத்தா.प्रपितामही(prapitāmahī)-அப்பாவின் பாட்டி என்பதுதான் சரி.கொள்ளுத்தாத்தா(அப்பாவழி),கொள்ளுப்பாட்டி (அப்பாவழி)என்று எழுத நினைத்து தவறாக எழுதி பதிவும் செய்துவிட்டேன். மன்னிக்கவும்.
  சகோதரி,
  ரேவதி மணியன்

 3. Avatar
  nandhitha says:

  வணக்கம்
  மன்னிக்கவும் என்ற சொல் மனதை வாட்டுகிறது. தயை செய்து தவிர்க்க வேண்டுகிறேன். மீண்டும் சொல்கிறேன் தாங்கள் செய்து வருவது மகத்தான தொண்டு. தாங்கள் ஆசிரியை நான் மாணாக்கி.
  என்றும் மாறா அன்புடன்
  நந்திதா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *