சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 53

This entry is part 40 of 42 in the series 29 ஜனவரி 2012

சமஸ்கிருதம் 53

இந்த வாரம் रुचिवाचकाः शब्दाः (rucivācakāḥ śabdāḥ) அதாவது சுவைகளைக் குறிப்பிடும் சொற்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களை உரத்துப் படிக்கவும்.

लवणम् (lavaṇam) உப்பு

जम्बीरम् (jambīram) எலுமிச்சம்பழம்

चाकलेहः (cākalehaḥ) சாக்லேட்

मरीचिका (marīcikā) மிளகாய்

कारवेल्लम् (kāravellam) பாகற்காய்

आमकलम् (āmakalam ) நெல்லிக்காய்

लवणस्य रुचिः लवणः। (lavaṇasya ruciḥ lavaṇaḥ |)
உப்பின் சுவை உப்பு.

जम्बीरस्य रुचिः आम्लः। (jambīrasya ruciḥ āmlaḥ |)
எலுமிச்சம்பழத்தின் சுவை புளிப்பு.

चाकलेहस्य रुचिः मधुरः। (cākalehasya ruciḥ madhuraḥ |)
சாக்லேட்டின் சுவை இனிப்பு.
मरीचिकायाः रुचिः कटुः। (marīcikāyāḥ ruciḥ kaṭuḥ |)
மிளகாயின் சுவை காரம்.

कारवेल्लस्य रुचिः तिक्तः। (kāravellasya ruciḥ tiktaḥ |)
பாகற்காயின் சுவை கசப்பு.

आमलक्स्य रुचिः कषायः। (āmalaksya ruciḥ kaṣāyaḥ | )
நெல்லிக்காயின் சுவை துவர்ப்பு.

एतानि वाक्यानि पठतु। अशुद्धानि वाक्यानि शुद्धानि करोतु।(etāni vākyāni paṭhatu | aśuddhāni vākyāni śuddhāni karotu |)

கீழேயுள்ள வாக்கியங்களை படிக்கவும். தவறான வாக்கியங்களை சரியாக எழுதவும்.

यथा – गुडस्य रुचिः कटुः। (guḍasya ruciḥ kaṭuḥ |)

न , गुडस्य रुचिः मधुरः। (na guḍasya ruciḥ madhuraḥ |)

உதா – வெல்லத்தின் சுவை காரம்.

இல்லை, வெல்லத்தின் சுவை இனிப்பு.

1. मरीचिकायाः रुचिः मधुरः। (marīcikāyāḥ ruciḥ madhuraḥ | )

न, मरीचिकायाः रुचिः कटुः। (na marīcikāyāḥ ruciḥ kaṭuḥ |)

மிளகாயின் சுவை இனிப்பு.

இல்லை, மிளகாயின் சுவை காரம்.

2. आम्रफलस्य रुचिः तिक्तः। ( āmraphalasya ruciḥ tiktaḥ |)

न आम्रफलस्य् रुचिः मधुरः। (na āmraphalasy ruciḥ madhuraḥ | )

மாம்பழத்தின் சுவை கசப்பு.

தவறு, மாம்பழத்தின் சுவை இனிப்பு.

3. अवलेहस्य रुचिः मधुरः। (avalehasya ruciḥ madhuraḥ |)

न अवलेहस्य रुचिः कटुः। (na avalehasya ruciḥ kaṭuḥ |)

ஊறுகாயினுடைய சுவை இனிப்பு.

இல்லை, ஊறுகாயின் சுவை காரம்.

4. तिन्त्रिण्याः रुचिः कटुः। (tintriṇyāḥ ruciḥ kaṭuḥ |)

न तिन्त्रिण्याः रुचिः आम्लः। (na tintriṇyāḥ ruciḥ āmlaḥ |)

புளியின் சுவை காரம்.

இல்லை, புளியின் சுவை புளிப்பு.

एतत् सम्भाषणं पठतु ! (etat sambhāṣaṇaṁ paṭhatu !)

இந்த உரையாடலை படிக்கவும்.
पुत्रः – अम्ब। किम् अद्य क्वथितं बहु कटु अस्ति।

putraḥ – amba | kim adya kvathitaṁ bahu kaṭu asti |

மகன் – அம்மா! என்ன இன்று குழம்பு மிகவும் காரமாக இருக்கிறது?

माता – तर्हि क्वथितं मा स्वीकरोतु। तक्रं परिवेषयामि।

mātā – tarhi kvathitaṁ mā svīkarotu | takraṁ pariveṣayāmi |

அம்மா – அப்படியானால் குழம்பை ஊற்றிக்கொள்ளாதே . மோர் ஊற்றுகிறேன்.
पुत्रः – तक्रं बहु आम्लम् अस्ति अम्ब।

putraḥ – takraṁ bahu āmlam asti amba |

மகன் – மோர் மிகவும் புளிப்பாக இருக்கிறது அம்மா.
माता – भवान् तु केवलं मधुरम् इच्छति। एतत् मोदकं खादतु। बहु मधुरम् अस्ति।

mātā -bhavān tu kevalaṁ madhuram icchati | etat modakaṁ khādatu| bahu madhuram asti|

அம்மா – நீர்(நீங்கள்) இனிப்பை மட்டுமே விரும்புகிறீர். இந்த மோதகத்தைச் சாப்பிடு. மிகவும் இனிப்பாக இருக்கிறது.
पुत्रः – सत्यम् अम्ब। एतत् मधुरम् अस्ति।

putraḥ – satyam amba | etat madhuram asti|

மகன் – உண்மைதான் அம்மா. இது இனிப்பாக இருக்கிறது.
माता – कारवेल्लस्य व्यञ्जनम् अस्ति। किञ्चित् परिवेषयामि वा ?

mātā – kāravellasya vyañjanam asti | kiñcit pariveṣayāmi vā ?

அம்மா – பாகற்காய் கறி (பொரியல்) இருக்கிறது. கொஞ்சம் பரிமாறட்டுமா?

पुत्रः – मास्तु अम्ब। कारवेल्लं तिक्तं भवति। अहं तिक्तं न इच्छामि। किञ्चित् लवणं परिवेषयतु।

putraḥ – māstu amba| kāravellaṁ tiktaṁ bhavati | ahaṁ tiktaṁ na icchāmi | kiñcit lavaṇaṁ pariveṣayatu|

மகன் – வேண்டாம் அம்மா. பாகற்காய் கசப்பாக இருக்கும்.எனக்கு கசப்புப் பிடிக்காது. கொஞ்சம் உப்பு போடுங்கள்.

माता – स्वीकरोतु। आमलकस्य अवलेहं किञ्चित् परिवेषयामि वा ?

mātā – svīkarotu | āmalakasya avalehaṁ kiñcit pariveṣayāmi vā ?

அம்மா – வாங்கிக்கொள். நெல்லிக்காய் ஊறுகாய் கொஞ்சம் பரிமாறட்டுமா?

पुत्रः – अस्तु परिवेषयतु। अम्ब आमलकस्य रुचिः कषायः अस्ति।

putraḥ – astu pariveṣayatu| amba āmalakasya ruciḥ kaṣāyaḥ asti |

மகன் – சரி பரிமாறுங்கள். அம்மா நெல்லிக்காயின் சுவை துவர்ப்பாக இருக்கிறது.
माता – तर्हि जम्बीरस्य अवलेहं स्वीकरोतु।

mātā – tarhi jambīrasya avalehaṁ svīkarotu |

அம்மா – அப்படியானால் எலுமிச்சை ஊறுகாய் போட்டுக்கொள்.
पुत्रः – सः तु आम्लः अस्ति अम्ब।

putraḥ – saḥ tu āmlaḥ asti amba|

மகன் – அதுவும் கூட புளிப்பாக இருக்கிறது அம்மா.

माता – भवान् तु मधुरम् एकमेव इच्छति। परन्तु शरीरस्य् वर्धनार्थं सर्वविधाः रुचयः अपि आवश्यिकाः एव।

mātā – bhavān tu madhuram ekameva icchati | parantu śarīrasy vardhanārthaṁ sarvavidhāḥ rucayaḥ api āvaśyikāḥ eva |

அம்மா – உனக்கு இனிப்பு மட்டும்தான் பிடிக்கிறது. ஆனால் உடல் வளர்ச்சிக்கு எல்லாவிதமான சுவைகளும் அவசியம்தான்.

குறிப்பு :

व्यञ्जनम् (vyañjanam) – கறி (பொரியல்)

क्वथितं (kvathitaṁ ) – குழம்பு

तक्रम् (takram) – மோர்
एतेषाम् उत्तरं लिखतु। (eteṣām uttaraṁ likhatu!)

கீழேயுள்ள வினாக்களுக்கான விடைகளை (மேலேயுள்ள உரையாடலை உபயோகித்து) எழுதவும்.

क्वथितं कथम् अस्ति ? (kvathitaṁ katham asti ?)
குழம்பு எப்படி இருக்கிறது ?

तक्रम् कथम् अस्ति ? (takram katham asti ?)
மோர் எப்படி இருக்கிறது ?

किं तिक्तं भवति ? (kiṁ tiktaṁ bhavati ?)
எது கசப்பாக இருக்கிறது?

आमलकस्य रुचिः का ? (āmalakasya ruciḥ kā ?)
நெல்லிக்காயின் சுவை என்ன ?

भवान् किम् इच्छति ? (bhavān kim icchati ?)
உங்களுக்கு என்ன (சுவை) பிடிக்கிறது?

गुडस्य रुचिः का ? (guḍasya ruciḥ kā ?)
வெல்லத்தின் சுவை என்ன?

மேலே கொடுக்கப்பட்டுள்ள சுவைகளின் விவரங்களை அறிந்து அவற்றை அன்றாட வாழ்க்கையில் உபயோகிக்கவும்.

Series Navigationஎன் மனைவியின் தாய்க்குஜெயமோகனின் அறம் – ஒரு பார்வை
author

ரேவதி மணியன்

Similar Posts

2 Comments

 1. Avatar
  nandhitha says:

  வணக்கம்
  आमकलम् (āmakalam ) நெல்லிக்காய் ?
  आमलकम् (ஆமலகம்) நெல்லிக்காய். இவற்றில் எது சரி
  அன்புடன்
  நந்திதா

 2. Avatar
  Revathi Manian says:

  வணக்கம்,

  आमलकम् (āmalakam)-நெல்லிக்காய் என்பதுதான் சரி.

  ரேவதி மணியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *