ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 9)எழில் இனப் பெருக்கம் ஓர் எச்சரிக்கை

This entry is part 6 of 45 in the series 4 மார்ச் 2012

 


மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள்  எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின்  இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர்  (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது  ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது.  ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள  காதற் கவிதைகள். அவை வாலிபக் காதலருக்கு மட்டுமின்றி அனுபவம்  பெற்ற முதிய காதலருக்கும் எழுதியுள்ள ஷேக்ஸ்பியரின் ஒரு முதன்மைப்  படைப்பாகும். அந்தக் காலத்தில் ஈரேழ்வரிப் பாக்கள் பளிங்கு மனமுள்ள  அழகிய பெண்டிர் களை முன்வைத்து எழுதுவது ஒரு நளின நாகரிகமாகக்  கருதப் பட்டது. ஷேக்ஸ்பியரின் முதல் 17 பாக்கள் அவரது கவர்ச்சித் தோற்ற  முடைய நண்பனைத் திருமணம் செய்ய  வேண்டித் தூண்டப் பட்டவை.  ஆனால் அந்தக் கவர்ச்சி நண்பன் தனக்குப் பொறாமை உண்டாக்க வேறொரு  கவிஞருடன் தொடர்பு கொள்கிறான் என்று ஷேக்ஸ்பியரே மனம்  கொதிக்கிறார். எழில் நண்பனை ஷேக்ஸ்பியரின் ஆசை நாயகியே மோகித்து  மயக்கி விட்டதாகவும் எண்ணி வருந்து கிறார்.. ஆனால் அந்த ஆசை நாயகி  பளிங்கு மனம் படைத்தவள் இல்லை. அவளை ஷேக்ஸ்பியர் தன் 137 ஆம்  ஈரேழ்வரிப் பாவில் “மனிதர் யாவரும் சவாரி செய்யும் ஒரு வளைகுடா”  (The Bay where all men ride) – என்று எள்ளி இகழ்கிறார்.

அவரது 20 ஆவது ஈரேழ்வரிப் பாவின் மூலம் அந்தக் காதலர்கள் தமது  ஐக்கிய சந்திப்பில் பாலுறவு கொள்ள வில்லை என்பதும் தெரிய வருகிறது.  ஐயமின்றி ஷேக்ஸ்பியரின் ஈரேழு வரிப்பாக்கள் அக்கால மாதரின்  கொடூரத்தனத்தையும், வஞ்சக உறவுகளைப் பற்றியும் உணர்ச்சி வசமோடு  சில சமயத்தில் அவரது உடலுறவைப் பற்றியும் குறிப்பிடுகின்றன !  ஷேக்ஸ்பியரின் நாடக அரங்கேற்ற மும் அவரது கவிதா மேன்மையாகவே  எடுத்துக் கொள்ளப் படுகிறது. அவரது முதல் 126 ஈரேழ்வரிப் பாக்கள் தனது  நண்பன் ஒருவனை முன்னிலைப் படுத்தி எழுதப் பட்டவையே. மீதியுள்ள 28  பாக்கள் ஏதோ ஒரு கருப்பு மாதை வைத்து எழுதப் பட்டதாக அறியப்  படுகிறது. இறுதிப் பாக்கள் முக்கோண உறவுக் காதலர் பற்றிக் கூறுகின்றன  என்பதை 144 ஆவது பாவின் மூலம் அறிகிறோம். ஷேக்ஸ்பியரின்  ஈரேழ்வரிப் பாக்களில் சிறப்பாகக் கருதப்படுபவை : 18, 29, 116, 126 & 130  எண் கவிதைகள்.

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் எந்த ஒரு சீரிய ஒழுங்கிலோ, நிகழ்ச்சிக்  கோர்ப்பிலோ தொடர்ச்சியாக எழுதப் பட்டவை அல்ல. எந்தக் கால  இணைப்பை ஓட்டியும் இல்லாமல் இங்கொன்றும், அங்கொன்றுமாக அவை  படைக்கப் பட்டவை. நிகழ்ந்த சிறு சம்பவங்கள் கூட ஆழமின்றிப்  பொதுவாகத் தான் விளக்கப் படுகின்றன. காட்டும் அரங்க மேடையும்  குறிப்பிட்டதாக இல்லை. ஷேக்ஸ்பியர் தனது நண்பனைப் பற்றியும் அவனது  காதலியின் உறவைப் பற்றியும் எழுதிய பாக்களே நான் தமிழாக்கப் போகும்  முதல் 17 ஈரேழ்வரிப் பாக்கள். இவற்றின் ஊடே மட்டும் ஏதோ ஒருவிதச்  சங்கிலித் தொடர்பு இருப்பதாகக் காணப் படுகிறது. ஷேக்ஸ்பியர் தனது  பாக்களில் செல்வீக நண்பனைத் திருமணம் புரியச் சொல்லியும் அவனது  அழகிய சந்ததியைப் பெருக்கி வாழ்வில் எழிலை நிரந்தரமாக்க வேண்டு  மென்றும் வற்புறுத்து கிறார். ஆதலால் ஷேக்ஸ்பியரின் முதல் 17 ஈரேழ்வரிப்  பாக்கள் “இனப் பெருக்கு வரிப்பாக்கள்” (Procreation Sonnets) என்று பெயர்  அளிக்கப் படுகின்றன.

****************

 

(ஈரேழ் வரிப்பா – 9)

++++++++++++++
ஓர் எச்சரிக்கை
++++++++++++++


விதவையின் விழி ஈரமாகும் என அஞ்சுவ தற்கா நீ
வீணாக்குவது தனக்கிரை யான உன் பிரமச்சரிய வாழ்வை ?
அந்தோ சேயின்றி நீ செத்து மறைய நேர்ந்தால்
உலகம் அழுதிடும் உனக்காக விதவை போல் கருதி
ஓயாது அழுதிடும் உலகம் உனது விதவை ஆகும்
ஏனெனில் உன் சந்ததி உனக்குப் பிறகில்லாது போவதால்.
தனித்துள்ள எந்த விதவையும் சிசு பெற்றிட முடியும்
சேய் விழி நோக்கின் அவள் பதி உருவம் தெரியும்
பார் ! வீணாக்கு வோன் பாரில் பாழாக்குவன் அனைத்தும் !
இடம் மாறும் செல்வத்தால், என்றும் வையகம் மகிழும்
தேயும் வாலிப எழில் சேயிலாது, வீணாய் உலக முடிவாய்
பயன் படுத்தாமல் வைத்துப் பாழாக்குவன் பிழை செய்வோன் !
பிறர்மேல் நேசம் நிலைப்ப தில்லை என்றும் உன் நெஞ்சில் !
விந்துகள் அப்படி அழிவதில் வெட்க மில்லை அவனுக்கு !

 

+++++++++

 

Sonnet : 9

Is it for fear to wet a widow’s eye
That thou consumest thyself in single life?
Ah! if thou issueless shalt hap to die.
The world will wail thee, like a makeless wife;
The world will be thy widow and still weep
That thou no form of thee hast left behind,
When every private widow well may keep
By children’s eyes her husband’s shape in mind.
Look, what an unthrift in the world doth spend
Shifts but his place, for still the world enjoys it;
But beauty’s waste hath in the world an end,
And kept unused, the user so destroys it.
No love toward others in that bosom sits
That on himself such murderous shame commits.

 

++++++++++++++

Sonnet Summary : 9


The poet asks if it is fear of making someone a widow that causes the young  man to refuse to marry. The argument is unsound, says the poet, for a  beautiful youth must leave behind him a form or copy of himself, otherwise the  world itself will endure widowhood, and yet have no consolation for its loss. For  it will not be able to view the young man resurrected in the eyes of his  children. If he persists in this single obduracy, it is an unforgivable shame,  showing lack of love to others and equivalent to murdering himself and all his  heirs.

++++++++++++++++

 

Information :

1.  Shakespeare’s Sonnets Edited By: Stanley Wells (1985)
2.  http://www.william-shakespeare.info/william-shakespeare-sonnets.htm (Sonnets  Text)
3.  http://www.sparknotes.com/shakespeare/shakesonnets/section2.rhtml (Spark  Notes to Sonnets)
4.  http://www.gradesaver.com/shakespeares-sonnets/study-guide/  (Sonnets  Study Guide)
5.  http://www.gradesaver.com/shakespeares-sonnets/study-guide/short-summary/  (Sonnets summary)
6.  The Sonnets of William Shakesspeare By :Lomboll House (1987)

+++++++++++++
S. Jayabarathan (jayabarat@tnt21.com) Febuary 29, 2012

Series Navigationநன்றி. வணக்கம்.நிஜங்களுக்கான பயணிப்புக்கள்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *