ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 10)

This entry is part 25 of 35 in the series 11 மார்ச் 2012

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள்
(Shakespeare’s Sonnets : 10)

எழில் இனப் பெருக்கம்

ஒரு வேண்டுகோள்


மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் கவிதைகள். அவை வாலிபக் காதலருக்கு மட்டுமின்றி அனுபவம் பெற்ற முதிய காதலருக்கும் எழுதியுள்ள ஷேக்ஸ்பியரின் ஒரு முதன்மைப் படைப்பாகும். அந்தக் காலத்தில் ஈரேழ்வரிப் பாக்கள் பளிங்கு மனமுள்ள அழகிய பெண்டிர் களை முன்வைத்து எழுதுவது ஒரு நளின நாகரிகமாகக் கருதப் பட்டது. ஷேக்ஸ்பியரின் முதல் 17 பாக்கள் அவரது கவர்ச்சித் தோற்ற முடைய நண்பனைத் திருமணம் செய்ய வேண்டித் தூண்டப் பட்டவை. ஆனால் அந்தக் கவர்ச்சி நண்பன் தனக்குப் பொறாமை உண்டாக்க வேறொரு கவிஞருடன் தொடர்பு கொள்கிறான் என்று ஷேக்ஸ்பியரே மனம் கொதிக்கிறார். எழில் நண்பனை ஷேக்ஸ்பியரின் ஆசை நாயகியே மோகித்து மயக்கி விட்டதாகவும் எண்ணி வருந்துகிறார்.. ஆனால் அந்த ஆசை நாயகி பளிங்கு மனம் படைத்தவள் இல்லை. அவளை ஷேக்ஸ்பியர் தன் 137 ஆம் ஈரேழ்வரிப் பாவில் “மனிதர் யாவரும் சவாரி செய்யும் ஒரு வளைகுடா” (The Bay where all men ride) – என்று எள்ளி இகழ்கிறார்.

அவரது 20 ஆவது ஈரேழ்வரிப் பாவின் மூலம் அந்தக் காதலர்கள் தமது ஐக்கிய சந்திப்பில் பாலுறவு கொள்ளவில்லை என்பதும் தெரிய வருகிறது. ஐயமின்றி ஷேக்ஸ்பியரின் ஈரேழு வரிப்பாக்கள் அக்கால மாதரின் கொடூரத்தனத்தையும், வஞ்சக உறவுகளைப் பற்றியும் உணர்ச்சி வசமோடு சில சமயத்தில் அவரது உடலுறவைப் பற்றியும் குறிப்பிடுகின்றன ! ஷேக்ஸ்பியரின் நாடக அரங்கேற்ற மும் அவரது கவிதா மேன்மையாகவே எடுத்துக் கொள்ளப் படுகிறது. அவரது முதல் 126 ஈரேழ்வரிப் பாக்கள் தனது நண்பன் ஒருவனை முன்னிலைப் படுத்தி எழுதப் பட்டவையே. மீதியுள்ள 28 பாக்கள் ஏதோ ஒரு கருப்பு மாதை வைத்து எழுதப் பட்டதாக அறியப் படுகிறது. இறுதிப் பாக்கள் முக்கோண உறவுக் காதலர் பற்றிக் கூறுகின்றன என்பதை 144 ஆவது பாவின் மூலம் அறிகிறோம். ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்களில் சிறப்பாகக் கருதப்படுபவை : 18, 29, 116, 126 & 130 எண் கவிதைகள்.

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் எந்த ஒரு சீரிய ஒழுங்கிலோ, நிகழ்ச்சிக் கோர்ப்பிலோ தொடர்ச்சியாக எழுதப் பட்டவை அல்ல. எந்தக் கால இணைப்பை ஓட்டியும் இல்லாமல் இங்கொன்றும், அங்கொன்றுமாக அவை படைக்கப் பட்டவை. நிகழ்ந்த சிறு சம்பவங்கள் கூட ஆழமின்றிப் பொதுவாகத் தான் விளக்கப் படுகின்றன. காட்டும் அரங்க மேடையும் குறிப்பிட்டதாக இல்லை. ஷேக்ஸ்பியர் தனது நண்பனைப் பற்றியும் அவனது காதலியின் உறவைப் பற்றியும் எழுதிய பாக்களே நான் தமிழாக்கப் போகும் முதல் 17 ஈரேழ்வரிப் பாக்கள். இவற்றின் ஊடே மட்டும் ஏதோ ஒருவிதச் சங்கிலித் தொடர்பு இருப்பதாகக் காணப் படுகிறது. ஷேக்ஸ்பியர் தனது பாக்களில் செல்வீக நண்பனைத் திருமணம் புரியச் சொல்லியும் அவனது அழகிய சந்ததியைப் பெருக்கி வாழ்வில் எழிலை நிரந்தரமாக்க வேண்டு மென்றும் வற்புறுத்து கிறார். ஆதலால் ஷேக்ஸ்பியரின் முதல் 17 ஈரேழ்வரிப் பாக்கள் “இனப் பெருக்கு வரிப்பாக்கள்” (Procreation Sonnets) என்று பெயர் அளிக்கப் படுகின்றன.

****************

(ஈரேழ் வரிப்பா – 10)

 

++++++++++++++
ஒரு வேண்டுகோள்
++++++++++++++


எவள் மீதும் நேசமில்லை என்றுனக்கு வெட்க மில்லை
எதிர்காலச் சந்ததியாய் எது உனக்குப் பிறக்கும் ?
உன்னை நேசிப்போர் பலர். அது உனக்கேற்ற வாதம்
ஆனால் நீ நேசிப்பது யாருமிலை என்பது வெட்ட வெளிச்சம்
எதிர்காலச் சந்ததி இழப்பு உன் கையில் தான் இருக்குது
துயர மில்லை உனக்குப் பரம்பரை இன்றிப் போவதில்
எழில் இல்ல மாளிகை கட்டாமல் அழிப்பதுன் தீர்மானம்
அதைச் செம்மைப் படுத்துவது உன் முக்கிய வேட்கை
அந்தோ ! உன் கருத்தை மாற்று நீ என் தீர்ப்பை மாற்றிட !
நேசத்தை விட்டு வெறுப்பு குடிபுகுதல் நேர்மை ஆகுமா ?
நீயாக இருப்பதில் விருத்தி பரிவு, பணிவு, நளினம் தரட்டும்
உனக்காக மாறிப் பரிவோடு இன விருத்தி நிரூபணம் செய்
உன் சந்ததியாய் ஒன்றை உருவாக்கு என் மீதுள்ள நேசத்தால்
இளமை எழில் நித்தியச் சந்ததியாய் நிலவிப் பெருகட்டும்.

+++++++++

Sonnet : 10

For shame deny that thou bear’st love to any,
Who for thy self art so unprovident.
Grant, if thou wilt, thou art beloved of many,
But that thou none lov’st is most evident:
For thou art so possessed with murderous hate,
That ‘gainst thy self thou stick’st not to conspire,
Seeking that beauteous roof to ruinate
Which to repair should be thy chief desire.
O! change thy thought, that I may change my mind:
Shall hate be fairer lodged than gentle love?
Be, as thy presence is, gracious and kind,
Or to thyself at least kind-hearted prove:
Make thee another self for love of me,
That beauty still may live in thine or thee.

++++++++++++++

Sonnet Summary : 10

This is the first sonnet of the series in which the poet declares a personal interest in the youth, rather than the general one of desiring for the world’s sake that it be not deprived of his progeny. Here there are two statements, firstly, that he wishes to have an opportunity to change his opinion of the youth (l.9), as implying that his (the poet’s) better opinion is of some value; secondly he attempts the persuasive argument of ‘for love of me’ in order to produce a change in the youth’s intentions. Neither of these amount to a declaration of love, although they do half imply it, for what is love if it is not reciprocated? In any case it is in some sense preparatory to the more impassioned statements of several of the sonnets which are to follow.

Apart from that, the argument of this sonnet is similar to that of the previous one: ‘Be not wilfully selfish and cruel to mankind, but replace and repair your decaying mansion by procreation. In that way you live on, and I myself and others will think the better of you.’

++++++++++++++++

Information :

1.  Shakespeare’s Sonnets Edited By: Stanley Wells (1985)
2.  http://www.william-shakespeare.info/william-shakespeare-sonnets.htm (Sonnets Text)
3.  http://www.sparknotes.com/shakespeare/shakesonnets/section2.rhtml (Spark Notes to Sonnets)
4.  http://www.gradesaver.com/shakespeares-sonnets/study-guide/  (Sonnets Study Guide)
5.  http://www.gradesaver.com/shakespeares-sonnets/study-guide/short-summary/ (Sonnets summary)
6.  The Sonnets of William Shakesspeare By :Lomboll House (1987)

+++++++++++++
S. Jayabarathan (jayabarat@tnt21.com) March 7, 2012
+++++++++++++

Series Navigationஅணுமின்சக்தி இயக்க ஏற்பாடுகளின் அனுதினக் கண்காணிப்பும் பாதுகாப்பும்வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -3
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Comments

  1. Avatar
    A.Thiagarajan says:

    Shakespeare’s sonnets are considered more significant from the point of view of understanding him- more than his plays. It is believed that “with this key Shakespeare unlocked his heart” ( this = Sonnets). The dark lady of his sonnets remained a mystery & gave rise many Sherlock Holmes trying to figure out. Quite interesting it would be to make these sonnets available in Tamil. Kudos

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *