ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 13)

This entry is part 23 of 40 in the series 1 ஏப்ரல் 2012

எழில் இனப் பெருக்கம்

++++++++++++++++++++++++
உனக்கோர் மகன் வேண்டும்
++++++++++++++++++++++++

மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது.
1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப்
தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள்
தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில்
வடிக்கப் பட்டுள்ள காதற் கவிதைகள். அவை வாலிபக் காதலருக்கு மட்டுமின்றி அனுபவம் பெற்ற முதிய
காதலருக்கும் எழுதியுள்ள ஷேக்ஸ்பியரின் ஒரு முதன்மைப் படைப்பாகும். அந்தக் காலத்தில் ஈரேழ்வரிப்
பாக்கள் பளிங்கு மனமுள்ள அழகிய பெண்டிர் களை முன்வைத்து எழுதுவது ஒரு நளின நாகரிகமாகக்
கருதப் பட்டது. ஷேக்ஸ்பியரின் முதல் 17 பாக்கள் அவரது கவர்ச்சித் தோற்ற முடைய நண்பனைத்
திருமணம் செய்ய வேண்டித் தூண்டப் பட்டவை. ஆனால் அந்தக் கவர்ச்சி நண்பன் தனக்குப் பொறாமை
உண்டாக்க வேறொரு கவிஞருடன் தொடர்பு கொள்கிறான் என்று ஷேக்ஸ்பியரே மனம் கொதிக்கிறார்.
எழில் நண்பனை ஷேக்ஸ்பியரின் ஆசை நாயகியே மோகித்து மயக்கி விட்டதாகவும் எண்ணி
வருந்துகிறார்.. ஆனால் அந்த ஆசை நாயகி பளிங்கு மனம் படைத்தவள் இல்லை. அவளை ஷேக்ஸ்பியர்
தன் 137 ஆம் ஈரேழ்வரிப் பாவில் “மனிதர் யாவரும் சவாரி செய்யும் ஒரு வளைகுடா” (The Bay where all
men ride) – என்று எள்ளி இகழ்கிறார்.

அவரது 20 ஆவது ஈரேழ்வரிப் பாவின் மூலம் அந்தக் காதலர்கள் தமது ஐக்கிய சந்திப்பில் பாலுறவு
கொள்ளவில்லை என்பதும் தெரிய வருகிறது. ஐயமின்றி ஷேக்ஸ்பியரின் ஈரேழு வரிப்பாக்கள் அக்கால
மாதரின் கொடூரத்தனத்தையும், வஞ்சக உறவுகளைப் பற்றியும் உணர்ச்சி வசமோடு சில சமயத்தில்
அவரது உடலுறவைப் பற்றியும் குறிப்பிடுகின்றன ! ஷேக்ஸ்பியரின் நாடக அரங்கேற்ற மும் அவரது
கவிதா மேன்மையாகவே எடுத்துக் கொள்ளப் படுகிறது. அவரது முதல் 126 ஈரேழ்வரிப் பாக்கள் தனது
நண்பன் ஒருவனை முன்னிலைப் படுத்தி எழுதப் பட்டவையே. மீதியுள்ள 28 பாக்கள் ஏதோ ஒரு கருப்பு
மாதை வைத்து எழுதப் பட்டதாக அறியப் படுகிறது. இறுதிப் பாக்கள் முக்கோண உறவுக் காதலர் பற்றிக்
கூறுகின்றன என்பதை 144 ஆவது பாவின் மூலம் அறிகிறோம். ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்களில்
சிறப்பாகக் கருதப்படுபவை : 18, 29, 116, 126 & 130 எண் கவிதைகள்.

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் எந்த ஒரு சீரிய ஒழுங்கிலோ, நிகழ்ச்சிக் கோர்ப்பிலோ தொடர்ச்சியாக
எழுதப் பட்டவை அல்ல. எந்தக் கால இணைப்பை ஓட்டியும் இல்லாமல் இங்கொன்றும், அங்கொன்றுமாக
அவை படைக்கப் பட்டவை. நிகழ்ந்த சிறு சம்பவங்கள் கூட ஆழமின்றிப் பொதுவாகத் தான் விளக்கப்
படுகின்றன. காட்டும் அரங்க மேடையும் குறிப்பிட்டதாக இல்லை. ஷேக்ஸ்பியர் தனது நண்பனைப்
பற்றியும் அவனது காதலியின் உறவைப் பற்றியும் எழுதிய பாக்களே நான் தமிழாக்கப் போகும் முதல் 17 ஈரேழ்வரிப் பாக்கள். இவற்றின் ஊடே மட்டும் ஏதோ ஒருவிதச் சங்கிலித் தொடர்பு இருப்பதாகக் காணப்
படுகிறது. ஷேக்ஸ்பியர் தனது பாக்களில் செல்வீக நண்பனைத் திருமணம் புரியச் சொல்லியும் அவனது
அழகிய சந்ததியைப் பெருக்கி வாழ்வில் எழிலை நிரந்தரமாக்க வேண்டு மென்றும் வற்புறுத்து கிறார்.
ஆதலால் ஷேக்ஸ்பியரின் முதல் 17 ஈரேழ்வரிப் பாக்கள் “இனப் பெருக்கு வரிப்பாக்கள்” (Procreation
Sonnets) என்று பெயர் அளிக்கப் படுகின்றன.

****************

(ஈரேழ் வரிப்பா – 13)

++++++++++++++++++++++++
உனக்கோர் மகன் வேண்டும்
++++++++++++++++++++++++

நீயாக நீ இருப்பது நேர்மையே, ஆயினும் நீ என் தோழன்
நீ உன் உடலின் ஓர் பாகமில்லை நின் வாழ்வுப் பருவம் போல்
மரண வரவுக்கு எதிர்த்து நிற்க உன்னைத் தயார் செய்து கொள்
உன்னைப் போலோர் இனிய மகவு உனக்குத் திருமணப் பரிசு
அந்த அழகு பிம்ப விளைவு உனக்கு உரியது இயற்கையாய்
முடிவ தில்லை உன் உரிமை நீ இன்னும் வாழப் போவதால்
உயிர்த்தெழும் மீண்டும் உன்விந்து மகனாய், உன்னுயிர் நீங்கினும்,
உன்னருமைச் சிசுக்கள் உன் எழில் வடிவை ஒத்திருக்கும்
யாரிந்த கவர்ச்சி இல்லத்தை அழியும்படி விட்டு விடுவார்
எதிர்த் தடிக்கும் புயலுக்கும், குளிர்ப் பருவ நாளுக்கும் ?
எந்த இல்லத் தளபதி இப்பொறுப்பை நிறுத்தி வைப்பான் ?
மரணக் குளிர் காலம் நித்தியம், அது சூனிய வெறுப்பு
தோழா ! வீணாக்கு வோர் தவிரப் பொறுப்பிலார் வேறிலர்,
உனக்கோர் தந்தை உண்டு, அப்படி உன்மகனும் சொல்லட்டும். .

+++++++++

Sonnet : 13

O, that you were yourself! but, love, you are
No longer yours than you yourself here live:
Against this coming end you should prepare,
And your sweet semblance to some other give.
So should that beauty which you hold in lease
Find no determination: then you were
Yourself again after yourself’s decease,
When your sweet issue your sweet form should bear.
Who lets so fair a house fall to decay,
Which husbandry in honour might uphold
Against the stormy gusts of winter’s day
And barren rage of death’s eternal cold?
O, none but unthrifts! Dear my love, you know
You had a father: let your son say so.

++++++++++++++

Sonnet Summary : 13

This sonnet returns to the theme of procreation as a defence against death and ruin. It is interesting also
that it is the first in the sequence that contains an open and unequivocal declaration of love: but, love you
are/ etc. in l.1; and especially Dear my love in l.13. Is there any significance, I wonder, in the main
declaration being in the 13th line of the 13th sonnet? (See further commentary Sonnet XIII )

The persistent undertone of time’s advance bringing winter, decay and death, here continues. The boy is
urged to shore up his house against this eventual fate. But what seems to emerge more than anything from
this poem is the inevitability and sadness of this demise, contrasted with the love and beauty which stands
up bravely to fight against it, and the tenderness of the poet’s affection for the youth.

++++++++++++++++

Information :

1. Shakespeare’s Sonnets Edited By: Stanley Wells (1985)
2. http://www.william-shakespeare.info/william-shakespeare-sonnets.htm (Sonnets Text)
3. http://www.sparknotes.com/shakespeare/shakesonnets/section2.rhtml (Spark Notes to Sonnets)
4. http://www.gradesaver.com/shakespeares-sonnets/study-guide/ (Sonnets Study Guide)
5. http://www.gradesaver.com/shakespeares-sonnets/study-guide/short-summary/ (Sonnets summary)
6. The Sonnets of William Shakesspeare By :Lomboll House (1987)

+++++++++++++
S. Jayabarathan (jayabarat@tnt21.com) March 28, 2012

Series Navigationபஞ்சதந்திரம் தொடர் 37 – விதிப்படி உரியதை ஒருவன்அடைந்தே தீருவான்ஆலமரத்துக் கிளிகள்…. ஹைக்கூ
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

2 Comments

 1. Avatar
  பவள சங்கரி. says:

  அன்பின் திரு ஜெயபாரதன்,

  எத்துனை ஆண்டுகளானாலும், எத்துனை முறையானாலும் ஷேக்ஸ்பியர் என்ற பெயர் கேட்டாலே கவிதை உலகில் ஓர் உற்சாகம் வருவது இயற்கையே. ஆழ்ந்த, வித்தியாசமான கோணத்தில் அழகாக படைக்கப்பட்ட மொழிபெயர்ப்பு. நன்றி.

  அன்புடன்

  பவள சங்கரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *