author

நட்ட ஈடு

This entry is part 7 of 32 in the series 15 ஜூலை 2012

    பொருள் வழிப்பிரிந்ததினால் சேர்ந்து களிக்காமல் மகன் கணக்கில் இளமையில் எழுதிய நட்டத்திற்கெல்லாம் ஈடு செய்து கொண்டிருக்கிறார் முதுமையில், பேரனுடன் விளையாடும் தாத்தா. மேலும் கடனாய் முத்தங்களை வாங்கியபடி. லேசான மனங்களைப்போல் உயரே பறக்கிறது காற்றாடி வாலை வீசி… வீசி.

உருக்கொண்டவை..

This entry is part 6 of 41 in the series 10 ஜூன் 2012

தினம் வந்து கொண்டிருந்த கனவுப்புலியொன்று நனவில் வந்தது ஓர் நாளில். மூளைக்கனுப்பிய நியூரான் சமிக்ஞைகள் தொடர்பில் இல்லையென்று திரும்பி வந்து விட திகைத்து மூச்சடைத்துத் தடுமாறி நின்ற எனை நோக்கி மெல்லக் கொட்டாவி விட்டபடி திரும்பிப் படுத்துக் கொண்டது, வாலசைவில் தன் இருப்பைத் தெரிவித்தபடியே தன் கட்டுக்குள் பிறரை வைக்க நன்றாகக் கற்றிருந்த அந்தப்புலி. எங்கணும் எதிலும் வாலின் நாட்டியத்தரிசனமளித்தும் அற்ற பொழுதுகளில் கூர் பல்லால் ஆசீர்வதித்தும் என் பொழுதுகளை ஆக்கிரமித்திருந்த ஓர் போதில் பயம் கொன்று […]

நாஞ்சில் கவிஞரின் நகைச்சுவைத்துளிகள்..

This entry is part 5 of 28 in the series 3 ஜூன் 2012

அமைதிச்சாரல் சிரிக்கத் தெரிந்த ஒரே விலங்கினம் மனிதன் மட்டுமே. வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப்போகும் என்று பெரியோர்கள் ஆராய்ந்து அறியாமலா சொல்லியிருப்பார்கள்?.. நோய் மட்டுமல்ல கவலைகள் வருத்தங்கள் என்று எதுவாக இருந்தாலும் காற்றிலகப்பட்ட சருகாய்ப் பறந்து விடும். மகிழ்ச்சியான பொழுதுகளில் மட்டுமல்ல துன்பம் வரும்போதும் மனம் தளராமல், கலங்காமல் அதைப்பார்த்து நகைக்கும் லேசான மனம் இருந்தால் எத்தகைய சூழ்நிலைகளையும் சமாளிக்கும் மன உறுதி தானே வந்துவிடும். இதைத்தான் “இடுக்கண் வருங்கால் நகுக” என்று சொல்லியிருக்கிறார் நம் […]

அறிதுயில்..

This entry is part 31 of 47 in the series 31 ஜூலை 2011

ஆயிரம் முறை சொல்லியனுப்பியும் இனிப்புடன் வரமறந்த தந்தையின் மீதான நேற்றைய கோபத்தை ஒரு கண்ணிலும்; .. உடன் விளையாட வரமறுத்த அன்னையின் மீதான இன்றைய கோபத்தை இன்னொரு கண்ணிலும் சுமந்துகொண்டு; கட்டிலிலேறி கவிழ்ந்துகொள்கிறாய்.. என்னுடைய எல்லா சமாதானமுயற்சிகளையும் புறந்தள்ளிவிடுகிறது…. உன்னுடைய செல்லக்கோப கன்னஉப்பல்… அம்மாசித்தாத்தாவின் பஞ்சுமிட்டாய்வண்டி தூதனுப்பிய மணியோசையும் உனது பொய்த்தூக்கத்தை கலைக்கமுடியாமல் வெட்கி; முகம் மறைத்தோடுகிறது இருளில்.. தாயின் குரலும் தந்தையின் சீண்டலும் பலனளியாமல்.. ஊர்ந்துவந்த நண்டும் நரியும்கூட விரல்விட்டு இறங்கியோடிவிடுகின்றன.. இனிப்புப்பெட்டியின் கலகலச்சத்தம் ஏற்படுத்திய […]

ஸ்வரதாளங்கள்..

This entry is part 18 of 38 in the series 10 ஜூலை 2011

காலிவயிற்றின் உறுமல்களை எதிரொலித்த வாத்தியங்களும் தன்னிலை மறந்து தாளமிட்ட கால்களும் ஓய்வெடுக்கும் சிலஇடைக்காலத்துளிகளில், மெல்லியதாய் முனகிக்கொள்கின்றன தட்டில்விழும் வட்ட நாணயங்கள்; ஸ்வரம் தப்பாமல் இறைஞ்சும் குரலுடன் இழைந்து.. அமைதிச்சாரல்